Tuesday, 30 April 2013

நினைவுகளே கனவாகினால்……

 

(ஜெயரமணி)

நினைவுகளே கனவாகினால்...

(ஜெயரமணி)

திருவாரூர் திருவிழா

தினமும் விடியற்காலை கருக்கல் நேரத்திலேயே கண் முழிக்கும் வழக்கம் கொண்ட உமா அன்றும் விடியற்காலையில் துக்கத்திலிருந்து எழுந்தாள். அவளின் பழக்கப்படியே, கண் விழித்ததும் தன்அருகில் உறங்கும் கணவன் சங்கரின் அன்பு முகத்தைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் கழிப்பாள். அன்றும் அவள் அப்படியே தன் அருகில் துயில் கொள்ளும் சங்கரின் முகத்தைத் தேடினாள். ஆனால், அங்கு சங்கரின் அன்பு முகம் இல்லை. அங்கு இருந்த வெறுமையை உமாவின் கண்கள் பார்க்கவில்லை. அவளின் கண்களியோ அவளின் கடந்த கால வசந்த காலங்களின் நினைவுகள் நிழற்படமாக ஒளிவிட்டு ஓடத் தொடங்கின. அவளைச் சுற்றி ஒரு கனவு மேகம் வளர்ந்தது.

அவளின் கண்களில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி நடனமாடத் தொடங்கின. அன்று சங்கரின் அலுவலகத்தில் அவனுக்கு பிரிவு உபசாரவிழா நிறைபெற்றது. அதற்கு உமாவும் சென்று இருந்தாள். அந்த நிகழ்ச்சி மிக நிறைவாக நடந்தது. கலந்து கொண்ட இருவரின் மனமும் சந்தோஷமாகவே இருந்தது. இருவரும் அன்று இரவு உறக்கம் வராது, தங்களின் வசந்த கால நிகழ்ச்சிகளில் மூழ்கினார்கள்.

இரவு தன் கணவருடன் தனித்து இருந்த உமா அவனை அன்புடன் நோக்கினாள். அதைப் பார்த்த சங்கர் “என்ன அப்படி கண் இமைக்காமல் பார்க்கிறாய்? இன்றுதான் என்னை முதல் முதலாக பார்க்கிறாயா?” என புன்சிரிப்போடு கேட்டான். அதற்குப் பதிலாக உமா, “உங்களை எத்தனை நாட்கள் பார்த்தாலும் என் ஆசை அடங்காது. அதுவும் இன்று நீங்கள் உங்கள் ஆபிஸ் விழாவில் கம்பீரமாக மாலையும் கழுத்துமாக நின்றது எத்தனை அம்சமாக இருந்தது தெரியுமா? உங்கள் ஆபீஸில் வேலை பார்க்கும் அத்தனை பெண்களும் அன்று விழாவுக்கு வந்ததே உங்களைப் பார்க்கத்தான் எனத் தெரிகிறது. ஒவ்வோரு பெண்மணியும் தங்களின் கண்களைக் கூட கொட்டாது, கண் இமைக்காமல் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை நானும் பார்த்துக் கொண்டிருந்துதான் இருந்தேன். நான் ஒருவள் உரிமையுடன் உங்கள் உடன் இருக்கும்போதே அப்படி பார்த்தார்களென்றால், நான் இல்லையென்றால், அத்தனை பேரும் இன்று உங்களைச்சுற்றி, பலாப்பழத்தைச் சுற்றிச்சுற்றி மொய்க்கும் ஈக்களைப் போல் இன்று அலைந்து இருப்பார்கள். நீங்கள் அத்தனை அழகாகவும் அம்சமாகவும் இருந்தீர்கள்” எனச் சொல்லிவிட்டு, அவனருகில் நெருங்கி வந்து “உலகிலேயே நான் மிகவும் பாக்கியசாலிதான். இன்று மிகவும் பெருமையாகவே இருக்கிறது” என்றாள். பிறகு மெதுவாக அவனின் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டாள்.

தன் மடியில் தலை வைத்துக் காதலுடன் தன்னைப் பார்த்த உமாவை சங்கரும் அன்புடன் பார்த்தான். அவனின் கண்களில் ஒளி பரவியது. “என்ன என் உமாகுட்டி மிகவும் உற்சாகமாக இருக்கிறாய். எனக்கு இன்று 60 வயது முடிந்துவிட்டது தெரியுமா? இன்றுடன் நான் ஓய்வு பெறுகிறேன்.” என்றவனிடம், மெதுவாக “ஆபிஸ்க்குத்தான் ஓய்வு. நம் வாழ்க்கைக்கு ஓய்வு என்பதே கிடையாது. என் கண்களுக்கும், மனதுக்கும் என்றும் நீங்கள் வாலிபர்தான். உங்களுக்கு வயதாதியதாக நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, வெட்கத்தால் தன் முகத்தை அவனின் மடியில் புகுத்திக் கொண்டாள். சங்கரும் அவளின் சொற்களைக் கேட்டு, மிக ஆனந்தத்தோடு வாய்விட்டுச் சிரித்தான். உமாவை பார்த்து சங்கரும் சொன்னான் “உனக்கு நானும், எனக்கு நீயும் எப்பவுமே வாலிபர்கள்தான். நம் மனதில் இளமை இருக்கும்வரை நாமிருவரும் இளைஞர்கள்தான். தினமும் நமக்குத் திருமண நாட்கள்தான்” எனக் காதலுடன் சொல்லிக் கொண்டே அவளைத் தன் கைகளால் இறுக அனைத்துக் கொண்டான்.

தன் மடியில் வந்து படுத்த உமாவின் எழில் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனும் தங்களுடைய இளமையான வசந்த காலங்களைப் பற்றி நினைத்து மனம் மிகவும் ஆனந்தம் அடைந்தான். அவனும் மிக மிக மெதுவாக தன் நினைவுகளை உமாவுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்.

“உமாசெல்லம், உனக்கு நினைவிருக்கிறதா நாமிருவரும் முதல் முதல் சந்தித்த திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர்த் திருவிழா. அன்று கோவிலில் அதிகக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு சிறு பெண் தன் கைகளை நீட்டியபடியே ஸ்வாமி பிரசாதம் வாங்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவளைச் சுற்றி சில போக்கிரிப் பசங்கள், அவளைப் பிரசாதம் வாங்கவிடாது அவளின் கைகளின்மேல் தங்களின் கைகளை வைத்து அவளை இம்சைபடுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ யார் என்ன செய்தாலும், பிரசாதம் வாங்காமல் போகக்கூடாது எனத் தீர்மானம் செய்ததுபோல் விடாது தன் கையை நீட்டிக் கொண்டே, கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள். கோவிலில் ஒரு ஓரத்தில் நின்று தேரில் உலா வரும் தியாகராஜஸ்வாமியைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரின் கண்கள் ஒரு வினாடி அந்தப் பெண்ணையும், அவள் கூட்டத்தில் நடுவில் மாட்டிக்கொண்டு, பிரசாதம் வாங்க முனைப்பாக இருந்ததையும் பார்த்தான். ஒரு சில நிமிடங்கள்தான் அவன் கண்கள் அந்தப் பெண்ணைப் பார்த்தன. ஏதோ ஒரு உணர்ச்சி அவனைப் பற்றிகொண்டன. அவனுள் ஒரு பொறி தோன்றியது. அந்தப் பெண் தனக்கு உரிமையானவள், அவள் இப்படி கூட்டத்தில் கஷ்டப்படுவது சரியல்ல. என்ற ஒர் எண்ணம் அவன் மனதில் ஏற்பட்டது. தனக்குச் சொந்தமான ஒரு பெண்ணிடம் சில போக்கிரிப் பசங்கள் கூட்டத்தில் அவளிடம் நெருங்கிக் கொண்டு, அவளை பிரசாதம் வாங்கவிடாது செய்வது அநியாயமாகப் பட்டது. அவனையுமறியாமல் அவனுள் ஒரு கோப அக்னி உண்டானது. அவ்வளவுதான்,சீரிக் கொண்டு பாயும் குதிரையைப் போல் அவன் அந்தக் கூட்டத்தினுள் புகுந்து தன்னைச் சுற்றி இருந்தவர்களையெல்லாம் தன் கைகளினால் முரட்டுத்தனமாகத் தள்ளிக்கொண்டு. முன்னேறி அவளின் சமீபத்தில் போய் விட்டான். அவளின் கையின் மேல் பரவியிருந்த அத்தனை கைகளையும் தன் கைகளால் தள்ளிவிட்டு, அவளின் கையின் மேல் தன் கையை வைத்து, ஸ்வாமி பிரசாதம் வாங்கிக்கொண்டான். அதை அப்படியே அவளின் கைகளில் திணித்துவிட்டு, அவளையும் தன் கைகளால் இறுக்கப் பிடித்துக் கொண்டு, வேகமாகக் கூட்டத்திலிருந்து வெளியே வந்தான்.

ஒரு ஓரமாக அவளைக் கூட்டிக்கொண்டு போனவன் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்து கோபமாகக் கேட்டான். “அப்படியென்ன ஒரு அசுர பக்தி உனக்கு. இப்படி போக்கிரிப் பசங்களிடையே நின்று இடிபட்டுக்கொண்டாவது இந்தப் பிரசாதத்தை வாங்கவேண்டுமா? இன்று இப்படிப் பிரசாதம் வாங்காவிட்டால் உன் குடிதான் முழுகி விடுமா? உனக்குப் புத்தி வேண்டாமா?” என்று. அப்படி கேட்டவனை உமா மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அவனின் கண்களோ மிகப் பயங்கரமாக, ஒரு வெறி கொண்ட வேங்கையைப் போல் ஆக்ரோஷத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்களை ஒரு வினாடி பார்த்த உமாவின் உடம்பு நடுநடுங்கலாயின. திரும்பவும் அவனைப் பார்க்க அவளுக்குத் தைரியமில்லை. அவனின் கோபப் பார்வையைக் கண்டதுமே அவளின் கண்களில் நீர் பெருகலாயின. அவளின் உடல் நடுங்குவதையும், கண்களில் நீர் பெருகுவதையும் பார்த்தவனின் மனமும் சிரிது கலங்கலாயிற்று. தான் அவளிடம் இத்தனைக் கோபத்தைக் காட்டியிருக்கக்கூடாது என்றும் உணர்ந்தான். பிறகு அவளைச் சமாதானப் படுத்தும் வகையில் “உன்னை பிரசாதம் வாங்கவிடாமல் அத்தனைப் போக்கிரிப் பசங்களும் உன்னைச் சுற்றிக் கொண்டு எத்தனை இம்சைப் படுத்தினார்களென்று உன்னால் உணர முடியலையா?. நீஏன் இப்படி கூட்டமான நேரத்தில் கோவிலுக்கு வருகிறாய். அப்படியே வந்துதான் தீர வேண்டுமானால், உன் கூட துனைக்கு உன் அம்மாவையாவது அழைத்து வந்திருக்கலாமே. நீ ஏன் தனியாக இப்படி வருகிறாய்? உன்னைப் போல ஒரு சிறு பெண்ணை கூட்டத்தில் எத்தனைபேர் நெருக்கிக்கொண்டு வம்பு பன்னுகிறார்கள். இப்படி கூட்டத்தில் வம்பு பன்னுவதற்காகவே வரும் போக்கிரிப் பசங்களிடமிருந்து நீதானே உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” என அவளிடம் சமாதனமாகக் கேட்டான்.

அவனின் முகத்தில் ஒரு சாந்தம் ஏற்பட்டதைப் பார்த்தவள் அவனின் முகத்தைப் பாராமல் தன் தலையைக் குனிந்து கொண்டே “நான் தினமும் என் பெற்றோரைப் பார்க்கத்தான் இங்கு வருகிறேன்” என்றவளைத் தடுத்து, “அப்படி உன் பெற்றோரைப் பார்க்க வருபவளுக்கு அவர்களே பிரசாதம் வாங்கிக் கொடுக்க முடியாதா? இந்தக் கோவிலில் உன் பெற்றோர் எங்கு இருப்பார்கள். அவர்களிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போ. நான் அவர்களிடமே கேட்கிறேன் உன்னை ஏன் அவர்கள் இப்படித்தனியாக கூட்டத்தில். கஷ்டப்பட விடுகிறார்களென்று” எனக் குரலில் கோபம் துளிர்விடக் கேட்டான். அவனின் கோபத்தின் காரணத்தை உணராத உமா சொன்னாள் “இந்தக் கோவிலில் எல்லா இடத்திலும் என் பெற்றோர் இருக்கிறார்கள். நான் உங்களை எங்கே என்று கூட்டிக்கொண்டு போகமுடியும்?” என்று. அவளின் பதில் புரியாதவன், “தயவுசெய்து புதிர் போடாது சொல். உன் பெற்றோர் யார். இந்தக் கோவிலில் அவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்களென்றால், அவர்கள்தான் இந்தக் கோவிலின் தக்காரா, அல்லது தர்மகர்த்தாவா? என்றும் கேட்டான். அவனின் கேள்விக்கு எப்படி பதில் சொல்லித் தன் நிலையைப் புரிய வைப்பது என உமாவும் சிரிது தயங்கினாள். அவன் கண்களோ அவளிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

“இந்தக் கோவிலே என் அம்மா, அப்பாவுடையதுதான். இங்கு இருக்கும் அம்மனும், ஸ்வாமியும்தான் என் பெற்றோர்கள்.” என்றவளை குழப்பம் தீராமலே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முகத்தில் படர்ந்த துயரத்தையும், குழப்பத்தையும் பார்த்தவள், அவனப் பார்த்து மெதுவாக சொன்னாள். “உங்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டுமானால் என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். எனக்கு இருவயதாகும் முன்பேயே என் அம்மாவும், அப்பாவும் ஒரு இரயில் விபத்தில் இறந்துவிட்டார்கள். அவர்கள் ஊருக்குப் போகுமுன், என்னை என் தகப்பனாரின் பெற்றோர் தங்களிடம் தங்க வைத்துக் கொண்டுவிட்டதினால், நான் இன்று உயிரோடு உங்கள் முன் நிற்கிறேன். குழந்தையாக இருக்கும்போதெல்லாம் என் பாட்டியிடம் என்னை என் அம்மாவிடம் கூட்டிக் கொண்டு போகச்சொல்லி மிகவும் அடம் பிடித்து அழுவேனாம். என்னை சமாதானப் படுத்தமுடியாமல், என் பாட்டி என்னை இந்தக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, :இதோ பார். உன் அம்மா, அப்பா இருவரும் இந்தக் கோவிலில்தான் இருக்கிறார்கள். உன் அம்மா அப்பா பெயர்தான் இங்கு இருக்கும் அம்மனுக்கும், ஸ்வாமிக்கும். இவர்கள் பெயரும் கமலாம்பாள், தியாகராஜந்தான். இனி உனக்கு உன் அம்மா, அப்பா எல்லாமே இவர்கள் இருவரும்தான். உனக்கு என்ன வேண்டுமென்றாலும், நீ இங்கே வந்து இவர்களிடம் கேட்டுக்கொள். உனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்: என்று சொல்லிச்சொல்லியே என்னை இத்தனை நாளும் வளர்த்து விட்டார்கள். அன்றிலிருந்து என்னைப் பொறுத்தவரையில், இங்கு இருக்கும் அம்மனும், ஸ்வாமியும்தான் என் பெற்றோர். எனக்கு என் உண்மையான அம்மா அப்பா இருவரும் இரயில் விபத்தில் இறந்ததைப் புரிந்துகொள்ளும் வயது வந்தபின்பும் இவர்கள்தான் என்னைப் பெற்றவர்களென்ற எண்ணம்தான் என் மனதில் இருக்கிறது. அதனால்தான் எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும், என்ன வேண்டுமென்றாலும் இங்குவந்து இவர்களிடம் என் வேண்டுகோளைச் சொல்லிவிட்டு இவர்களின் ஆசியைப் பெற்றுச் செல்லுவதுதான் என் வழக்கம். எனக்கு இந்த மாதக் கடைசியில் பள்ளியில் கணிதப் பரீட்சை வருகிறது. எனக்குக் கணிதப் பாடம் மிகவும் கடினமாகவே இருக்கிறது. என் பள்ளியில் அந்த பாடம் எடுக்கும் ஆசிரியையும் அதில் அதிக தேர்ச்சி பெற்றவர் இல்லை. அவர் சொல்லிக் கொடுக்கும் முறையும் எனக்குச் சரியாக விளங்குவதில்லை. சந்தேகம் கேட்டாலும், என்னால் ஓரளவுக்குத்தான் சொல்லிக்கொடுக்க முடியும். நீங்களாகவேதான் படித்துக் கொள்ளவேண்டும்” எனக் கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். எத்தன முறைகள் கணக்குகளை வீட்டில் போட்டுப் பார்த்தாலும், பரீட்சையின்போது எனக்கு எல்லாம் மறந்துவிடுகிறது. அதனால் என்னால் பள்ளியில் மற்றவர்களைப் போல நல்ல மதிப்பெண்களும் எடுக்க முடியாது மிகவும் அவமானப் படுகிறேன். இதற்காகத்தான் இன்று இங்கு வந்து அம்மாவிடம் ஆசியும் பிரசாதமும் வாங்கிப் போக வந்தேன்” என்றுச் சொல்லிமுடிக்கும்போதே அவளால் தன் துன்பத்தை மறைக்கவும் முடியவில்லை, அவளின் அழுகையுமடங்கவில்லை. உமாவின் இழப்பைக் கேட்டவுடனே, சங்கர் உமாவின் ஆதரவற்ற நிலையைப் புரிந்து கொண்டான். பரிவுடன் அவளின் கையைப் பற்றிக் கொண்டவன், “இனி உன் கவலையெல்லாம் என்னைச் சேர்ந்தது. உனக்கு நானே கணிதம் மட்டுமல்ல, மற்ற பாடங்களையும் தனியாக உனக்குப் புரியும்படிச் சொல்லித் தருகிறேன். நீ என்னை உன் தாத்தாவிற்கு அறிமுகப் படுத்திவிடு போறும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். மனம் கலங்காதே. நான் உனக்கு எப்போதும் துனை இருப்பேன். என்னை நம்பு”” எனச் சொல்லிக்கொண்டே, அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு எழுந்தான். இருவரும் சேர்ந்தே கோவிலைச் சுற்றி விட்டு, திரும்பினார்கள்.

2. அம்மன் சன்னதியில்

அடுத்த நாளும் சங்கர் கோவிலுக்கு வந்தான். அவன் அம்மன் சன்னதியில் நிற்கும் போதுதான் எதிர் வரிசையில் உமாவும் நிற்பதைப் பார்த்தான். உமா அன்று சந்தனச்சிலையாகத் தோன்றினாள். சந்தன நிறத்தில் பாவாடை, சட்டையும் குங்கும நிறத்தில் தாவணியும் அணிந்து வந்திருந்தாள். அவனைப் பார்த்தவுடன், உமாவுக்குள்ளும் ஒரு பரவசம் ஏற்பட்டது. அது அவள் கண்களிலும் தெரிந்தது. உமாவைப் பார்த்த சங்கரும் பரவசமடைந்தான். கண்களினாலேயே அவளிடம் பேசி விட்டதைப் போல் மகிழ்ச்சியடைந்தான். அதனிடையே கோவில் குருக்களின் குரல் எழுந்தது. “என்ன உமா இன்றைக்கு நீ ஏன் இன்னும் சன்னதியில் பாட ஆரம்பிக்கவில்லை. அம்மனுக்கு அலங்காரம் முடிந்துவிட்டதே. அம்மன் சன்னதியில் பாட மறந்துவிட்டாயா? எனக் கேட்டார். கூட்டத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணியும் உமாவைப் பார்த்து “என்ன உமா இன்று அதிசயமாக இருக்கிறதே. உன் அம்மாவிடம் வந்தவுடனேயே நீ பாட ஆரம்பித்துவிடுவாயே? உனக்குஇன்று என்ன தடை? அம்மனைக் காக்க வைக்காதே. சீக்கிரம் பாடு.” எனச் சொன்னார். உமாவின் கண்களோ, யாருக்கும் தெரியாமல் மெதுவாக சங்கரின் முகத்தைப் பார்த்தன. அதில் தான் பாடலாமா என அவனக் கேட்கும் பாவணை தெரிந்தது. அவனும் உமாவிற்குபாட அனுமதியளிக்கும் வகையில் தன் கண்களினால் சம்மதம் சொன்னான். அவனின் மனதில் தன் மனம் கவர்ந்தவளின் பெயரை யாரிடமும் கேட்காது, அம்மன் சன்னதியில் அறிந்து கொள்ள முடிந்ததே அவனின் இச்சைக்கு அம்மனின் அருளும் ஆசியும் கிடைத்ததுபோல் ஒரு பரவசம் தோன்றியது. உமா என்ன பாடுவது என யோசித்திக் கொண்டிருக்கும்போதே, சங்கர் மெதுவாக “கமலாம்பாள் பஜரே” என்ற ஒரு கீர்த்தனையைத் தொடங்கிவிட்டான். உமாவும் அவன் குரலுடன் சேர்ந்தே இனிமையாகப் பாடலானாள். இருவரின் குரலும் இனைந்து அம்மன் சன்னதியில் ஒரே நாத ஒலியாக உலா வந்தது. அதுவே அவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல சகுனமாகத் தெரிந்தது.

சன்னதியில் தீபாராதனை முடிந்தவுடன். வந்திருந்தவர்களெல்லாம் குங்குமம், புஷ்பம் வாங்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு திரும்பினார்கள். உமாவும் திரும்பிப் போகலானாள். அப்போது, குருக்கள் மாமா உமாவை ஒரு நிமிஷம் நிற்கச் சொன்னார். பிறகு, சன்னதி வேலை முடிந்தவுடன் உமாவிடம் “உமா இவர் பெயர் சங்கர். இவரின் அப்பா, உன் அப்பா, நான் மூவரும் இந்த ஊரில்தான் ஒன்றாகப் பள்ளிப் படிப்பைத் தொடங்கினோம். நாங்கள் மூவரும் இணைபிரியாத நண்பர்களாகத்தான் இருந்தோம். விதி உன் அப்பாவை எங்களிடமிருந்து பிரித்துவிட்டது. இவரின் அப்பாவும் படித்து முடித்து மேற் படிப்பிற்கு சென்னை சென்று, அந்த ஊரிலேயே வேலையும் அமைய அங்கேயேத் தங்கி விட்டார். அவ்வப்போது என்னிடம் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார். உன் தாத்தாவும், அவரின் தாத்தாவும் பால்ய நண்பர்கள். இவரை உன் தாத்தாவிடம் அழைத்துப் போ. நானே இன்று அழைத்து வரத்தான் இருந்தேன். ஆனால் எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேலை இருக்கு. அதனால், உன் தாத்தாவிடம் இவரை நாந்தான் அழைத்துக் கொண்டு போகச் சொன்னதாகச் சொல். உன் தாத்தா உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார். நான் நாளைக்கு உன் தாத்தாவைப் பார்க்க வருவதாகச் சொல்” எனக் கூறி அவளையும் சங்கரையும் போகச் சொல்லிவிட்டுத் தன் அலுவலில் கவனம் செலுத்தலானார்.

உமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சங்கரின் பெயரை தான் சன்னதியிலேயே குருக்கள் மாமா மூலம் அறிந்தது அவளுக்கும் மன நிறைவாகத்தானிருந்தது. அதே சமயம் திடீரென்று சங்கர் எப்படி தங்களூர் கோவில் குருக்களுக்கு தெரிந்தவராக முடியும். அவரின் தாத்தா தன் தாத்தாவின் நண்பராக முடியும். நேற்று மாலையில் தன்னுடன் பேசியபோது தன் தாத்தா யாரென்றே காட்டிக் கொள்ளாதவர். இன்று எப்படி ஒரு அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. என பலவாராகத் தன் மனதில் யோசித்துக் கொண்டே வழியில் சங்கரிடம் எதுவும் பேசாது, அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தன் தாத்தாவிடம் கோவில் குருக்கள் மாமா சொன்னதையும் சொல்லிவிட்டு, சங்கரை ஒரு முறை பார்த்து விட்டு உள்ளேச் சென்றாள். அவள் மட்டும் தான் உள்ளேச் சென்றாள். அவளின் காதுளோ சங்கருக்கும்தன் தாத்தாவிற்கும் இடையில் நடக்கும் பேச்சு வார்த்தைகளைக் கவனிக்கலாயின.

சங்கரைப் பார்த்த தாத்தாவோ அவனை நீயாரென்று கேட்காமலேயே “நீ வரப்போவதாக போன வாரமே உன் தாத்தா சுவாமிநாதன் எனக்குச் சொல்லி அனுப்பிவிட்டான். ஆனால் நீ இன்றுதான் என்னைப் பார்க்க வருகிறாய். நீ என்று வேலையில் சேர்ந்தாய். நீ எங்கே இருக்கிறாய். உன் தாத்தாவீட்டு மாடியைத் தான் உனக்கு தங்க ஏற்பாடு செய்திருந்தேன். அது உனக்கு சௌகரியமாக இருக்கா. உன் அப்பா சிவராமன் நன்னா யிருக்கானா. பார்த்து ரொம்ப நாளாயிட்டது.” என அவனை வரவேற்றபடியே, தன் தலையை உள்ளேத்திருப்பி, தன் மனைவியைக் கூப்பிட்டார். “பாரு இங்கே வா. நான் சொன்னபடியே ஸ்வாமிநாதன் பேரன் சங்கர் வந்திருக்கான்” எனக் குரல் கொடுத்தார். உள்ளேயிருந்து பாட்டியும் பரவசமாக வந்தாள். “வாப்பா சங்கரா. சௌக்கியமா. நீ அப்படியே உன் அப்பாவைத் தான் கொண்டிருக்கிறாய். தாத்தா நன்றாக இருக்கிறாரா. உன் பாட்டி நாமகிரியும் நானும் இந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்தோம். உன் அம்மா தான் காலமாகி விட்டளென்று கேள்விப்பட்டேன். பகவானுக்கு கண்ணே இல்லையடா. இருந்திருந்தால் எங்களைப் போல் வயதானவர்களையெல்லாம் விட்டுவிட்டு வாழ வேண்டியவர்களையெல்லாம் பரித்துக் கொண்டு போவானா. நாங்கள் துக்கம் அனுபவிக்கப் பிறந்தவர்கள்” எனத் துன்பமிகுதியால் அழத் தொடங்கிவிட்டாள். அதைப் பார்த்த தாத்தா “இதெல்லாம் நம் விதி. நீ ஊரிலிருந்து வந்தவனுக்கு காப்பி, பலகாரம் கொடுத்து உபசாரம் பன்னாமல், மசமசவென்று பேசி கொண்டிருந்தால் என்ன அர்த்தம்.” என கோபமாகச் சொல்லி, அப்படியே உள்ளே தன் பேத்தி உமாவையும் கூப்பிட்டார். “என்ன உமா உனக்குத் தெரியாதா நம் வீட்டிற்கு வந்தவருக்கு காபி, பலகாரம் கொடுத்து உபசரிக்க. குருக்கள் மாமா அனுப்பினாரென்று சொல்லி விட்டு, நீ உள்ளே போய்விட்டால் மரியாதையாக இருக்குமா. இதையெல்லாம் நீ எப்போ கற்றிக் கொள்ளப் போகிறாய்? என்றும் சொன்னார். அதற்கு உமாவின் பாட்டி “சங்கரா நீ தப்பாக எடுத்துக் கொள்ளாதே. எனக்கு உன் பாட்டியின் ஞாபகம் வந்து விட்டதால் உன்னுடன் பேசி கொண்டிருந்து விட்டேன். நான் உமாவை யார் முன்னாலும் வருவதற்கு அனுமதிப்பதில்லை. அதனால்தான் அவள் உனக்கு காப்பி, பலகாரம் எடுத்துக்கொண்டு வரவில்லை. இதோ நான் போய் அவளிடம் கொடுத்து அனுப்புகிறேன்” என சமாதானம் சொல்லியபடியே உள்ளே போகத் திரும்பினாள். ஆனால், அதற்குள் உமாவே ஒரு சிரிய தட்டில் கொஞ்சம் பட்சணம், காப்பி வைத்துக் கொண்டு எடுத்து வந்து, தன் பாட்டியிடம் கொடுத்துவிட்டு திரும்பினாள். அவளின் தாத்தா அவளைப் பார்த்து “உமா. நீ இன்று அழைத்து வந்தது யார் தெரியுமா. அவர் பெயர் சங்கர். உன் அப்பாவின் உயிர் நண்பனின் மகன்.. உன் அப்பா, சங்கரின் அப்பா சிவராமன், நம் ஊர் கோவில் குருக்கள் மாமா மூவரும் மிகமிக ஆப்த நண்பர்கள். இந்த மூன்றுபெரும் சேர்ந்துவிட்டால், இந்த ஊரே இரண்டுபடும். அத்தனை வம்பு பண்ணுவார்கள். அதில் அதிகமாக குறும்பு பண்ணுவது உன் அப்பா தியாகுவும், சிவராமனும்தான். ஆனால் ஊராரிடம் மாட்டிக்கொண்டு அடியும், உதையும், திட்டும் வாங்குவதோ பாவம் அந்த அப்பாவி குருக்கள்தான். இவர்கள் இருவரும் ஊரார் தங்களைப் பிடிக்க வருவது தெரிந்து ஓடி விடுவார்கள். வேகமாக ஓட முடியாமல் மாட்டிக் கொள்ளுவது குருக்கள்தான். அடிதடியெல்லாம் முடிந்து ஊர் அடங்கினபிறகு,மெதுவாக இவர்களிருவரும் வந்து, குருக்களிடம் “ஏண்டா அதிகமாக அடித்து விட்டார்களா? உன் உடம்பு வலிக்கிறதா? நீ ஏன் எங்களைக் காட்டிக்கொடுக்காமல், நீ மாட்டிக்கொண்டு அடியும், உதையும் வாங்கிக்கொள்ளுகிறாய். பாவம்டா” எனப் பரிவோடு சொல்லி அவனை சமாதானப் படுத்துவார்கள். ஆனால் அவர்களின் நட்புமட்டும் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. மும்மூர்த்திகள் என்று எல்லாராலும் அழைக்கப்பட்டவர்களில், உன் அப்பா விபத்தில் போக, சங்கரின் அப்பா படிப்பு, வேலையென்று வெளியூர் போக, குருக்கள்மட்டும் எங்களுக்குத் துனையாக இந்த ஊரில் இருக்கிறான். பேசிக் கொண்டே தன் மகனின் நினைவு வந்ததால் அவரும், பாட்டியும் கண் கலங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கலங்குவதைப் பார்த்த சங்கரோ “தாத்தா, நான் உங்களைப் பார்க்க வந்த அன்றே வந்திருந்தால் நீங்கள் மனச் சங்கடப்படுவீர்களென்றுதான் நான் தனியாக வரவில்லை. குருக்கள் மாமாவுடன் வருவதாகத்தான் இருந்தேன். ஆனால் அவருக்கு இன்றும் வேலை இருந்ததால் உங்கள் பெயர்த்தியுடன் அனுப்பி வைத்தார்” என தான் உமாவுடன் வந்த காரணத்தைச் சொன்னான். அப்படியும் தாத்தாவும் பாட்டியும் தங்களின் மகனையும் மருமகளையும் இழந்த நினைவுகளால் கலங்குவதைக் கண்டு, சூழ்நிலையை மாற்ற, உமாவைப் பார்த்து “உமா. நீ என்ன பண்ணுகிறாய்” எனக் கேட்டான். உமாவும் அவனைப் பார்த்து மெதுவாக “நான் பிளஸ்-2, வகுப்பில் படிக்கிறேன். என் பிரிவு கணிதம்” எனச் சொன்னான். அவளைத் தொடர்ந்த தாத்தாவும் “ஆமப்பா, அவளின் வகுப்புத் தோழிகள் பேச்சைக் கேட்டு அவளும் அந்த கணிதப் பிரிவிலேயே சேர்ந்துவிட்டாள். இப்போது கணிதம் கடினமாக இருப்பதாகச் சொல்லி மிகவும் கஷ்டப்படுகிறாள். அவள் பள்ளியில் அந்த வகுப்பு ஆசிரியையும் அதிக தேர்ச்சி பெற்றவரில்லை. அனுபவமும் இல்லை. அவள் சொல்லும்முறை இவர்களுக்கு[ப் புரியவுமில்லை. சந்தேகம் கேட்டால் “நான் ஓரளவுதான் சொல்லிக் கொடுக்க முடியும். நீங்களாகத்தான் படித்துக் கொள்ள வேண்டும்” என கண்டிப்பாகச்ப சொல்லுகிறாராம். உமாவிக்கும் வீட்டில் படிப்பு விஷயத்தில் உதவி செய்ய யாருமில்லை. எனக்கும் இப்போதைய பாடத்திட்டமும் தெரியவில்லை. அதனால் அவள் தன் பாட்டியிடம் சொல்லுகிறாள் “தன்னால் பள்ளியில் நன்றாகப் படிக்க முடியவில்லை. மற்றவர்கள் முன் அவமானப்படவும் விருப்பமில்லை. அதனால் அவள் தன் படிப்பை இப்போதே நிறுத்திக் கொள்ளுகிறேன் என்கிறாள். இந்தக் காலத்தில் குறைந்தது பள்ளியிருதி வகுப்பு வரையிலாவது படிக்க வேண்டாமா. குறைந்தபட்ச கல்வித் தகுதிகூட இல்லையென்றால். இவளுக்கு இந்தக் காலத்தில் நல்ல வரன் அமையுமா? ஊரில் இருப்பவர்கள் இவளை பாதிப் படிப்பில் நிறுத்திவிட்டால், எங்களைத் தானே குறை கூறுவார்கள். தாய், தந்தை யிருந்தால் பெண்ணை கவனமாக படிக்க வைத்திருப்பார்கள். பாவம் வயதானவர்களால் என்ன செய்யமுடியும்.” எனப் பலவற்றையும் பேசித் தீர்ப்பார்கள். என்ன செய்வது எனப் புரியாமல் தவிக்கிறேன்” எனத் தன் கவலையைச் சொன்னார். அதற்கு சங்கரும் பதில் சொல்லத் தொடங்கினான்.

“தாத்தா. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் என்னால் இந்த விஷயத்திற்கு ஒரு பரிகாரம் சொல்ல முடியும் .உமாவிற்குத் தனியாக ஒரு சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணலாம். நீங்கள் எனக்கு உத்திரவு கொடுத்தால் நானே உமாவுக்கு தனி வகுப்பு எடுக்க முடியும். நானும் எம்.காம் முடித்து, கணிதத்தில் மேற் படிப்பும் தேர்ச்சி பெற்றுள்ளேன். கணிதம் எனக்கு மிக விருப்பமான பாடமாகும். அதனால், நான் தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் இங்கேயே வந்து உமாவிற்கு, கணிதம் மட்டுமல்ல, அவளின் மற்ற பாடங்களையும் சொல்லித் தர முடியும். அவளை இந்த வருடம் எல்லாப் பாடங்களியும் நல்ல தேர்ச்சிபெற என்னால் பயிற்சி கொடுக்க முடியும். உமா உனக்கு என்னிடம் தனியாகப் பயிற்சி எடுத்துக் கொள்ள ஏதும் சங்கடம் இருக்கிறதா. உனக்குச் சம்மதமென்றால், உன் தாத்தாவின் அனுமதியுடன் நான் உதவத் தயாராக உள்ளேன். உங்களின் சம்மதம்தான் எனக்கு வேண்டும்” என்று சொன்னான். அதைக் கேட்ட பாட்டியும், தாத்தாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். “என்னப்பா நீ பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் சொல்லுகிறாய். நீயும் எங்களுக்கு ஒரு வகையில் உறவுதான். உன் அம்மா வகையில் நீ எங்களின் பேரந்தான். எங்களின் நிலை தெரிந்து நியே வலுவில் உதவ வருவது எங்களின் அதிர்ஷ்ட்டம்தான். இனிமேல் எங்களுக்கு உமாவைப் பற்றின கவலையில்லை. உன் விருப்பப்படியே நீ உமாவின் விஷயத்தில் முடிவு செய்யலாம். உன் வசதிப்படி நீ வரலாம். நானும் உன் தாத்தாவிடமும், அப்பாவிடமும் இது விஷயம் சொல்லி அவர்களிடமும் அனுமதி வாங்கிவிடுகிறேன்” எனச் சந்தோஷமாகச் சொன்னார். அதற்கு சங்கரும் அவரிடம் சிரித்துக் கொண்டே “தாத்தா எனக்கும் மிகவும் சந்தோஷமாகஇருக்கிறது. நானும் வளர்ந்தவந்தான். இன்னும் குழந்தையில்லை. நான் சுதந்திரமாக எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் என் தாத்தா, அப்பாவின் சம்மதம் இருக்கும். அவர்களும் என் விருப்பத்திற்கு மாறாக எதுவும் சொல்ல மாட்டார்கள். நானும் பொறுப்பாகத்தான் இருப்பேன். இது பற்றி அவர்களிடம் கேட்க எதுவுமில்லை. ஆனால் உங்களின் விருப்பத்தை நான் தடை சொல்ல மாட்டேன்” எனப் பதில் கொடுத்துவிட்டு, உமாவை நோக்கி “என்ன உமா நீ ஒன்றும் சொல்லவில்லையே. உனக்கு விருப்பமில்லையா. தயங்காமல் சொல். உன் விருப்பம்தான் இதில் முக்கியம். உன்னை யாரும் கட்டாயப்படுத்தப் போவதில்லை” என்றும் சொன்னான். உமாவும் தன் தாத்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, “எனக்கு எல்லா விஷயங்களிலும் .தாத்தா பாட்டி சொல்லுவதுதான் வழக்கம். அவர்கள் சம்மதப்பட்டால் எனக்கும் சம்மதமே. என்னால் உங்களின் மாலை நேரம் கெடக்கூடாது. உங்களின் வசதிப் படியே செய்யுங்கள்.” எனப் பதில் கொடுத்தாள். சங்கரும் சந்தோஷமாக தாத்தா, பாட்டியை நமஸ்காரம் செய்து விட்டுக் கிளம்பினான்.

சங்கரை வழி யனுப்புவதுபோல் அவனுடன் வாசல் வரை சென்ற உமா மெதுவாக அவன் காதில்மட்டும் படும்படி “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கோவிலில் குருக்கள் மாமாமூலம் என் தாத்தாவைப் பார்க்க வருவதாகத் தெரிந்தவுடன், நீங்கள் என் வீட்டிற்கு வருவதற்காக எதோ நாடகம் போடுகிறீர்களென்று முதலில் நினைத்து விட்டேன். நீங்கள் இங்கு வந்தபிந்தான் நீங்கள் உண்மையாகவே என் அப்பா, தாத்தா, பாட்டிக்கு வேண்டப்பட்டவர் எனத் தெரிந்து கொண்டேன். முதலில் உங்களைத் தப்பாக நினைத்ததிற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்காக உங்களின் இனிமையான மாலைப் பொழுதினை தியாகம் செய்ய முன் வந்ததிற்கும் என் நன்றிகள்” சொன்னாள். அவளின் வார்த்தைகளைக் கேட்டவன் “உமா உன்னைப் பார்த்தவுடனே உனக்கு என்னால் ஆன உதவிகள் அனைத்தையும் செய்ய வேண்டுமென்று என் மனம் சொல்லிவிட்டது. நீ யாரென்று நான் இன்று மாலைவரை தெரிந்துகொள்ளவில்லை. குருக்கள் மாமா சொல்லித்தான் எனக்கு உன்னைப் பற்றிய செய்திகள் தெரிந்தது. எனக்கும் நேற்று கோவிலில் உன்னைப் பார்த்தவுடனேயே உன்பால் ஒரு பிரியமும், அன்பும் ஏற்பட்டுவிட்டது. உனக்கு உதவியாக இருப்பது எனக்கு மிகவும் ஆனந்தமாகவே இருக்கிறது. எல்லாம் அந்த அம்மனின் அருளும், வரமும்தான். உன் மீது நான் என்றும் எதற்கும் வருத்தப்படவோ, கோபப்படவோ மாட்டேன்: என அன்புடன் சொன்னான். பிறகு கேட்டான் “நான் மாலையில் எந்த நேரம் வந்தால் உனக்கு வசதியாக இருக்கும் சொல்” என்று. அதற்கு அவள் “உங்களுக்கு எப்போ சௌகரியப்படுமோ அப்போதே வாருங்கள். நான் மாலையில் கோவிலைத் தவிர வேறு எங்கும் போக மாட்டேன். மாலையில் நீங்கள் காபி, டீ இரண்டில் எது விருப்பமாகச் சாப்பிடுவீர்கள்” எனவும் கேட்டாள். அதற்கு சங்கர் சிரித்துக் கொண்டே உனக்கு எது விருப்பமோ அதுவே எனக்கும் பிடிக்கும் இனிமேல்” எனப் பதில் சொல்லி விட்டுப் போனான்.

3. பாடமும் பரிவும்

மறுநாள் கண் விழிக்குக்போதே சங்கரின் மனம் ஆனந்தமாக ஊஞ்சலாடத் தொடங்கியது. அவனின் மனமோ எப்போது மாலை நேரம் வரும் உமாவின் வீட்டிற்குப் போகலாம் எனத் தவிக்கலாயிற்று. உமாவைப் பார்த்து இரு தினங்களே முற்றுப் பெற்றாலும், அவளின் உருவமும், நினைவுகளும் தன் இதயத்தில் திடமாக இடம் பிடித்துக் கொண்டு தன்னைத் துடிக்க வைப்பதை நினைத்து தனக்குத்தானே பரவசமடைந்தான். அதே எண்ணங்களில் மூழ்கியபடியே தன்னுடைய அன்றாட அலுவல்களை கவனிக்காலானான். மாலை வரும்போதே உமாவிற்குப் பாடம் எழுத வசதியாக 200 பக்கங்கள் கொண்ட நோட்டுக்கள் 12 வாங்கியும் வந்தான்.

மாலை ஆறு மணிக்கு மேல் சங்கர் உமாவின் வீட்டை அடைந்தான். உமாவும் அவன் வரவை எதிபார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். சங்கர் வந்தவுடன், உமாவின் தாத்தாவும் அவனை வரவேற்று, சங்கருக்கு காபி பலகாரம் கொடுக்கச் சொன்னார். சங்கர் உமாவைப் பார்த்து “நீ தயாராக இருக்கிறாயா. பாடம் ஆரம்பிக்கலாமா” எனக் கேட்டுக்கொண்டபடியே தனக்கு வைத்திருந்த பலகாரம், காப்பியைச் சாப்பிட்டு முடித்து, பாடம் எடுக்க ஆயத்தமானான். கொஞ்சம்கூட நேரத்தை வீனாக்காது, கருத்தாகப் பாடம் சொல்லிக் கொடுக்கலானான். முதலில் அவளின் கணிதப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, முதல் பகுதியிலிருந்தே பாடம் சொல்லத் தொடங்கினான். உமாவிடம் அந்தப் பகுதியில் உனக்கு புரிந்ததைச் சொல் எனக் கேட்டு, அதற்குமேல் அவளுக்குப் புரியும்படியாக மெதுவாகப் பாடத்தை ஆரம்பித்தான். பாடம் சொல்லும்போதே, உமாவிடன் “நான் சொல்லிக்கொண்டு வரும்போது உனக்கு எந்த இடத்தில் சந்தேகம் வந்தாலும், உடனே என்னைக் கேட்டுவிடு. பாடத்தில் ஒரு இடம் புரியாமல் போய்விட்டாலும், மற்ற இடங்களில் தொடர்ச்சியாகப் புரிந்து கொள்வது கடினமாகும். அதனால் முதல் முறை படிக்கும்போதே, சரியாக கவனத்தில் புரிந்து கொள்ளவேண்டும்.உனக்கு நான் நிதானமாகவே பாடம் எடுக்கிறேன். நீயும் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறி, மேலும் அவள் ஒவ்வோரு பகுதியையும் நன்றாகப் புரிந்து கொண்டபிந்தான், அடுத்தப் பகுதிக்குச் சென்றான். இப்படி சங்கர் ஒவ்வோரு பகுதியாக நிதானமாகத் தனக்குப் புரியும்படி சொல்லிக் கொடுத்தது உமாவிற்கும் சுலபமாகவே பாடங்களைத் தெரிந்து கொள்ள வசதியாகவே இருந்தது. ஆரம்ப பாடங்கள் முடிந்தபின், உமாவிடன் அன்றைய வகுப்புப் பாடத்தில் ஏதும் சந்தேகங்கள் இருந்தாலும், தன்னிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னான். அவன் சொல்லியபடியே, அன்றைய வகுப்புப் பாடங்களையும், அவனின் உதவியுடன் ஒரு முறை உமா படித்துக் கொண்டாள். அப்படிப் படிக்குக்போதே அந்தப் பாடங்களில் சங்கர் கேட்ட ஒரிரு கேள்விகளுக்கும் சரியான பதிலையும் உமாவால் சொல்ல முடிந்தது. தன்னால் ஒரு முறை படித்தபோதே பாடங்களைச் சரியாகப் புரிந்து கொண்டது உமாவிற்கே சிரிது ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் தனக்குப் புரியாத பாடங்கள், எப்படி சங்கர் ஒரு முறை சொல்லும்போதே புரிந்து கொள்ள முடிகிறது என எண்ணி தனக்குள் சந்தோஷப்பட்டாள். தன்னுடைய பிராத்தனைகள் பகவான் அருளால்தான் இன்று சங்கரின் மூலம் நிறைவேறுகிறது எனவும் மனதில் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தாள்.

ஒரு நாள் மாலை நேரம். அன்று காலையிலிருந்தே பாட்டி உமாவின் மேல் கோபமாக இருந்தாள். உமாவிற்கு குழந்தையிலிருந்தே ஒரு விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பாள். அவளுக்குத் தினமும் ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பாட்டி அவள் கேட்கும்போதெல்லாம் கொடுத்தாள். பிறகு, அவள் வளர்ந்த பின்னும் அதே மாதிரி கேட்கும்போதெல்லாம் திட்டுவாள். ஆனால் அவளின் ஏக்கத்தைப் பார்த்தபின், பாட்டியால் மனம் தாளாது, அவளிடம் “உமா, நீ வளர்ந்த பெண்ணாகிவிட்டாய். இனியும் பச்சைக் குழந்தைபோல் மிட்டாய் கேட்டு பிடிவாதம் செய்யாதே. இனிமேல் நான் உனக்கு ஒரு நாளைக்கு இரண்டு மிட்டாய்தான் வாங்கித் தருவேன். அதற்குமேல் நீ சாப்பிடக்கூடாது. சரியா” என கொஞ்சம் மிரட்டலாகச் சொல்லி, அன்று முதல் தினமும் இரண்டு மிட்டாய் என வாங்கிக் கொடுத்தாள். உமாவும் பதினாறு வயதுப் பெண்ணாகி விட்டாள். இருந்தாலும், அவளால் தினமும் இரண்டு மிட்டாயாவது சாப்பிடவில்லையென்றால், திருப்தியாகாது. அதனால் பாட்டியிடம் மிட்டாய் வாங்க பணம் கேட்டு அதற்காகத் திட்டும் அவ்வப்போது வாங்கிக்கொள்வாள். அதைக் கண்ட தாத்தா, அவளிடம் “நீ தினமும் பாட்டியிடம் மிட்டாய் கேட்காதே. நான் உனக்கு வாரம் இரண்டு ;ரூபாய் கொடுக்கிறேன். கடையில் இருபது மிட்டாயாக வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு வாரம் பூராவும் ஒரு கணக்காக வைத்துக் கொள்.” எனச் சொல்லி, வாராவாரம் அவளுக்கு இரண்டு ரூபாய் கொடுக்கும்படி தன்னுடைய மனைவியிடமும் சொன்னார். அவர் அப்படிச் சொன்னாலும், பாட்டி வாராவாரம் அவளுக்கு இரண்டு ரூபாய் கொடுக்கும்போது அவளைத் திட்டிக் கொண்டுதான் கொடுப்பாள். தாத்தா கேட்டால், “உங்களுக்கென்ன சொல்லி விட்டீர்கள். நாளைக்கு அவள் ஒரு வீட்டிற்குப் போய், அங்கும் இம்மாதிரி ஒரு பழக்கத்தை தொடர்ந்தால், அங்கு உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். என்னைத்தான் சொல்வார்கள் “பேத்திக்குச் செல்லம் கொடுத்து, பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டதாக” எனவும் சொல்லி, அவரை அடக்கிவிடுவாள். அந்தவாரம் அவளுடைய மிட்டாய்க்குப் பள்ளியில் கூடப் படிக்கும் பெண்களும் பங்கு கேட்டதால், அவளுடைய ஒரு வாரக் கணக்கு, சீக்கிரம் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும்போதே, அவளிடம் மிட்டாய் தீர்ந்து விட்டதால், பாட்டியிடம் அன்றே மிட்டாய் வாங்க இரண்டு ரூபாய் காலையில் கேட்டாள். அதற்கு பாட்டி, “உன் கணக்குப்படி நான் வரும் சனிக்கிழமைதான் பணம் கொடுப்பேன். மிட்டாய் இல்லையென்றால் இரண்டு நாள் சும்மாக்கிட. ஒன்றும் குறைந்து போய் விடமாட்டாய்” எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். பாட்டியின் பிடிவாதத்தை தாத்தாவாலும் அசைக்க முடியவில்லை. அதனால் அன்று காலையில் உமா கண்கலங்கி, பாட்டியின் கோபத்தைத் தாளமுடியாது, பள்ளிக்குச் சென்றாள். பேத்தியின் முகம் வாடியதைக் கண்ட தாத்தா, பாட்டியிடம் கொஞ்சம் கோபமாகக் கேட்டார். உனக்கு அப்படியென்ன ஒரு பிடிவாதம். பாவம் சின்னப் பெண். ஆசைபாட்டால், கொடுத்துவிட்டுபோவதை விட்டுவிட்டு, அவளை அழவிடுகிறாயே” எனவும் கேட்டார். ஆனாலும் பாட்டியின் மனம் இறங்கவில்லை. தான் உமாவிடம் கண்டிப்பாக இருப்பதை பார்த்து, தாத்தா இப்படி அவளுக்குப் பரிந்து வந்தால், அவளுடைய பிடிவாதம் குறையாது. அதனால், அவளின் விஷயத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் தலையிடக் கூடாதென்றும் முடிவாகச் சொல்லி விட்டாள்.

தாத்தாவால் பாட்டியின் பிடிவாதத்தையும், அதனால் பேத்தியின் ஏக்கத்தையும் மாற்ற முடியவில்லை. அதனால் அவர் மனம் நொந்துபோய் ஒன்றும் பேசாது போய்விட்டார். ஆனால், உமா பிறந்ததிலிருந்து அந்த வீட்டில் வேலை செய்யும் மாரி-அஞ்சலை தம்பதியருக்கு பாட்டி இத்தனை பிடிவாதத்துடன் இருப்பதும் மிகவும் துன்பத்தை அளித்தது. அதனால் இருவரும் தங்களுக்குள் பாட்டியின் குணத்தை விமரிசம் செய்து கொள்வார்கள். அன்று மாரி சாமான் வாங்கக் கடைக்குச் சென்றான். அங்கே சங்கரைப் பார்த்தான். மாரியைப் பார்த்த சங்கர் “மாரி, உமா ஸ்கூலுக்குச் சென்று விட்டாளா? இன்று காலையில் ஏதும் பாடம் படித்தாளா? எனவும் கேட்க, அதற்கு அவள் “எங்கே அந்தப் பெண் நிம்மதியாகப் படிக்க விடுகிறார் அந்த பாட்டியம்மா. பொல்லாத இரண்டு ரூபாய். அதற்காக, இன்று காலையில் உமாப் பெண்ணை மிகவும் திட்டி, அது அழுதுகொண்டே சாப்பிடாமல் கூட பள்ளிக்குச் சென்று விட்டது. அதற்கு காலையிலேயே மனம் நொந்துவிட்டது. என்ன செய்வது, தாயிருந்தால் அனுசரனையாக இருப்பாள். பாவம்” எனச் சொல்லி தன்னுடைய வருத்தத்தை சங்கரிடம் தெரியப்படுத்தினான். அதைக் கேட்ட சங்கர் அவனிடம் “என்ன நடந்தது. உமா என்ன தப்புச் செய்தாள் பாட்டி கோபப்படும்படி? எனவும் கேட்டான். அதற்கு அவன் “பாவம் சின்னப் பெண். குழந்தையிலிருந்து அதுக்கு ஆரஞ்சு மிட்டாய் என்றால் மிகவும் பிரியம். தினமும் இரண்டு மிட்டாயாவது சாப்பிடாவிட்டால் அதற்கு நாளே போகாது. மகராசி பெரிய மனது வைத்து. வாரம் அள்ளாத குறையாக இரண்டு ரூபாய் கொடுப்பார். அதைக் கொண்டு நான் பாப்பாவிற்கு இருபது ஆரஞ்சு மிட்டாய்கள் கடையிலிருந்து வாங்கிக்கொடுப்பேன். அப்போ பார்க்கனும் அதன் முகத்தில் ஒரு பூரிப்பு வரும். அதற்கே இந்த உலகத்தைக் கொடுத்து விடலாம்போல் இருக்கும். இந்த வாரம் உமாவின் பள்ளியில் இருபெண்கள் அவளிடமிருந்து கொஞ்சம் மிட்டாயை வாங்கிக் கொண்டார்களாம். பாப்பா இன்று காலையில் பாட்டியிடம், மிட்டாய் தீர்ந்து விட்டது, வாங்கக் காசு வேணும் எனக் கேட்டவுடன், பாட்டி பெரியதாகக் கணக்குப் போட்டு, உனக்கு நான் சனிக்கிழமைதான் பணம் கொடுக்கனும். அன்றுதான் கொடுப்பேன் எனவும் சொல்ல, உமாவோ “பாட்டி, என்னுடைய மிட்டாய் தீர்ந்து விட்டது அதனால்தான் கேட்கிறேன்” எனவும் சொன்னது. “அதெப்படி தீரும். ஒருனாளுக்கு இரண்டுக்குமேல் சாப்பிடக்கூடாது என்பது தெரியாதா? நீ கணக்கில்லாமல் தின்று விட்டு, இப்போ கேட்டால் எல்லாம் நான் கொடுக்க மாட்டேன்” எனத் தீர்மானமச் சொன்னார். அதற்குத் தாத்தாவும் பேத்திக்காக சிபாரிசு பண்ண, அவரையும் அந்தம்மா திட்டி, நான் சொன்னது சொன்னதுதான். மாற்றமில்லை” என பெரிய நீதிபதிபோல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். பாவம் உமா, பரிதாபமாக தாத்தாவைப் பார்த்துவிட்டு, கண்களில் நீருடன் அழுதுகொண்டே, சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்றுவிட்டாள். அதற்கும் அந்தம்மா “ஒருவேளை சாப்பிடாவிட்டால், ஒன்றும் குறையாது. ஒருவேளை பட்டினி கிடப்பது நல்லதுதான்” எனவும் சொல்லிவிட்டாள். எனக்குத்தான் மனம் சரியில்லை. நேற்றும் சரியாகச் சாப்பிடவில்லை. அதற்குப் பிடிக்காததைப் பாட்டி செய்திருந்தார்கள். அதனால் உமா கொஞ்சம்தான் சாப்பிட்டாள். இன்றும் காலையிலும் சாப்பிடவில்லை, மதியத்திற்கும் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. பாவம், சின்னப்பெண் பசியால் துடிக்கும்” எனச் சொல்லி கண்களில் நீர் வழிய நின்றான். அதைப் பார்த்த சங்கரின் மனமும் கலங்கியது, முக்கியமாக உமா ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாள் என்பதே அவனின் துன்பத்திற்குக் காரணம். அவன் மாரியிடம் ‘உனனால் உமாவின் பள்ளிக்குப் போக முடியுமா’எனக் கேட்க, அவன் அதுமுடியும் என தலையாட்டினான். அவன் உடனே, அங்கிருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்குச் சென்று, உமாவிற்கு காலைக்கும், மதியத்திற்கும் உணவுப் பார்சல் வாங்கி, மாரியிடம் கொடுத்து, “உமாவிடம் நான் சொன்னதாகச் சொல் அவள் இதைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். நான் மாலையில் அவளைப் பார்கிறேன்” எனச் சொல்லிவிட்டு சென்றான். மாரியும் பள்ளிக்குச் சென்று உமாவிடம் சாப்பாட்டுப் பார்சலைக் கொடுத்துவிட்டு, சங்கர் சொன்னதையும் சொல்லி, அவளை உடனேயே காலை ஆகாரத்தைச் சாப்பிடச் செய்தான். பிறகு மனம் நிம்மதியடைந்து வீட்டிற்கு வந்து விட்டான்.

மாலையில் வழக்கம்போல் சங்கர் உமாவிற்குப் பாடம் எடுக்க வந்தான். அவன் வந்ததும் உமாவைப்பார்த்தான். உமாவுக்கும், காலையில் தன் வீட்டில் நடந்த சம்பவங்கள் சங்கருக்குத் தெரிந்தது சங்கடமாகவே இருந்தது. தன்னுடைய குழந்தைதனமான பிடிவாதம் அவன் மனதில் தன்னைப் பற்றி ஏதும் தப்பாக எண்ண இடம் கொடுத்திருக்குமோ எனவும் ஒரு சின்ன பயம் வந்தது. அவனை பார்க்கவும் வேட்கமாக இருந்தது. அதனால் கூடியவரையில் அவனிடம் தன் முகத்தைக் காட்டாமல், குனிந்த படியே அன்றைய பாடங்களைப் படிக்க அமர்ந்தாள். அவனும் அவளிடம் எதுவும் கேட்காது, பாடம் சம்மந்தமாகவே கேட்டான். கொஞ்ச நேரம் சென்றபின், அவளிடம் மெதுவாக “நீ பள்ளியில் சாப்பிட்டாயா? என மட்டும் கேட்க, அவளும் தலையாட்டினாள். உமாவே மெதுவாக “மாரி உங்களைப் பார்த்தனா? எனவும் கேட்க, சங்கர் “ஆமாம், அவன் மூலம்தான் நீ சரியாக சாப்பிடாமலும், கையில் எடுத்துக் கொள்ளாமலும் பள்ளீக்குச் சென்றது தெரிந்தது. கோபமோ, வருத்தமோ வந்தால் பட்டினி கிடந்தால் சரியாகுமா? உன்னிடம் தவறிருந்தால் திருத்திக் கொள்ள வேண்டாமா? அது புரியாத வயதா உனக்கு? எனவும் கொஞ்சம் கோபமாகவும், அவள் சரியாக சாப்பிடாமல் இருப்பது தனக்குப் பிடிக்காது என்பதையும் தெரியச் சொன்னான். தன்னுடம் அவன் காட்டும் பாசத்தையும் பரிவையும் புரிந்த உமாவும் :மெதுவாக ‘எனக்குப் புரிகிறது. இனிமேல் எந்த சின்ன விஷயத்துக்கும் அதிக ஆசைப் படமாட்டேன்: என தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தாள். அன்றையப் பாடங்கள் முடிந்தவுடன், சங்கர் உமாவிடம் “உன் கையைக் காட்டு” எனச் சொன்னான். காரணம் புரியாத உமாவும் அவன் சொன்னபடியே அவன் முன் தன் வலது கையை நீட்டினாள். அதில் சங்கர் ஒரு ஆரஞ்சு மிட்டாயை வைத்தான்.. இதற்குத்தானே இன்று நீ உன் பாட்டியிடம் திட்டு வாங்கினாய்”எனவும் கேட்க, உமாவிற்கு தன்னுடைய குழந்தைத்தனம் தெரிந்து, மிகவும் வெட்கமும், வருத்தமும் அடைந்தாள். அவனின் முகத்தைக் கூட பார்க்க வெட்கப்பட்டு, தலையைக் குனிந்து கொண்டாள். அதைப் பார்த்த சங்கர் “இனி நீ இதற்காக உன் பாட்டியிடம் கெஞ்ச வேண்டாம். நான் உனக்கு தினமும் தருகிறேன்”எனவும் சொல்லிக் கொண்டு அவள் கையில் வைத்த ஒரு மிட்டாயுடன் இன்னும் ஒன்றையும் எடுத்து வைத்தான். அதைப் பார்த்தவுடன் உமாவிற்கு மிகவும் சந்தோஷம் ஆகியது. காலையிலிருந்தே மிட்டாய் சாப்பிடாததால், மிகவும் ஏக்கத்துடன் இருந்தவளுக்கு கையில் இரண்டு மிட்டாய் கிடைத்தவுடன், சின்னக் குழந்தைபோல் இது எனக்குத்தானே எனவும் கேட்டவளின் முகத்தில் தோன்றிய ஒரு சிரிப்பையும், மகிழ்ச்சியையும் கண்ட சங்கரின் மனமும் சந்தோஷப்பட்டது. சிரித்தபடியே ஆமென்பதற்கு அடையாளமாக தன் முகத்தில் ஒரு சிறு புன்சிரிப்பை உதிர்த்தான். அவன் முகத்தில் கண்ட சம்மதத்தை தெரிந்து கொண்டவள், உடனேயே அவசர அவசரமாக அந்த மிட்டாயைத் தன் வாயில் அடக்கிக் கொண்டாள். அதை பார்த்த சங்கருக்கு அவளின் குழந்தைத்தனம் தெரிய, சிரித்தான். பிறகு வேடிக்கையாகக் கேட்டான் :எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே? இரண்டையும் நீயே தின்றுவிட்டாயே” எனவும் பரிகாசமாகக் கேட்டான்.

அதைக் கேட்டவுடந்தான் உமாவிற்கு தான் காட்டிய அவசரமும், சங்கர் கொடுத்ததிற்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல், அத்தனை அவசரமாக மிட்டாயைத் தின்றது சரியா எனவும் யோசித்தாள். அதனால் மெதுவாக சங்கரிடம் “என்னை மன்னித்து விடுங்கள். மிட்டாயைப் பார்த்தவுடன் எனக்கு வேறு எதுவும் தோணவில்லை. மிகவும் அசடாகித்தான் போனேன், சின்ன மரியாதைகூடத் தெரியாமல், உங்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல் மிட்டாயை என் வாயில் போட்டுக் கொண்டது மிகவும் தப்புத்தான்” எனவும் தன்னுடைய செய்கைக்கு வருத்தம் அடைந்தாள். அதைக் கேட்ட சங்கர் “பரவாயில்லை. என்னிடம்தானே அப்படி நடந்து கொண்டாய்?’ எனச் சொல்லியதுடன். உனக்கு தினமும் இரண்டு மிட்டாய் போறுமா, இன்னும் வேணுமா? எனவும் கேட்டான். அதைக் கேட்டவுடன் மீண்டும் உமா ஒரு குழந்தையானாள். எனக்கு இனிமேல் நீங்களே மிட்டாய் வாங்கி வருவீர்களா? எனக் கேட்க, சங்கரும் ‘ஆமாம்’ எனச் சொல்லிச் சிரித்தான். அவனின் சிரிப்பைப் பார்த்தவளுக்குள் ஒரு தைரியம் வந்ததுபோல், :அப்படியானால் நீங்களும் எனக்கு தினமும் இரண்டு மிட்டாய்தான் தருவீர்களா> எனச் சின்ன ஏக்கத்துடன் கேட்க. “வேறு எத்தனை வேண்டும்: என சங்கர் கேட்டான். பதில் சொல்லத் தெரியாமல் முகத்தை வைத்துக் கொண்ட உமாவைப் பார்த்தவன் சிரித்தபடியே தன் பான்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு சின்ன பிளாஸ்டிக் கவரை எடுத்து அவளிடம் தந்தான். அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாயைக் கண்ட உமா அவனிடம் “இந்தப் பாக்கெட்பூரா எனக்கா” எனவும் கேட்டாள். “உனக்குத்தான். நீ தினமும் வேண்டும்போதெல்லாம் சாப்பிடு. ஆனால், அதிகம் சாப்பிடக்கூடாது. ;பின்னால் உன் பற்கள் கெட்டு விடும். அப்புறம் உன் அழகான முத்துப் பல் சிரிப்புக் காணாமல் போய்விடும். தினமும் அதிகம் போனால், நான்குக்கு மேல் சா;ப்பிடக்கூடாது” எனவும் பரிவாகச் சொல்லிவிட்டு, அவளின் புஸ்தகப் பையில் அந்த கவரை வைத்தான். சிறிது நேரம் சென்றபின் உமா :உங்களுக்குத்தான் என் மீது எத்தனைப் பிரியம். மாரி சொன்னவுடன், நான் சாப்பிடவில்லைஎன்பது உங்களுக்குத் தெரிந்து, உடனேயே மாரியின் மூலம் எனக்கு கொடுத்து அனுப்பியதும், இப்போ என் ஆசைத் தெரிந்து, இத்தனை மிட்டாய் வாங்கித் தரவும் எனக்கு உங்களைவிட்டால் வேறு யாரிருக்கிறார்கள்: எனவும் சொல்லி, அவன் தன்னிடம் காட்டும் பரிவுக்கு பதிலாக தான் என்ன செய்ய முடியுமெனவும் யோசித்து, தன்னால் ஒரு நன்றி என ஒரு சொல் சொல்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய சக்தியற்று இருப்பதை உணர்ந்து கொண்டு, மனம் வருந்த தன் தலையைக் குனிந்து கொண்டாள். அதைப்பார்த்த, “உமா, நீ இப்படி முகம் வாடி யிருந்தால், என்னால் தாள முடியாது அதனால், நீ எப்போதும் என்னுடன் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக இரு. எனக்கு உன்னிடம் வேண்டியதெல்லாம் அது ஒன்றுதான். என் உமா என்றும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே என்னுடன் இருக்க வேண்டும்.”எனவும் ஆசையாகச் சொல்லிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பினான்.

4. கன்னிப் பெண்னின் மனதில் பூத்த பருவப் பூ

நாட்கள் செல்லச்செல்ல, சங்கரின் தினப்படி வருகையும், அவனின் தீவிரமான முயற்சியால், உமாவும் தன்னுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பித்தாள். இப்போதெல்லாம் அவள் தன் வகுப்பில் தனிமைப்பட்டு இருப்பதில்லை. தன்னுடன் படிக்கும் வகுப்புத் தோழிகளுடன் நன்றாகப் பழக ஆரம்பித்தாள். வகுப்பில் அவளுடைய தோழிகளும் அவளிடம் வெளிப்படையாகவே கேட்கத் தொடங்கினார்கள். “என்ன உமா உன்னிடம் கொஞ்ச நாளாகவே ஒரு மாற்றம் தெரிகிறதே. முன்பு போல் இல்லாமல், இப்பவெல்லாம் நீ வகுப்பில் நல்ல கவனத்துடன் இருக்கிறாய். கணிதம் மட்டுமின்றி எல்லா பாடங்களிலுமே நல்ல முன்னேற்றம் காட்டுகிறாய்? உன்னிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட என்ன காரணம். உனக்குப் பாடம் சொல்லித்தர உன் தாத்தா யாரையாவது தனிப்பட டியூஷன் வைத்திருக்கிறார்களா? அந்த இடத்தில் நாங்களும் வந்து பாடம் படிக்க உன் தாத்தாவிடம் சொல்லி எங்களுக்கும் உதவி செய்வாயா?” எனப் பலவாறு கேட்டார்கள். உமாவோ அவர்கள் யாருக்கும் தனக்குச் சங்கர் வந்து தனியாகப் பாடம் எடுப்பதைச் சொல்ல விரும்பவில்லை. அதனால் அவள் மழுப்பலாக அவர்களிடம் “நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றுமில்லை. என் வகுப்பில் நான் சரியாக கவனம் செலுத்தாமல், பாடத்தில் குறைந்த மார்க்குகளே வாங்கியதைக் கண்டு என் தாத்தா என்னை மிகவும் கோபித்துக் கொண்டு, இனி நான் பாடத்தில் கவனமாக இல்லாவிட்டால், என் படிப்பை நிறுத்தி விடுவதாகச் சொல்லி என்னைக் கடுமையாகத் திட்டிவிட்டார். அதனால், எங்கே என் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவாரோ என்ற பயத்திலேயே நான் தினமும் அதிக நேரம் எடுத்துக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன். என் தாத்தாவும், நான் பாடங்களை எல்லாம் படித்து முடிக்கும்வரை என்னுடனே இருப்பார். தினமும் வகுப்பில் எடுத்த பாடங்களை நான் அதே நாளில் மறுமுறை என் தாத்தாவிடமும் படித்துக் கொள்ளுவதால் பாடங்கள் என் மனதில் நன்றாகப் படிந்துவிடுகிறது.” எனச் சொல்லி விட்டாள். அன்று அவள் வகுப்பில் அந்த மாதப் பரீட்சைப் பேப்பர்களைக் கொடுத்த,வகுப்பாசிரியர்களும் உமாவிடம் “உமா. எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தமுறை நீ எல்லா பாடத்திலும் நல்ல முன்னேற்றம் காட்டி யிருக்கிறாய். முக்கியமாக கணிதப் பிரிவில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முன்னேற்றம் இருக்கிறது. என்ன காரணம்” எனக் கேட்டவர்களுக்குத் தான் தன் வகுப்புத் தோழிகளிடம் சொன்னதையேச் சொன்னாள். “ அதற்கு அவளின் வகுப்பாசிரியை “மிகவும் சந்தோஷம் உமா. உன் தாத்தாவிற்கு எங்களின் சந்தோஷத்தைச் சொல். உன் படிப்பு விஷயமாக அவர் காட்டும் அக்கரைக்கு எங்களின் ஆதரவும் உண்டு. நீ இப்படியேத் தொடர்ந்து கவனமாகப் படித்தால், நிச்சயமாக உன்னால் ஆண்டு இறுதி பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, உன்னால் பள்ளிக்கும் பெருமை சேர்க்க முடியும். உனக்கு வாழ்த்துக்கள் என்று கூறி, அவளை பாராட்டினார்கள். தன்னுடைய வகுப்பில் எல்லாரும் தன்னைப் பாராட்டியதை நினைத்து அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இத்தனைக்கும் காரணமான சங்கரின் அன்பு முகம் அவளின் மனதிற்குள் வந்து அவளைப் பார்த்து பெருமையுடன் சிரிப்பதுபோல் உணர்ந்தாள். அதே மனமகிழ்ச்சியுடன் அவள் வீட்டிற்கு வந்தாள். நான்கு நாளாக சங்கரை வீட்டிற்கு வர வேண்டாமென்று பாட்டி மாரிமூலம் சங்கருக்குச் சொல்லியனுப்பியது பற்றி சங்கர் கேட்டால் என்ன காரணம் சொல்லுவது என்றும் அவளுக்குள் தயக்கமேற்பட்டது. உண்மையான காரணத்தைச் சொல்ல அவளுக்கு வெட்கமாகவும் இருந்தது. அதே சமயம் அவன் தான் மாதாந்திர வயிற்றுவலியால் துன்பப்படுவதை மாரியின் மூலம் தெரிந்து, தனக்கு அவன் மூலமே வலிநிவாரண மருந்து, மாத்திரைகள் வாங்கி அனுப்பிய பரிவையும் மனதிற்குள் நினைந்து ஆனந்தப்பட்டாள். சங்கர் தன் வாழ்விற்கு ஒரு விடிவெளியாக இருப்பது உணர்ந்து மனதில் ஒரு நிறைவும் ஏற்பட்டது. மாலையில் இன்று தவறாமல் சங்கர் வரவேண்டுமென்று மனதிற்குள் ஒரு பிராத்தனையும் செய்து சொண்டாள். அவனை நாங்கு நாட்களாகப் பார்க்காததும் அவளின் மனதில் ஒரு தாபத்தை ஏற்படுத்தியது. கன்னிப் பெண்ணுக்குக் காரணமும் தெரியவில்லை. மனதிற்குள் ஆனந்தம் ஊஞ்சலாடியது.

மனதில் மகிழ்ச்சியுடன் உமா அன்று சங்கரின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் வீட்டிற்கு வந்தவுடன் அவளின் தாத்தாவும், பாட்டியும் அந்த ஊரிலேயே இருந்த ஒரு வயதானவர் காலமாகிவிட்டதால், அவர்களின் வீட்டிற்குப் போக வேண்டியதாயிற்று. உமாவைத் தனியாக விடவேண்டாமென்று, உமாவின் பாட்டி தன் வீட்டில் மேல் வேலை பார்க்கும் மாரியைத் தாங்கள் வரும்வரை உமாவிற்குத் துனையாக விட்டுப் போனார்கள். போகும்போது தாத்தா உமாவிடம் “உனக்கு நான்குனாளாகப் பாடம் இல்லை. இன்று சங்கர் வந்தால் நீ உன் பாடத்தைப் படித்துக் கொண்டிரு. நாங்கள் இல்லையென்று பாடத்திற்கு தடை போடவேண்டாம். சங்கரையும் நாங்கள் வரும்வரை இங்கேயே உனக்குத் துனையாக இருக்கட்டும்” என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

உமாவும் தன் தாத்தா சொல்லியபடியே சங்கரின் வருகைக்காக தயாராக இருந்தாள். அன்று அவள் மிகவும் சந்தோஷத்திலிருந்ததால், தன்னையும் கொஞ்சம் அலங்கராரப்படுத்திக் கொண்டாள். தனக்குப் பிடித்தமான கிளிப்பச்சை நிறத்தில் பாவாடை, சட்டையும், அடர் பச்சைநிற தாவணியும் அணிந்து கொண்டாள். பிறகு தயாராகக் கட்டி வைத்த மல்லிகைச்சரத்தையும் கூந்தலில் வைத்துக் கொண்டாள். அவளின் அலங்காரத்தைப் பார்த்த மாரியும் மிகவும் சந்தோஷப்பட்டான். உமாவைப் பார்த்து “என்ன உமா பாப்பா இன்று மிக உற்சாகமாக இருக்கிறாயே. இன்று எதாவது பள்ளியில் விஷேசமா?” என சிரித்துக் கொண்டே கேட்டான். உமாவும் அவனுக்குப் பதிலாகச் சொன்னான் “ஆமாம். மாரித்தாத்தா இன்று ஒரு நல்ல சமாசாரம் நடந்தது. அதை நான் முதல் முதலாக சங்கரிடம்தான் சொல்லப் போகிறேன். ஏனென்றால் இந்த நல்ல சமாச்சாரம் நடந்ததிற்கு மூலக் காரணம் சங்கர்தான்” அதைக் கேட்ட மாரியும் “ஆமாம்மா, உனக்கு ஒரு நல்லது நடக்கவேண்டுமானால் அது சங்கர் தம்பியால்தான் நடக்கும் உனக்காக சங்கர்தம்பி என்ன வேண்டுமானாலும் செய்வார்” எனக் கூறிவிட்டு, பின் கட்டுக் கதவைத் தாள் போடப்போனான். உமாவும் சந்தியா வேளை வந்து விட்டதால், ஸ்வாமி விளக்கை ஏற்றப் போனாள். ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றியதும், கையோடு வாசலில் உள்ள மாடத்திற்கும் விளக்கு ஏற்றி வைத்தாள். பிறகு சங்கரைக் காணுமேயென்று யோசித்தபடியே இருந்தாள். நேரம் ஆகஆக, அவளின் மனதில் தாபமும் ஏற்பட்டது. அவளையும் அறியாமல் அவளின் மனதில் தோன்றிய ஒரு திரைப்படப்பாடலையும் அவள் மெதுவாகப் பாடத் தொடங்கினாள். அது ஒரு பழையப் படத்தில் வள்ளியாக நடித்த ஒரு கதாநாயகி வேலனின் வரவை வேண்டி பாடும் பாடல்.

“அழகன் வடி வேலன் வரக் காணலையேத் தோழீ

காரணத்தை நீ அறிவாயா என் தோழீ: என தாபத்தோடு வேலனின் வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் வள்ளியைப் போலவே உமாவும் பாடினாள். அவள் பாடிக் கொண்டிருக்கும் போதே அவளின் வேலனாய் சிரித்துக் கொண்டே சங்கரும் உள்ளே வந்தான். பின் வாயிற்வழியாக சங்கரின் வருகையைக் கவனித்த மாரியையும் தன் செய்கையினால் சப்தம் செய்யாது வெளியே போகவும் ஜாடை காட்டினான். மாரியும் அதைப் புரிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே சப்தம் செய்யாது, பூனைபோல வெளியேப் போனான். தன் பாடலியேயே கவனத்தை வைத்துக் கொண்டு, பாடிக் கொண்டே கூடத்திற்கு வந்தவுடன்தான் உமா சங்கர் அங்கு சிரித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தாள்

சங்கரை நேரில் பார்த்தவுடன் உமாவிற்கு மிகவும் வெட்கமாகி விட்டது. . அவன் வந்ததை அறியாமல், தான் பாடிக் கொண்டே கூடத்திற்கு வந்ததுபற்றியும் சங்கடப்பட்டாள். அவனைப் பார்க்கவும் வெட்கப்பட்டுத் தன் தலையைக் குனிந்து கொண்டாள். அவளின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியைக் கண்டு சங்கரின் மனம் மிகவும் ஆனந்தப்பட்டது. அவளின் இத்தனை குதூகலத்திற்கு யாது காரணம் எனத் தெரிந்துகொள்ளவும் விரும்பினான். அவளின் முகத்தில் துளிர்த்த வெட்கத்தின் காரணத்தால் சிவந்த கன்னங்களைக் கண்டவனின் கண்களும் பரவசமாயிற்று. அவளை மேலும் கொஞ்சம் வெட்கப்படச் செய்யும் வகையில் அவளைப் பார்த்து மெதுவாகக் காதல் தன் குரலில் மிளிரக் கேட்டான் “உன்னைக் காக்கச்செய்த அழகான வடிவேலன் நான்தானா” என்று அவளின் அருகில் சென்று. அவனின் கேள்வியின் குறும்புத்தனம் அவளுக்குக் கரும்பாக இனித்தது. ஆனால் அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாது தவித்தாள். அவனின் கேள்வியால் அவளின் முகம் மேலும் குங்குமமாகச் சிவந்தது. சங்கரின் கேள்வியைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மாரியும் உமாவிடம் விளையாட ஆரம்பித்தான். அவனும் உமாவைப் பார்த்து சிரித்தான். உமா தன் கேள்விக்குப் பதில் சொல்லாது வெட்கத்தால் முகம்பூராவும் குங்கும்மாக சிவந்து நின்றதைப் பார்த்த சங்கருக்கும் சந்தோஷம் அதிகமாகியது. அதனால் அவன் மேலும் மேலும் உமாவை சீண்டி விளயாட விரும்பினான். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே தானும் மெதுவாகப் பாடினான் “என் கேள்விக்கு என்ன பதில்” என்று. சங்கரின் பாட்டைக் கேட்ட மாரிக்கோ சந்தோஷம் எல்லை மீறிப் போனது. அவனும் சங்கருடன் சேர்ந்து கொண்டு, உமாவைப் பார்த்து “என்ன உமா பாப்பா,மாப்பிள்ளைத் தம்பி கேட்ட கேள்விக்கு உன் பதில் என்னம்மா சொல்” என்றும் மகிழ்ச்சியோடு கேட்டான். சங்கரும், மாரியும் சிரித்ததைப் பார்த்த உமாவோ இருவரின் குறும்புக்கும், கேள்விக்கும் தான் என்ன பதில் சொல்ல முடியும் என தன் மனதிற்குள் கேட்டுக்கொண்டாள். வாய்விட்டுப் பதில் சொல்ல வழியின்றி, அவள் அவர்கள் இருவரையும் பார்த்துக் கேட்டாள் “என்ன இன்று நீங்கள் இருவரும் என்னைச் சீண்டி விளயாடத்தான் நான் மாட்டிக் கொண்டேனா. இன்றுபோய் தாத்தாவும், பாட்டியும் என்னை உங்கள் துனையில் விட்டுவிட்டுப் போய் விட்டார்களே எனப் பொய்க்கோபத்துடன் சிணுங்கினாள்.

அவளின் மனம் பொய்க்காகக்கூட வருந்துவதை சங்கரால் தாங்க முடியவில்லை. அதனால் அவன் அவளை சமாதானம் படுத்தும் வகையில் “உமா நான் வரும்போது நீ மிகவும் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருந்தாய். உன் பாட்டும். உன் சந்தோஷமும் என்னையும்பற்றிக் கொண்டது. எனக்கு நீ எப்போதும் இன்றுபோல் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும். என் மனதின் உற்சாகத்தை நானும் சிறிது வெளிப்படுத்தினேன். நீ எங்களை தப்பாக நிணைக்காதே” என்றும் சொன்னான். பிறகு “உமா உன் தாத்தா, பாட்டி வீட்டில் இல்லையென்றால், நான் இன்று போய்விட்டு, நாளைக்குவந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்: எனச் சொல்லிவிட்டுத் திரும்பிப் போக வாசலுக்குச் சென்றான்.

மாரி சங்கரைத் தடுத்து “மாப்பிள்ளைத் தம்பி, தாத்தாவும் பாட்டியும் இந்த ஊரில் ஒரு வயதானவர் இறந்ததிற்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் போகும்போது உமாவுக்கு என்னையும் துனை வைத்துவிட்டுத்தான் சென்றார்கள். மேலும் தாத்தா தான் போகும்போது உமாவிடம், நீங்கள் வந்தால் பாடம் படிக்கச் சொல்லியும், அவர்கள் வரும்வரை உங்களையும் உமாவுக்குத் துனையாக இங்கேயே இருக்கும்படியும் சொல்லித்தான் சென்றிருக்கிறார்கள். அதனால் நீங்கள் இருவரும் அவர்கள் வரும்வரை வழக்கம்போல் உங்களின் பாடங்களைப் படித்துக் கொண்டிருங்கள்.” எனச் சொன்னான். பிறகு அவர்கள் இருவரும் தங்களின் பாடத்தை படிக்க ஆரம்பித்தார்கள். வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்த மாரி உள்ளே வந்து இருவரிடமும், தான் பத்து நிமிடத்தில் வருவதாகச் சொல்லி வெளியேச்சென்றான். செல்லும்போது வாசற் கதவையும் மெதுவாகச் சாத்திக் கொண்டும் சென்று விட்டான்.

மாரி தங்களிருவரையும் தனியாக விட்டுவிட்டு வெளியேச் சென்றதின் உட்கருத்தை சங்கர் புரிந்து கொண்டான். தங்கள் இருவரிடமும் அவனுக்கு உள்ள அன்பின் ஆழத்தையும் தெரிந்து கொண்டவன், உமாவிடம் “உமா மாரிக்குத்தான் உன் மீது எத்தனை அன்பு தெரியுமா. உன் சந்தோஷத்திற்காக அவன் என்னவேண்டுமானாலும் செய்வான். ஆமாம், இப்ப உன் வயிற்று வலி குறைந்திருக்கிறதா. அவன் என்னிடம் சொல்லி எத்தனை வருத்தப்பட்டான் தெரியுமா. எனக்கும் நீ வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி கேட்டவுடன் மனது எத்தனை கஷ்டப்பட்டது. இந்த ஊரில் ஒரு பெண் மருத்துவர்கூட இல்லையா. அவர்களிடம் சென்று உனக்கு வலி இல்லாமல் இருக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாதா? எந்தவிதமான சிகிச்சையுமின்றி, மாதத்தில் ஐந்து நாட்கள் இப்படியே வலியால் அவஸ்தைப்படுவாயா? . உன் உடம்பைப் பற்றி உனக்குத்தானே அக்கரை இருக்கவேண்டும்” எனக் கோபமாகவே கேட்டான். அவனின் குரலில் இருந்த கோபத்தை அவளும் உணர்ந்தாள். அவனிடம் மெதுவாகச் சொன்னான். “நான் என் பாட்டியை மீறி எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு மாதமும் நான் வலியால் துடிப்பது என் பாட்டிக்கும் தெரியும். . என் பாட்டியோ, இந்த மாதிரி வலியெல்லாம் நான் பொறுத்துக்கொள்ளத் தான் வேண்டும். இதல்லாம் பெண்களின் தலைவிதி என்பாள். ஆரம்பத்தில் சில மாதங்கள் அவள் தன் கைமருந்து கொடுத்துப் பார்த்தாள். ஒன்றும் குணம் தெரியவில்லை. கடைசியில் இந்த வலியை நீ அனுபவித்துதான் தீரவேண்டும் என சொல்லிவிட்டாள். எனக்கும் வேறு வழி யில்லை. அதனால் இந்த மாதிரி எத்தனையோ துன்பங்களை நான் விதியின் தீர்ப்பு என எடுத்துக் கொண்டு பொறுமையாக அனுபவிக்கப் பழகிவிட்டேன். இந்த தடவை கூட நான் மாரியிடம் எதுவும் சொல்லவில்லை. பாட்டிதான் நீங்கள் ஐந்து நாட்களுக்குப் பாடம் எடுக்க வர வேண்டாமென்று மாரியின் மூலம் சொல்லியனுப்பினாள். ஆனால் மாரி யாருக்கும் தெரியாமல் என்னிடம் வந்து வலி நிவாரண மருந்துகளைக் கொடுத்தபோதே என்மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் பரிவையும் புரிந்து கொண்டேன். என்பால் நிங்கள் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நானும் புரிந்து சந்தோஷப்பட்டேன். ஆனால், என்னுடைய மாதாந்திர கஷ்டங்களையெல்லாம் . நீங்கள் தெரிந்து கொண்டதுதான் எனக்கு வெட்கமாகியது. அவன் மருந்து கொண்டுவந்து கொடுத்தது என்னைத் தவிர யாருக்கும் தெரியாது. உங்களின் அன்பால் இந்த முறை என் வலி கொஞ்சம் குறைந்து நான் இரவில் நன்றாகத் தூங்கினேன். நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்னபதில் செய்ய முடியும்: எனக் கூறி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். சங்கரும் அவளிடம் “நீ எனக்கு இப்படியெல்லாம் நன்றி சொல்லி என்னை வேற்று மனிதனாக்காதே. நீ படும் ஒவ்வோரு துன்பமும் என்னையும் வருத்தும் தெரியுமா. அதனால் இனி உனக்கு என்னத் துன்பம் வந்தாலும் உடனே எனக்குச் சொல். நான் அதற்கு வேண்டிய பரிகாரம் செய்வேன். உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம். புரிஞ்சிக்கோ. என்றான்.

பிறகு இருவரும் அன்றைய பாடத்தில் கவனம் செலுத்தினார்கள். பாடம் எல்லாம் முடிந்தபின்,சங்கர் உமாவிடம் “இன்று உன் வகுப்பில் என்ன நடந்தது. ஏதும் சொல்லும்படி இருக்கிறதா? எனவும் கேட்டான். அவன் தன் வகுப்பில் நடந்த விஷயங்களைக் கேட்டவுடன், உமாவிற்கும் மனம் லேசாயிற்று. உடனே அவள் தன் வகுப்பில் தன்னுடைய பரீட்சைத் தாள்களை வகுப்பு ஆசிரியர் கொடுத்துவிட்டு. வகுப்பில் மற்ற மாணவிகளுக்கு எதிரிலேயே “உமா உனக்கு என் வாழ்த்துக்கள். இந்த முறை நீ கணித்ததில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களியும் நல்ல முன்னேற்றம் காட்டியிருக்கிறாய். திடீரென்று உன் படிப்பில் இத்தனை முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது. நீ தனியாக வீட்டிலேயே டியூஷன் வைத்திருக்கிறாயா? சொல்.” எனவும் கேட்டதைச் சொன்னவள், சங்கரின் முகத்தைப் பார்த்து “இப்படித்தான் இன்று நான் காலையில் வகுப்பில் நுழைந்தவுடன் என் வகுப்புத் தோழிகளும் கேட்டனர்.” என்றும் சொன்னாள். நான் போகாத அன்றுதான் வகுப்பில் என் ஆசிரியை என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசி, நான் படிப்பில் இப்போதெல்லாம் நல்ல கவனமும் அக்கரையும் காட்டுவதாகவும், என்னுடைய மதிப்பெண்கள் அதிகமாகியதாகவும் சொல்லி, மற்றவர்களையும் என்னைப் போலவே அதிக அக்கரையுடன் படிக்க வேண்டுமென்றும் சொன்னார்களாம்” அதனால் அவர்கள் எல்லாரும் என்னிடம் “உன் திடீர் முன்னேற்றத்திற்கு என்ன காரணம் எனக் கேட்டு என்னைச் சொல்லச்சொல்லி பலவகையில் காட்டாயப்படுத்தினார்கள்.” என்றாள்.

அவள் சொல்லியதைக் கேட்டவன், “உமா இப்போதுதான் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என் உமா தன் வகுப்பில் மற்றவர்களால் பெருமைப்படுத்தப் பட்டால் அதுதான் எனக்குப் பெருமை. நான் சொல்லிக் கொடுத்தால் மட்டும் நீ முன்னேற முடியாது. உனக்கும் முன்னேற வேண்டுமென்று ஊக்கம்தான் காரணம். உன் முயற்சிதான் போற்றப்பட வேண்டும்” ஆமாம் நீ ஏன் உண்மையை உன் வகுப்பில் சொல்லக்கூடாது. உன் பள்ளியில் தனியாக டியூஷன் வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டதா?” எனக் கேட்டான். அதற்கு உமா அவனைப் பார்த்து “எங்கள் பள்ளியில் அப்படியென்றும் தடை கிடையாது. எனக்குச் சிரிய வயதிலிருந்தே எனக்கென்று ஏதும் தனியாகக் கிடைத்தது இல்லை. இத்தனை வயது வரைக்கும் எனக்காக எதுவும் யாரும் வாங்கிக்கொடுத்ததுமில்லை. என் வாழ்வில் எனக்காக முதல் முறையாக தாத்தா உங்களைத்தான் எனக்குக் காட்டினார். எனக்குப் பாடம் எடுக்க வழி பண்ணினார் எனக்கென்று எந்த உறவும் கிடையாது. என் வாழ்வில் நீங்கள்தான் எனக்கு உரிமையாகவும், உறவாகவும் வந்திருகிறீர்கள். என்னால் உங்களுடன் மற்றவர்கள் எந்தவிதமான உரிமையோ, உறவோ கொண்டாடுவதைச் சகிக்க முடியாது. அதனால்தான் நான் பள்ளியில் யாரிடமும் உங்களைப் பற்றி ஒன்றும் சொல்லுவதில்லை. என் வகுப்பில், “நான் குறைந்த மார்க் எடுத்துவந்ததைப் பார்த்து என் தாத்தா என்னை மிகவும் கோபித்துக் கொண்டார் என்றும், இனி நான் வகுப்பில் கவனமுடன் படிக்கவில்லையென்றால், என்னைப் பள்ளியிலிருந்து .நிறுத்திவிடுவதாகச் சொல்லிவிட்டதால், நானும் என் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாதென்று, தினமும் பள்ளியில் நடத்தும் அத்தனை பாடங்களையும் வீட்டில் படிப்பதாகவும், அதற்கு என் தாத்தா உதவுதாகவும் சொல்லிச் சமாளித்தேன். எனக்கு உங்களைத் தவிர என் மேல் இத்தனை அன்பும், அக்கரையும் காட்ட யார் இருக்கிறார்கள். அதனால் என்னால் உங்களை யாருக்காகவும் பிரிந்து இருக்க முடியாது” என்று தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சொல்லிவிட்டாள். தான் தன் மனதில் இருப்பதையெல்லாம் சொன்ன பிறகு, அவனப் பார்க்கவும் வெட்கப்பட்டுத் தலை குனிந்து கொண்டாள்.

உமாவின் மனதிலிருப்பதை அவள் வாயினாலேயே கேட்டவுடன், சங்கரின் மனதில் ஆயிரம் விளக்குகள் ஒரே சமயத்தில் ஒளி விட்டன. அவனையுமறியாமல் அவனின் கைகள் உமாவின் மாம்பழக் கன்னத்தைப் பற்றிக் கொண்டன. அவனின் கண்களோ அவளின் முகத்தாமரையை சுற்றும் வண்டுகளாகின. அவனின் முகமும் மெல்ல மெல்ல உமாவின் தாமரை முகத்திலிருந்த இரு பவழ உதடுகளில் ஊறிக் கொண்டிருந்த அமுதத்தை நெருங்கி, தன்னுடைய மெல்லியதானதும் உறுதியானதுமான இதழ்களால் சுவைத்தான். அந்தச் சுகானுபவத்தில் இருவரும் மெய்மறந்திருந்தனர் ஒரு சில நொடிகள். சங்கருக்கும், உமாவுக்கும் இதுவே முதல் பருவ சுகமானதால், இருவரும் மனதிலும் சொல்லத் தெரியாத இன்ப பூக்கள் பூத்தன. இருவரில் முதலில் தன் உணர்வு பெற்ற சங்கர், மெதுவாகத் தன் அனைப்பிலிருந்து உமாவை விடுவித்தான். அவனுக்கும் உமாவைப் பார்க்கச் சிறிது லஜ்ஜையாகவும் இருந்தது. திடீரென்று தான் நிலை தடுமாறி, தன்னை நம்பி தன்னருகில் அமர்ந்திருந்த உமாவிடன் அதிக உரிமை எடுத்துக் கொண்டதுபற்றி அவளின் மனதில் என்ன தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும். அதனால் அவளுக்கு சிறிது சங்கடமும் உண்டாயிருக்குமே என்றும் உணர்ந்து மனம் தடுமாறினான். அதனால் அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றான். “உமா நான் உன்னைக் கோவிலில் முதல் முதலில் பார்த்தபோதே என் மனதில் நீ குடியேறிவிட்டாய். நீ என் விழியின் வழியே என் இதயத்தில் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாய். நாந்தான் நீ பள்ளியில் படிக்கும் சிறு பெண்ணாயிற்றே, உன் மனதில் என் எண்ணத்தைச் சொல்லி சலனம் ஏற்படுத்தக்கூடாது என என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று நீயே உன் மனதை என்னிடம் திறந்து சொல்லிவிட்டதால், நானும் என் மகிழ்ச்சியைச் சிறிது வெளிப்படுத்தி விட்டேன். இனி இதுபோல் ஒரு தவறும் நம்மிடையே நடக்காமல் நான் உறுதியாக இருப்பேன். தயவுசெய்து என்னைத் தவறாகவோ, கட்டுப்பாடு இல்லாதவனென்றோ நினைத்து விடாதே. நியும் என்னிடம் வழக்கம்போல் சகஜமாகப் பழகவேண்டும். உனக்கு நான், எனக்கு நீ என்ற நம் உறவு என்றும் மாறாது. ஆனால், நம்முடைய பெற்றோர்கள் நமக்குத் திருமணம் செய்யமுன் வரும்வரை நாமிருவரும் உள்ளத்தால் ஒன்றானாலும், மற்றவர்களுக்கு முன் சாதாரணமாகவே பழகிக் கொள்ளலாம். இப்படி இருப்பதுதான் உனக்கு நல்லது, நீயும் உன் படிப்பில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என்று சொன்னான். அவனுக்கு உமா ஒரு பதிலும் சொல்லாது, தலை குனிந்தபடியே இருந்தாள். அவளின் மௌனம் அவனை சங்கடப்படுத்தியது. அதனால் அவன் திரும்பவும் உமாவை பார்த்தபடியே “இன்னும் என் மீது கோபந்தானா” எனவும் கேட்டான். அவனின் மனக் கஷ்டத்தை. உணர்ந்த உமாவும் அவனைப் பார்த்து “இந்த நிலைக்கு நீங்கள் மட்டும் காரணமல்ல. நானும் உங்களின் மனதை சலனப்படுத்திவிட்டேன். என் மனதில் பதிந்த உங்களின் நினைவுகளும், உருவமும் என்னையும் தடுமாறச் செய்து விட்டன. நீங்கள் ஒன்றும் தவறு செய்ய வில்லை. அதனால் மனம் சங்கடப்பட வேண்டாம். இனி நீங்கள் சொன்னபடியே நாமிருவரும் கட்டுப்பாடாக இருப்போம். என்றும் உங்கள் மனம் நோக நான் எதுவும் செய்ய மாட்டேன். இனி எனக்கு எல்லாமே நீங்கள்தான். நான் இனி உங்களின் கையில் இருக்கும் ஒரு மலர்தான். உங்கள் ஆனந்தமே என் ஜீவனாகும்.” என தன் காதலை மிகவும் மென்மையாக அவனுக்குத் தெரியப்படுத்தினாள். அவளின் தெளிவான சொற்களைக் கேட்ட சங்கருக்கும் மனம் மென்மையாகியது. அவளுக்குத் தன்னிடம் அன்பும், காதலும் இருப்பதை அறிந்து அவன் மனம் வானில் பறக்கலாயிற்று. உல்லாசமாகவே அவளைப் பார்த்து, “உமா நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் நேரிடையான பதிலைச் சொல்ல வில்லையே? எனக் கேட்டான். அவன் தன்னிடம் கேட்ட முதல் கேள்வி என்னவென்று உமா ஒரு நிமிடம் யோசித்தாள். அவளுக்கு உதவிசெய்வதுபோல், “நீ மாலையில் நான் வரும்போது, யாரோ ஒருஅழகனை வரக்காணலியே தோழீ, காரணம் சொல்” எனப் பாட்டாலே கேட்டாயே, அந்த அழகன் நானாயென்று கேட்டேன் உன்னிடம். இன்னும் அதற்கு நீ பதில் சொல்லவில்லையே? என்று தன் கண்களில் குறும்பு பளீரிடக் கேட்டான். அவனின் குறும்பை ரசித்தவளும் சன்னமான குரலில் “இத்தனைக்கப்புரமும் அந்த அழகர் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்குப் புரியனுமா? என் மனம் கவர்ந்த அழகர் நீங்களாக இல்லையென்றால், நான் உங்களை என்னிடம் உரிமை எடுத்துக் கொள்ள அனுமதிபேனா. என்னை அத்தனை மட்டமான பெண் என்றா நினைத்தீர்கள்” என்றும் கோபமாகக் கேட்டாள். சங்கரும் சிரித்துக்கொண்டே உமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு பிரியமாகவேச் சொன்னான் “என் உமாவின் வாயால் அதைக் கேட்டால் எனக்கு ஆனந்தமாக இருக்காதா. அதனால்தான் கேட்டேன். கோபப்படாதே” என சமாதானப்படுத்தினான்.

உமாவின் வாயிலிருந்து அருவிபோல் வந்த அமுத மொழிகளும், அவளின் செல்லச் சிணுங்களும் சங்கரை ஒரு நிமிடம் உலுக்கித்தான் விட்டன. சூழ்நிலை உணர்ந்து, தான் தன் மனதில் உமாவின்பால் ஏற்பட்டக் காதலைச் சொல்ல யோசித்துக் கொண்டிருக்க, சின்னப் பெண் ஒரே நாளில் ஒரு நாழிகைப் போதில் தன் மனதைத் திறந்து அத்தனையும் தன்னிடம் சொல்லியதை உணர்ந்து அவன் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. நான் நினைத்ததுபோல் உமா ஒன்றும் அறியாத சிறு பெண்னல்ல. இயற்கையால் செப்பனிடப்பட்ட பருவ மங்கைதான் என்றும் தெரிந்ததும், அவன் மனதிலும் வாலிப உணர்வுகளும் தோன்றின. ஆனால் பக்குவப்பட்ட மனமும், தன்னால் அந்தப் பெண்ணுக்கு எந்த விதமான துன்பமும் வரக்கூடாதென்றும், மேலும் அவள் உள்ளத்தால் வளர்ந்தாலும். இன்னும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிதான். தானும், அவளும் அதிகமாக நிலை தவறக்கூடாது என்பதிலும் கருத்தாக இருக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான்.

5. சங்கரின் வேடிக்கையான விளையாட்டும் வேதனையும்

காலச்சக்கரம் தன்னிச்சையாக வேகமாகவே ஓடியது. உமாவின் பள்ளியிறுதி பரீட்சைகளும் முடிந்துவிட்டன. இனி சங்கருக்கு தினமும் உமாவின் வீட்டிற்குச் செல்ல வேண்டிய வேலையெதுவும் இல்லை. அதனால் அவனும் தினமும் செல்வதைத் தவிர்த்து, வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டும் மாலையில் சிரிது நேரம் சென்று தாத்தா, பாட்டியுடன் பேசிவிட்டு, திரும்பும்போது உமாவிடமும் ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டு வருவான். அவர்கள் இருவரும், தங்களின் உறவைப் தங்கள் வீட்டுப் பெரியவர்கள் அங்கீகரிக்கும்வரை கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டபடியால், இத்தகைய பிரிவு அவர்களுக்குள் எந்தவிதமான மன கஷ்டத்தையும் தர வில்லை. மாறாக, அந்தப் பிரிவால் அவர்களின் மனம் இன்னும் திடப்பட்டது. பிறருக்குத் தெரியாமலே, அவர்களின் அன்புப்பயிர் நன்றாக வேர்விட்டு, செழிப்பாகவே வளர்ந்துவந்தது. இருவரின் மனதில் இருந்த ஆனந்தம் அவர்களின் உடலையும் வனப்பாகவும், செழுமையாகவும் இருக்கச் செய்தன. காலதேவனின் கரங்கள் உமாவை ஒரு சிங்காரச் சிலையாகவே உருவாக்கின. அவளின் பருவ வனப்பு அவ்வப்போது சங்கரின் இளமையைத் தூண்டி விட்டாலும், திடமனதுள்ள சங்கர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியே வைத்திருந்தான்.

இதற்கிடையில் சங்கரும் தன் அலுவல் பணியாக சென்னை செல்லும்போது, தன் தாத்தாவிடமும், அப்பாவிடமும் தனக்கும் உமாவுக்கும் ஏற்பட்ட மன நெருக்கத்தைச் சொல்லி, தங்களின் உறவை அவர்களும் அங்கீகரிக்க வேண்டுமென்றும் தன் விருப்பத்தைச் சொல்லியிருந்தான். உமாவின் பிறப்பிலிருந்தே அவளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவளைத் தங்கள் வீட்டு மருமகளாக ஏற்க எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. அதனால் அவர்களும் கூடிய சீக்கிரமே, ஒரு நல்ல நாளில் உமாவின் தாத்தாவிடம் வந்து பேசி, திருமண ஏற்பாடுகளைச் செய்யவும் முடிவு செய்தனர். அது விஷயமாகத் தாங்கள் வரும் நாளை முன்கூட்டியே .சங்கருக்குத் தெரிவிப்பதாகவும் சொல்லி சங்கரை ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். தன் மனம் மகிழ, தானும் உமாவும் ஒன்றுகூடும் நாள் வெகு சீக்கிரம் வருமென்று நினைத்துத் சங்கரும் குதூகலத்தில் இருந்தான்.

சங்கரின் தாத்தாவும், அப்பாவும் ஒரு நல்ல நாளில் திருவாரூருக்கு வந்தார்கள். அவர்கள் சங்கரிடம் :சங்கர் இன்று நாள் நன்றாக இருக்கிறது. நாமெல்லாம் உமாவின் வீட்டிற்குப் போய் திருமண விஷயமாக அவளின் தாத்தா, பாட்டியிடம் பேசி கலியாணத்தை நிச்சயம் செய்து விடலாம். நீ முன்னாலே போய் அவர்களிடம் பேசி அவர்களையும் தயாராக இருக்கச் சொல்” என்றும் சொல்லிவிட்டார்கள். சங்கரின் மனம் ஆனந்தத்தில் துள்ளிவிளையாடியது. அவனும் திருமண விஷயமாக கொஞ்சம் உமாவை சீண்டிப்பார்க்க விரும்பினான். அதனால் அவன் காலையில் உமாவின் வீட்டிற்குச் சென்றபோது அவளின் தாத்தா, பாட்டியுடன் உமாவும் இருந்தாள். அதனால் அவன் தன் சந்தோஷத்தை வெளிக்காட்டாமல், சாதாரணமாக ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லுவது போல் சொன்னான் “தாத்தா, ஊரிலிருந்து தாத்தாவும், என் அப்பாவும் வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஊரில் எனக்காக ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசி நிச்சயம் பண்ண வந்திருப்பதாகச் சொன்னார்கள்” எனக் கூறினான். அவனிடம் உமாவின் பாட்டி “யார் வீட்டுப் பெண். உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள். அதற்கு சங்கர் மெதுவாக பாட்டியிடம் “என்னிடம் அது பற்றி ஒரு விபரமும் சொல்லவில்லை. என் தாத்தா ஒரு தீர்மானம் செய்துவிட்டால், அதை என் அப்பாவால்கூட மாற்ற முடியாது. தான் தாத்தாவிடம் பெண் யார் எனக் கேட்ட போது, சாயங்காலம் எங்களுடன் நீயும் வரப்போகிறாய். அப்போது பெண் யார் என்றும் பார்த்துக்கொள். நான் சொன்னபோது உன் அப்பா எதுவும் கேட்காமல் என்னுடன் வரும்போது, உனக்குமட்டும் என்ன விபரம் வேண்டும்” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். என் அப்பாவும் என்னிடம் தாத்தாவின் பேச்சிற்கு எதிர் பேச்சு பேச எப்பக் கற்றுக்கொண்டாய்” எனக் கோபமாகச் சொல்லி விட்டார். அதனால் என்னால் எந்த விபரமும் தெரிந்துகொள்ள முடியவில்லை” என மிகவும் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லிவிட்டு, அங்கிருந்த உமாவைப் பார்க்காதவன் போல் போய்விட்டான். சங்கர் வந்தவுடன் வெகு ஆவலாக அவனுடன் பேச காத்திருந்தவளுக்கு அவன் சொல்லிச்சென்ற விபரங்கள் இடி போல் அவளின் மனதில் விழுந்தது.. மனசும், உடம்பும் துன்பத்தால் கொதிக்கலாயிற்று. பாட்டியின் எதிரில் எங்கே தன் திடம் குறைந்து கண்களில் நீர் பெருகிவிடுமோ எனப் பயந்தவள், ஒன்றும் பேசாமல் கிணற்றடியில் போய் நின்றாள். அவளின் கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடின. அவற்றைத் தன் கைகளால் துடைத்துக் கொள்ளவும் திராணியற்று, துவண்டு போனாள்.

கூடத்தில் இருந்த பாட்டியோ தாத்தாவிடம் தன் ஏமாற்றத்தை கொட்டித் தீர்த்துவிட்டாள். “நான் சொல்லும்போதெல்லாம் எனக்கு எப்போ ஸ்வாமினாதனிடம் பேச வேண்டுமென்று தெரியும், அப்போது பேசுவேன். நீயாக இது பற்றி நாமகிரியிடமோ, வேறு யாருடனோ பேச ஆரம்பிக்காதே என்று என் வாயைக் கட்டி விட்டீர்கள். இப்போ என்னாச்சு பாருங்கள். நாம் அவர்களிடம் முன்னாலேயே நம் ஆசையைச் சொல்லாமல் இருந்ததால், அவர்கள் வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமேல் அவர்களிடம் போய் என்ன பேச முடியும். இந்த ஊரில் யாருக்கு அதிர்ஷடம் இருக்கோ தெரியவில்லையே. நம் வீட்டுப் பெண்ணுக்கு கொடுத்து வைக்கவில்லை. உமாவின் துரதிர்ஷடம்தான் அவள் பிறந்தபோதே தெரிந்துவிட்டதே. இல்லையென்றால் நம் பிள்ளைக்குமட்டும் விபத்தில் போற வயசா. அவனுடன் அந்தப் பெண்னும் போய்சேரனுமா. பிறந்த போதே பெற்றவர்களை முழுங்கிவிட்டாள். இப்போ கண் எதிரில் வலுவில் வந்த நல்ல வரனையும் நாம் பேச யோசித்துக்கொண்டிருக்கும்போதே, வேறு இடத்தில் முன் வந்து பேசி முடித்து விடப்போகிறார்கள். எல்லாம் நம் தலையெழுத்து.” எனப் பலவாராக புலம்ப ஆரம்பித்துவிட்டாள். தாத்தாவின் மனதிலும் ஏமாற்றம் தெரிந்தது. தான் இது விஷயமாக ஸ்வாமிநாதனிடம் ஒன்றும் பேசாமல் விட்டது தப்பாகி விட்டதை புரிந்து கொண்டார். ஆனால் பாட்டிபோல் தன் ஏமாற்றத்தை வார்த்தையாக கொட்டாமல், வாழ்வில் நிதர்சனத்தை உணர்ந்து “யார் யாருக்கு எங்கு முடி போட்டிருக்கோ அங்குதான் அமையும். கலியாணம் என்பது ஆண்டவனின் முடிவு. நம் உமாவுக்கு இந்த வரன் இல்லையென்றால், அவளுக்கு கலியாணமாகாமலாப் போகிவிடும். அவளுக்கென்று ஒருத்தன் உலகில் பிறந்துதான் இருப்பான். பகவான் அவனை நம் கண்ணில் காட்டாமலாப் போய்விடுவான். நம் கையில் இல்லாத விஷயத்திற்கு யாருடைய விதியையும் சொல்லாதே. ஏற்கெனவே அந்தப் பெண் பாவப்பட்டவள். நீயும் அவளை வார்த்தையால் கொத்தாதே. ஆன வயசுக்கு பக்குவம் வேண்டும். யாரானாலும், எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டுமென்றுதான் பகவானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். சங்கரும் நம்முடைய பேரந்தான். அவனுக்கு நல்லது நடக்கும்போது, நீ மனசு கஷ்டப்படுவது சரியல்ல. அவனுக்கு அமையப்போகும் பெண் யாராயிருந்தாலும், அவளும் நமக்குப் பேத்திதான். உன் மனதை திடப்படுத்திக்கோ. உமாவின் எதிரில் உன் ஆற்றாமையைக் காட்டிக் கொள்ளாதே” என பாட்டிக்குச் சமாதானம் சொல்வதுபோல் தன்னையும் சமாதானப்படுத்திக் கொண்டார்.

கிணற்றடியில் அமர்ந்திருந்த உமாவின் காதிலும் தாத்தாவின் அறிவுறைகள் விழுந்தது. சிறு வயதிலிருந்தே தன் வாழ்வில் எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், இதுதான் நமக்கு ஆண்டவன் எழுதிய விதி என தன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுவாள். மற்ற விஷயங்களில் அவளால் தன்னை திடப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவளின் மனம் சங்கரிடம் லயித்துவிட்டதும், அதன் பின் அவனும் தன்னிடம் காண்பித்த பிரியமும், பரிவும், தன் ஒவ்வொரு விஷயத்திலும் அவன் காட்டிய அக்கரையும், அன்பும் அவளை மிகவும் வேதனைப் படுத்தியது. இனி சங்கர் தனக்குச் சொந்தமானவன் இல்லை. அவனிடம் தனக்கு எந்த உரிமையும் கிடையாது. தன் மனதில் குடிகொண்டவன், வேறு ஒரு பெண்னின் சொத்தாகப் போகிறான்” என்ற உணர்வே அவளை நெருப்பில் போட்ட புழுபோல் துடிக்கச் செய்தன. அவளால் தன் துன்பத்தை தீர்த்துக் கொள்ள முடியாது, மனம் குலுங்க அழத் தொடங்கினாள். ,

அப்போது அங்கு வந்த மாரி உமாவின் முகத்தைப் பார்த்து திடுக்கிட்டான். “என்னம்மா உமா பாப்பா இப்போ எதுக்கு நீ இப்படி அழுகிறாய். யார் உன்னை என்ன சொன்னார்கள். சொல்” எனப் பரிவுடன் கேட்டான். அதற்கு “மாரிதாத்தா, எனக்கு இனிமேல் இந்த உலகில் ஒன்றுமில்லை. என் வாழ்வு முடிந்துவிட்டது. என்னுடைய சந்தோஷம், சுகம், சொந்தம் எல்லாம் இன்றுடன் என்னை விட்டுப் போய்விட்டது” எனச் சொல்லிக்கொண்டே அழுகையை அடக்க முடியாமல் முகத்தைக் கைகளினால் பொத்திக் கொண்டாள். மாரி உமாவை பார்த்துக் கொண்டே திரும்பவும் கேட்டான்”பாப்பா என்ன நடந்தது என்று விபரமாகச் சொல். நீ அழுவதை இப்போ சங்கர் மாப்பிள்ளைப் பார்த்தால், துடித்துப் போய்விடுவார். என்ன கஷ்டம் வந்தாலும், அவர் துனையாக இருக்கும்போது, நீ இப்படி கலங்கலாமா” எனக் கேட்டு அவளைச் சமாதானப்படுத்தப் பார்த்தான். அவனின் முகத்தைப் பார்த்த உமா. “மாரித்தாத்தா, உன் மாப்பிள்ளைத்தம்பிதான் என் அழுகைக்குக் காரணம். உனக்கு இன்று காலையில் நடந்த விஷயங்கள் ஒன்றும் தெரியாது. அதனால்தான், நீ அப்படி அவரைப் பற்றி நம்பிக்கையாகப் பேசுகிறாய். ஊரிலிருந்து அவரின் தாத்தாவும், அப்பாவும் வந்திருக்கிறார்களாம். அவர்களுடன் இவரும் சேர்ந்து இன்று மாலை இந்த ஊரில் அவருக்குப் பெண் பார்க்கப் போகிறார்களாம். அதைச் சொல்லத்தான் அவர் இங்கு காலையில் வந்தார். தாத்தா, பாட்டியிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்க்கக்கூட விருப்பமில்லாது, உடனே போய் விட்டார். என் மனம் ஒடிந்து விட்ட்து. இனி நான் யாரால் எனக்கு வாழ்வு கிடைக்கும் என்று இருப்பேன். அவரால் அவரின் தாத்தாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என என்னிடம் சொல்லாமல், தாத்தாவிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். என்னை நம்பச் செய்து, கடைசியில் நட்டாற்றில் ..விட்டுப் போய் விட்டார்” எனத் துன்பமிகுதியால் அழுகைக்குன் இடையில் சொல்லி முடித்தாள். கொஞ்ச நேரம் மாரியால் எதுவும் பேசக்கூட முடியவில்லை. ஆனால் அவனின் மனதில் மட்டும் ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் உமாவிடம் அவளுக்குத் தைரியம் கொடுக்கும்வகையில் பேச ஆரம்பித்தான்.

“பாப்பா, இப்ப என்ன நடந்துவிட்டது என்று நீ இத்தனை வார்த்தைகளைக் கொட்டுகிறாய். என்ன சங்கர் அவரின் தாத்தா, அப்பாவுடன் இந்த ஊரில் ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறார். பெண்ணைப் பார்த்தால் உடனே அவர் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிடுவார் என்பது என்ன நிச்சியம். பெரியவர்கள் திடீரென்று காலையில் வந்து அவரிடம் பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறோம். நீயும் கட்டாயம் வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தி இருப்பார்கள். என்ன இருந்தாலும், காலையில் வந்திருப்பவர்கள் அவரின் தாத்தாவும், அப்பாவும். இருவரிடமும் முகத்தில் அடித்தபடி எப்படி பேச முடியும். அவர்களுடன் கொஞ்சம் ஒத்துப்போய்விட்டு, கடைசியில் பெண்ணை தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுத், தன் மனதில் இருக்கும் ஆசையைச் சொல்லலாமென்று பெறுமையாகத்தான் சங்கர் தம்பி இருப்பார். நீ அவசரப்பட்டு, அவர் மேல் அவநம்பிக்கைக் கொள்ளக்கூடாது. என் மனதில் சங்கர் தம்பி உனக்கு எந்த துரோகமும் செய்ய மாட்டார். அவர் எப்படியும் அவருடைய விருப்பத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் அவர் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி, உன் மனசுப்படியே அவர் உன்னை ஊரரிய கை பிடிப்பாரென்ற உறுதி இருக்கு.. உனக்கு கமலாம்பாளின் அருளும் ஆசியும் இருக்கு. அந்தச் சன்னதியில்தான் நீங்கள் ஒருவருக்கோருவர் பார்த்துக் கொண்டீர்கள். அவர் உங்களைச் சேர்த்துத்தான் வைப்பார். சங்கராக வந்து உன்னிடம் நேரில் சொன்னாக்கூட நான் நம்ப மாட்டேன். ஆண்டவன் உங்களிருவருக்கும்தான் முடி போட்டு இருக்கிறார். நீ மனம் கலங்க வேண்டாம். பொறுமையாக இரு.” எனப் பரிவாக அவளைத் தேற்றினான். மாரியின் வார்த்தைகளைக் கேட்டபின்பும் உமாவின் மனம் சமாதானமடையவில்லை. தன் மனம் நோகக்கூடாது என்பதற்காக மாரி பலவும் சொல்லித் தன்னை தேற்றுகிறான் என நினைத்தாள்.

மணித்துளிகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன. மாலை நேரமும் வந்தன. உமா தன் வழக்கப்படி சந்தியாகாலம் வருவதை உணர்த்தும் வகையில் வீட்டில் ஸ்வாமி விளக்கும், வாச மாடத்திற்கு அகல் விளக்கும் ஏற்றி வைத்துவிட்டு உள்ளே வந்தாள். அவளத் தொடர்ந்து தன், தாத்தா, அப்பா, குருக்கள் மாமா, அவரின் மணைவி சகிதம் சங்கரும் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். வாசலில் தெரிந்த நிழற்களைப் பார்த்த உமாவுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அவர்கள் எல்லாம் தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டிய காரணம் எதுவாயிருக்கும் என்று குழம்பினாள். ஆனால், புதிய மனிதர்கள் வருவதைப் பார்த்துவிட்டு, உடனே உள்ளே சென்ற உமா, தன் தாத்தாவிடம் சங்கருடன் அவரின் தாத்தா, அப்பா வருவதை தெரிவித்துவிட்டு, மடமடவென்று உள்ளே சென்று விட்டாள்.

உமாவின் தாத்தாவும் வெளிவாசலுக்கு வந்து “வாப்பா ஸ்வாமிநாதா, சௌக்கியமா? நீ வந்திருப்பதாகச் சங்கர் காலையிலேயே வந்து சொல்லி விட்டான். ரொம்பவும் சந்தோஷம் நீங்கள் எல்லாரும் எங்களைத் தேடி வந்தது” எனக் கூப்பிட்டுக் கொண்டே அவர்களையும் உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளேயிருந்து உமாவின் பாட்டியும் வந்து அவர்களை வரவேற்றாள். எல்லாரும் கொஞ்ச நேரம் ஊர், விஷயங்கள், உறவினர்களின் சுக விஷயங்கள் எனப் பலவிதமாகப் பேசிகொண்டே காலம் கடத்தினார்கள். அப்போது சங்கரின் தாத்தா, குருக்களின் மனைவியைப் பார்த்து, “என்னம்மா காமாட்சி, நாம் வாங்கிக் கொண்டு வந்ததெல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பாட்டியிடம் கேட்டுக்கொள்” என்றார். குருக்களின் மனைவியும் பாட்டியிடம் “பாட்டி, காலையில்தான் .சிவராமன்னாவும், தாத்தாவும் எங்காத்துக்கு வந்து, இன்று ஒரு இடத்திற்கு சங்கருக்காகப் பெண் பார்க்கப்போகிறேம். எங்களுடன் ஒரு சுமங்கலியும் வர வேண்டும். நீதான் வருகிறாய். பெண் பார்க்கப்போகும்போது என்னென்ன கொண்டு போகவேண்டுமோ அதெல்லாம் தயாராக எடுத்துக் கொண்டு வா” என்று சொல்லிவிட்டார். நானும் எனக்குத் தோனினதை எடுத்துக் கொண்டு வந்தேன். நீங்கள் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்றபடியே, உமாவைக் கூப்பிட்டு ஒரு பித்தளை தாம்பாளம் எடுத்து வரச் சொன்னாள். உமாவும் உள்ளேயிருந்து ஒரு பித்தளைத் தாம்பாளத்தை எடுத்து வந்து கூடத்தில் இருந்த பாட்டியிடம் கொடுத்துவிட்டு, யாரும் அறியா வண்ணம் சங்கரை ஒருதரம் பார்த்துவிட்டுத் தன் தலையைக் குனிந்துகொண்டே உள்ளேச் சென்றாள். குருக்களின் மனைவி அந்தத் தாம்பாளத்தில் தான் எடுத்துக் கொண்டு வந்த சீர் வகைகளை வைத்தாள். அதில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், பழ வகைகள், இனிப்பு பட்சணம் ஒரு சந்தன நிறத்தில் புடவை, அதற்குப் பொறுத்தமாக இரவிக்கைத் துண்டு என வகையாக அடுக்கி வைத்தாள். , பாட்டி எல்லவற்றையும் பார்த்துவிட்டு, “எல்லாம் நன்றாகத்தான் எடுத்து வந்திருக்கிறாய். ஆமாம், சிவராமா இந்த ஊரில் யாராத்துப் பென்ணைப் பார்க்கப் போகிறீர்கள்”என்றும் கேட்டாள்.

பாட்டி கேட்டபிந்தான், சங்கர்காலையில் அவர்களிடம் சரியாக விவரம் சொல்லவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒருமுறைச் சங்கரைப் பார்த்தனர். “என்ன பாட்டி இப்படி கேட்கிறீர்கள். காலையில் சங்கர் உங்களிடம் சொல்லவில்லையா நாங்கள் உமாவைத்தான் சங்கருக்குப் பேசி முடிவு செய்ய வருவதாக” என்றும் கேட்டனர். அதற்கு தாத்தாவும் “இல்லையடா சங்கர் காலையில் வந்து நீங்கள் வந்திருப்பதாகவும், அவனுக்காக ஒரு பெண்ணை இந்த ஊரில் பார்த்துப் பேச போவதாகவும்தான் சொன்னான். உமாதான் அந்தப் பெண் என்றுகூடச் சொல்லவில்லை. சங்கர் சென்றவுடன் என்னிடம் பார்வதி எப்படியெல்லாம் சண்டை போட்டாள் தெரியுமா? நான் அவன் என்னிடம் அடிக்கடி உமாவின் கலியாண விஷயமாக உன்னிடமும் சிவராமனிடமும் பேசச் சொன்னபோதெல்லாம் நான் எனக்குத் தெரியும் எப்போ இந்த விஷயத்தை ஆரம்பிக்க வென்றும், அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன் என்றும், அதற்கு முன் அவளாக இது பற்றி உங்கள் யாருடனும் பேசக்கூடாதென்றும் கண்டிப்பாகச் சொல்லி அவளையும் கண்டித்து வைத்திருந்தேன். அன்று காலையில் சங்கர் வந்து நீங்கள் வந்திருக்கும் செய்தியையும், மாலையில் நீங்கள் அவனுக்காக இந்த ஊரில் ஒருஇடத்தில் பெண் பார்க்கப் போவதாகவும்தான் சொல்லி விட்டுச் சென்று விட்டான். அதனால் இனிமேல் இது விஷயமாக உன்னிடமோ, சிவராமனிடமோ எப்படிப் பேச முடியும் என்று எங்களின் மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருந்தோம். அதனால்தான் நீங்கள் வரும் வரையில் எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் இருக்கிறோம்.” எனக் குரலில் இத்தனை நேரம் அவர் உள்ளத்தில் கொண்டிருந்த வேதனையும் வெளியேத் தெரியச்சொன்னார். சங்கரையும் பார்த்து “ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்டக்கூட சக்தியற்று மௌனமாகவே இருந்தார். சங்கருக்கும் தன்னுடைய விளையாட்டு, அவர்கள் எல்லாரையும் எப்படித் தவிக்க வைத்துவிட்டது என உணர்ந்து மிகவும் சங்கடப்பட்டான். பிறகு மெதுவாக உமாவின் தாத்தாவைப் பார்த்து “தாத்தா தயவுசெய்து நீங்கள் எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். எனக்குச் சின்னதாக உமாவை ஒரு நிமிஷம் திடீரென்று வந்து நின்று, அவளைத் திகைக்கவைக்க ஆசைப்பட்டேன். காலையில் நான் வரும்போது தாத்தா, பாட்டி மட்டும் தனியாக இருந்திருந்தால் கட்டாயம் அவர்களிடம் இந்த சந்தோஷத்தை சொல்லியிருப்பேன். ஆனால், உமாவும் இருந்ததால், ஒன்றும் சொல்லாமல் போய் விட்டேன். ஆனால் மாலையில் நாமெல்லாம் இங்கு வருமுன், எப்படியாவது தாத்தா பாட்டிக்கு மட்டும் சொல்ல முயற்சி செய்தேன். ஆனால், நாம் இத்தனை சீர் வகைகளையும் சேகரித்துக் கொண்டு வரவே நேரம் சரியாகிவிட்டது. உங்களிடம் நான் சொல்லவில்லையே தவிர, இன்றைக்கு நீங்கள் செய்து வைக்கவேண்டிய அனைத்துக்கும் நான் மாரிமூலம் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட்டேன். நானும் உங்களின் பேரந்தானே” என மிகவும் பணிவோடு கேட்டுக்கொண்டான். சங்கரின் செயல் அங்கு இருந்த பெரியவர்களுக்குச் சரியாகப் படவில்லையென்றாலும், அவனின் ஆசையைக் கேட்டபின் அவர்கள் யாருக்கும் சங்கரின் மேல் கோபப்படமுடியவில்லை. அதனால், சங்கரின் தாத்தா உமாவின் தாத்தாவிடம் “என்னடா, இன்னும் என்ன யோசனை உங்களுக்கு. நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது. பெண்ணை எங்களின் கண்களில் காட்டு. நாங்களும் அவளைக் குழந்தையாக இருந்தபோது பார்த்தது, இப்ப எப்படி இருக்கிறாள் என்று பார்க்கிறேம்” என சிரித்துக் கொண்டே சொன்னார்.

பாட்டியும் சந்தோஷத்தால், பத்து வயது குறைந்தவளைப்போல் பரபரவென்று எழுந்து உள்ளேச் சென்றாள். கால் மணி நேரத்தில் உமாவும் சர்வ அலங்காரத்துடன், முகமெல்லாம் சந்தோஷத்தால் மின்ன, வெட்கம் தாளாது தலை குனிந்தவாறு, அன்னமென மெள்ள அசைந்து, பாட்டியுடன் வந்தாள். வந்து நின்றவளைத் தன் கள்ளப்பார்வையால் பார்த்தான் சங்கரும். அவளின் அழகு சிலைபோன்ற தோற்றத்தைப் பார்த்து மனதுக்குள் சந்தோஷப்பட்டான். சம்பிராயப்படி, சங்கரின் தாத்தா தாங்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளை எடுத்துக் கொண்டு, உமாவை தன்னருகில் வரச் சொன்னார். உமா அருகில் வந்தவுடன், சங்கரைப்பார்த்து, “சங்கரா இந்தத் தாம்பாளத்தை உமாவிடம் கொடு” எனச் சொன்னார். உமாவின் தாத்தாவும், உமாவைப் பார்த்து “உமா சங்கருக்கும், மற்ற பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு, தாம்பாளத்தை வாங்கிக்கொள்” என மாளாத ஆனந்தத்துடன் சொன்னார். பெரியவர்களின் ஆசைபடியே உமாவும் சங்கருக்கும் மற்ற பெரியவர்களுக்கும் பணிவாக நமஸ்காரம் செய்துவிட்டு சங்கரிடமிருந்து தாம்பாளத்தை வாங்கிக்கொண்டாள். சங்கர் அவளின் கைகளில் தாம்பாளத்தை வைத்துக் கொண்டே “உனக்கு முழு சம்மதம்தானே” எனக் குறும்பாகக் கேட்டான். . அதைகேட்ட யாவரும் மனமகிழ்ந்து சிரித்தனர். பிறகு பாட்டி உமாவை உள்ளே அழைத்துச் சென்றாள். அரைமணிநேரத்தில் உமா சங்கர் அன்புடன் வாங்கித்தந்தப் புடவையில் ஒரு சந்தன சிலையாக வந்து, கூடத்தில் இருந்த பெரியவர்களை மீண்டும் நமஸ்கரித்தாள். சங்கருக்கு நமஸ்காரம் செய்ய வெட்கப்பட்டுக் கொண்டிருந்த அவளை, பாட்டி “உமா சங்கருக்கும் நமஸ்காரம் செய்யம்மா” என ஆசையோடு சொன்னாள். பிறகு மாரி உள்ளே வந்து “மாப்பிள்ளைத்தம்பி, நீங்கள் சொன்னதுபோல் எல்லாம் வாங்கி வந்துட்டேன்.” எனக் கூறிக்கொண்டே உள்ளே வந்தான். வந்தவன் உமா ஒரு சந்தன நிறச் சேலையில் அழகெல்லாம் துள்ள, ஆனந்தத்தோடு நின்றவளைப் பார்த்து “உமா பாப்பா நான் என்ன சொன்னேன் காலையில் நீ கிணற்றடியில் உட்கார்ந்து அழும்போது? சங்கர் தம்பி உன்னை ஒரு நாளும் ஏமாற்றமாட்டார். நீ நம்பிக்கையை இழக்கக்கூடாது. அவரின் மனதில் எடுத்த முடிவுக்கு எல்லாரையும் ஒப்புக்கொள்ளச் செய்வார். நீ தைரியமாகவே இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. இப்ப பார் நான் சொன்னபடிதானே நடக்கிறது.” என உற்சாகத்துடன் எல்லார் எதிரிலும் சொல்லிச் சந்தோஷமாகச் சிரித்தான். அவனின் முகமெல்லாம் மகிழ்ச்சியால் பிரகாசமாகியது.

பிறகு உமாவின் தாத்தா, பாட்டியிடம் “பார்த்தாயா பார்வதி, ஒரு நிமிடத்தில் நம்மிருவரின் துக்கமெல்லாம் கரைந்துவிட்டது. இனி நாம் எப்போழுதும் கவலைப்பட வேண்டாம். நம் பேத்தி உமாவின் எதிர்காலம் இனி எப்போழுதும் பிரகாசமாகவே இருக்கும். நீயும் வந்தவர்களுக்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய். அவர்கள் எல்லாரும் நம் ஆத்தில் ஆகாரம் செய்ய வேண்டியஎற்பாடுகளைச் செய்யுங்கள்” என மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு கட்டளை இட்டார். உடனே பாட்டியும், குருக்களின் மனைவியும், உமாவுடன் சேர்ந்து எல்லாருக்கும் சாப்பிட வகை செய்ய ஆரம்பித்தார்கள். ஏற்கேனவே சங்கர், இராயர்மாமாவின் வீட்டில் தயார் செய்து வைத்திருந்த பலகாரங்களை, மாரியின் மூலம் உமாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டதால், அவற்றையே முறையாக எடுத்து பரிமார வந்தார்கள். எல்லாருக்கும் மேஜையைச் சுற்றி உட்கார நாற்காலிகளை போட்டுவிட்டு, உணவு மேஜையின்மேல் பலகாரங்களை பரிமார வசதியாக நுனி இலைகளைப் போட்டு, நீர் தெளித்து, அருகில் குடிப்பதற்கும் சின்ன சின்ன டம்ளர்களில் நீரும் கொண்டு வைத்தார்கள். பிறகு இலையில் இனிப்பு வகைகள், கார வகைகள், பழங்கள் என பரிமார ஆரம்பித்தார்கள். உணவு மேஜையைச் சுற்றி, உமாவின் தாத்தா, சங்கரின் தாத்தா, அப்பா, குருக்கள் மாமா. எல்லாரும் அமர, சங்கரும் தன் தாத்தாவின் பக்கத்தில் அமரப் போனான். அப்போது அவர், சங்கரிடம் “நீ கிழக்கு முகமாக அமர வேண்டும்” எனக் கூற, அவனும் மேஜையின் .கிழக்கு முகமாக அமர்ந்தான். அப்போது சங்கரின் தாத்தா, “பாட்டி, சங்கரின் இலைக்கு வலப்புறம் ஒரு இலை போட்டு பரிமாறுங்கள் என்றும் சொன்னார். அவரின் சொற்படியே பாட்டியும் ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு பலகாரங்களை பரிமாரவும் செய்தாள். எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கும்முன் தாத்தாஸ்வாமிநாதன் உமாவைப் பார்த்து “உமா நீயும் எங்களுடன் சாப்பிட வாம்மா. உனக்குத்தான் சங்கரின் வலது பக்கம் இலை போடச் சொன்னேன். இன்று முதல் நீயும் எங்கள் குடும்பத்தில் சேர்ந்துவிட்டாய். இனி நீ எப்போதும் சங்கரின் பக்கத்திலேயே .. இருக்க வேண்டும் தெரியுமா? என அன்புடனும் உரிமையுடனும் சொன்னார். அவரின் உத்திரவுக்குக் கட்டுபட்டு உமாவும் ஒரு முறை தன் தாத்தாவைப் பார்த்தாள். அவரும் சிரித்துக் கொண்டே “ஆமாம் ஸ்வாமிநாதன் சொன்னபடியே இனி நீ அவர்கள் வீட்டுப் பெண். அவர் சொன்னபடியே சங்கரின் அருகில் போய் உட்கார்ந்து நன்றாகச்சாப்பிடு.” என மன மகிழ்ச்சியோடு சொன்னார். பாட்டியும் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே உமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு போய் சங்கரின் பக்கத்தில் உட்கார்த்தி வைத்தாள். உமாவிற்கும் மனதில் மிக மகிழ்ச்சியிருந்தாலும், நாணமிகுதியால் சங்கரின் வலது பக்கம் போய் தலையைக் குனிந்து கொண்டு இருந்தாள். தன் பக்கத்தில் வெட்கத்தோடு இருந்த உமாவைப் பார்த்து, சங்கரும் மெதுவாகச் சிரித்துக் கொண்டே “குனிந்து கொண்டே யிருந்தால் எப்படி சாப்பிடுவாய். எங்களுடன் சகஜமாக இரு.” எனச் சொல்லி அவளைச் சாப்பிட வற்புருத்தினான். அவர்களிருவரும் அருகருகே அமர்ந்து உண்ணுவதைப் பார்த்த பெரியவர்களும் அவர்களைப் பார்த்து கேலியும், பரிகாசமும் செய்துகொண்டே பலகாரத்தை சாப்பிட்டு முடித்தார்கள். அணைவரும் மனத்திருப்தியாக சாப்பிட்டு, மகிழ்வோடு பேசிமுடித்து, திருமணத்திற்கு நாளும் குறித்துவிட்டு, வெற்றிலை பாக்கு தாம்பூலம் பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அப்போதும் சங்கரின் தாத்தா சங்கரிடம் :சங்கரா நீ இன்று காலையில் விளயாட்டாக உமாவைக் கண் கலங்க வைத்துவிட்டாய். அதனால் நான் உனக்கு இப்போ ஒரு தண்டணை தரப் போகிறேன். நாங்களெல்லாம் முதலில் போகிறேம். நீ உமாவிற்கு சமாதானம் சொல்லிவிட்டுத்தான் பின்னாடி வர வேண்டும்” என சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, உமாவையும் பார்த்து “உன்னைக் கலங்க வைத்ததிற்கு சங்கருக்கு இந்த தண்டணை போறுமா? என்றும் கேட்டுவிட்டு எல்லாரையும் கூட்டிக்கொண்டு அவர்களை தனியே விட்டுவிட்டு, வாசற் கூடத்தில் போய் பேச ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் அவர்கள் எல்லாரும் வெளியேப் போய் விட்டார்கள்.

தனியாக விடப்பட்ட சங்கரும் உமாவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டே சில வினாடிகள் நின்றனர். பிறகு சங்கர் மெதுவாக உமாவிடம் “இப்போதுதான் உனக்கு என் மீது பூரண நம்பிக்கை வந்ததா? பெண்கள் சந்தேஹப்பிராணிகள் என்பது உண்மையான பேச்சுதான். மாரிக்கு என் மீது இருந்த நம்பிக்கைகூட உனக்கு இல்லையா. திடீரென்று ஒருவன் மனம் மாற முடியுமா? உண்மையாக என்ன நடக்கும் என்பது தெரிவதற்குள் நீ உனக்குள் எத்தனை விதமாக கற்பணைபண்னுவாய்? என்ன நடந்தாலும், உனக்கு பொறுமையாக இருக்கத் தெரியாதா?”என கேட்டான். அவனின் அத்தனை கேள்விகளுக்கும் உமா தன் சன்னமானக் குரலில் மென்மையாகச் சொன்னாள். “நீங்கள் என்னைப் போல் ஒரு பெண்ணாக இருந்தால், என் மனம் நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் பேசப்போகிறீர்கள் என்று அறிந்தவுடன் எத்தனை துடிக்கும் என்று உணர முடியும். காலையிலிருந்தே என் மனம் அக்னியில் விழுந்த புழுவாகத் துடித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஆண்கள். பேசுவதும் விளயாடுவதும் சகஜமாக எடுத்துக் கொள்ளுவீர்கள். பிறந்ததிலிருந்தே அன்பையும், பாசத்தையும் அறியாது இருந்தவளுக்கு, அன்பின் ருசியையும்,பாசத்தின் உணர்வையும் காட்டிவிட்டு, திடீரென்று என்னிடம் எந்த பரிவையும் காட்டாது, உங்களுடைய விளையாட்டிற்காக என்னை ஏமாற்றுவதுபோல் நடந்துகொண்டால் நான் துடிக்காமல் இருக்க முடியுமா. தயவுசெய்து இனியோருமுறை விளயாட்டுக்கூட என்னைத் துடிக்க வைக்காதீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு என்மீது கோபம் வந்தால், என்னை பளீரென்று கன்னத்தில் அடித்து விட்டால்கூட என்னால் சமாதானம் அடையமுடியும். என்னிடம் பேசாமல் மௌனமாக காலையில் சென்றது போல் இனி ஒரு முறை கூட செய்யாதீர்கள்” என்று சொல்லும்போதே அவளால் தான் காலை முதல் பட்ட மனக்கஷ்டம் தீராது கண்களில் நீர் பெருக விம்மளானாள். தன்னுடைய விளையாட்டுத்தனம் அவளின் மனத்தை எத்தனை தூரம் வருத்தியிருக்கிறது என்று அறிந்ததும் சங்கரின் கண்களிலும் கண்ணீர் தழும்பியது. தன்னுடன் சேர்த்து உமாவை மார்போடு அனைத்துக்கொண்ட சங்கர் “கண்ணம்மா தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நீ இத்தனை மென்மையான மனதுடன் இருப்பாய் என நான் நினைக்கவில்லை. மேலும் என்னுடைய விளயாட்டு, கொஞ்ச நேரம் தானே, மாலையில் நாங்கள் எல்லாரும் நேரில் இங்கு வந்தவுடன் நீயே என்னைப் புரிந்து கொள்வாய் என்றுதான் உன்னிடம் சொல்லாமல்,மாரியிடம் மட்டும் சொல்லி வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணினேன். திடீரென்று உனக்கு உண்மை தெரிந்தால் நீ எப்படி மனம் விகசித்து மகிழ்வாய் எனப் பார்க்கத்தான் நான் உன்னுடன் கொஞ்சம் விளையாடினேன். அதுவே உன்னை இவ்வளவு பாதித்து விட்டதென்றால், நான் இனி நம் வாழ்நாள் பூராவும் உன்னை விளையாட்டுக்கூட வேதனைப் படுத்த மாட்டேன்” என அவளுக்கு சமாதானம் சொல்லியபடியே, அவளை மேலும் இறுக்கிக் கொண்டான். அவனின் அனைப்பும், தன்னுடைய வேதனையை உணர்ந்து அவன் துடித்ததும் உமாவின் மனமும் இலேசாயிற்று. சங்கரும் அவளின் முகத்தைத் தன் கைகளால் தூக்கிக் கொண்டு, “உமா நீ இப்போ எனக்கு என்ன தண்டணை கொடுத்தாலும் நான் எற்கத் தயாராக இருக்கிறேன்.” என காதலினால் கண்கள் ஓளிவிடச்சொன்னான். அவனின் முகத்தைப் பார்த்த உமாவோ “என் மனம் என்றும் உங்களைத் தண்டிக்கத் துனியாது” கனிவாகச் சொன்னாள். அப்படியும் சங்கரின் முகம் தெளிவாகாததால். உமா மெதுவாகத் தன் பவள இதழ்களால் தன் முதற்காதல் முத்திரையை அவனின் மார்பில் பதித்தாள். தன் மார்பில் விழுந்த அன்பு முத்தத்தை உணர்ந்தவனின் மனமும் உடலும் எல்லையில்லா ஆனந்தத்தில் தள்ளாடியது. தன் உடலுடன் இனைந்திருந்த அந்த சந்தனச் சிலையை விட மனமில்லாது, அவளின் தாமரை மலரென்ன மலர்ந்திருந்த முகத்தைத் தன் கைகளால்த் தூக்கிக் கொண்டு, அவனும் தன் அன்பு முத்தங்களை அவளின் முகமுழுவதும் ஒரே வேகத்துடன் பதிக்கலானான். வெகு நாட்களுக்குமுன் தங்களின் காதலைப் பரிமாரிக் கொண்டவர்களின் மனமும் திரும்பவும் அந்தச் சுகத்தை அனுபவித்து மனமும் உடலும் ஆயிரம் மின்னல்களை ஒரே சமயத்தில் உள் வாங்கிக் கொண்டன.

தங்களைச் சுற்றி பின்னியிருந்த இன்ப வளையத்துக்குள் சிக்குண்ட இருவரில் சங்கரே முதலில் பேசத் தொடங்கினான். “உமா உன்னுடைய தண்டணை இத்தனை அமுதமாக இருக்குமென்றால், நான் அடிக்கடி உன்னிடம் வம்பு செய்து விளையாடத்தான் செய்வேன். இத்தனை சுகமான தண்டணை கிடைக்குமென்றால், இல்லறத்தில் மனைவியிடம் விளையாட்டுக்காகவேனும் பல பொய்களைச் சொல்வார்கள் கணவர்மாரெல்லாம். இதுவும் காதலின் களவுகளில் ஒன்றுதானே.” எனக் காதல் மேலிட்டுச் சொன்னான். சங்கரின் குறும்பான மொழிகளைக் கேட்ட உமாவும் அவனைப் பார்த்து மௌனமாகச் சிரித்துத் தன் சந்தோஷத்தைக் காட்டினாள். சங்கர் தான் அதிக நேரம் உமாவுடன் தனித்து இருந்ததை புரிந்து கொண்டு, மென்மையாக தன் அணைப்பில் இருந்த உமாவை விட்டு விலகினான், அவன் தன்னை விட்டு விலகுவதை விரும்பாமல் அவனின் முகத்தைப் பார்த்தாள். “உமா நாமிருவரும் தனிமையாக பேச ஆரம்பித்து நிறைய நேரம் ஓடி விட்டது. அவர்கள் யாராவது வந்து நம்மைக் கூப்பிட்டால் அது நம்மிருவருக்கும் வெட்கமாக இருக்கும். அதனால் அவர்கள் கூப்பிடும் முன்பே நாம் வெளியேச் சென்றுவிடுவதுதான் நமக்கு அழகு. இன்னும் கொஞ்ச நாள்தான். நம்முடைய சொர்க்க வாசல் திறக்க.” என்று பிரியமாகச் சொல்லிவிட்டு, அவளைத் திரும்பவும் ஒரு முறை தன்னோடு சேர்த்துக் கட்டிக் கொண்டுவிட்டு, வாசலை நோக்கிப் போனான்.

உமாவின் தாத்தாவும், சங்கரின் தாத்தாவும் சேர்ந்து உமா—சங்கர் திருமணத்திற்கு நாளை முடிவு செய்தபின் இருவருக்கும் தொடர்ச்சியாக வேலைகள் இருந்தன. உமாவின் பாட்டியும், அக்கம் பக்கத்து பெண்களைச் சேர்த்துக் கொண்டு, கலியாணத்திற்கு வேண்டிய அப்பளம்,வடாம், கறிவடாம், உமாவின் வருங்காலத்திற்கு குடும்பம் நடத்த தேவைபடும் பொடி வகைகள், வருடாந்திரத்திற்குத் தேவையான உக்கிராண சாமான்கள், சீர் பட்சணங்கள் வகைகள் எனப் பலவும் சேகரிக்கத் தொடங்கினாள். உமாவின் பெற்றோரிடமும், தாத்தா பாட்டியிடமும் ஊரில் இருந்த அத்தனை பேர்களும் மிகவும் பற்றும், பாசமும் கொண்டிருந்ததால் இது விஷயமாகப் பாட்டி ஒரு முறை அவர்களிடம் சொல்லியதைக் கேட்டு, அவர்களாகவே தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்தார்கள். அதற்கிடையே உமாவிற்குத் தேவையான துணிமணிகள், உடைகள் எல்லாம் தயாராகிய வண்ணம் இருந்தது. உமாவின் பள்ளீத் தோழீகளும் உமாவிற்கு உதவியாக கடைகளுக்கும், தையல்காரர்களுக்கும் செல்லவும், அவளுக்குத் தேவையான உடைகளுக்கு நல்ல நவ நாகரீகமாக தயார் செய்யவும் உதவியாகவும் இருந்தார்கள். அவர்களின் பள்ளித் தோழீக்கு படிப்பு முடிந்தவுடனேயே திருமணம் கூடி வந்தது எல்லாருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இதற்கிடையில் சங்கரும் ஒரிரு முறை வந்து, உமாவிடம் பேசிச் சென்றதும், அவளின் நகைகள், உடைகள் முதலியவற்றைப் பார்த்தும், நகைகளின் டிசைங்களையும் பார்த்து, அதில் சிலசில மாற்றங்களையும் சொல்லிவிட்டு சென்றான். சங்கரைப் பார்த்தவுடன், உமாவின் தோழீகளுக்கும் உமாவின் அதிர்ஷ்டத்தில் ஒருசிறு பொறாமையும் தோன்றினாலும், சிறு வயது முதலே துன்பத்தையே அனுபவித்து வந்த உமாவிற்கு இந்த திருமணம் ஒரு நல்ல அமைதியான, அன்பானவாழ்க்கையைக் கொடுக்கும் என்பதை நினைத்தும் சந்தோஷமடைந்தார்கள். நாட்காட்டிகள் தங்களின் கடமையைத் தவறாது, நாட்களை கடத்தி, உமா-சங்கரின் திருமண நாளும் வந்தது..

6. திருமணமும் சாந்தியும்

அவர்களின் திருமணத்திற்கு திரூவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் இருந்த திருமண மண்டபத்தையே நிச்சயம் செய்திருந்தால் அவர்களின் மனதிற்குள் வாசம் செய்த கமலாம்பாள்—தியாகராஜர் சன்னதியிலேயே திருமண நிகழ்ச்சிகள் நடக்காலாயிற்று. முதல் நாள் காலையில் விரதமும், மாலையில் மாப்பிள்ளை அழைப்பும் நடந்தேறியது. மறுநாள் அதி காலையிலிருந்தே உமாவின் பாட்டி மிகவும் பரபரப்பாகவே இருந்தாள். அவளின் மனம் சதா இந்தத் திருமணம் நல்லபடியாக தடையின்றி நடக்க வேண்டுமென்று மனதிற்குள் கமலாம்பாளையும் தியாகராஜரையும் தியானித்துக் கொண்டே இருந்தாள். காலையில் காசி யாத்திரை முடிந்தபின், உமாவும் சங்கரும் ஊஞ்சலுக்கு வந்தார்கள். ஊஞ்சல் சிறிது உயரமாக இருந்தது. சங்கர் சுலபமாக ஊஞ்சலில் ஏறி அமர்ந்து விட்டான். உயரம் காரணமாக உமாவால் ஊஞ்சலில் ஏறி உட்கார முடியவில்லை. உடனே குருக்கள் மாமா “யாராவது ஒரு உயரமான மரப் பலகை எடுத்து வாருங்கள்.. மணப்பெண்ணிற்கு உயரம் போராது,ஏற முடியாது” எனக் குரல் கொடுத்தார். அவரின் குரலுக்கு உடனேயே மரப் பலகையை எடுக்க ஒரிருவர் சென்றார்கள். அதற்குள் சங்கர் சிரித்துக்கொண்டே, உமாவின் இடையைத் தன் இரு கைகளினால் பற்றி, கொஞ்சமும் சிரமமின்றி உமாவை ஒரு பொம்மையைத் தூக்குவதுபோல் தூக்கித் தன் அருகில் அமர்த்திக் கொண்டான். சங்கரின் செய்கையைப் பார்த்த சுற்றி இருந்தவர்கள் எல்லாம் “ஓகோ..ஓகோ: எனக் குரலிட்டுத் தங்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு சிலர் உமாவிடம் “இப்போதே உமா என்ன சொக்குப்பொடி போட்டாய். உனக்கு கொஞ்சம்கூட சிரமம் கொடுக்காமல், உன்னை ஒரு பொம்மையைபோல் தூக்கிக் கொண்டு விட்டாரே? என பலவிதமாக கேலி செய்யத் தொடங்கினார்கள். உமாவிற்குள் ஒரு ஆனந்த அலை ஓடியது. அத்தனை பேர் எதிரிலும் தன்னை ஒரு குழந்தையைப் போல் தூக்கித் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டவனின் ஆசையையும் புரிந்து கொண்டாள். மனதிற்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை தன் நாணத்தால் மறைத்துக் கொண்டு, அருகில் இருந்த சங்கரை தன் ஓரக் கண்ணால் யாரும் பார்க்காவண்ணம் திருட்டுத்தனமாகப் பார்த்தாள். அவளின் பார்வையில் இருந்த ஒளியையும், அவளின் மனதில் துள்ளிக் கொண்டிருந்த களிப்பையும் புரிந்து கொண்ட சங்கர் “மற்றவர்களைப் பார்த்து, உமாவால் ஊஞ்சலில் ஏற முடியாவிட்டால், நான் பக்கத்தில் இருக்கும்போது எதற்காக ஒரு மரப்பலகைக்கு ஒடவேண்டும்.” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான். அப்போது குருக்கள் “சங்கரா நீ இன்று ஒரு நாள் மட்டுமாவது மாப்பிள்ளை முறுக்கில் இருப்பாயென்று நான் நினைத்தேன். ஆனால் நீ இப்பவே உமாவிடம் சரணடைந்து விடுவாய் எனநான் எதிர்பார்க்கவில்லை” என்றும் தன்னாலும் கேலியாகவும், குசும்பாகவும் பேச முடியும் எனத் தெரிவித்தார். மற்றவர்களுடன் சேர்ந்து குருக்கள் மாமாவும் தன்னைக் கேலி செய்வதைக் கண்ட உமா மெதுவாக :”ஏன் மாமா நீங்களுமா மற்றவர்களுடன் சேர்ந்து என்னைக் கேலி செய்யலாமா? இது நியாயமா? எனக் கேட்டாள். அதற்கு அவர் மேலும் :என்னம்மா இதற்கே இப்படியாகிவிட்டால், இன்று இன்னும் எத்தனை சம்பவங்கள் இருக்கு உன்னையும் சங்கரையும் கேலி செய்ய. சங்கர் பார் யார் என்ன சொன்னாலும், முகத்தில் சிரிப்பும் துள்ளலும் மாறாது இருக்கிறான், நீயும் இனி அவனுடன் சேர்ந்து தைரியமாக இருக்க வேண்டும்” என சிரித்து சொல்லிவிட்டு, திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க உள்ளே சென்றார். பகவான் அநுக்கிரகத்தாலும், பெரியோர்களின் பூரண ஆசிவாதத்தாலும், உமா—சங்கர் திருமணம் இனிதாக நடந்தது. உற்றார், உறவனர்கள் சுற்றி நின்று, தங்களின் ஆசிகளைத் தெரிவிக்க, சங்கர் உமாவின் சங்கு கழுத்தில் திருமணநாண் அணிந்து, மூன்று முடிச்சும் போட்டான்.

திருமண நாண் பூட்டியதும், கோவிலிருந்து அம்மன், ஸ்வாமி சன்னிதானத்திலிருந்து கொண்டு வந்த மாலைகளை சங்கர் உமாவின் கழுத்திலும், உமா சங்கர் கழுத்திலும் போட்டார்கள். அப்போது அங்கிருப்பவர்களுக்கெல்லாம் உமா—சங்கர் தெரியவில்லை, கமலாம்பாள்—தியாகராஜஸ்வாமிதான் தெரிந்தார்கள். எல்லாரும் மனநிறைவுடன் தங்களுடைய பூரண ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டு, உணவருந்தச் சென்றார்கள். பிற்பகலில் பெண்கள் விளையாட்டான நலங்கும் நடந்தன. சிறு சிறு விலையாட்டுக்கள் முடிந்த பின், ஒரு குடத்தில் ஒரு மோதிரத்தைப் போட்டுவிட்டு, மணமக்கள் இருவரையும் தங்கள் கைகளைக் குடத்தில் நுழைத்து, மோதிரத்தை எடுத்து வர வேண்டுமென்றும், யார் முதலில் எடுக்கிறார்களே அவர்களுக்குத்தான் அந்த மோதிரம் சொந்தம் என்றும் பந்தயமாகச் சொன்னார்கள். சங்கர் உமா இருவரும் தங்களின் கைகளை குடத்தில் இட்டு, மோதிரத்தைத் தேடினார்கள். உமா உண்மையாகவே மோதிரத்தை தேடுவதில் கவனமாக இருந்தாள். ஆனால் குறும்புக்கார சங்கரோ, உமாவின் கைகளை மோதிரம் எடுக்க வகையில்லாது, தன் கைகளினால் பற்றிக் கொண்டான், தானும் மோதிரம் தேடுவது போல் பாசாங்கும் செய்தான். குடத்துக்குள் சங்கரின் கைகள் செய்த தந்திரத்தை உமாவும் புரிந்து கொண்டான். அதனால் அவள் மோதிரத்தை தேடுவதை விட்டு, தானும் சங்கரின் கைகளைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள். உமாவின் விளையாட்டைப் புரிந்துகொண்ட சங்கரும் சிறிது நேரம் கடத்தினான். ஆனால் சுற்றிலுமிருந்தவர்களெல்லாம், “என்ன இருவருக்கும் ஒரு சின்ன குடத்தில் இட்ட மோதிரத்தை எடுக்க என்ன சிரமம். குடத்தில் மோதிரம் இருக்கிறாதா இல்லையா எனகுறும்பாகக் கேட்க. சங்கரும் சிறிதும் சளைக்காது “குடத்தில் மோதிரம் போட்டது யார். உண்மையாகவே மோதிரம் குடத்தில்தான் போட்டார்களா, இல்லை தங்கள் வீட்டுப் பெண்ணிற்குக் கிடைக்க வேண்டுமென்று உமாவின் விரலில் போட்டுவிட்டார்களா? எனப் பதிலுக்குப் பரிகாசமாக கேட்டுக்கொண்டபடியே, திருட்டுத்தனமாக தான் குடத்துக்குள் உமாவின் விரலில் போட்ட மோதிரத்தை அவளின் கையைத் தூக்கிக் காண்பித்தான். பாருங்கள், நீங்கள் குடத்தில் போட்டதாகச் சொன்ன மோதிரம் உங்கள் வீட்டுப் பெண் உமாவின் விரலில் இருப்பதை.” எனக் காட்டினான். உண்மையிலேயே மோதிரத்தை எல்லார்முன் காண்பித்துவிட்டுத்தான், பாட்டி அதைக் குடத்துக்குள் போட்டாள். ஆனால் மோதிரம் உமாவின் விரலில் இருந்ததைப் பார்த்த, சிரித்துக் கொண்டே “மாப்பிள்ளை இப்பவே என்னிடம் இத்தனை வம்பா. நான் நீதான் மோதிரத்தை எடுப்பாய் என நம்பிக்கையாக இருந்தேன். ஆனால் உன் திருட்டுத்தனம் எனக்குத் தெரிந்து விட்டது. உனக்கு ஆசையாக இருந்தால் நீயல்லவா உமாவுக்குத் தனியாக மோதிரம் போடவேண்டும். அதல்லாது, நான் போட்ட மோதிரத்தை நீ குடத்துக்குள் அவளின் விரலில் போட்டால் எனக்குப் புரியாதா? எனப் பதிலுக்கு பாட்டியும் சாடினாள். அதற்கும் சங்கர் சளைக்காது, பாட்டி நீங்கள் சொன்னபடியே நான் இப்பவே ஒரு மோதிரத்தை உமாவின் விரலில் போட்டுவிடுகிறேன். ஆனால் அதற்கு முன் உமா எனக்கு ஒரு பாட்டு பாட வேண்டும். சுற்றி இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். ஆமாம் அதுதான் சரி. உமாவும் உடனே சங்கர் கேட்டபடி ஒரு பாட்டு பாட வேண்டும்: எனக் ஒரே குரலில்கேட்டார்கள். உமாவோ மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பி வழிய, சங்கரை நோக்கியபடியே என்ன பாட்டு பாடுவது என யோசித்தாள். அங்கு இருந்த மாரியோ “என்னம்மா உனக்குத்தான் ஒரு பாட்டு நல்ல மனப்பாடமாச்சே. அதையே பாடு, என்றவனைப் பார்த்து :என்ன சொல்கிறாய் மாரி நான் எந்தப் பாட்டை மனனம் செய்திருக்கிறேன். ஏன் பொய்சொல்லுகிறாய்” எனக் கேட்டான். உடனே சங்கர் “உமா நான் ஒரு பாடலைச் சொல்கிறேன் அதையே பாடி விடேன்” எனச் சொல்லியதுடன் “என் மனம் கவர்ந்த அழகன் வடிவேலனைக் காணலையே தோழீ, காரணம் நீ அறிவாயா சொல் தோழீ” என இராகத்துடன் எடுத்துக் கொடுத்தான். உடனே உமாவிற்கும் தான் முதலில் சங்கர்வருவது தெரியாமல்,தன் வீட்டில் அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது தான் பாடிய பாடலை அவன் இன்னும் மறக்காமல் தன் மனதில் வைத்திருப்பதைப் புரிந்து கொண்டாள். அவன் திருமண நாளன்றே, தன்னிடம் கேட்ட முதல் விஷயம் எனத் தெரிந்து, தன்னுடைய சுகமான குரலால் மெதுவாகப் பாடத் தொடங்கினாள்.

உமாவின் இனிய குரலில் மிகவும் சன்னமாக சுகமான ஒலியில் அந்தப் பாடல் அங்கிருந்த எல்லாரையும் மயக்கிவிட்ட்து. பாடல் முடியும்போது சங்கரும் தன்னுடைய இனிமையான குரலில் உமாவுடன் சேர்ந்து பாடினான். இருவருடைய குரலும் இனைந்து ஒரு அமரிக்கையான சுநாதமாக அங்கு ரீங்காரம் செய்தது. தான் ஏற்கெனவே சொல்லியபடி, சங்கர் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறு வைர மோதிரத்தை எடுத்து உரிமையாக உமாவின் இடது மோதிர விரலில் போட்டுவிட்டு, “பாட்டி, இதோ பாருங்கள் நான் சொன்னபடியே வைர மோதிரத்தை உமாவின் கையில் போட்டுவிட்டேன்”என்றும் பெருமையாகச் சொன்னான். பிறகு அடுத்த கட்ட திருமண நிகழ்ச்சிகளைத் தொடங்க ஏதுவாக நலங்கை முடித்தாள் பாட்டி. சங்கர் உமாவிடம் “நீங்கள் இருவரும் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு, குளித்து விட்டு, இரவு ஷேசஹோமத்திற்குத் தயாராகுங்கள்.” எனக் கூறிவிட்டு உமாவையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள். இரவு ஷேசஹோமம் முடிந்து, மணமகளை உமாவின் பாட்டி அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த சாந்தி முகூர்த்த பள்ளியறைக்கு அழைத்துச் சென்றாள்.

7. முதல் நாள் இன்பங்கள்

உள்ளே சென்றவுடன், பாட்டி சங்கரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அப்பா சங்கரா நான் என் பேத்தி உமாவை அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்க வில்லை. அவளுக்கு இயற்கையாக தெரிந்த உறவுகளைத்தவிர வேறு மாதிரியான உறவு முறைகளைப் பற்றி நான் ஒருநாளும் அவளிடம் பேசியதுகூட இல்லை. அவளையும் பாடப் புத்தகங்கள், ஸ்லொகங்கள் தவிர வேறு விதமான புத்தகங்களை நான் படிக்கக்கூட அனுமதித்ததில்லை. அவளின் கலியாணம் நிச்சயித்தபின்பும் அவளுக்கு கணவன்-மணைவி உறவுபற்றி நான் ஒன்றும் சொன்னதில்லை. அவளுக்கு இதப்பற்றியெல்லாம் எடுத்துச் சொல்ல தக்க வயது தோழீகளோ, உற்ற சகோதரிகளோ இல்லை. இந்த சமயத்தில் அவளுக்கு அவள் அம்மாதான் எல்லாவற்றையும் பதமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கும் அந்தக் குழந்தை கொடுத்து வைக்கவில்லை. இனி அவளுக்கு நீதான் எல்லா உறவுமாக இருக்க வேண்டும். அவள் அறியாதனத்தால் உன் மனம் நோக நடந்துகொண்டால், அவள் மீது கோபப்படாதே. அவளுக்கு அவள் வயதுக்குத் தெரிய வேண்டிய விஷயங்களைக்கூட நான் சொல்லிக் கொடுக்கவில்லை. இதயெல்லாம் நீ நன்றாகப் புரிந்து கொண்டு, இன்று முதல் அவளுடன் வாழ்க்கையை ஆரம்பி. உன்னால் அவளை நிச்சயம் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும்.” என்று தன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, உமாவைப் பார்த்து, “உமா நான் ஏற்கெனவே சொல்லியபடி இன்று நீ சங்கரிடம் சொன்னபடி கேட்டு, அவன் மனம் மகிழ நடந்து கொள்ள வேண்டும். எதற்காகவும் பிடிவாதம் செய்யாதே. இனி அவன் சந்தோஷம்தான் உன் சந்தோஷமாக இருக்கவேண்டும் தெரியுமா. சமத்தாக நடந்துக்கோ” எனப் பிரியமாகச் சொல்லி விட்டு, அந்த அறையை விட்டு சென்றாள்.

பாட்டி சென்றவுடன், சங்கர் மெதுவாக அறையின் கதவைச் சாத்தினான். அங்கிருந்தபடியே சில வினாடிகள் உமாவை பார்த்துக் கொண்டே பரவசமடைந்தான். அன்று அவள் அவனுக்குப் பிடித்தமான செந்தூர நிறத்தில் புடவையும், அதற்கு பொறுத்தமாக அடர் சிகப்பு வண்ணத்தில் இரவிக்கையும் அணிந்து இருந்தாள். கழுத்தில் சிகப்பு கற்கள் பதித்த அட்டிகையும், அன்ன பட்சி முகப்புகொண்ட ஒரு பட்டையான சங்கிலியும் அணீந்து இருந்தாள். கைகளில் சிகப்பு, பச்சை கற்களுடன் கூடிய முத்துவளையல்களை போட்டிருந்தாள். அதையெல்லாம்விட காலையில் மணமேடையில் சங்கரின் அன்பு கரங்களால் முன்று முடிச்சுப்போட்ட, விலை மதிக்கமுடியாத, மஞ்சள் கயிற்றில் கோக்கப்பட்ட தங்கத் தாலியும் அவளின் சங்கு கழுத்தில் பளபளவென மின்னின. காதுக்கு வைரக் கம்மலுடன் தொங்கிய சிறு சிகப்புக் கற்களால் செய்த ஜிமிக்கியும்,தங்க மாட்டலும்,, மூக்கிற்கு முத்துக்களுடன் கூடிய புல்லாக்கும் சூட்டியிருந்தாள். அந்த அலங்காரத்தில் அவள் ஒரு சொர்ணவிக்கிரகமாகத் திகழ்ந்தாள். இயற்கையாகவே அவளின் வனப்பும் அன்று செய்திருந்த அலங்காரத்தினால் மேலும் மின்னியது. அந்த அறையில் வைத்திருந்த விளக்குகளும் அவளின் அழகை மேலும் பிரகாசிக்கச் செய்தது. அவளின் அழகும், அலங்காரங்களும், புடவை கட்டியிருந்த நேர்த்தியும் சேர்ந்து, சங்கரைச் சுற்றி ஒரு இன்ப வலைவீசியது. அவனும் அந்த வலைக்குள் தானே வந்து சிக்கிய மன்மதன் போல் தான் இருந்தான். இத்தனை இன்பங்கள் போதாதென்று, உமாவும் தன் மருண்ட மான் விழிகளால் அவனைக் கட்டிவிட்டாள். அவளின் விழிகளின் சிறையை மீள விரும்பாது சங்கரும் தன் குறும்பு புன்னகையால் அவளையும் தன் விழிகளில் சிறை செய்து விட்டான். இன்று முதலே அவர்களின் இன்ப வாழ்வுக்கு உற்றார், உறவினர் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதென்றாலும், இருவருக்குமிடையே ஒரு சன்னமான வெட்கத்திரை தடுத்தது. அந்தத் திரையை அறுத்துக்கொண்டு, சங்கர் மெதுவாக உமாவை நெருங்கினான். நெருங்கிவந்தவன் உமாவின் கைகளை மிருதுவாகப் பிடித்துக் கொண்டான், அவளுக்கு மட்டுமல்ல, அவனின் கைகளிலும் ஒரு சிறு நடுக்கம் இருந்தது. சங்கருக்கு கதைகளிலும், சினிமாவிலும் படித்து, பார்த்து அறிந்த விஷயங்கள்தான் என்றாலும், தன்னுடைய வாழ்வில் முதல் இரவான அன்று அவனுக்கும் ஒரு படபடப்பும் இருந்தது.

மெதுவாக உமாவை அனைத்துக் கொண்டு, சங்கர் அங்கிருந்த ஒரு சின்ன சோபாவில் உட்கார்ந்தான். அவளைச் சுற்றுத் தன் கைகளால் அனைத்துக் கொண்டே, “உமா என்னைப் பார். என்னிடம் உனக்கு என்ன பயம். நாமிருவரும் முன்பே அன்பால் கட்டுண்டவர்கள்தானெ. என்னிடம் நீ சகஜமாகப் பழகு, நான் என்றும் உனக்கு இதமாகவே இருப்பேன்.” எனச் சொல்லியபடியே, அவளின் பயத்தைப் போக்கலானான். அவனின் அனைப்பால் உமாவின் தயக்கமும் சிறிது குறைந்தது.. பிறகு சங்கர் அவளை சகஜமான நிலைக்குக் கொண்டுவர அவளிடம் பேச ஆரம்பித்தான். சங்கரும் தான் அவளுக்கு அணிவித்த திருமண நாணையும், அதிலிருந்த தங்கத் தாலியையும் ஆசையோடு தன் கைகளில் எடுத்துப் பார்த்து, “இது உன் சங்கு கழுத்தில் எத்தனை பாந்தமாக இருக்கிறது தெரியுமா? எனக் காதலோடுகேட்டான்.

“உமா உனக்கு இந்தப் புடவை பிடித்திருக்கிறதா. உனக்கு செந்தூர நிறம் மிகவும் பொறுத்தமாக இருக்குமென்றுதான் நான் இதைத் தேர்ந்த்தெடுத்தேன். இன்று நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா. உன்னைப் பார்த்தால் எனக்கு ஒரு பாட்டுப் பாடத் தோனுகிறது : எனக் கூறியபடியே மெதுவாக அவளின் காதுக்குமட்டும் கேட்கும்படி பாடத்தொடங்கினான்.” “சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை கலைத்து விட்டாயே” என மிருதுவான குரலில். அவனின் இனிமையான பாட்டும் உமாவை மேலும் ஒரு சிலையாகவே இருக்கச்செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக சங்கரின் கைகள் அவளின் உடலில் மெதுவாக அலைந்தது.. அவனின் கைகளின் பரிசம் உமாவின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டன. உமாவிற்கும் சங்கரை நன்றாகப் பார்க்க ஆசைதான். ஆனால் நாணமோ அவளின் ஆசைகளுக்குத் தடை போட்டன. நாணத்தையும் மீறி உமாவின் ஆசைகள் செயல்படத்தொடங்கின. தன் தலையைக் குனிந்தபடியே உமா ஓரக்கண்களால் சங்கரின் முகத்தைப் பார்த்தாள். சங்கரும் தன்னைக் கண்கொட்டாது பார்ப்பதை உணர்ந்ததும், வெட்கத்தால் தன் கண்களை மூடிக்கொண்டாள். தன்னைப் பார்த்து கண்களை மூடிகொண்ட உமாவை பார்த்து சங்கர் சிரித்துக்கொண்டே கேட்டான் :ஏன் உமா நான் உன்னளவுக்கு அழகாக இல்லையா. என்னைப் பார்க்கப் பிடிக்கவில்லையா, ஏன் உன் கண்களை மூடிக்கொள்கிறாய்? எனப் பரிகாசத்தோடு கேட்டான். சங்கரின் குறும்பை புரிந்து கொண்ட உமாவும் “உங்களின் அழகு உங்களுக்குத் தெரியாதா. இல்லையென்றால் நான் இன்று நலங்கில் உங்களைப் பார்த்துதானே “என் அழகன் வடிவேலன் வரக் காணலையே” என்று பாடுவேனா? எனப் பதில் சொல்ல, சங்கரும் “ஆமாம் நீ வடிவேலனைத்தானே தேடினாய். ஆனால் நான் வடிவேலன் இல்லையே” என பதிலுக்குப் பரிகாசம் செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக உமாவும் சகஜநிலைக்கு வந்தாள். “நீங்கள் வடிவேலன் இல்லையென்றால் என்ன, அவனின் அப்பா தானே”என மிருதுவாகக் கூறினாள். மேலும் சங்கரின் தோளில் முகம் புதைத்து “காமனை எரித்த சங்கரர் என்னை பித்தாக்கியது ஏனோ ஸ்வாமி” என மென்மையாகப் பாடினாள். சங்கரும் உமாவின் பாட்டைக் கேட்டுப் பரவசமானான். தன் மார்பில் புதைத்த உமாவின் முகத்தை தன் கைகளால் நிமிர்த்திக் கொண்டு :உன்னைக் கண்டு பித்தாகிய நான் உனக்கு என்ன வைத்தியம் செய்வேன்.’ எனக் கேட்டபடியே அந்தத் தாமரை முகத்தில் மகரந்தம் தேடும் வண்டானான்.

சங்கரின் பொல்லாத்தனத்தை உமாவும் நன்றாகவே இரசித்து பரவசமடைந்தாள். சிறிது நேரம் சென்றவுடன், சங்கர் உமாவைப் பார்த்து :உமா நீயும் உன் புடவையை மாற்றிக் கொள். இத்தனை அலங்காரத்துடன் படுப்பது சிரமமாக இருக்கும்” எனச் சொல்லிக் கொண்டே அவளின் கழுத்தில் இருந்த அட்டிகை, கைகளிலிருந்த வளையல்களை கழட்டினான். உமாவும் மெல்ல எழுந்திருந்து, :நீங்கள் கொஞ்சம் வெளியேப் செல்லுங்கள்” என்றாள். சங்கர் அவளைப் பார்த்து சிரித்தபடியே “எதற்கு நான் வெளியே போகவேண்டும்” எனப் புரியாததுபோல் கேட்டான். உமாவோ சிரித்தபடியே “நீங்கள் இப்படி என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் எப்படி புடவையை மாற்றிக் கொள்வது” எனக் கேட்டாள். சங்கரோ இன்று நான் இரவு முழுவதும் இந்த அறையில்தான் இருக்கவேண்டுமாம். நடுவில் எங்கும் போகக்கூடாது என நான் இங்கு வரும்போதே என் தாத்தா சொல்லி விட்டார். அதனால் நான் எங்கும் எழுந்து போக மாட்டேன். வேண்டுமானால் நான் கண்களை மூடிக் கொள்கிறேன். நீ புடவையை மாற்றிக் கொள்” எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டான். உமாவும் சங்கர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சிரித்தபடியே “வம்பு எதுவும் செய்யக் கூடாது. நன்றாக கண்களை மூடிக்கொள்ளவேண்டும். நான் குரல் கொடுக்கும்வரை நீங்கள் என் பக்கம் பார்க்கக்கூடாது” எனச் சொல்லிவிட்டு தன் புடவையை சிறிது தளைர்த்தினாள். மெதுவாக தன் புடவைத் தலைப்பை போர்த்திக்கொண்டு, கைகளை பின்பக்கம் செலுத்தி, தன் இரவிக்கையின் ஊக்குகளைக் கழற்றப் பார்த்தாள். ஆனால் அதுவோ அவளுக்குப் பழக்கமில்லாத வகையில் நவீனமாகத் தைத்த பின்பக்கமான ஊக்குகள் கொண்ட இரவிக்கை. பழக்கமில்லாத்தால் அவளால் அந்த ஊக்குகளை அவிழ்க்க முடியவில்லை. நேரம்தான் ஆகியது. திருட்டுத்தனமாக அறையில் உள்ள கண்ணாடியின் மூலம் அவளின் அவஸ்தையைப் பார்த்த சங்கர் “என்ன உமா இன்னுமா நீ புடவை மாற்றுகிறாய். எனக்குக் கண் வலிக்கிறது. எத்தனை நேரம் நான் கண்களை மூடிக் கொண்டிருப்பது” எனவும் கேட்டான். சாதுப்பெண் உமாவோ அவன் தன்னைக் கண்ணாடிமூலம் பார்ப்பதை அறியாமல் தனக்குள் “என்ன கஷ்டம். நான் அப்போதே சொன்னேன் எனக்குப் பின் பிக்க ஊக்குகள் வசதிபடாதென்று. கேட்காமல் இப்போது இதுதான் நாகரீகமென்று சொல்லி அப்படியே தைத்து விட்டார்கள். போடும்போது தோழிகள் போட்டுவிட்டார்கள். அப்பவே சொன்னேன் என்னால் இப்படியெல்லாம் கழட்ட முடியாதென்று. இப்போது யாரைக் கூப்பிடுவது” என தனக்குள் புலம்ப ஆரம்பித்தாள். அவளின் கஷ்டத்தைப் பார்த்த சங்கர் சிரித்துக்கொண்டே “இனிமேல் இதற்கெல்லாம் நீ என்னைத்தான் கூப்பிடவேண்டும். நான் வேண்டுமானால் என் கண்களை மூடிக்கொண்டே உனக்கு உதவட்டுமா” என குறும்பாக கேட்டான். அதற்கு உமாவும் “இதுதான் சமயமென்று நீங்கள் விஷமம் செய்யாமல், உதவி செய்தால் சரி” என சம்மதம் சொன்னான். சங்கர் மெதுவாக அவளை நெருங்கி, பின்பக்கம் வந்து நின்று, தன் கைகளால் அவளின் இரவிக்கை ஊக்குகளை ஒவ்வோன்றாகக் கழட்டினான். ஊக்குகளைக் கழட்டியபின், அப்படியே அவளைத் தன் கைகளால் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு மெதுவாக அவளைத் தன்புறம் திருப்பிக்கொண்டான். அவனின் கண்கள் தன் முன் தெரிந்த சிறிய இரு தாமரை மொட்டுக்களைக் கண் கொட்டாமல் பார்த்தன. அவனின் கண்களின் கூரிய பார்வையைப் பார்த்த உமாவிற்கு சங்கடமாகியது. “எதற்கு என்னை அப்படியே கண்கொட்டாமல் பார்க்கிறீர்கள். எனக்குக் கூச்சமாக இருக்காதா? என மெதுவாக வெட்கத்துடன் அவனைப்பார்த்து கேட்டாள். அவனோ “என்னிடம் இனி உனக்கு வெட்கம் கூடாது. நீ வெட்கப்பட்டால், நான் அதை உடைக்காமல் என்ன செய்யமுடியும்.” எனக் கூறியபடியே, அவளைச் சுற்றித் தன் கரங்களைச் சிறையாக்கினான். அவனின் கைச் சிறையில் சுற்றிய உமாவும் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் விஷமத்திற்கு உடன்பட்டாள். பிறகு சங்கர் அவளைச் சிறிது நேரம் சுதந்திரமாக உடை மாற்ற விட்டான். அவனும் தன்னுடைய உடையையும் மாற்றிக் கொண்டான். இரவு நேரம் ஆகியதை உணர்ந்து, சங்கர் உமாவிடம் “உமா உன் பாட்டி சொன்னதை மறந்துவிட்டாயா? எனக் கேட்டான். அவன் எதைச் சொல்கிறான் எனப் புரியாது பார்த்தவளுக்கு அங்கு இருந்த பால்ச்சொம்பையும், பழங்களையும் காட்டினான். உமாவும் சிரித்தபடியே எழுந்து, பாலையும் பழங்களையும் கொண்டுவந்தாள். சங்கர் சோபாவின் அமர்ந்தபடியே உமாவின் கரங்களிலிருந்து பாலையும், பழங்களையும் வாங்கிக்கொண்டு, அவளையும் தன்னோடு அனைத்துக்கொண்டான். உமாவின் கைகளிலிருந்த பாலை வாங்கி தனியே வைத்து விட்டு, தட்டில் இருந்த திராட்சை பழத்தை ஒவ்வோன்றாக எடுத்து உமாவின் வாயில் வைத்து, அவள் அதை சாப்பிடுமுன் தன் வாயால் பற்றிக்கொண்டு சிரித்தபடியே அவளுடன் இனைந்து சாப்பிட்டான். உமாவுடன் உல்லாசமாகப் பேசியபடியே சங்கர் கேட்டான் “உமா இப்போது உன் பயம் தெளிந்ததா?”என. உமாவும் எனக்கு உங்களிடம் பயம் இல்லை. ஆனால் என் பாட்டியும், என் பக்கத்து வீட்டுப் பெண்ணும் என்னிடம் சொன்ன விஷயங்கள் தான் என்னைப் பயம் கொள்ளச் செய்தது”என அவனைப் பார்த்துச் சொன்னாள். பேசிக்கொண்டே, சங்கர் உமாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு. கட்டிலில் அமர்ந்தான். உமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே “அப்படி என்ன சொல்லி அவர்கள் உன்னைப் பயம் கொள்ளச் செய்தார்கள்” எனவும் கேட்டான். உமாவும் தன்னையுமறியாமல் தன் தலையை அவனின் வலுவான தோளில் சாய்த்துக் கொண்டே சொல்லத் தொடங்கினாள். “பாட்டி இன்று இரவு என்னை இந்த அறைக்கு அழைத்து வரும் போது சொன்னான் நான் உங்களிடம் எந்த விஷயத்திற்கும் முரண்டு பிடிக்கக்கூடாதென்றும், நீங்கள் என் கணவரானதால், உங்களுக்கு என்னிடம் எல்லா உரிமைகளும் உண்டென்பதாலும், நீங்கள் என்னிடம் என்ன கேட்டாலும், உங்களை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசக்கூடாதென்றும், எனக்குப் பிடிக்காதென்று உங்களிடம் எப்போதும் சொல்லக்கூடாதென்றும், முக்கியமாக நான் உங்களுடன் இனி படுக்கையறையில் உங்கள் விருப்பப்படிதான் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். எனக்கு உடம்பு வலிக்கிறது என்றோ, உங்களின் விருப்பத்திற்கு இணயமாட்டேனென்றோ எதுவும் சொல்லக்கூடாது என்றும் திரும்பத்திரும்பச் சொல்லித்தான் இந்த அறைக்கு அழைத்து வந்தாள். நாளைக் காலையில் நீங்கள் வெளியேவரும்போது மிகவும் திருப்தியாக வரவேண்டுவதுதான் முக்கியமானது. எந்த வகையிலும் உங்களுக்கு என்னிடம் ஏமாற்றமோ, கோபமோ இருக்கக்கூடாதென்றும் சொல்லிவிட்டாள். இன்று நான் எந்த விதமாகியும் உங்களுக்கு கோபம் வரும்படி நடந்தால், இதுவே என் வாழ்க்கையைப் பாதிக்குமென்றும் சொன்னாள். ஆனால். எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை. இன்று நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்ப்பீர்கள், என்ன விஷயத்திற்காக் என்னிடம் கோபம் கொள்வீர்களென்றும் தெரியவில்லை. இன்று நீங்கள் என்னிடம் வருத்தப்படுவீர்களா அல்லது கோபப்படுவீர்களா? எனக் குழந்தைபோல் அவனிடம் கேட்டாள். அவளின் குழந்தைத்தனமான பேச்சைக் கேட்ட சங்கருக்கு உமா உடல்லளவில் பருவம் அடைந்துவிட்டாலும், இன்னும் இல்வாழ்க்கையைப் பற்றி அவளுக்குப்பலவிஷயங்கள் தெரியவில்லை. அவளாகத் தன்னிடம் எதைபற்றியும் கேட்காவிட்டாலும், நாளாக நாளாகத்தான் அவளைப் பக்குவப்படுத்தவேண்டும் என்றும் உணர்ந்து கொண்டான்.

அதனால் உமாவிடம் பிரியமாக “என் செல்லமே நம்முடைய வாழ்வு இன்றுதான் ஆரம்பித்திருக்கிறது. எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம். நான் உன்னை எந்த விதத்திலும் வருத்தப்படிவோ, மனச் சங்கடப்படவோ விட மாட்டேன். நாமிருவரும் நீண்ட காலம் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டு மிக மிக அனுசரணையாகவும், அன்யோன்யமாகவும் வாழ்வோம். அதனால் நீ என்னிடம் எப்பவும்போலவே உரிமையாகப் பழகு. நான் உனக்குக் கணவனென்றால், நீ எனக்கு மணைவிதான். உன்னுடைய விருப்பமே என் விருப்பம். நான் எதற்கும் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். இன்றுபோல் நாம் எல்லா நாளும் இனைந்து, சந்தோஷமாகவே இருப்போம். இனி உன் பாட்டி சொன்னதையோ, அல்லது உன் பக்கத்துவீட்டுப் பெண் சொன்னதையோ நினைத்துப் பயப்பட வேண்டாம்.” என மிகவும் இதமாகச் சொன்னான். அப்படிச் சொல்லும்போது அவனின் கைகள் உமாவின் கன்னங்களையும், வதனத்தையும், மிருதுவான செம்பவழ உதடுகளையும் ஆசையுடன் தடவிக்கொண்டுதான் இருந்தன. உமாவிற்கும் அவனின் அனைப்பும், பரிவும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உமாவும் தன் தலையை அவனின் மடியில் வைத்துக்கொண்டு ஒரு குழந்தைபோல அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். தன்னையுமறியாமல், நாள் பூராவும் திருமண வைபவங்களின் காரணமாக ஏற்பட்ட அசதியால், உமாவின் கண்களும் உறக்கம் கொண்டது. மடியில் படுத்தபடியே தன்னையுமறியாது உறக்கத்தில் ஆழ்ந்த உமாவை சங்கர் பரிவுடன் தன் அருகில் உள்ள தலையனையில் சரியாகப் படுக்க வைத்தான். வாலிபத்தின் தூண்டலால், அவனின் உணர்ச்சிகளைத் தூண்டிய ஆசையைத் தன்னுள் அடக்கிக்கொண்டு, தானும் விளக்கை அணைத்துவிட்டு, உமாவை தன் தோளில் சாய்த்துக்கொண்டபடியே, ஆசையுடன் அவளின் தாமரை முகத்தைப் பார்த்து பரவசப்பட்டவன், அவளின் உறக்கம் கலையாதவண்ணம், அவளின் உதடுகளை ஒருமுறை மிருதுவாக தன் உதடுகளால் முத்தமிட்டுவிட்டு. அவனும் சந்தோஷமாக உறங்க முற்பட்டான்.

அவன் அன்று சாதுவாக உறங்க முயற்சி செய்தாலும், அவனின் இளமையின் உந்துதல்களை அவனால் சுலபத்தில் கட்டுப் படுத்த இயலவில்லை. அதே சமயம் அவனுக்குள் உமாவின் மீது எந்த வருத்தமோ, மனத்தாங்களோ இல்லை. உமாவின் குழந்தை முகமும், அவளின் அறியாமையும் அவனால் உணர முடிந்தது. உமாவின் குழந்தைப் பருவத்தில் அவளிடம் அன்பு செலுத்த தாத்தா பாட்டியைத் தவிரயாருமல்லாததும், .வளர்ந்த பருவத்தில் அவளின் புரியாத கேள்விகளுக்கு தக்க விளக்கமோ, அவளுக்குத் தெரியவேண்டிய பருவத்திற்கான அறிவுரைகளோ எடுத்துச் சொல்லக்கூட யாருமில்லாத சூழ்நிலையையும் அவன் புரிந்து கொண்டான். உமாவிற்கு வாழ்க்கையின் தத்துவத்தையும், இன்பமான இல்லற வாழ்வைப் பற்றியும் தாந்தான் அவளுக்குப் பக்குவமாகச் சொல்லி, அவளின் மனதில் இருக்கும் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். அவளின் பாட்டியும், பக்கத்து வீட்டுப் பெண்ணும் உமாவின் மனதில்,தங்களின் அறியாமையால், விதைத்த பயத்தையும் தாந்தான் நிதானமாக அவளுக்குப் புரியும்படிச் சொல்லித் தெளியவைக்க வேண்டுமென்றும் புரிந்து கொண்டான். தான் இதுவரை அவளின் பள்ளிப் பாடங்களுக்குத்தான் ஆசிரியராக இருந்து வந்தான். இன்று முதல் அவளின் இல்லற இன்ப வாழ்க்கைக்கும் அவளைத் தயார் படுத்தும் பொறுப்பும் கடமையும் தனக்கு உள்ளது என்றும் தெரிந்து கொண்டான். தங்களுடைய இல்லறம் இன்று ஒரு நாளுடன் முடியப்போவது இல்லை. இன்னும் பல ஆண்டுகள் தங்களின் இன்ப வாழ்வு தங்களின் கைகளில்தான் இருக்கிறது. என்னால் தினமும் உமாவுடன் இன்பமாக இருக்க முடியும். தான் பொறுமையாக இருந்து உமாவையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் மனதிற்குள் உறுதியும் எடுத்துக் கொண்டான். இத்தகைய எண்ணங்கள் அவனின் மனதில் தோன்றியபின், அவனின் மனமும் திடப்பட்டது. ஆனால் உறக்கம் மட்டும் வரவில்லை. அதனால், தன் தோளில் தலை வைத்து, தன்னை அனைத்துக் கொண்டு தூங்கும் உமாவின் அழகிய முகத்தைப் பார்த்துக் கொண்டே, தன் கைகளால் அவளின் உடலை மிகவும் மெதுவாகத் தடவிக்கொண்டே இருந்தான். அவ்வப்போது தன் அன்பு முத்திரைகளையும் அந்த தாமரை முகத்தில் பதித்துக் கொண்டும் இருந்தான். உறக்கத்தில் இருந்த உமாவின் முகத்திலும், அவனுடைய அன்பு முத்தங்கள் பதிந்தபோது, அவளின் வதனத்தில் தெரிந்த நாணமும், உள் உணர்ச்சிகளால் அவளின் கன்னத்தில் படர்ந்த செம்மையும் அவனுக்கும் ஆனந்தமாக இருந்தது. ஒரிரு முறை உமாவும் தன் கண்களைத் திறந்து அவனை ஆசையுடன் பார்த்து சிரித்துக் கொண்டாள். சங்கரும் அவளின் மகிழ்ச்சியைக் கண்டு, “கள்ளி பொய்த் தூக்கமா?” எனச் செல்லமாகச் சொல்லி அவளைத் தன்னுடன் இருக்கமாக அனைத்துக் கொண்டு அவளை நிம்மதியாக தூங்க வைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக சங்கரும் நித்திரா தேவியிடம் அடைக்களம் புகுந்தான். இரவு முழுவதும் அவனின் கைகள் உமாவைச் சுற்றிக் கொண்டும் இருந்தது.

நித்திராதேவியிடம் சங்கர் பூராவும் சிக்க வில்லை. அவ்வப்போது அவனின் உறக்கம் கலைந்து, தன் கண்களால் உமாவின் அழகை இரசித்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சி மேலிட்டு, உமாவையும் தன்னுடன் சேர்த்து இருக்கியும் அனைத்துக்கொண்டான். அதனால் உமாவின் உறக்கமும் கலைந்தது. அவனின் அனைப்புக்குள்ளே தானும் இனைந்து அவனின் உடலுடன் ஒட்டிக்கொண்டாள். உமாவின் உறக்கம் கலையும்போதெல்லாம் அவளை பரிவுடன் கன்னங்களைத் தட்டித் தட்டித் தூங்கப்பன்னினான். உமாவும் தன் வழக்கம்போல் விடியற்களையிலேலே முழித்துக் கொண்டான். தன்னை அனைத்துக் கொண்டே உறங்கும் சங்கரை பரவசத்துடன் பார்த்தாள். அவளுக்கு தங்களுடைய முதலிரவு சங்கருக்குப் பூரண திருப்தியளிக்கவில்லை என்றும், அதற்குத் தன் புரியாத பயம்தான் காரணமென்றும் உணர்ந்து மனதிற்குள் ஒரு சங்கடமும் பட்டாள். தன்னுடைய அறியாமையினால், சங்கரின் முதல் நாள் இன்பங்கள் நிறைவறாமல் போனது பற்றியும் வருத்தப்பட்டாள். அதனால் அவனிடம் மன்னிப்பு கேட்கும் வகையாக, உறக்கத்திலிருந்த சங்கரின் அழகு முகத்தில் புன்னகையுடன் விகசித்துக் கொண்டிருந்த உறுதியானதும் மென்மையானதுமான உதடுகளில் தன்னுடைய அன்பு முத்தத்தைப் பதித்தாள். அப்படிப் பதித்தபோதே மெதுவாக “என் கண்ணாளரே நான் உங்களுடன் நேற்று நடந்துகொண்டது தப்புத்தான். இன்று உங்களின் ஆசைபடியே நான் இருக்க முயற்சிக்கிறேன். என் மீது கோபம் கொள்ளாதீர்கள்” என்றும் மிக மிக மென்மையாகச் சொல்லிக் கொண்டாள். உண்மையாகவே உறக்கமில்லாது தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்த சங்கரும் தன் அன்பு விழிகளைத் திறந்து “என்னம்மா உன் உறக்கம் கலைந்துவிட்டதா? என்னடம் என்ன சொன்னாய்? நான் சிறிதுநேரம் உறங்கிவிட்டேன். மறுபடியும் சொல்” என ஆசையுடன் கேட்டான். சங்கரின் திருட்டுத்தனத்தை உணர்ந்த உமாவோ அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என வெட்கப்பட்டாள். காலைநேரம் நெருங்கிவிட்டதால் சங்கரும் உமாவைமேலும் சோதிக்காது, “என் கண்ணம்மா, எனக்கு எந்த விதமான ஏமாற்றமோ, வருத்தமோ இல்லை. ஆனால், இன்று நீயே சொன்னபடி நாமிருவரும் சந்தோஷமாகவே இருக்கலாம். எப்போதும் உன் விருப்பம்தான் என்விருப்பமும் ஆகும். நீ இப்போழுது கீழே போகும்போது கொஞ்சம் அசதியுடனும், முகத்தில் வெட்கச் சிரிப்புடனும் போ. உன்னைப் பார்த்ததும் உன் பாட்டி உன்னிடம் ஒன்றும் கேட்காமலேயே, நான் நேற்று இரவு உன்னுடன் சந்தோஷமாக இருந்தேன் எனப் புரிந்துகொண்டு அவர்களும் சந்தோஷமாகவே இருப்பார்கள். “ எனச் சொல்லியபடியே, உமாவைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக்கொண்டு, அப்படியேச் சிறிது நேரம் படுத்துக்கொண்டே, அவளைக் காதலுடன் பார்த்துச் சிரித்தான். உமாவும் அவ்னின் சந்தோஷத்தைக் கெடுக்காமல், அவனுடன் இனைந்தே படுத்துக்கொண்டிருந்தாள். சில வினாடிகளில் மெதுவாக பாட்டி அறையின் கதவை மிக சன்னமாகத் தட்டி, மிகவும் மெதுவான குரலில் “அம்மாடி உமா முழிச்சிக்கோ. சீக்கிரம் விடிந்துவிடும். மற்றவர்கள் பார்க்கும்முன் நீ எண்ணை ஸ்நாநம் செய்ய வேண்டும். சீக்கிரம் எழுந்து வாம்மா” எனக் குரலும் கொடுத்தாள். பாட்டியின் குரல் கேட்டதும், உமா சங்கரின் அனைப்பிலிருந்து விடுபட முயன்றாள். ஆனால் சங்கரோ அவளைவிடாது, இன்னும் இருக்கிக்கொண்டு, அவளின் தலையைக் கொஞ்சம் கலைத்துவிட்டு, அவளின் கன்னங்களையும் சிறிது அழுத்தித் தேய்த்துவிட்டான். உமா அவனிடம் என்னை விடுங்கள். இப்போ என்னை என்ன பண்ணூகிறீர்கள்” என மெதுவாக்க் கேட்டாள். சங்கர் சிரித்தபடியே , நாமிருவரும் சந்தோஷமாக இருந்தோம் என உன் பாட்டி நம்ப வேண்டாமா? அதற்குத்தான் இப்படி. என்றபடியே, அவளின் உதடுகளில் தன் ஆசையெல்லாம் வெளிப்பட அழுத்தமாக ஒருமுறை முத்தமிட்டு, கன்னங்களையும் இலேசாகக் கடித்தும் விட்டான். அவனின் செயல் உமாவிற்கும் சுவையாக இருந்தது. அவளும் அவனிடம் ஆசையாக ஒரு முறை அவனின் கழுத்தைத் தன் கைகளால் கட்டிக்கொண்டுவிட்டு, பிறகு மெதுவாக அவனிடம் “வரட்டுமா” எனக் கேட்டாள். சங்கரும் சந்தோஷமாகச் சிரித்தபடியே “அவளின் கைகளை அழுத்தமாகப் பிடித்துவிட்டு, அவளைப் போக விட்டான். உமாவும் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியுடன் அறையின் கதவைத்திறந்தாள். வாசற்படியிலிருந்தே அவளைப் பார்த்த பாட்டிக்கும் புரிந்தது, அதனால் அவளும் உமாவை ஆசையுடன் தழுவியபடியே “உமா செல்லமே நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்களா” எனக் கேட்டாள். அதற்கு உமாவும் வெட்கத்துடன், “என்ன பாட்டி நீ இப்படியெல்லாம் கேட்கிறாய். எனக்கு பதில் சொல்லக் கூச்சமாக இருக்காதா?” என சிணுங்கினாள். “இது போதுமடி, என் கவலையெல்லாம் பறந்தது.” எனக் கூறிக்கொண்டே அவளைத் தன்னுடன் கீழே அழைத்துச் சென்றாள்..

உமாவுடன் கீழே சென்ற பாட்டி, உடனடியாக, உமாவிற்கு எண்ணை ஸ்நாநம் செய்ய ஏற்பாடிகளைச் செய்யலானாள். உமாவும் அதிக நேரம் எடுக்காமல், சீக்கிரமாகவே குளித்து முடித்து வெளியே வந்து பாட்டி எடுத்து வைத்திருந்த உடைகள அணிந்து கொண்டு, ஸ்வாமி உள்ளுக்குச் சென்று விளக்கேற்றி, பூக்கள் போட்டு, பூஜை செய்து மனதிற்குள் தானும் சங்கரும் எப்போழுதும், எல்லா நாட்களிலும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு, ஸ்வாமியை நமஸ்காரம் செய்தாள். ஸ்வாமி உள்ளிலிருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்த சங்கரின் தாத்தா, அப்பா, தன்னுடைய தாத்தா ஆகியோரைப் பார்த்தவுடன், வெட்கத்தால் தலை குனிந்து நின்றாள். அப்போதுதான் குளித்து முடித்து, பாட்டி சொன்னபடியே ஸ்வாமி விளக்கேற்றி, நமஸ்காரம் செய்துவிட்டு வந்ததால், ஈரத் தலைக்குக் கட்டிய துண்டோடு, முகத்தில் பூசிய மஞ்சளும் கன்னங்களில் சிறு சிவப்பு வண்ணம் காட்ட, மிகவும் சௌந்தர்யவதியாகவே நின்றுருந்தாள். அவளின் பூரித்த முகத்தையும், வதனத்தில் விளையாடிய வெட்கநகையையும் கண்ட பெரியவர்களின் மனமும் மகிழ்ச்சியால் பிரகாசித்தது.. பாட்டியும் உள்ளேயிருந்து “உமா, இங்கே வந்து உன் மாமனார், அவரின் தோப்பனார், உன் தாத்தா எல்லாருக்கும் காப்பி கொண்டுபோய் கொடு. அப்படியே அவர்களுக்கும் ஒரு நமஸ்காரம் செய்துக்கோ.” எனக் குரல் கொடுத்தாள். அப்படியே அவர்களுக்கு காப்பி கொண்டுவந்த உமா, அவர்களை நமஸ்காரம் செய்ய குனிந்தாள். அப்போது சங்கரின் தாத்தா “உமா அதைல்லாம் வேண்டாம். சும்மாச்சும்மா நமஸ்காரம் செய்யாதே. எங்களின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும்” என அன்பாகச் சொல்லிவிட்டு, “நீ மேலே போல் சங்கரை எழுப்பு. நீங்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில், கோவில் குளத்திற்குப் போய் பாலிகை கரைக்க வேண்டும். அவனையும் என்ணை ஸ்நாநம் செய்யச் சொல்” என்று சொல்லி, அவளை சங்கரின் அறைக்கு அனுப்பினார்.

உமா தன் மனதிற்குள், சங்கரின் தாத்தா தன் மீதும், தன் பேரன்மீதும் எத்தனை பாசம் கொண்டுள்ளார் எனத் தெரிந்து, தானும் தன் வாழ்நாள் பூராவும் அவரிடம் மிகவும் மரியாதையாகவும், பிரியமாகவும் இருக்க வேண்டுமென்று உறுதிகொண்டாள். தாத்தா சொல்லியபடியே, மெதுவாக சங்கரின் அறையை நோக்கி சென்றாள். தாளிடாமலிருந்த அறைக் கதவை மெல்லத் திறந்து, உள்ளே சென்ற உமா, கட்டிலில் உறக்கம் கலையாது ப்டுத்துக் கொண்டிருந்த சங்கரின் முகத்தை மிகவும் ஆசையோடு பார்த்தாள். தனக்குள் “பாவம் இராத்திரி வெகு நேரம் உறங்காமல், இப்போதுதான் அசதியுடன் உறங்குபவரை எப்படி நான் எழுப்ப முடியும்” என நினைத்தபடியே, மெதுவாக அவனுருகில் கட்டிலில் அமர்ந்தாள். சங்கரின் முன் நெற்றியில் சுருண்டு விழுந்திருந்த முடிகற்றைத் தன் கைகளால் மெதுவாக ஒரு முறை சுருட்டி விட்டாள். உமாவின் கைகள் பட்டவுடன் கண் முழித்த சங்கர் தன்னருகில் எண்ணைஸ்நாநம் செய்து, ஈரத்தலையை துவட்டி, நுனியில் ஒரு முடிச்சோடு, கொஞ்சம் மல்லிகைப்பூவையும் வைத்துக் கொண்டு, முகத்தில் கஸ்தூரி மஞ்சள் நிறத்துடன், அவளின் வதனத்தில் படர்ந்த நாணச்சிவப்பும் சேர்த்து அழகெல்லாம் மின்ன, தன்னருகில் பதுமையென அமர்ந்திருந்த உமாவை, ஆசையுடன் தன் இரு கைகளால் அணைத்துக் கொண்டான். அப்படியே “இன்று முழுவதும் உனக்கு இன்பமாக இருக்கட்டும்” என அன்புடன் வாழ்த்தி, அவளைப் பார்த்து சிரித்தான். அவனின் வாழ்த்திலிருந்த உள்ளர்த்தங்களை புரிந்த உமாவும், “சங்கரின் தோளில் தன் தலையை வைத்துக்கொண்டே “உங்களுடன் இருக்கும் ஒவ்வோருநாளும் எனக்கு இன்பமான நாட்கள்தான். உங்களுக்கும் என்றும் இனிய நாளாக இருக்க என் வாழ்த்துக்கள்” எனக் காதலோடு சொன்னாள். உமாவின் வார்த்தைகளினால் இன்று முதல் தங்களுக்குள் ஏற்படக்கூடிய சுகமான அனுபவங்களும் அவனின் மனதில் நடனமாடின. உமாவை அனைத்தபடியே “என் செல்லத்திற்கு எந்த விதமான குறைகளும் இல்லாது நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன்”எனப் பிரியமுடன் சொல்லிவிட்டு, அவனும் எழுந்தான். உமாவும் சங்கரின் தாத்தா சொன்னதை சங்கரிடம் சொல்லி, அவனை சீக்கிரம் எண்ணை ஸ்நாநம் செய்துமுடித்து, தயாராக இருக்க வேண்டிக்கொண்டு.கீழேச் சென்றாள். குறிப்பிட்ட நேரத்தில், உமா, சங்கர் இருவரும், தங்களின் வீட்டுப் பெரியவர்களோடு, கோவில் குளத்தில் பாலிகையைக் கரைத்து, தங்களின் வாழ்வு என்றும் சந்தோஷமாக இருக்கவேண்டிக்கொண்டார்கள். பிறகு கோவிலுக்குச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்து வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள். அன்று பகல் சாப்பாட்டிற்கே எல்லாரும் சங்கரின் தாத்தா வீட்டிற்கு வந்து விட்டார்கள். உமாவின் பாட்டியும், சம்மந்திமார்கள் சாப்பிட, கட்டுச்சாதம், வகைகளைச் செய்து. சீர் வகை பட்சணங்கள், மற்ற சீர் வகைகளை எல்லாம் கிரமப்படி கொண்டு வந்து சபையில் வைத்திருந்தாள். அன்று முழுவதும் இரு வீட்டார்களும், அவர்களுக்கும் பரிகாசமும், உபசாரமும் செய்து கொண்டு, மிக மகழ்ச்சியுடன் இருந்தார்கள்.

8. சங்கமமான உணர்வுகள்

காலையில் உமா-சங்கர் இருவரும் கோவிலில் பாலிகைகளை தாத்தா பாட்டியுடன் கோவில் குளத்தில் கறைத்துவிட்டபின், எல்லாருமாக ஒரு நல்ல வேளையில் உமாவைக் கூட்டிக் கொண்டு சங்கரின் இல்லத்திற்கு வந்தார்கள். உமாவின் பாட்டி முன்னேற்பாடாக எல்லாருக்கும் உணவு, மற்ற சீர் வரிசைகளை சங்கரின் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து விட்டார்கள். அதனால் எல்லாரும் வந்தவுடன். சம்மந்தி மரியாதை முடிந்து, பகலுணவும் முடிந்தது. பாட்டி பார்வதி, சங்கரின் பாட்டி நாமகிரியுடன், தன்னுடைய வீட்டிற்குச் சென்று விட்டாள். நாமகிரி பாட்டி போகுமுன் உமாவிடம் “உமா நீ மூன்று மணிக்கு காப்பி டிகாஷன் போட்டுவிட்டு, பாலையும் காய்ச்சி வை. நான் வந்து எல்லாருக்கும் காப்பி கலங்கு கொடுக்கிறேன்: எனச்சொல்லிவிட்டுப் போனாள். வீட்டில் தாத்தா, சங்கர், உமாவைத் தவிர மற்றவர்களெல்லாம் வெளியேச் சென்று விட்டார்கள். சங்கர் மாடியில் தன்னுடைய அறையில் இருந்து கொண்டு போழுது போகாமலொரு புஸ்தகத்தை எடுத்து படிக்கலானான். ஆனால் கவனம் இல்லை. அவன் மனமெல்லாம் இப்போ உமா எங்கே இருப்பாள் என்ன பன்னுவாளென்றுதான் யோசித்துக் கொண்டிருந்தது. கீழே இருந்த தாத்தாவும் பேரனின் சங்கடத்தைப் புரிந்து கொண்டார். அதனால் அவர் “உமா, கொஞ்சம் குடிக்கத் தூத்தம் கொண்டுவாம்மா: எனவும் குரல் கொடுத்தார். உமாவோ தாத்தாவின் குரல் கேட்டவுடன், மிகவும் மரியாதையாக ஒரு சின்னச் சொம்பில் குடிக்கத்தூத்தம் எடுத்துவந்து தாத்தாவிடம் நீட்டினாள். அதற்குத் தாத்தா :எனக்கு வேண்டாம். மேலே சங்கருக்குக்தான் தாகமாயிக்காம். நீ அங்கேபோய் அவனுக்குக் கொடு: எனக் குறும்பாகச் சொல்லி சிரித்தார். தாத்தாவின் குரலில் இருந்த குறும்பை உமா உணரவில்லை. அவள் தாத்தாவிடம் “நீங்கள்தானே என்னைக் கூப்பிட்டு தாகத்திற்கு குடிக்கத் தூத்தம் கொண்டுவா என்றீர்கள். இப்போ அவருக்குப் போய் கொடு என்றால் எப்படி” எனவும் விபரமறியாத குழந்தை போல் கேட்டாள். அதற்கும் தாத்தா சிரித்துக் கொண்டே ‘அது இப்போ அப்படித்தான் இருக்கும். சங்கர் கேட்கமாட்டான். அவனுக்குப் பதிலாக இங்கே யாராவது உன்னைக் கூப்பிடுவோம். நீதான் ;புரிந்து கொண்டு சங்கரைக் கவனிக்கவேண்டுமென்றும்” சொல்லிவிட்டு, அவள. மாடிக்குப் போகும்படி வழியும் காட்டினார். சங்கரின் தாத்தா சொன்னது புரியாமல் உமாவும் மாடிக்குப் போய் சங்கரிடம் தான் கொண்டு போன தூத்தத் சொம்பை நீட்டினாள். அதைப் பார்த்த சிரித்தபடியே “இது என்ன. யார் கேட்டார்கள் இப்போ” எனவும் கேட்டான். அவனின் முகத்தில் இருந்த குறும்பைப் பார்த்த உமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. கீழே தாத்தாதான் சொன்னார் உங்களுக்குத் தாகமாயிருக்கிறது. குடிக்கத் தூத்தம் கொண்டுபோ என்றார். வந்தால் நீங்கள் இப்போ யார் கேட்டா எனக் கேட்டால், நான் ஏன்ன சொல்வது, நீங்களும் தாத்தாவும் என்னைக் கேலி பண்ணுகிறீர்களா” எனவும் கேட்டாள். அவளின் குரலிலிருந்து அவளால் தங்கள் இருவருடைய குறும்பையும் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தான். அதனால் மேலும் அவளைச் சங்கடப்படுத்தாமல் :தாத்தா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். எனக்குத்தான் தாகமாயிருக்கும் எனச் சொல்லிக் கொண்டே அவளின் கையிலிருந்த சொம்பை வாங்கிக் கீழே வைத்தான். பின் அவளையும் தன்னுடன் இழுத்து அனைத்துக் கொண்டு “ஆமாம் தாத்தா சொன்னபிந்தான் என் ஞாபகம் வந்ததா. ஏதடா மாடியில் ஒருத்தன் வளையில் அகப்பட்ட எலியைப் போல சுற்றிக் கொண்டிருக்கிறானே, அவனுக்கு என்னாச்சு ஏதாச்சு எனப் பார்க்கனும்னு . உனக்குத் தோனலையா? எனவும் கேட்டான். அதற்கு உமா மெதுவாக :நானெப்படி பகலில் உங்களைத் தேடி மாடிக்கு வரமுடியும். கீழே பாட்டி போகும்பொது மூனு மணிக்கு காப்பி போடச் சொல்லிவிட்டுப் போனார். இப்போ மணி என்னாச்சு. நான் கீழே போக வேண்டாமா? எனவும் சொன்னாள். அதற்கு சங்கர் “நீமெதுவாகவே போகலாம். கீழே எல்லாவற்றையும் என் தாத்தா பார்த்துக் கொள்வார். அவருக்கு என் மீது பாசம் அதிகம். என் மனதில் என்ன தோணும் என்பதும் அவருக்குச் தெரியும். நான் உன்னைப்பார்க்க ஏங்கியது தெரிந்துதான் அவர் உன்னை இங்கு அனுப்பினார்” எனவும் சொல்லிக் கொண்டே, அவளைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டான். பிறகு கேட்டான் “உமா உனக்கு இந்த என்னுடைய வீடு பிடித்திருக்கிறதா? என. அதற்கு உமா “ஏன் என்னை இன்னும் பிரித்துப் பார்க்கிறீர்கள். இனிமேல் உங்களுடையது எல்லாமே என்னுடையதுதானே. அப்படியிருக்க இந்த வீடு மட்டும் என்னுடையது இல்லையா?’ எனவும் பதிலாகச் சொல்லி, அவனின் தோளில் தன்னுடைய தலையைச் சாய்த்துக் கொண்டாள். அப்படியே இருந்தவளின் காதில் “அப்போ இன்று எனக்கு முழு விருந்து கிடைக்குமா?’ எனவும் குறும்பாக்க் கேட்டான். முதலில் அவனின் குரலிலிருந்த குறும்பைஉமா கவனிக்க வில்லை. ஆனால் சிறிது நேரம் சென்றபின் அவனின் கேள்வியின் உட்கருத்து என்னவாக இருக்கும் எனவும் யோசித்தாள். மெதுவாகப் புரிந்த வுடன், அவளுக்கு நாணமிகுந்து, எப்படி தன்னுடைய சாதகமான பதிலைச் சொல்லுவது எனப் புரியாது தயங்கினாள். மெதுவாக அவனின் காதில் சொன்னாள் “உங்களின் பசியைப் பொறுத்து, உங்களின் விருந்தும் இருக்கும்: எனச் சொல்லி, வெட்கமிகுதியால் அவனின் மார்பில் தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளின் பதிலில் இருந்த சுவையும், இனிமையும் அவனையும் பற்றிக் கொண்டது. அன்பு மிகுதியால் அவளைத் தன்னுடன் மேலும் இறுக்கிக் கட்டிக் கொண்டு”நாம் ஏன் இரவு வரைக் காத்திருக்க வேண்டும்” எனவும் சொல்ல, அவள் சிரித்துக் கொண்டே “எல்லாம் காலக்கிரமப்படிதான் இருக்க வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே அவனின் அனைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கீழே போக எழுந்தாள். அப்போது வாசலில் பாட்டி இருவரின் குரலும் கேட்க, அவள் எப்படி அவர்கள் எதிரில் மாடியிலிருந்து கீழே போவதுஎனவும் தயங்கினாள். அதைப் புரிந்து கொண்ட சங்கர் சிரித்தபடியே அவளை தன்னுடைய அறையின் மற்றோரு கதவைத் திறந்து “நேரே போனால், நம் வீட்டுத் தோட்டம் வரும். அது வழியாக நீ சமையலறைக்குள் சென்று விடு: எனச் சொல்லி, அவளின் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்து அனுப்பினான். அவளும் தன்னுடைய கன்னங்களைத் துடைத்துக் கொண்டே சிரிப்புடன் கீழே சென்றாள்.

9. இல்லறம் நல்லதாகியது

சங்கர், உமாவின் திருமண இரண்டாவது இரவுதான் அவர்களுக்குள் முதலிரவாகியது. இருவருக்குள் ஏற்பட்ட முதலிரவு உணர்ச்சிகளும் அவர்களின் புணர்ச்சியும் சொல்லில் உரைக்கமுடியாத ஒரு அற்புத அனுபவமாகியது. இரு உடல்களும் ஒரு, உள்ளமும் அன்பாலும், மனத்திருப்தியாலும், பூரிப்படைந்தன.உள்ளங்கள் மட்டுமின்றி உடலாலும் ஒன்றுபட்டு இளமைக் கனவுகள் நனவாகி, அன்று தொடங்கிய அவர்களின் இன்ப வாழ்வு, காலச் சக்கரத்தோடு ஓடலாயின. உற்றாரும், ஊர் மக்களும் பார்த்து பொறாமைப் படுமளவிற்கு இருவருக்குள் ஒரு புரிதலும், விட்டுக்கொடுத்தலும், அன்யோன்யமும் நாளுக்கு நாள் வளர்ந்து, இல்லறம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருவரும் வாழ்ந்தார்கள். அவர்களின் அன்பிற்கும், திருப்தியான வாழ்க்கைக்கும் அடையாளமாக, சங்கரைப் போல் ஒரு பிள்ளை, உமாவைப்போல் ஒர் பெண் என அவர்களின் குடும்பமும் திகழ்ந்தது. உமாவோ ஒரு ஆதரிச மனைவியாக, சங்கரின் தாத்தா பாட்டிக்கு ஒரு அன்புப் பேத்தியாக, சங்கரின் அப்பாவிற்கு ஒரு மருமகளின் உறவில் அன்பு மகளாக, அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு அருமையான தாயாகவும் பலபல உறவுகளில் வாழ்ந்தாள். சங்கரும் தன்னுடைய லட்சியப்படியே, உமாவை ஒரு நல்ல சமூக பிரக்ணையுடன் தான் வாழும் இந்த சமூகத்திற்கு தன்னுடைய பங்களிப்பை அளிக்கும் வகையில், அவளை ஒரு பட்டதாரியாக்கியது மட்டுமல்லாது, தன்னுடைய தாயாரின் ஞாபகமாக, வாழ்வில் சரிவில் வாழும் ஆதரவற்றவர்களுக்காகவும், வாழ்வில் ஊணமுற்றவர்களுக்காகவும் ஒரு காப்பகம் நிறுவி, அதை உமாவின் முழு பொறுப்பில் நல்ல நிறுவனமாக நடத்தி வந்தான். நாளடைவில் உமாவும் அந்த நிறுவனத்தை முழு ஈடுபாட்டுடனும் நிர்வகித்தாள். குழந்தைகள் இருவரும் நல்ல விதமாக வளர்ந்து, அவர்களுக்கென்று சமூகத்தில் ஒரு பொறுப்பும், அந்தஸ்த்தும் பெற்று வளர்ந்தார்கள். உரிய பருவத்தில் அவர்களிருவருக்கும், சங்கர் உமா தங்களுடைய கடமைகளை முடித்து, இருவருக்கும் நல்ல இல்லறவாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் தக்க வயதில் வாரிசுகளும் உண்டாயின.

அலுவலகத்தில் வயது காரணமாக சங்கர் ஓய்வு பெற்றாலும், அவனின் அனுபவமும், நேர்மையான நிர்வாகத்திறனும், சங்கரின் மேலதிகாரிகளுக்கு அவனின் சேவை மிகவும் தேவையாக இருந்தது அதனால், அவன் ஓய்வு பெற்ற இரு மாதங்களுக்குள், ஒரு நாள் அவனைத் தேடி வந்து, தங்களின் நிறுவனத்திற்கு அவனின் உதவியும், ஆலோசனைகளும் தேவையென்று சொல்லி, அவனை அவன் பணி செய்த நிர்வாகத்திலேயே, அவனுக்காக ஒரு . “உயர்ந்த அந்தஸ்த்தில் “முதன்மை நிர்வாக ஆலோசகர்” என்னும் ஒரு பதவியில் அவனைப் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அதிகாரிகள் வந்தார்கள். உமாவிற்கு சங்கர் இனியும் வேலை செய்யவேண்டாம், ஓய்வுபெற்றபின் அமைதியாக குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றுதான் விரும்பினாள். ஆனால், சங்கரோ தன் மதிப்பு தெரிந்து, தான் அந்த நிறுவனத்தில் உண்மையாக உழைத்த்தின் காரணமாக, மீண்டும் ஒரு உயர் பதவியில் தன்னை அமர்த்த அவர்கள் முன்வந்து, அது விஷயமாகத் தன்னைத் தேடிவந்தவர்களுக்கு, மனம் வருந்தும் வகையில் மறுக்க விரும்பவில்லை. அதனால் அவன் உமாவை பார்த்து, “உமா என்னை வளர்த்த நிறுவனத்திற்கு என் கடமையை நான் செய்யவேண்டும். அவர்கள் என்னிடம் கொண்ட நம்பிக்கைக்கு எந்த மாசும் வரக்கூடாது. இந்த பதவி என்னை மேலும் அனுபவமிக்கவனாக மாற்றும். நாம் மேலும் பணியில் சேர்ந்து அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய். உன் விருப்பம் என்னசொல்” எனக் கேட்டான். சங்கரின் மனதைப் புரிந்து கொண்ட உமா, அவனுக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. “உங்களின் விருப்பமே என் விருப்பம்” என ஒரே வார்த்தையில் தன் ஒப்பூதலை தெரிவித்து விட்டாள். வந்தவர்களுக்கு, மிகவும் சந்தோஷம். அவர்கள் சங்கரிடமும், உமாவிடமும் “உங்களின் சம்மத்த்திற்கு நம்முடைய நிறுவனம் என்றேன்றும் நன்றியோடு உங்களுக்குத் தேவேயான எல்லா வசதிகளையும் அளிக்கும். உங்களின் கௌரமும் காப்பாற்றப்படும்” எனச் சொல்லி மனமகிழ்ச்சியோடு சென்றார்கள். சங்கரும் தன் புதிய பொறுப்பை மிக்க கவனமாக நிறைவேற்றினான்.

10. சூறாவளிக் காற்றாக வந்த மரணச்செய்தி

ஒருவன் சந்தோஷமாக இருந்தால், அவனின் அக்கம்பக்கத்தாருக்கும், உற்றார் ஊரவினருக்கும் மட்டுமல்ல, விதி தேவனுக்கும் பொறுக்கவில்லை போல. சங்கர் உமாவின் அன்பான இல்லறவாழ்வில் ஒரு இடையூறும் வரவேண்டியது காலதேவனின் எண்ணம்போல் இருக்கவேண்டும். ஒருமுறை சங்கர் தன் புதிய அலுவல் விஷயமாக மும்பைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவன் சென்ற விமானபயணத்தில், அவன் கூட காலதேவனும் சென்றான். மும்பையை அடைய வேண்டிய நேரத்திற்கு சிறிது முன் அந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் சென்ற பயணிகள் அத்தனைபேரும் அடையாளம் காணமுடியாதபடி உடல்கள் சிதறபலபக்கங்களியும் தூக்கி எறியப்பட்டார்கள். அந்தப் பயணிகளில் சங்கரும் ஒருவன்.

அந்த துக்கமான செய்தியை சங்கரின் மும்பை அலுவலக அதிகாரிகள் சங்கரின் வீட்டிற்குப் போன் மூலம் தெரியப்படுத்தினர். அப்போது வீட்டில் சங்கரின் மகனும், பெண்ணும் இருந்தபோதிலும், போனை உமாவே எடுத்தாள். அவளின் செவிகளில் ஒரு பேரிடியாக செய்தி வந்தது. காதில் விழுந்த இடியைத் தொடர்ந்து, “ஐயோ, என்னை விட்டுப் போய்விட்டீர்களா. இருக்காது, இது பொய்தான். நான் நம்பமாட்டேன்” எனப் பெரியதாக அலறியபடியே தன் ஊணர்விழந்தாள். போனில் என்ன செய்தி உமாவை அதிர்ச்சியடையச் செய்தது” எனப் புரியாமல் சங்கரின் மகனும், மகளும் பதறியபடியே உமா கீழே போட்ட போனை எடுத்து, எதிரிலிருந்தவர்களிடம் விஷயம் என்னவென்று விசாரிக்கலானார்கள். விஷயத்தைக் கேட்டவுடன் அவர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. கொஞ்ச நேரம் அவர்களுக்குத் தாங்கள் கேட்ட செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயத்தில் தன்னுணர்வு இழந்து வெட்டிப் போட்ட சிலைபோல் விழுந்து கிடந்த உமாவிற்கும் என்ன ஆறுதல் சொல்வது, அவளை எப்படித் தேற்றுவது எனப் புரியாமல் துக்கம் தாளாது, அலறினார்கள். அதற்குள் சென்னைக் கிளையிலிருந்து அதிகார்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் யாருக்கும் உமாவைப் பார்க்க்க்கூட சக்தியில்லை. தாங்கள் வந்துதானே சங்கரை மீண்டும் பணியில் சேரக் கட்டாயப்படுத்தினோம். இப்போழுது என்ன ஆறுதல் சொல்லி, உமாவிற்கும், அந்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட இழப்பிற்கு என்ன சமாதானம் சொல்வோம் என துக்கித்தார்கள்.

விஷயம் தெரிந்து தெரிந்தவர்களும், உறவினர்களும், நண்பர்களும் சங்கரின் வீட்டைச் சுற்றிக் கொண்டார்கள். ஆனால், போனில் செய்தி கேட்டவுடன் தன் உணர்வின்றி கீழே விழுந்த உமாவோ எழுந்திருக்கவில்லை. அவளை உணர்வு கொள்ள அவர்கள் மேற்கொண்ட எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. உமாவோ ஒரு உயிரிருந்தும், உணர்வுகளற்றவளாகவே இருந்தாள். அவளின் கண்களோ, அறிவோ தன் வீட்டிற்கு ஏன் இத்தனைபேர்கள் வந்திருக்கிறார்கள். என் தன் மகனும் பெண்ணும் முகவாட்டத்துடன் வந்தவர்களிடம் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இருவரும் பரபரப்பாக யாரிடம் போனில் பேசுகிறார்கள் என்றெல்லாம் புரிபடவில்லை. அவள் தன்னிலை மறந்த நிலைக்குத்தள்ளப்பட்டாள். அவள் ஒரு தனி உலகில் இருந்தாள். சங்கரின் மகன் பாலச்சந்திரனுக்கும், மகள் பாமாவிற்கும் இனி தங்களின் தகப்பனார் உடலை சென்னைக்கு எடுத்துவரமுடியுமா, அவரின் சிதைந்த உடலைப் பார்க்கத் தங்களுக்கு சக்தியிருக்கிறதா, அல்லது தங்களின் அம்மாவிடம் அப்பாவிற்கு ஏற்பட்ட விமான விபத்தைப் பற்றியும், அதில் சங்கருக்கு ஏற்பட்ட மரணத்தைப் பற்றியும் எப்படிச் சொல்வது. அதைச் தாங்கும் சக்தியோ, புரியும் உணர்வோ அம்மாவிற்கு இல்லையென்பதையும் உணர்ந்து அவளிடம் எப்படிச் செய்தியைச் சொல்வதுயென்று வந்திருந்த நண்பர்களிடமும், உறவினர்களிடமும் ஆலோசிக்கலாயினர். வந்தவர்களில் ஒருவருக்கும் உமாவிடம் அந்தத் துக்கமான செய்தியைச் சொல்லத் துணிவில்லை.. உமாவை கவனிக்க வந்த மருத்துவர்களோ உமாவின் மனம் மிகவும் அதிர்ச்சியாகி உள்ளது, இப்போழுது நாம் எதைச் சொன்னாலும், உமாவால் புரிந்துகொள்ளமுடியாது. முதலில் அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து திரும்பவேண்டும். மிகவும் மெதுவாகத்தான் அவளிடம் நடந்த துக்கத்தைப் பக்குவமாகச் சொல்லவேண்டும். அதனால், உமாவிற்குத் தெரியாமலேயே நீங்கள் மும்பைக்குச் சென்று, அங்குள்ளச் சூழ்நிலைக்குத் தக்கபடி என்ன செய்யவேண்டுமென்று முடிவு செய்யவேண்டும். அதனால் முதலில் நீங்கள் இருவரும், உங்கள்த் துனையுடனும், முக்கியமான உறவினர்களுடனும் செல்லுங்கள். இங்கு உமாவின் நிலைக்குத் தக்கவாறு அவளைக் கவனிக்க ஒரு பொறுப்பானவர்களை ஏற்பாடு செய்யவேண்டும். என்ன நடந்தாலும், மும்பைச் சென்றவர்கள் வரும் வரையில் உமாவிற்கு எதுவும் தெரியமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சங்கர் நம்மை விட்டுப் போய்விட்டார். ஆனால், அவரின் உயிரான உமாவை நாம்தான் இப்போழுது கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். எனப் பலவகையிலும் யோசித்து, முடிவாக உமாவின் நிறுவாகத்தில் இருக்கும் இரு விபரமறிந்த பெண்மணிகளைத் தாங்கள் வரும்வரை உமாவை ஒரு குழந்தைபோலவும், அவளின் மனதில் எந்தவிதமான அச்சமோ,, சந்தேஹமோ ஏற்படாது கவனிக்க வேண்டுமென்று மிகவும் பரிவுடன் வேண்டிக்கொண்டு உமாவின் பாதுகாப்புப்க்கு ஒரு ஏற்பாடு செய்துவிட்டு, சங்கரின் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம், சங்கரின் மகள் பாமா, அவளின் கணவர் கண்ணன், பாலச்சந்திரனின் மனைவி தாராவும் மற்ற முக்கியமான சங்கரின் நண்பர்கள் இருவரும் செல்ல முடிவாகியது. சங்கரின் பேரன் அஸ்வினுக்கும், பாமாவின் பெண் சுவாதிக்கும் அவர்களின் இரு பக்க பாட்டி, தாத்தாக்களின் பொறுப்பில் விட்டுவிட்டு, துக்கம்தாளாமல் அழுதுகொண்டே அவர்கள் மும்பைக்குப் பயணப்பட்டார்கள். மும்பைக்குச் சென்றபிந்தான் அவர்களுக்குத் தெரிந்தது சங்கரின் உடல் மட்டுமல்ல, அந்த விமானத்தில் பயணப்பட்ட ஒருவரின் உடல் கூட முழுமையாக்க் கிடைக்கவில்லை என்றும், சங்கரின் கையில் இருந்த உமாவிட்டார் போட்ட ஒரு வைர மோதிரத்தை வைத்துத்தான் பாலுவாலும், பாமாவாலும் தங்களின் தகப்பனாரின் உடலை அடையாளம் காட்ட முடிந்தது. ஆனால் சங்கரின் அழகு முகம் வார்த்தைகளால் சொல்லத்தரமற்று சிதலமாகிக் கிடந்தது. தங்களின் அப்பாவின் அழகு முகத்தைப் பார்த்துப்பார்த்துப் பூரிப்பும், பெருமையும் அடைந்த அவர்களுக்கு அந்த சிதைத முகம்தான்தங்களின் அன்புத்தகப்பனார் என ஜீரணிக்கவே முடியவில்லை. இப்படிப்பட்ட சிதைந்த உடல்தான் சங்கர் என்று எப்படி அம்மாவிடம் காண்பிப்பது. அது அவளின் உயிரையேக் குடித்துவிடாதா?எனப் பலவாறு எண்ணித் துக்கமேலிட்டுக் கதறினார்கள். எங்களாலேயே அப்பாவை இப்படிப் பார்க்க முடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு உடலைக் கொண்டுபோய், இதுதான் நம்முடைய அப்பாசங்கர் என்று எப்படி அம்மாவிடம் சொல்லமுடியும். எங்களால் முடியாது. நாங்கள் இங்கேயே இப்பவே இறந்துவிடுவோம்.. எங்களால் அம்மாவைப் பார்க்க முடியாது, அவள் துடிப்பதைப் பார்க்க எங்களுக்குச் சக்தியில்லை நாங்கள் சென்னைக்குச் செல்லவில்லை எனப் பலவாறு துக்கத்தால் துடித்தார்கள். உடன் வந்திருந்தவர்களுக்கும் சங்கரின் அந்த சிதைந்த உடலைப்பார்க்கச் சகிக்கவில்லை. அப்போழுது அந்த விபத்தில் இறந்தவர்களையும், கொஞ்சம் உயிரோடு இருப்பவர்களையும் கவனித்து நிவாரணப் பணியாற்றவந்தவர்களும்,. அவர்களிடம் “நீங்கள் இந்த மாதிரி சிதைந்த உடலை சென்னைவரைக் கொண்டுசெல்லமுடியாது. சென்னைக்குப் போகுமுன்பே அவரின் உடல் மேலும் அழுகிப்போய்விடும். பின்னால் உங்களால் கூட இந்த உடலுக்கு ஒரு மரியாதையும் செய்யமுடியாமல் போய்விடும். அதனால் எங்களின் யோசனையைக் கேட்டால், இங்கேயே எவ்வளவு சீக்கிரம் உங்களால் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த புண்ணியாத்மாவிற்கு செய்யவேண்டிய இறுதி மரியாதைகளைச் செய்து விடுங்கள். இப்படி சொல்வது எந்தனை பாவமென்றோ, துக்கமானதென்றோ எங்களுக்கும் தெரியும். ஆனால் இப்போழுது நம்மால் செய்யக் கூடியது என்னவென்று உங்களுக்கேத் தெரியும். உங்களின் துக்கத்தை அடக்கிக்கொண்டுதான், நீங்கள் உங்களின் தகப்பனாருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளைச் செய்யவேண்டும். அந்தப் பெரியவரின் மகனாகவும், மகளாகவும் நீங்கள் செய்யவேண்டியவற்றைஉடனேயே செய்யத்தொடங்குங்கள். துக்கப்பட நேரம் இருக்கிறது. செயல்படத்தான் நேரமில்லை எனக் கூறி அவர்கள் இருவரையும் செயல்படத் தூண்டினார்கள். அங்கிருந்தவர்களின் உதவியைக் கொண்டே பாலாவும், பாமாவும் தங்களின் அழுகையுனூடே சங்கரின் இறுதி யாத்திரைக்கு ஏற்பாடுகளைச் செய்தனர். எல்லாம் முடிந்தபின் சென்னையிலிருந்து சென்றவர்களெல்லாம் சங்கரின் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்த, அதே விமானத்தில் சென்னைக்கு வந்தார்கள்.

11.. கணவருடன் இனைந்தாள்

அவர்கள் வந்தபோதும் உமாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. வந்திருந்த டாக்டர்களிடம் விசாரித்தபோதும் அவர்களும் இன்னும் உமா தன்னிலை திரும்பவில்லை. ஆனால், அவள் அடிக்கடி சங்கரின் அறைக்குச் சென்று அங்கிருந்தவைகளை ஒழுங்குசெய்கிறாள். தனக்குள்ளேயே, வீட்டில் பொருட்கள் ஒழுங்காக இல்லவிட்டால், உங்களுக்குப் பிடிக்காதே” என்றும் சொல்லிக்கொள்கிறாள். நான் கூட ஒரு முறை :உமா ஏன் எப்பொழுதும் நீ உன் அறையைச்சுத்தம் செய்துகொண்டிருக்கிறாயே, இப்ப யார் இங்கு வரப்போகிறார்கள்” எனவும் கேட்டேன். அதற்கு உமா “சங்கருக்கு அவர் இருக்கும் அறை சுத்தமாக இருக்க வேண்டும். அவர் வைத்த பொருட்கள் ஒன்று கலைந்திருந்தாலும், பிடிக்காது. யாரையும் கோபிக்க மாட்டார் ஆனால் தானே அவற்றை சரிபண்ணூவார். சங்கர் ஊருக்குப் போய் இரு நாட்களாகி விட்டது. அவர் என்னிடம் சொல்லிவிட்டுப் போனதுபோல் இன்று இரவுக்குள் அவர் வந்து விடுவார்” எனவும் சொன்னாள். அவளின் மனதில் சங்கர் இன்னும் உயிருடந்தான் இருக்கிறார். அவளுக்குச் சங்கர் ஊருக்குப் போனதுவரைதான் நினைவில் இருக்கிறது. போன் வந்த செய்தியோ, அவள் மயங்கி விழுந்ததோ நினைவில் இல்லை. அவளைப் பொறுத்தவரையில் சங்கர் அவளுடன் வாழ்கிறான். அவன் வரவைத்தான் அவள் மனம் எதிர்பார்த்து இருக்கிறது. இந்த நிலையில் அவளிடம் நாம் வலுக்கட்டாயமாக சங்கரின் மரணத்தைச் சொன்னால், அது அவளின் உயிருக்கும் ஆபத்தாகத்தான் முடியும். அவள் மனம் ஒருநாள் சங்கர் ஏன் இன்னும் ஊருக்கு வரவில்லை என ஏங்கத் தொடங்கும். அப்போதுதான் நாம் அவளிடம் மெதுவாக நடந்த்தைச் சொல்லி அவளுக்கு உண்மையைப் புரியவைக்க வேண்டும். அதுவரையில் நீங்கள்தான் அவளுக்கு எதிரில் உங்களின் துக்கத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது. மற்றவர்கள் யாரும் அவளை நெருங்கவிடாது நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, இனிமேல் உமாவைக் கவனிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களும் துக்கத்துடன் சென்றார்கள். அன்றிலிருந்து பாலாவிற்கும், பாமாவிற்கும் வேலைகளும் அதிகமாகியது. சங்கரின் மரணத்தைக் கேள்விப்பட்டு, துக்கம் கேட்க வருகிறவர்களிடம் நிதானமாக உமாவின் மனச் சிதைவைச் சொல்லி, அவளாகத் தெரிந்துகொள்ளும் வரை அவளுக்கு சங்கரின் மரணத்தைச் சொல்லவது அவளின் உயிருக்கு ஆபத்தாகலாம் என டாக்டர்கள் சொன்னதைச் சொல்லி, அவர்களையும் அதிகமாக உமாவிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்வதுடன், உமாவின் தேவைகளையும். கவனித்துக் கொண்டு, சங்கரின் காரியங்களையும் செய்து வந்தார்கள். அவ்வப்போது சங்கரின் அலுவலக அதிகாரிகளும் வந்து போனார்கள். அப்படி ஒருநாள் ஒரு அதிகாரி வந்து உமாவின் நிலைமை தெரியாமல், அவளிடமே சங்கரின் மரணத்திற்கு ஆறுதல் சொல்லித்தொடங்குபோது, அப்போதுதான் வெளியேயிருந்து வந்த பாலா அவரை உடனே தன்னுடன் வெளியே அழைத்துச் சென்று, அவரிடம் உமாவின் மன நிலையைச் சொல்லி, உமாவிற்கு இன்னும் சங்கரின் மறைவைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் தங்களின் குடும்பம் இருப்பதைச் சொல்லி, அவரை மெதுவாக அனுப்பினான். சங்கரின் மரணம் அளித்த துன்பத்தை விட அதிகமான துன்பம் உமாவின் மனநிலையினால் அந்தக் குடும்பம் அனுபவித்துக் கொண்டிருந்தது. அதே சமயம் காரியங்கள் செய்வதற்கு வந்திருந்த உறவினர்களையும் தங்களுடன் அனுசரணையாக இருக்கும்படி அவர்களிடம் மிகவும் பணிவாகவும், பரிவாகவும் வேண்டிக்கொண்டனர். அவர்களும் உமாவின் மீது பேரன்பு கொண்டிருந்ததால், எந்தவிதமான சிக்கல்களும் இல்லாது தினப்படி காரியங்கள் நடந்தன.

அன்றுடன் சங்கர் மறைந்து ஒன்பது நாட்களாகி விட்டன. பத்தாம்நாள் காரியம் செய்யுமுன், உமாவிடம் எப்படி நிலைமையைச் சொல்லுவது, அவளுக்குத் தெரியாமல் பத்தாம் நாள் காரியம் எப்படிச் செய்வது என்று அங்கிருந்த உறவினர்களும், உற்ற நண்பர்களுடனும் பாலாவும், பாமாவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்து வந்திருந்த சங்கரின் பள்ளித் தோழனானவும், உமாவின் ஊருக்காரனாகவும் இருக்கும் மூர்த்தி அவர்களிடம் “எனக்கு உமாவையும் தெரியும். சங்கரையும் தெரியும். அவர்களின் அன்னோன்யத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் வாழ்ந்த வகைதான் ஒரு நல்ல இல்லற உறவாகும். சங்கர் இல்லையென்று எந்த நிமிஷம் உமாவுக்குத் தெரிகிறதோ அந்த நிமிஷமே உமாவின் மூச்சும் நின்று விடும். என்னைக்கேட்டால், சங்கரின் மறைவைச் சொல்லி, உமாவை நாம் சாகடிக்க வேண்டாம். அவளைப் பொறுத்தவரையில், சங்கர் இந்த உலகில் உயிருடந்தான் இருக்கிறான். ஒரு நாள் அவளைப் பார்க்க வருவான். அவளின் எதிர்பார்ப்பைநாம் உடைக்க வேண்டாம். நாம் எத்தனையோ பாவங்களைச் செய்து கொண்டுதானிருக்கிறோம். உமா இன்று இருக்கும் மன நிலையில், சங்கரின் மரணம் என்ற பேரிடியைச் சொல்லி அவளைச் சாகடிக்கவேண்டாம். அவளுக்குத் தெரிய வேண்டிய விஷயத்தை நாம் இன்று மறைப்பதால் எந்த ஒர் பெரிய பாவமும் நம்மை சேராது. உமாவை அழ வைத்தால், சங்கரால் தாங்க முடியாது. சம்பிரதாயம் என்ற போர்வையில், சங்கர் இன்று நம்மிடம் இல்லையென்றாலும், அவனின் ஆத்மாவைச் துடிக்க வைக்க வேண்டாம். நாமோ எல்லாக் காரியங்களையும் ஞானவாபியில்தான் செய்கிறோம். நாளையக் காரியத்தையும் அப்படியேச் செய்து விடலாம். உமாவின் தோற்றத்திலும் எந்த மாற்றமும் வேண்டாம். சங்கரின் விருப்ப்ப்படியே, அவள் வாழ்நாள் பூராவும், சுமங்கலியாகவே இருக்கட்டும். அவளின் அந்த்த் தோற்றத்தைப் பார்த்தாவது நாமெல்லாம் சங்கர் நம்முடன் இருக்கிறான் என்ற பொய்மையில் வாழலாம்.” எனக் கூறித் தன் துக்கம் தாளாது அழத்தொடங்கினான். அவரின் சொற்களைக்கேட்ட ;பாலாவும், பாமாவும், மற்றவர்களும் துக்கம் தாளாது வாய்விட்டு அழத் தொடங்கினார்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஒர் இருக்கமான நிலைதான் நிலவியது.

பாலாவும், பாமாவும், மற்ற உறவினர்களும் இப்படித் தங்களின் துக்கம் தாங்காது, தவித்துக் கொண்டிருக்போது, உமாவின் அறையில் உமா படுத்துக் கொண்டிருந்தாள். பாலாவின் நான்கு வயது பையனும், பாமாவின் மூன்று வயது பெண்ணும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடும்போது, குழந்தைகள் இருவரும் உற்சாகமாக ஓடி விளையாடிக்கொண்டே, சத்தம் போட்டுக்கொண்டு, சங்கரின் அறைக்குள் ஓடினார்கள். அப்போது அங்கு கட்டிலில் உட்கார்ந்திருந்த உமா அவர்களிடம் “என்ன இங்கு வந்து தாத்தாவின் தூக்கத்தைக் கெடுக்காதீர்கள். தாத்தா இன்று காலையில்தான் ஊரிலிருந்து வந்தார் தெரியுமா. அவர் இப்போழுது நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவரும் இப்போது வெளியேப் போய் விளையாடுங்கள். தாத்தா எழுந்தவுடன் நாமெல்லாம் அவருடன் சேர்ந்து விளையாடலாம்” எனச் சொல்லி குழந்தைகளை வெளியே செல்லுமாறு சொன்னாள். அப்போது பாலாவின் பையன் உமாவிடம் “என்ன பாட்டி உனக்கு ஒன்றுமே தெரியாதா. சங்கர் தாத்தாதான் மும்பை போனபோது ஏற்பட்ட விமான விபத்தில் செத்துப் போய்விட்டாரே” என்றான். அவனுக்குத் துனையாக பாமாவின் பெண்ணும் “ஐயோ பாட்டி உனக்குத்தான் மனநிலை குழம்பியிருக்கிறதே. அதனால்தான் தாத்தா செத்துப் போனதைக் கூட உன்னிடம் யாரும் சொல்லவில்லை” எனப் படீரென்று சங்கரின் மரணத்தைச் சொல்லிவிட்டனர். குழந்தைகளின் சொற்களைக் கேட்டவள் இடியோசைக் கேட்டநாகம் போல் அதிர்ச்சி யடைந்தாள். அப்போதுதான் கூடத்தில் தன்னுடைய உறவினர்கள், பெண், மாப்பிள்ளை, மகன் மருமகள் எல்லாரும் கூடி உட்கார்ந்து ஏதொ ஒரு விதமான இறுக்கத்தில் துவண்டு இருப்பதைப் பார்த்தாள். அவளின் மனக் குழப்பத்தால், உள்ள நிலைமையைச் சரியான ஊகிக்கமுடியவில்லை. அப்போதுதான் சங்கரின் அறையில் அவன் இல்லாதாதையும், கட்டிலில் யாருமில்லாமல் வெறுமையாக இருப்பதையும் உணர்ந்தாள். ரு பெரிய இடி அவளின் தலைமேல் விழுந்த்து போல் துடிக்கலாளானாள். ஒரு வினாடிதான் அவளின் உயிரும் உடலும் துடித்தன. திடீரென்று “சங்கரா நீ எங்கே போய்விட்டாய் என்னை விட்டு. நீ இல்லையென்று குழந்தைகள் சொல்கிறதே. உணமையிலேயே நீ என்னை விட்டுப் போய்விட்டாயா” என பெரியதாக அலறத்தொடந்தினாள். திடீர்ஃபென்று உமாவின் அலறலைக் கேட்ட பாலாவும், பாமாவும் உமாவின் அருகில் ஓடி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் உமாவின் மூச்சும் நின்று விட்டது., ஓடி வந்தவர்கள் குழந்தைகளிடம் “நீங்கள் பாட்டியிடம் என்ன சொன்னீர்கள். ஏன் பாட்டி இப்படி அலறிக்கொண்டே கீழே விழுந்துவிட்டார்கள் என்று கோபமாகக் கேட்டபடியே, குழந்தைகளை அடிக்க வந்தார்கள். குழந்தைகளோ பாலாவும், பாமாவும் தங்களிடம் கோபமாக வருவதைப் பார்த்து பயந்து தங்களின் தாத்தாமார்களிடம் ஓடிக்அவர்களைக் கட்டிக்கொண்டார்கள். அங்கிருந்தவர்கள் பாலாவிடம் “பாலா உடனே உன் அம்மாவைப் பார். அவர்களின் மயக்கத்தைத் தெளிவு படுத்து. பிறகு குழந்தைகளிடம் விசாரிக்கலாம்” என்றனார்கள். அப்படியே இருவரும் தங்களின் தாயாரிடம் சென்று அவளின் மூச்சு இருக்கிறாதா எனப் பார்த்தார்கள். ஆனால் உமாவிடமோ எந்தவிதமான அசைவுமில்லை. எல்லாம் அடங்கிவிட்ட்துபோல் இருந்தாள். அவளின் உயிர் பிரிந்துவிட்ட்தைக் கண்ட இருவரும் “அம்மா அம்மா எங்களைப் பாரம்மா. அப்பாதான் போய்விட்டார். நீயாவது எங்களுடன் இருக்க வேண்டாமா. நீயும் போய்விட்டால் இனி எங்களுக்கு யாரம்மா இருக்கிறார்கள்” என கதறினார்கள். இருவரின் கதறலைக் கேட்டவுடந்தான் மற்றவர்களுக்கு உமாவும் சங்கரிடம் போய்விட்டாள் எனப் புரிந்தது. உமாவிடம் சங்கரின் மரணத்தைச் சொல்லி, பத்தாம் நாள் காரியம் எப்ப்டிச் செய்வதென்று தவித்தவர்களுக்கு உமா எந்த விதமான கஷ்ட்த்தையும் தரவில்லை. அவர்களுக்கெல்லாம் கஷ்டம் இல்லாமல், சங்கர் இல்லையென்று தன்னுடைய பேரப்பிள்ளைகள் சொன்னதைக் கேட்டவுடனேயே அவளின் மூச்சும், உயிரும் நின்றுவிட்டன. சங்கர் இல்லையென்பதைக் கேட்ட நிமிஷமே அவளும் இல்லாமல் போய்விட்டாள்.

கூடத்தில் சங்கரின் பேரப்பிள்ளைகளிடம் உறவினர்கள் என்ன நடந்த்து என விசாரித்தபோதுதான் தெரிந்த்து. உமா அங்கு வந்து சத்தம் போட்டு விளையாடிய குழந்தைகளை :தாத்தா தூங்குகிறார். சத்தம் போடாதீர்கள்” எனக் கண்டித்தபோது, குழந்தைகள் அவளிடம் “சங்கரின் மரணத்தைச் சொல்லிவிட்டார்கள்” அதைக் கேட்ட மாத்திரத்தில், உமாவும் மரணத்தைத் தழுவி விட்டாள். என்பதை உணர்ந்தார்கள். அவர்களில் ஒருவர் குழந்தைகளிடம் :நீங்கள் ஏன் தாத்தா செத்த்தை பாட்டியிடம் சொன்னீர்களென்று கேட்டபோது “பாட்டிதான் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்களே, நீங்கள் எந்தக் காலத்திலும், யாருக்காகவும், ஏன் கடவுளே வந்து கேட்டால் கூட பொய் சொல்லக்கூடாதென்று கற்றுக் கொடுத்தார்களே. அப்படி யிருக்கும்போது நாங்கள் எப்படி பாட்டியிடமே தாத்தா உயிரோடு இருக்கிறார் எனப் பொய் சொல்லுவது. அது தப்பில்லையா? எனக் குழந்தைத்தனமாக அவர்களிடமே கேட்டார்கள். குழந்தைகளின் நிதரிசனமான கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை.

அப்போது, மூர்த்தி :பாலா. பாமா பாருங்கள் நாமெல்லாம் எப்படி உமாவிடம் சங்கரின் மரணத்தைச் சொல்லி, நாளைக்கு பத்தாம் நாள் காரியம் செய்யப்போகிறோம் என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, நம்முடைய பிரச்சினைக்கு பகவான் குழந்தைகளின் மூலம் தீர்வு காட்டி விட்டார். நமக்கெல்லாம் உமா, சங்கர் இருவரும் ஒரே சமயத்தில் நம்மைவிட்டுப் போனது தாங்கமுடியாத துக்கம்தான். ஆனால் சங்கர் இல்லாமல் உமாவால் ஒரு கணிமைக்கும் நேரம் கூட இருக்கமுடியாதென்ற உண்மை இப்போழுது தெரிகிறதா. அந்த அன்பு உள்ளங்கள் ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்கமுடியாதே. அதனால்தான். சங்கர் மரணமடைந்த செய்தி கேட்டவுடனே, உமாவின் மூளையும், நினைவுகளும் செயலற்றுப் போயின. நாளடைவில் உமாவின் மனம் தெளியும், அவளுக்கு நாம் பக்குவமாக சங்கரின் மரணச் செய்தியைச் சொல்ல நினைத்தோம். ஓன்று மறந்து விட்டோம். அவர்களின் உடல்தான் இரண்டே தவிர, உள்ளங்களும், உயிரும் ஒன்றுதான். சங்கரும் உமாவைத் தனியாக விடமாட்டான். அதனால்தான் நாமெல்லாம் சொல்லத் தவித்ததை, குழந்தைகளின்மூலம் சொல்லவைத்து, உமாவைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விட்டான்.” என நிதானமாகச் சொன்னார். அப்போழுது பாமா கேட்டாள் “மாமா, அப்படியானால் அம்மா இந்த பத்து நாட்களாகத் தன் ஞாபகம் இல்லாமல் இருந்ததால்தான் இத்தனை நாட்கள் உயிரோடு இருந்தார்களா? எனத் துக்கம் தாளாது கேட்டாள்.அதற்குமூர்த்தி மாமா சொன்னார் :அம்மா பாமா, பாலா கேட்டுக் கொள்ளூங்கள் சங்கரின் மரணமடைந்த நாள் முதல் இன்று இந்த நிமிஷம் வரை, உமா சங்கருடன் வாழ்ந்த கால வசந்த நினைவுக்ளோடு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருந்தாள். இன்று குழந்தைகள் அவளின் கனவைச் சிதைத்தபோது, அவளின் கனவுகள் மட்டும் கலையவில்லை, அவளே கலைந்துவிட்டாள். அவளின் மரணம் நமக்கு இழப்பென்றாலும், அவளைப் பொறுத்தவரையில் அவள் சங்கருடன் ஒன்றி விட்டாள். திருவாரூர் கோவிலில் சந்தித்த இருவரையும் இனி யாராலும் பிரிக்க முடியாது. அவர்கள் இருவரும் நாம் காணமுடியாத ஒரு சொர்க்கத்தில் இனைந்து வாழ்வார்கள்.

கனவில் வாழ்ந்தவளின் கனவுகள் கலைந்தபோது, அவளும் தன் கணவருடன் நீங்காது கலந்து விட்டாள். உண்மையான காதலுக்கு மரணம் இல்லை.இனி நாம் அவர்களின் சாந்திக்குத்தான் பிராய்த்திக்க வேண்டும்.

“கனவு முடிந்தது”