Thursday, 2 May 2013

எங்களுக்கு ஏன் தண்டணை?

 

(ஜெயரமணி)

எங்களுக்கு ஏன் தண்டனை?

(ஜெயரமணி)

அன்று காலையிலிருந்தே சென்னை மாநகரம் மிகமிக பரபரப்பாக இருந்தது. பத்திரிக்கைகாரர்கள், டி. வி. சானல்களின் செய்தி நிருபர்கள், சினிமாக்காரர்கள் என பல வகைப்பட்டவர்களும் மாநகர குடும்பநல நீதிமன்றத்தின் வாசலில் கூடி நின்று கொண்டிருந்தார்கள். அன்றுதான் பிரபல நடிகரும், பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சூர்யபிரகாஷ், பிரபல நாட்டியநடிகையான சந்திரபிரபா இருவரின் விவாகரத்து வழக்கில் இறுதி கட்டத் தீர்ப்பை வெளியீடுவதாக நீதிபதிகள் அறிவிப்புச் செய்திருந்தார்கள்.

சூரியபிரகாஷ், சந்திரபிரபா இருவரும் திரையுலகில் ஈடுஇனையில்லாத ஒரு ஜோடியாகத்தானிருந்தார்கள். அவர்களுக்கு திருமணமாகி பனிரென்று ஆண்டுகள் முடிந்த நிலையில்தான் இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை எழுந்தது. இருவருடைய அத்யந்த நண்பர்கள் சிலராலும், பத்திரிக்கைகாரர்களில் விஷமச் செய்திகளாலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்குழப்பம் மேலும் மேலும் அதிகமாகியது. அவர்களுக்கு பத்திரிக்கை விற்பணையில் இலாபம் வேண்டும். திரையுலகில் பிரகாசமாக இருக்கும் இருவரின் குடும்ப விவகாரத்தை தங்களின் கைச்சரக்காலும், விற்பணையில் மற்ற செய்தி பத்திரிக்கைகளைவிட தங்களின் பங்கு அதிகமாக வேண்டுமென்ற சுயலாப நோக்கத்தாலும், அவர்களுடைய வியாபாரத் தந்திரத்தினால், பாதிக்கப்பட்டது என்னவோ இருவரின் அன்நோன்யமான இல்லற வாழ்க்கைதான். எந்த பத்திரிக்கையாளர்கள் இருவரையுமே ஆதிரிச தம்பதியர்கள், ஒருவருக்காகவே ஒருவரை ஆண்டவன் படைத்தான் என்று பலவகையிலும் செய்திகளை வெளியிட்டு தங்களின் தீபாவளி, பொங்கள் மலர்களிலும், சின்ன சேனல்களின் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பாராட்டி பல பரிசுகள் கொடுத்து அவர்களை ஒரு ஆதரிச தம்பதிகளாக உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்கள்தான், இப்போது அவர்களுக்கிடைய ஏற்பட்ட சின்னச்சின்ன மனஸ்தாபங்களையெல்லாம் ஊதிஉஊதியிட்டு பெரியதாக்கி, இன்று அவர்களின் திருமணவாழ்க்கைக்கு நீதிமன்றத்தில் முன் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். திரையுலகில் காதலால் ஒருமித்து, இல்லறவாழ்வில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான இளம் வயதினருக்கு ஒரு எடுத்துக் காட்டாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உள்ளாகியதுதான் மிகவும் வருந்தத்தக்கது.

மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பரப்பரப்பான செய்தியாக எதிர்பார்த்த நீதிமன்றத் தீர்ப்பு, சம்மந்தப்பட்டவர்களுக்கு எத்தனை மனகஷ்டத்தை அளித்தது என்பது சொல்லத்தேவையில்லை. அவர்களின் அன்புச் செல்வங்களான பானுசந்திரனும், மதிஒளியும் பத்து வயது, எட்டு வயதினர்கள். இருவருக்கும் தங்களின் பெற்றோர்களிடையே ஏற்பட்ட பிரிவு அவர்களின் ஆனந்தமான வாழ்வையும் பாதித்தது. இருவருடைய பள்ளியிலும், நண்பர்களும் அவர்களின் அப்பா அம்மாவின் விவாகரத்து பற்றி, அடிக்கடி அவர்களிடம் பேசியதும் அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்தது. பெரியவர்களென்றும் சொல்லமுடியாத பருவம், அதே சமயம் ஒன்றும் புரியாத குழந்தையென்றும் சொல்லமுடியாது. இவர்களின் துன்பம் மற்றவர்களுக்குச் செய்தியானது. சூரியபிரகாஷ், சந்திரபிரபாவின் பெற்றோர்களும் வெகு நாளாக நண்பர்களாக இருந்து, பிறகு சம்மந்தியாகியவர்கள். அவர்களுக்கும் தங்களுடைய பிள்ளையும், பெண்ணும் அன்நோன்யமாக வாழ்ந்துவந்த இல்லறவாழ்வு சிதைந்து போனது தாங்கமுடியாத ஒரு வேதனைதான். அத்துடன், தங்களுடைய பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ, யாருடன் வாழப் போகிறார்களோ எனவும் புரியாது, அவர்களும் தங்களின் பேரக் குழந்தைகளடன் மன வருத்தத்தில்தான் இருந்தார்கள். அவர்களுடைய செல்வங்களுக்காகவாவது, சூரியபிரகாஷும், சந்திரபிரபாவும் தங்களிடையே ஏற்பட்ட மனக்குழப்பத்தை மறந்து, மீண்டும் தங்களுக்குள் ஒற்றுமையாக பழையபடி அன்பான இல்லற வாழ்வை மேற்கொள்ளவேண்டுமென்று இருவரின் பெற்றோர்களும் எத்தனோயோ அவர்களிடம் எடுத்துச் சொல்லியும், இருவரின் ஈகோ காரணமாக இருவரும் மற்றவர்களின் புத்திமதியை ஏற்க மறுத்து விட்டனர். இருவரும் தங்களின் பொருளாதாரம், சமூக முக்கியத்துவம், அந்தஸ்து, புகழின் பலம், எல்லாவற்றிலும் மேலாக இல்லறத்தின் தங்களின் குரலுக்குத்தான் அதிகாரமிருக்க வேண்டும், மற்றவர் தன்னுடைய கட்டுப் பாட்டில்தான் இருக்க வேண்டுமென்ற ஒரு பொருளற்ற மமதையும் சேர்ந்து அவர்களின் வாழ்க்கை பிரச்சினையை நீதிமன்றம்வரை கொண்டு வந்து விட்டது. பெற்றோர்களின் கனிவான புத்திமதிகளைவிட நண்பர்கள் என சொல்லிக் கொண்டு அவர்களின் பிரிவில் தங்களின் ஆதாயத்தை தேடும் துன் மதி கொண்டவர்களின் அறிவுரைகள்தான் அவர்களின் மனதில் ஏறியது. விளைவு, தங்களின் வாழ்க்கையை மட்டுமல்லாது, தங்களின் அன்பின் செல்வங்களான பானுசந்திரன், மதிஓளி ஆகியவர்களின் எதிர்காலத்தையும் இருளுக்குச் எடுத்துச் சென்றார்கள்.

தங்களின் வாழ்வின் ஓட்டம் எப்படியிருக்குமோ என்ற பயத்தில் பானுசந்திரனும், மதியோளியும் ஒருவரை ஒருவர் இருகக் கட்டிக்கொண்டு, கட்டிலில் படுத்துக் கொண்டு அப்படியே தூங்கிவிட்டார்கள். தங்களின் பேரக் குழந்தைகள் ஒருவரைஒருவர் பிரிக்க முடியாதபடி அனைத்துக் கொண்டு தூங்குவதைப் பார்த்த அவர்களின் தாத்தா, இப்படிப்பட்ட பிஞ்சு உள்ளங்களை ஏன் தன்னுடைய மகனும், மருமகளும் வீம்பாக பிரித்து வாழ வைக்க முடிவு செய்தார்களென்று தன் மனதிற்குள் வருத்தப்பட்டார். இருவருடைய வக்கீல்களும் அன்று மாலையில் வந்து, தங்களுடைய கட்சிக்கார்ர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைகளை ஆளுக்கு ஒரு குழந்தையாக ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்திருப்பதாகவும், சூரியபிரகாஷுடன் தன்னுடைய பேரன் பானுசந்திரன் இருக்கவும், பேத்தி மதிஒளி மருமகள் சந்திரபிரபாவுடன் வாழவும் முடிவு செய்திருப்பதாகவும், மறுநாள் நீதி மன்றத்தில் தங்களின் விருப்பப்படியே விவாகரத்து ஆணையைப் பெற்றவுடன், இருவரும் தங்களின் குழந்தைகளைப் பிரித்து தங்கள் தங்களுடன் தனியாக வளர்த்துக் கொள்ளவும் இருப்பதாகச் சொல்லிச் சென்றார்கள். பேரன் பானுசந்திரனுக்கு தன்னுடைய தங்கை மதிஒளியிடம் மிகவும் பாசம். அவள் பிறந்தது முதல் ஒருநாள்கூட அவளை விட்டு பள்ளியைத்தவிர, வேறு எங்கும் போகமாட்டான். எப்போழுதும் அவளுடனேயே விளையாடிக்கொண்டிருப்பானே தவிர, வெளியில் தன் வயது பிள்ளைகளுடன் விளையாடக்கூடப்போக மாட்டான். அவனுக்கு ஓரளவு தங்களுடைய பெற்றோர் இனி சேர்ந்து ஒரே வீட்டில் வாழ மாட்டார்களென்று புரிந்து விட்டது. தாயும் தகப்பனாரும் விவாகரத்து வழக்குப் பதிவு செய்தபின், அவன் தன்னுடைய தங்கையைத் தவிர வீட்டில் வேறு யாரிடமும் பேசுவதோ, பழகுவதோ இல்லை. பள்ளியை விட்டு குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வந்தால், தங்களுடைய தனி அறையை விட்டு கூடிய வரையில் வெளியே வருவதில்லை. ஒரு நத்தையைப் போல் இருவரும் தங்களின் அறையிலேயே வாழத்தொடங்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட இரு ஆண்டுகாலமாக அவர்களிருவம் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே வாழப் பழகி விட்டார்கள். உலகத்தில் ஒரு அந்தஸ்தான இட்த்தில் இருக்கும் இருவர்களின் ஈகோ போராட்டத்தால்,வீட்டில் இருக்கவேண்டிய பிள்ளைகளின் சிரிப்பும், விளையாட்டும் அடங்கிப் போனது கண்டு, இருவரின் தாத்தாமார்கள் மனம் துன்பப்பட்டனர். மறுநாள் காலையில் நீதி மன்றத்தின் முன் அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரியப் போகிறார்களென்பதை நினைக்கும்போதே வயதானவர்கள் இருவருக்கும் தங்களுடைய உயிர் அப்போதே போனதுபோல் இருந்தார்கள்.

மறுநாளும் பொழுது விடிந்தது. பேரப்பிள்ளைகளைச் கூட்டிக்கொண்டு, தாத்தாமார்கள் இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். நீதி மன்ற வாசலில் சொல்லமுடியாத மக்கள் கூட்டம் தங்களுடைய பிரபல திரைஉலக பிரம்மாக்களைக் காணவும், அவர்களின் பிடிவாத்தினால், பிரியப்போகும் இரு பிஞ்சு உள்ளங்களையும் பார்க்கும் ஆவலில் கூடியிருந்தார்கள். குறித்த நேரத்தில் நீதிபதிகள் இருவர் வந்தவுடன், வாதங்களை முன் வைக்க வக்கீல்களும் எழுந்தார்கள். இருவருடைய வக்கீல்களும் தங்களுடைய கட்சிக்காரர்கள் தங்களின் மண வாழ்க்கையை முறித்துக் கொள்ளவும்,தங்களுக்குப் பிறந்த பிள்ளை, பெண்ணை இருவரும் ஆளுக்கு ஒரு குழந்தையாக, பிரித்து தங்களுடன் வாழ சேர்த்துக் கொள்வதாகவும் நீதிபதிகளின் முன்பு தெரிவித்தார்கள்.

அவர்களின் இனைந்த முடிவைக் கேட்டவுடன், நீதிபதிகள் இருவரும் அங்கிருந்த குழந்தைகள் பானுசந்திரனையும், மதிஒளியையும் பார்த்து, “குழந்தைகளா, உங்கள் இருவரையும் உங்களின் பெற்றோர் தனித்தனியாக தங்களுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? பானுசந்திரன் தன்னுடைய தகப்பனார் சூரியபிரகாஷுடனும், மதிஒளி உங்களின் தாயார் சந்திரபிரபாவுடனும் செல்ல உங்களுக்கு விருப்பமா? சொல்லுங்கள்” என பரிவுடன் கேட்டார்.

பத்துவயதைக் கடந்தவனும், சராசரி வயதுக் குழந்தைகளைவிட ஓரளவு அதிகமாக சிந்திக்கும் சக்தியுடைய பானுசந்திரன் நீதிபதிகளைப் பார்த்து “ஐயாமார்களே, நீங்கள் எங்களுடைய விருப்பத்தைக் கேட்டீர்கள். அதற்குமுன் எனக்கு ஒரு சந்தேகம். அதைக் கேட்கலாமா? எனப் பரிவுடன் மெதுவாகக் கேட்டான்.

நீதிபதிகளும். “நிச்சயமாக உனக்கு என்ன சந்தேகம் வந்தாலும், அதைத் தீர்த்து வைத்தபிந்தான், எங்களுடைய தீர்ப்பை நாங்கள் சொல்லுவோம். நீ பயமின்றி கேட்க வேண்டியதைக் கேட்கலாம்” என அவனுக்குச் தைரியமூட்டினார்கள்.

பானுசந்திரன் மெதுவாக தன்னுடைய மனதில் உள்ளதை சொல்லத் தொடங்கினான்.

“இந்த நீதி மன்றத்திற்கு நானோ என் தங்கை மதிஒளியோ எந்தவிதமான வழக்கும் வைக்க வில்லை. எங்களுடைய தாயும், தகப்பனாரும் அவர்களின் வாழ்க்கையைத் தனித்தனியாக வாழ விரும்பி உங்களிடம் கொடுத்த வழக்குதான் இன்று தீர்ப்புக்கு வந்திருக்கிறது. என் தங்கை பிறந்தது முதல், என் பெற்றோர் என்னிடம் “நீ எப்பவுமே உன் தங்கையுடன் பிரியமாக, பாசமாக, ஆசையாக இருக்க வேண்டுமென்று சொல்லிச்சொல்லி, என்னையும் என் தங்கையையும் ஒருவரின்பால் ஒருவர் அளவுக்குமீறி அன்பு கொண்டு வாழப் பழக்கி விட்டார்கள். ஆனால் தற்போது அவர்களுக்குள் மனவிரோதம் கொண்டு, பிரியமுற்பட்டால், அவர்கள் இருவரும் பிரிந்து போகட்டும், காரணமில்லாமல், என்னுடைய அன்புத் தங்கையை விட்டு என்னைப் பிரிந்து வரச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை யிருக்கு. நானும் என் தங்கையும் யாருக்காகவும், எந்த சட்டத்திற்காகவும் ஒருவரைஒருவர் பிரிந்து வாழமாட்டோம். வாழ்ந்தால் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ அனுமதியுங்கள். இல்லையென்றால் எங்கள் இருவரையுமே ஒரேயடியாக உலகத்திலிருந்து பிரித்து விடுங்கள். அதற்கு உங்களின் சட்டத்தில் இடமிருக்கிறதா? சண்டை போடுபவர்களை நீங்கள் பிரிக்கலாம். ஆனால் ஒற்றுமையாக, பாசமாக வாழத் துடிக்கும். அண்ணனையும், தங்கையையும் நீங்கள் ஏன் பிரிக்க முன் வருகிறீர்கள். வழக்குப் போட்டது அவர்கள், ஆனால் தண்டணையாருக்குக் கொடுக்கிறீர்கள். எங்களுக்குத்தானே? நாங்கள் என்ன பாவம் செய்தோம், இந்தத் தண்டணையை அனுபவிக்க? “ என தாளமுடியாத துக்கத்தோடும், வார்த்தைகளை விசும்பலோடு சொல்லிவிட்டு, துக்கம் தாளாது கதறலானான். அவனுடன் சேர்ந்து அவனின் தங்கை மதிஒளியும் அழலானாள். பிஞ்சுக் குழந்தைகளின் வேதனையையும், அதனால் அவர்களின் அழுகுரலையும் கேட்டு, நீதி மன்றத்தில் இருந்தோர்களின் கண்களிலும் நீர் வழிந்தது. தங்களுடைய பேரனின் வாதத்தைக் கேட்ட,அவர்களின் தாத்தாமார்கள் இருவரும் சேர்ந்து நீதிபதிகளிடம் “ஐயா, நீதி மான்களே, எங்களின் பேரக் குழந்தைகளின் மனக்குமுறல்களைக் கேட்டபின்பும், நீங்கள் அவர்களிருவரையும் பிரித்துதான் செல்ல தீர்ப்புக் கூறப்போகறீர்களா? தயவு செய்து வேண்டாம். எங்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இருவரையும் இனைத்து எங்களின் பாதுகாப்பிலேயே இருக்க அனுமதியுங்கள். வளர்ந்தவர்களிடையேதான் ஈகோ எல்லாம். பிஞ்சு உள்ளங்களில் அவற்றைப் புகுத்த வேண்டாம்” என மிகவும் மன்றாடி கேட்டுக் கொண்டார்கள்.

சிறிது நேரம் நீதி மன்றத்தில் பேச்சற்று ஒரு நீண்ட அமைதி பரவியது. பிறகு நீதிபதிகள் இருவரும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள். பிறகு மூத்த நீதிபதி தன்னுடைய தீர்ப்பைச் சொன்னார். “பானுசந்திரனின் வாதத்தில் இருந்த உண்மைகள் அந்த நீதிமன்றத்தில் சுவர்களில் ஆனித்தரமாக எதிரொலிக்கிறது. பெரியவர்களின் ஈகோவிற்காக, வளரவேண்டிய பிஞ்சு உள்ளங்களை வேதனைப் படுத்துவது தர்மமல்ல. நீதிபதிகளானாளும் எங்களுக்கும் பேரன் பேத்திகள் உள்ளனர். அதனால், இந்த வழக்கில் நாங்கள் எந்தவிதமான தீர்ப்பும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சொல்வதெல்லாம் ஒரேஒரு புத்திமதிதான். உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் உங்களின் கைகளில் உள்ளது. உங்களுக்காக் ஆண்டவன் கொடுத்த விலைமதிப்பில்லாத செல்வங்களை சீராக வளர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பெற்றவர்களுக்கு உண்டு. அதனால், சமூகத்தில் ஒரு மேலான நிலையில் இருக்கும் வாதி, பிரதிவாதிகளான சூரியபிரகாஷும், சந்திரபிரபாவும் தங்களுடைய மனதை மாற்றிக் கொண்டு, தங்களின் பிள்ளைகளின் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டுமென்பது தான்”. இன்று இங்கு பேசியது பானுசந்திரன் என்ற ஒரு சிறுவன் அல்ல. அவர்களைப் போல பெற்றோர்களின் பிடிவாதத்தினால், துன்ப்ப்படும் கணக்கில்லாத பிஞ்சு மனங்களின் குரல்தான் அது. இனியும் இந்தமாதிரி வழக்குகள் நீதி மன்றங்களுக்கு வரவேண்டாமென ஆண்டவணை வேண்டிக் கொண்டு இந்த வழக்கை நாங்கள் எந்த விதமன தீர்ப்ப்பும் சொல்ல விரும்பவில்லை. சமூகத்தில் பிர்பலமான உலகத்தில் வாழும் வாதி பிரதிவாதி இருவரும் தயவு செய்து மற்றவர்களின் புத்திமதிகளைக் கேட்காமல், அவர்களாகவே முன் வந்து இன்று தங்களுடைய பிள்ளை, பெண் இருவரின் மன வேதனையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்காகவாவது ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டுமென்பதுதான் எங்களின் விருப்பம்.ஒரு இல்லறம் நல்லறமாவது அந்தக் குடும்பத்தில் .பூத்த மலர்களின் சந்தோஷத்தில் தான் இருக்கிறது.திரையுலகில் எத்தனையோ சவால்களைச் சந்தித்தவர்கள், தங்களுக்குள் இருக்கும் ஈகோவை விட்டுவிட்டு, முன்போல் ஒரே ஆதர்ஸ தம்பதிகளாகவும், தாயாகவும், தந்தையாகவும் வாழ முயற்சிக்க வேண்டும் என வயதில் மூத்தோர் என்ற நிலையில் எங்களின் கருத்தைக் கூறிக்கொண்டு, இந்த வழக்கிலிருந்து நாங்கள் விடை பெறுகிறோம். பானுசந்திரனின் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்” எனச் சொல்லிவிட்டு, தங்களின் இருக்கைகளை விட்டு எழுந்து சென்றார்கள்.

தங்களின் பிள்ளைகளின் மனதில் இருந்த ஏக்கத்திற்கு தாங்களே காரணமாகி விட்டதை உணர்ந்து, சூரியபிரகாஷும், சந்திரபிரபாவும தங்களுடைய இருக்கையைவிட்டு, நீதிமன்றத்தில் தங்களின் தாத்தாமார்களின் அனைப்பில் இருந்த குழந்தைகளிடம் “எங்களை மன்னித்து விடுங்கள். உங்களின் வேதனையை இத்துனை காலமாக புரிந்து கொள்ளாமல், உங்களை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோம். இனி நாமெல்லாம் ஒரே வீட்டில், பழையபடியே உங்களின் தாத்தா, பாட்டிமார்களுடன். ஒற்றுமையாக வாழுவோம். தேவேயில்லாமல் எங்களின் மனதில் இருந்த அகம்பாவத்தை நாங்கள் இன்று துரத்தி விட்டோம். இனி நாம் சந்தோஷமாக வாழுவோம்: எனக் கூறிக்கொண்டே, இருவரும் தங்களின் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு, நீதிமன்றத்தை விட்டு வெளியே போனார்கள். போகுமுன் தங்களுடைய வக்கீல்களிடம். “நாங்கள் இருவரும் இனிமேல் இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை. எனவே எங்களின் வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என நீதிமன்றத்திற்குத் தெரியப் படுத்தி விடுங்கள்” எனவும் சொல்லிவிட்டுப்போனார்கள்.

No comments:

Post a Comment