(ஜெயரமணி)
குழந்தை தொடுத்தச் சாட்டை
(ஜெயரமணி)
அன்று ஞாயிற்றுக் கிழமையானதால் அசோகன் வீட்டில் இருந்தான். அப்போது அவ்னுடைய பெண் ஐந்து வயதுக் குழந்தை அவனிடம் வந்தாள் . அவளுடைய கைகளில் ஒரு நோட்டு, புஸ்தகம் இருந்த்து. அதைப் பார்த்தவனுக்கு அது முதலாம் வகுப்புப் தமிழ் புஸ்தகம் எனவும் தெரிந்தது. அதைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம் வந்த்து. “என்னம்மா, உன் பள்ளியில் தமிழேல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா? எனவும் கேட்டான். அதற்கு அவனுடைய மனைவி சுமதி ‘ஆமாம், இப்ப இருக்கும் அரசு சட்டப்படி எல்லா ஆரம்ப்ப பள்ளிகளிலும் ஒரு வகுப்பு கட்டாயமாகத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம். அதனால், அவள் வகுப்பில் இந்த வருஷம் முதல் தமிழும் சொல்லிக் கொடுக்கிறார்கள்” எனவும் பதில் சொன்னாள். அதைக் கேட்டவனும் :அதுவும் சரிதான். நாம் சொல்லிக் கொடுப்பதை விட பள்ளியில் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகளுக் சுலபமாகப் படித்துக் கொள்வார்கள். நம்முடைய தாய் மொழியிலும் அவர்களுக்குப் பயிற்சி இருப்பதும் நல்லதே: எனச் சொல்லிக் கொண்டே “பூரணி, சொல்லும்மா உனக்கு எந்தப் பாடம் சொல்லித் தரணும்” எனக் கேட்டுக் கொண்டு, ஆசையாக அருகில் அமர்ந்தான்.
பூரணியும் புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை எடுத்து :அப்பா, இந்தப் பாடம் சொல்லிக் கொடுத்த அன்று நான் பள்ளிக்குச் செல்லவில்லை. நான் போன வாரம் ஒரு நாள் அம்மாவுடன் அந்தப் பாட்டி வீட்டிற்குப் போய்விட்டதால். எனக்கு இந்தப் பாடம் தெரியாது. நாளைக்கு இதை நான் கிளாஸில் படித்துக் காட்ட வேண்டும்” எனச் சொல்லிக்கொண்டே புஸ்தகத்திலிருந்து அந்தப் பக்கத்தை அப்பாவிடக் காட்டினாள்.
அதில் நாங்கு வரிகள் இருந்தது, அவைகள்”
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. தாயிற் சிறந்த்தொரு கோவிலும் இல்லை.
3. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
4. மாதா பிதா குரு தெய்வம்.”
அதைப் படித்தவன் “உனக்கு இதைப் படிக்கனும் இல்லையா?” எனவும் கேட்க, பூரணியோ “அப்பா என்னால் இந்த வாக்கியங்களைப் படிக்க முடியும். ஆனால் இந்த வாக்கியங்களுக்கு சரியான பொருள் கூறனும். அதற்குத்தான் உன்னிடம் கேட்கிறேன்” எனச் சொல்லி விட்டு அவன் மடியில் அமர்ந்தாள்.
அசோகனும் அந்த வாக்கியங்களைப் படித்தான். பிறகு மகளிடம் சொன்னான்.
:அம்மா, பூரணி, இந்த வாக்கியங்களெல்லாம் நம்மைப் பெற்று, வளர்த்து ஆளாக்கிய நம்முடைய அப்பா, அம்மா அவர்களிடம் நாம் எப்படி மரியாதையாக, அன்பாக இருக்க வேண்டும் என்பதையேச் சொல்லுகிறது. நம் எல்லாருக்குமே முதல் கடவள் நம்மை பெற்றவர்கள்தான். அதைத்தான், முதல் வாக்கியம் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” எனச் சொல்லியிருக்கிறது. நம்முடைய முதல் கடவுளே நம்மைப் பெற்றவர்கள்தான்.
இரண்டாவது வாக்கியம் “தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை”. இவ்வுலகில் நம்மை பெற்ற நம்முடடைய தாயார்தான் முதல்கண் தெய்வம் ஆகும். அந்தத் தாயை விட நாம் போகும் கோவில்களில் வாழும் தெய்வம் பெரியதில்லை. ஒவ்வொருவரும் முதலில் தாயைத்தான் தெய்வமாக நினைத்து வணங்க வேண்டும். அந்தத் தாய்க்கு மீறிய தெய்வங்கள் இல்லை. தாயை வணங்காதவர்கள், எத்தனைவிரதங்கள் இருந்தாலும், எத்தனைக் கோவில்களுக்குப் போய் வந்தாலும், எந்த விதமான பலனும் கிடைக்காது.
மூன்றாவதான வாக்கியம் “தந்தை சொல் மிக்கமந்திரமில்லை”. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வோருவருக்கும் முதலில் நல்ல பழக்க, ஒழுக்கங்களைக் கற்றுத் தருவது அவர்களின் தந்தைதான். ஒவ்வோரு தகப்பனும், தன்னுடைய குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருந்து, அவர்களைச் சீர்ராக, சிறப்பாக, ஒழுக்கத்தில் குறை சொல்லமுடியாதபடி, வளர்க்கிறார். நமக்கு முதல் ஆசான், நம்முடைய தகப்பனார்தான். அவரிடமிருந்துதான் நம்முடைய கல்வியும், அறிவும் வளரும். அதனால்தான் நம்முடகிய தகப்பனாரின் நல்ல அறிவுரைகளுக்கு மிஞ்சிய மந்திரங்கள் எதுவும் இல்லை எனச் இந்த வாக்கியம் சுட்டிக் காட்டுகிறது.
கடைசியான வாக்கியம் “மாதா, பிதா, குருதெய்வம்” என்பது. இது ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் நாம் கை கூப்பித் தொழ வேண்டிய தெய்வங்கள் யார் யார் எனவும், அவருடைய வரிசைகள் என்ன என்பதையும் சொல்கிறது. அதன்படி பார்த்தால், இந்த உலகத்தில் பிறந்த எல்லா மானிடர்களுக்கும் முதல் வணங்கக்கூடிய தெய்வம் அவர்களைப் பெற்று, இந்த உலகத்தைக் காட்டிய தாய்தான் ஆகும். அதற்கு அடுத்தபடியாக, அவர்களுடைய தகப்பானார்தான் இரண்டாவது தெய்வம். முன்றாவதாக வருபவர்கள் நம்முடைய அறிவுக் கண் களைத் திறந்த நம்முடைய ஆசானாகும். அதாவது நம்முடைய குரு இப்[போது அவர்களை நாம் டீச்சர்ஸ் என்கிறோம். அந்தக் குருவிற்கு அடுத்தபடிதான் நாம் இந்த உலகில் எல்லா இடங்களிலும், நீக்கமறநின்று இந்த உலகத்தையும், அதில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் ஆகும்.
இப்போ உனக்கு இந்த வாக்கியங்களுக்கெல்லாம் சரியான பொருள் புரிந்ததா? உனக்கு இதற்குமேல் எதுவும் சந்தேஹம் இருந்தால் கேள் நான் உனக்கு விளக்கமாகவே சொல்கிறேன்.” எனவும் சொன்னான்.
மகள் மெதுவாகச் சொன்னாள் “அப்பா நீ பாவம்பா” என்றாள். மகளின் பேச்சைக் கேட்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “பூரணி, நான் உன்னைப்பாடத்தில் எதுவும் சந்தேஹம் இருக்கா எனத்தான் கேட்டேன். ஆனால் நீ அதற்குப் பதில் சொல்லாமல், வேறு எதைப் பற்றிச்சொல்கிறாய்: எனவும் கேட்டான்.
மகளும் “நான் சரியாகத்தான் சொல்கிறேன் அப்பா. நீ எனக்கு இன்று சொல்லிக் கொடுத்தமாதிரி, உனக்கு என்றாவது ஒரு நாள் உங்களுடைய அப்பா சொல்லிக் கொடுத்திருந்தால், நீங்களும் அதையெல்லாம் மறந்து விடாமல் இருந்திருப்ப்பீர்களல்லவா. உங்களுக்கு அன்று உங்களில் அப்பாச் சொல்லித் தராததால்தானே, நீங்கள் இன்று நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்களாக இருக்கும் என்னுடைய பாட்டி, தாத்தாவை உங்களுடன் வைத்துக் கொள்ளாமல், இதே ஊரிலேயே ஒரு முதியோர் இல்லத்தில் வைத்திருப்பீர்களா? எனவும் கேட்டு விட்டு, அதனால்தான் நான் உன்னைப்பற்றி மிகவும் பரிதாபத்துடன் சொன்னேன் :நீ பாவம்ப்பா” என சொல்லி விட்டு, அவனுடைய மடியிலிருந்து எழுந்தாள்.
தன்னுடைய மகளின் வாயிலிருந்து வெளிப்பட்ட சாட்டை அடி போன்ற சொற்கள் அசோகனை ஒரு கணம் திகைக்க வைத்து விட்டன. குழந்தையென்றாலும் அவளுடைய சொற்களில் எத்தனை உண்மை இருக்கிறது. ஆமாம், நான் என் மகளுக்கு சொல்லிக் கொடுத்தபாடத்தில் இருந்த நீதிகளை என் வாழ்க்கையில் கடை பிடிக்கவில்லையே. இந்த வீடே அவர்களின் உழைப்பில் கிடைத்தது தானே. அப்படி இருக்க, அவர்கள் கட்டிய வீட்டில், அவர்கள் பெற்று வளர்த்து ஆளாக்கிய என்னுடன் அவர்கள் வைத்துபராமரிக்காமல், மனைவியின் சந்தோஷத்திற்காக, அவர்கள் இத்தனை வயதுக்கப்புறமும் உறவினர்கள் என் யாருமில்லாது, ஒரு காப்பகத்தில் வைத்து, அவர்களுக்கு மாதாமாதம் பணம் என கொஞ்சம் கொடுத்து விட்டதால், என்னுடைய கடமை முடிந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேனே நான் எத்தனை முட்டாள். என்னைப் பெற்றவர்களை அவர்களுடைய வயதான காலத்தில், என்னுடன் வைத்திருந்து, பாசமாக, பரிவாக இருக்காமல், அவர்களைத் தனியே முதியோர் இல்லத்தில் வைத்து விட்டு, என் மனைவியின் சந்தோஷத்திற்காக, நான் வாழ்வது சரியா? ஒரு நல்ல மகன் செய்யும் செயலா? இல்லையே. நான் என்னுடைய முதற் கடமையை சரியாகச் செய்யாமல், இன்று என் குழந்தையிடம் போய் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம். தாயிற் சிறந்ததோரு கோவிலுகில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மாதா, பிதாகுரு தெய்வம்” எனப் பாடம் சொல்லிக் கொடுக்க எனக்குத்தான் என்ன அருகதை இருக்கு. என் பெண் சொன்னது சரிதான். நான் மிகவும் பாவம் செய்தவன். என் பாவங்களுக்கு இப்பவே நான் பரிகாரம் தேட வேண்டும். ஆமாம், இனியோரு நிமிஷம் கூட என்னைப் பெற்றவர்களை என்னுடைய வீட்டில் வைத்திருக்காமல், ஒரு முதியோர் இல்லத்தில் வைத்திருக்கப் போவதில்லை. நான் இப்பவே போய் அவர்களை கூட்டிக் கொண்டு வருவேன். என் மனைவியின் எதிர்ப்பை நான் உடைக்கிறேன். இந்த வீடும், நானும் அவர்களின் சொத்துத்தான். அவர்களுக்குப் பிறகுதான் என் மனைவிஎன அவளிடம் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். நானும் ஒரு நல்ல மகனாக வாழ எனக்கு இப்பத்தான் சந்தர்ப்பமும், தைரியமும் வந்திருக்கிறது. இனிமேல் இதில் எந்த விதமான தடங்கலொ, மாற்றமோ இருக்காது” எனத் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டு, உடனடியாக குளித்துக் கிளம்பினான்.
கிளம்பும்போது தன்னுடைய மகள் பூரணியையும் அழைத்துச் சென்றான். :எங்கேயப்பா கூட்டிக் கொண்டு போகிறாய் எனக் கேட்டவளுக்கு, நான் ஒரு கோவிலுக்குப் ;போகிறேன். அந்தக் கோவிலில் இருக்கும் தெய்வங்கள் இருக்க வேண்டிய இடத்தைக் காட்டியவளும் நீதான். வா நாமிருவரும் போய் அந்த அன்புத் தெய்வங்களை நம்முடன் அழைத்து வரலாம். இனிமேல் அவர்கள் நம்முடனேயே இருக்கலாம்: எனவும் சொல்லியபடியே, பெண்ணைத் தன் இரு கைகளாலும் தூக்க்கி தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டான். அவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
தந்தையின் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே, :அப்பா, இப்போ நாமிருவரும் போய் என்னுடைய தாத்தா, பாட்டியைத்தனே நம்முடன் இருக்க அழைத்து வரப்போகிறோம். அப்பா. நீ ரொம்ப நல்லவரப்பா. என் பிரிய அப்பப்பா எனச் சொல்லிக் கொண்டே, அவனுடைய கன்னங்களில் தன் அன்பு முத்தங்களைப் பதித்தாள். மகளின் ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை வீரியம்!.பெண்கள்தான் சக்தியின் அவதாரம் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவனுடைய பெண் சொன்ன சொல்லல்ல. அவனுக்கு அந்த சக்தியே சொன்ன புத்தி என அவனுள் ஒரு உண்மையும் எழுந்தது.