Thursday, 25 April 2013

அம்மனுக்கு வாங்கிய புடவை

 

(ஜெயரமணி)

அம்மனுக்கு வாங்கிய புடவை

(யுவா)

காலையில் எழுந்ததிலேயிருந்து சரசாவிற்கு வேலை சரியாக இருந்தது. எப்பவுமே காலையில் சரசா பரப்பாகத்தான் இருப்பாள். . அவளுக்கும் வயது அறுபதாகிவிட்டது. ஓராண்டுக்கு முன் அவளைப் போல் சந்தோஷமாக இருந்தவர்கள் இல்லையெனலாம். யார் கண் பட்டதோ தெரியவில்லை. அவர்களின் ஒரே மகன் வசந்தன் எல்லாரையும் போல்தான் நன்றாகப் படித்து, ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தில் மதிக்கத்தக்க ஒரு பதவியில் இருந்தவந்தான். ஒருநாள் அவன் தன் அலுவலகப் பணி முடிந்து, தன்னுடைய இருசக்கர வண்டியில் வீட்டிற்குத் திரும்பி வரும்போதுதான், அவர்களுடைய விதி நன்றாக விளையாடிவிட்டது. அவன் வரும்போது அவனுடைய வண்டிக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி மிக வேகமாக வந்து, வசந்தின் வண்டியின் மேல் மோதி, கூடவே அவனையும் வண்டியுடன் கொஞ்ச தூரம் இழுத்துச் சென்று விட்டது. சாலையில் அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவனை உடனடியாக மருத்துவ மனைக்கும் எடுத்துச் சென்றதுமல்லாமல், அவனின் கைப்பையைச் சோதித்து, அவனுடைய வீட்டிற்கும் செய்தி வந்தது. வீட்டில் இருந்த அவனுடைய அப்பா, அம்மா இருவருமே நிலைகுலைந்தனர். வந்தவர்களின் உதவியுடன் மருத்துவ மணைக்குப்போய் தங்களுடைய ஒரே மகனின் நிலையைப் பார்த்தும் மூர்ச்சையாகி விட்டனர். அவர்களுக்கும் அங்கேயே முதலுதவி செய்து, அவர்களை ஒரு விதமாகத் தேற்றினர்கள். அப்படியே அவனுடைய அலுவலக நண்பர்களுக்கும் செய்தி தெரிவிக்க, அவர்களும் உடனடியாக வந்த வசந்தனின் பெற்றோர்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்யலானார்கள். முதலில் வசந்தனின் காயங்களின் தீவிரத்தை அறியாமல் எதுவும் சொல்ல முடியாது என்றவர்கள், இரு நாட்களுக்குப் பின், அவனின் உடல் நிலை சற்று முன்னேறத் தொடங்கியது தெரிந்து, வசந்தனின் உயிருக்கு பயமில்லையென்றும், அவனின் மற்ற அவயங்களின் செயல்பாடுகளையெல்லாம் கொஞ்ச காலம் தீவிர சிகிச்சையில் வைத்துப் பார்த்த பிறகுதான் சொல்ல முடியும் எனசொன்னார்கள்.

அவனுடைய மருத்துவத்திற்கான செலவுகளையெல்லாம், அவனுடைய நிர்வாகமே எடுத்துக் கொண்டதால், அவர்களுக்கு ஒருவகையில் மனச்சுமை குறைந்தது, அலுவலக நண்பர்களின் உதவியால் வசந்தனின் பெற்றோர் சிறிதளவு மனம் தேறினார்கள். வசந்தனைக் கவனித்து வந்த மருத்துவர்கள் மூன்றுநட்களுக்குப் பின் அவர்களிடம் “வசந்தனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவன் உடலளவில் பயம் நீங்கிவிட்டது. ஆனால் விபத்தில் அவனின் தலையில் அடி பட்டதால், அவனின் மூளை நரம்புகள் சக்தியற்றுப் போனதால், அவனால் இனி மற்றவர்களைப் போல் அவனின் வயதிற்குத் தக்கவாறு புத்திகூர்மையுடன் இருக்க முடியாது. அவனின் மூளையின் செயல்பாடுகள் மந்தமாகிவிட்டதாகவும், அவனை இனி மேல் ஒரு விபரம் அறியாத பாலகனாகத்தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் இனி அவனை ஒரு சிறு பையன்போல்தான் கவனமாக வளர்க்க வேண்டுமென்றும் கூறி விட்டு, இன்னும் இரு வாரங்களில் அவனை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போகலாமென்றும் சொல்லி விட்டார்கள். வசந்தனின் பெற்றவர்களுக்கு மகனின் உயிருக்கு பாதிப்பு இல்லையென்ற சந்தோஷம் ஒரு பக்கம், இனிமேல் அவனை ஒரு குழந்தைபோல்தான் பார்க்கவேண்டும், அவனின் வயதிற்கு ஏற்ற அறிவுடன் அவன் இருக்க மாட்டான் என்பதையும் உணர்ந்து தாளமுடியாத ஏக்கமும் அவர்களைச் பற்றிக் கொண்டது. அவனால் பழையபடி இருக்க முடியாது போனாலும், தங்களின் கண்ணெதிரில் ஒரு மகனாக நடமாட முடியும், தாங்கள் அவனை வசந்தனென்று அழைத்துக் கொண்டாடமுடியும் என்றேண்ணமும் அவர்களுக்குள் சிறிது ஆறுதலை கொடுத்தது.

ஆரம்பத்தில் ஏற்பட்டமன நிறைவு, நாளடைவில் தளர ஆரம்பித்தது. வசந்தனின் குழந்தை பருவத்தில் அவன் செய்த குறும்புகள், புத்திசாலித்தனமான பேச்சுகள், படிப்பில் அவன் காட்டிய ஆர்வம், வேகம், விளையாட்டில் அவனுக்கு இருந்த தீவிரம் எல்லாம் அவர்களின் நினைவுக்கு வந்து அவ்வப்போது அவர்களை நிலைகுலைய வைத்தது. வசந்தனின் நண்பர்களும் அவரவர்களின் பணி காரணமாக அடிக்கடி வருவதுமில்லை. இன்னும் எத்தனை நாட்கள் அறிந்தும் அறியாதநிலையில் இருக்கும் வளர்ந்த வாலிப வயதுக் குழந்தையை எப்படிக் காப்பாற்றுவோம் எனக் கவலையும் அவர்களிருவரையும் உருக்குலைய வைத்தது. இன்பங்கள் இனைந்து வராது. ஆனால் துன்பங்கள் மட்டும் தொடர்ந்து வருவது விதியில் வழி. அதற்கேற்ப, வசந்தனின் தகப்பனார், ஏற்கனவே அவருக்கு இருந்த இருதய நோய் காரணமாகவும், தன்னுடைய ஒரே மகனின் இரண்டுகெட்டான் நிலையைக் கண்டு மனக்கவலை கொண்டதால், ஒரிரவு, தன்னுடைய உறக்கத்திலேயே அடங்கிவிட்டார். வசந்தனின் தாயாரின் நிலையோ சொல்லத்தரமற்றுப் போனது. வசந்தனின் நிராதரவான நிலைமையைக் கருத்தில் கொண்டு, தன்னுடைய துக்கங்களனைத்தையும் விழுங்கிக் கொண்டு பிள்ளைக்காக் வாழந்து வந்தாள்.

வசந்தனுக்குத் தன் தகப்பனார் இறந்து விட்டார் எனப் புரியவில்லை. அதே சமயம் ஒரு மகனாக அவருக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களையெல்லாம், தன்னுடைய கடைசி சித்தப்பாவின் உதவியுடன் செய்து முடித்தான். அவர் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, சாஸ்திரிகள் சொல்வதைச் செய்யச் சொல்ல அதை அப்படியேச் செய்தான். அந்தக் காரியங்களுக்கான காரணமோ, அது தன் தகப்பானாருக்குத் தான் செய்ய வேண்டிய பிறப்புரிமை என்பதெல்லாம் அவனால் உணர முடியவில்லை.

அவர்களுடைய துன்பமான காலத்திற்கிடையே ஒரு ஆறுதலான விஷயம் வசந்தனின் மாமன் மகள் வாசுகி. சிறு வயதிலேயே தன்னுடைய தாய் தந்தையே ஒரு தீவிபத்தில் பலி கொடுத்து விட்டு, அன்றிலிருந்து வசந்தனின் தாயான தன் அத்தையிடம் அடக்கலம் புகுந்தவள். உறவுக்கு தம்பியின் மகளாக இருந்தாலும், ஒரு மகளைப் போல பாசமும் பரிவுடனும்தான் அவளும் அத்தையின் வீட்டில் வாழத்தொடங்கினாள். வசந்தனின் திடீர்விபத்தின் காரணமாய், அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரக கஷட்த்தை ஓரளவுக்கு ஈடு செய்ய, வாசுகிக்கு வசந்தனின் அலுவலகத்திலேயே ஒரு நல்ல வேலை கிடைத்தது. அதனால் அவர்களின் தினப்படி வாழ்க்கைக்கும், அவ்வப்போது வசந்தனுக்குத் வேண்டிய மருத்துவச் செலவினங்களுக்கும் வசதியாக இருந்தது. சிறுவயதிலிருந்தே வசந்தனும் வாசுகியும் ஒன்றாக வளர்ந்து வந்ததால் இருவருக்குமிடையே பாசப்பினைப்பும் இருந்தது. வசந்தனின் தாயார் தன்னுடைய துக்கத்தால் சில நேரங்களில் வசந்தனின் தேவைகளை கவனிக்காவிட்டால், வாசுகி தானே அந்த வேலைகளைச் செய்து அத்தையின் வேலைப் பளுவைக் குறைப்பாள்.

அவ்வப்போது சரசா தன்னிலை மறந்து, வசந்தனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவளின் கண்களில் வசந்தனின் இளமைகால குறும்புகள், சின்ன சின்ன பிடிவாதங்கள், சிறு கோபம் கொண்டு, காட்டும் முரட்டுத்தனம் எல்லாம் நிழலாகத்தெரியும். அதற்கிடைய தற்போது அவனிருக்கும் இரண்டுங்கெட்டான் நிலையும் புரியும். அவளால் தாளமுடியாமல் துக்கப்பட்டு, அழத்தொடங்குவாள். அப்போது, அவளின் பக்கத்தில் இருக்கும் வசந்தனுக்கு அம்மாவின் அழுகைக்குக் காரணம் புரிந்து கொள்ளத்தக்க புத்தி இல்லையென்றாலும், அம்மா அழுவது மட்டும் தெரியும். அவனும் தன்னுடைய அம்மாவின் மடியில் தலை வைத்துக் கொண்டு, தானும் அழுவான், அப்படியே அம்மாவின் கண்களில் வழியும் கண்ணீரையும் தன்னுடைய சட்டையால் துடைப்பான். அவனுக்கு தன்னுடைய அம்மாவின் துன்பம் மட்டும் தெரியும், அவள் அழுவது புரியும். ஆனால் அதற்கு காரணமான தன் நிலை மட்டும் புரிந்து கொள்ள முடியாதது. அத்துடன், சிறிது நேரம் இருந்த பின், தன்னுடைய தாயின் கையைப்பற்றித் தன்னுடைய வயிற்றின் மீது வைத்துக் கொண்டு, “அம்மா.. அம்மா..” என மெல்லிய குரலில் கூப்பிடுவான். பிள்ளையின் செயலைப் பார்த்து, தாய்க்கு தன்னுடைய பாலகனின் பசியைப் புரிந்து கொண்டு, “பசிக்குதா வசந்தா? என்ன சாப்பிடுகிறாய்”எனப் பரிவாகக் கேட்டால், தனக்கு என்ன வேண்டுமென்று சொல்லத்தெரியாமல், அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பான். தனக்கு வேண்டியதைக் கூட வாய்விட்டு கேட்கத் தெரியாத நிலையில் இருக்கும் மகனைப் பார்த்து அந்தத் தாயால் வாய் விட்டு அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத சோதனை. தினமும் நிகழும் விஷயம்தான். அன்று என்னவோ சரசாவிற்குத் துக்கமும் கோபமும் வந்தது கோபம் மேலிட, என்ன பேசுகிறோம் என யோசிக்காமல், வசந்தனைப் பார்த்து, “உனக்கு வேறு எதுவும் சொல்லவோ கேட்கவோ தெரியாவிட்டாலும், வயிற்றுப் பசியை மட்டும் சொல்லத் தெரிகிறது. உன்னுடைய தீராப் பசிக்குத்தான் மலைபோல இருந்த அப்பாவை ஒரே ராத்திரியில் முழுங்கிவிட்டாய், இன்னும் எத்தனை நாட்கள் நானிருபேனோ, என்னையும் நீ முழுங்கிவிட்டு, ஏனென்று கேட்கக்கூட தாதியற்று, நீ நிற்கத்தான் போகிறாய், அதுகூட உனக்குப் புரியுமோ, புரியாதோ உன்னைப் படைத்தவனுக்குத்தான் புரியுமோ இல்லையோ? எல்லாம் என்னுடைய விதி” எனப் பெரிய குரலில் சொல்லிவிட்டு, தன் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்த, வசந்தனைப் பிடித்து, முரட்டுத்தனமாகக் கீழே தள்ளிவிட்டாள். திடீரென்று அம்மா தன்னை பிடித்துத் தள்ளிவிட்ட்தால், கீழே விழுந்த வசந்தனின் தலை தரையில் பட்டு, வலிக்கத் தொடங்கவே, வலிதாளாமல் வசந்தன் “அம்மா அம்மா வலிக்குதும்மா” எனவும் அழச்செய்தான்.

வசந்தனின் அழுகைச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, வெளியே போயிருந்த வாசுகி வாசலிலிருந்து, ஓடி வந்து வசந்தனைத் தூக்கிக் கொண்டு,தன்னுடைய அத்தையைப் பார்த்து, “ என்ன அத்தை இது, நீங்களா இப்படி அத்தானைத் தள்ளி விட்டீர்கள். இன்று என்ன கோபம் உங்களுக்கு அத்தான் பேரில். பாவம் அவரால் தன்னுடைய பசியைச் தவிர வேறு எதுவும் சொல்லவோ செயலில் காட்டவோ முடியாத நிலையில் இருப்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? பாவம் அத்தான். அவர் எல்லாரையும் போல் இருந்தால், நீங்கள் அவரை எத்தனை முறைகள் வருந்தி வருந்தி சாப்பிடக் கூப்பிட்டாலும், தன்னுடைய வேலையிலேயே மூழ்கி இருப்பாரே. அப்போது கூட நீங்கள் அவரின் வேலைக்குப் பாதகம் இல்லாமல், அவருக்கு சாதம் உட்டித்தானே விடுவீர்கள். அன்று செய்த உங்களுக்கு இன்று அப்படிச் செய்யஏன் மனம் வரவில்லை. அத்தானிடம் இப்போதுதான் நாமிருவரும் அன்பாக இருக்க வேண்டும். நம்முடைய அன்பு மட்டும்தான் அவரின் உடல் நிலையைச் தேற்ற முடியும் என்பதையும் மறந்து விட்டீர்களா?” என தன்னுடைய ஆற்றாமையால் கேட்டாள். அவளின் கேள்விக்கு “என்னால் தாள முடியவில்லையடி வாசுகி. எனக்கும் உடலும் மனமும் தளர்ந்து போய்விட்டது. தப்புத்தானம்மா அவனின் உடல் நிலையைப் பற்றி முழுவதும் தெரிந்த நானே இப்படி நடந்து கொண்டது புத்திகெட்டச் செயல்தானம்மா. எனக்கும் புத்தி கெட்டுவிட்டதுபோல்தான் இருக்கு” எனத் தனக்குள் சொல்லியபடியே தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வசந்தனுக்கு சாப்பாடு எடுத்துவர உள்ளேப் போனாள். ஆனால், அதற்குள்ளேயே வாசுகி வசந்தனுக்கு தட்டில் சாதம், பருப்பு, போட்டு,தனியாக் இரு கிண்ணத்தில் பொரியல், சாம்பார் என எடுத்து வந்து அத்தையிடம் கொடுத்து விட்டு, வசந்தனின் முகத்தையும், கைகளையும் ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து விட்டாள். வசந்தனோ தன்னுடைய அம்மா தன்னை தள்ளிவிட்டதால், அம்மாவிடம் நெருங்க பயந்து, வாசுகியின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனைப் பார்த்த வாசுகி “அத்தான், அம்மா ஒன்னும் சொல்லமாட்டார்கள். நீங்கள் சமத்தாக சாப்பிடுங்கள்.” எனவும் சொன்னாள். சரசாவிற்கு என்ன தோன்றியதோ, “வாசுகி இன்று நீயே அவனுக்கு சாதம் உட்டிவிடு” அவன் சாப்பிட்டு, மாத்திரை சாப்பிட்டபின் தூங்கட்டும் எனச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.

ஒரு நாள் பிற்பகலில் சரசா தன்னையுமறியாமல், உறங்கி விட்டாள். அப்போது வசந்தனுக்குத் தன் இயற்கையின் தேவை வந்தது. அவன் தன்னுடைய விபத்தின் காரணமாக, தன்னுடைய சிறு சிறு தேவைகளுக்கும் தன்னுடைய அம்மாவைத்தான் எதிர்பார்த்திருப்பான். அதனால் அவன் அன்றும் தன்னுடைய அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த வாசுகி, அவனிடம் வந்து அவன் தேவை என்ன என்பதை அவனின் முகம் பார்த்து உணர்ந்து கொண்டாள். அதனால் அவன் வசந்தனின் கைகளைப் பற்றி, அவனைக் கூட்டிக்கொண்டு, பின்புறத்தில் இருந்த கழிப்பறைக்குக் கூட்டிச் சென்றாள். சில வினாடிகள் சென்றபின், அவனின் உடலைச் சுத்தம் செய்யத் தான் உள்ளேச் சென்றபோது, வசந்தன் அவளைத் தானிருக்கும் இடம் வரவிடவில்லை. மாறாகத் தானே தன்னுடைய கால்களைச்சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்தான். அவனின் முகத்தைப் பார்த்த வாசுகிக்கு அவனின் முகத்தில் இருந்த வெட்கத்தை உணர்ந்தாள். அவளுள் எதோ ஒரு நம்பிக்கைரேகை ஓடியது. அப்போது தன்னுடைய உறக்கத்திலிருந்து எழுந்த சரசா, வசந்தனின் இடத்தில் அவனில்லாத்தைக் கண்டவள், அவன் தானாகவே பின்புறம் சென்று திரும்பி வந்ததைப் பார்த்துத் திகைத்தாள். “ஏன் வசந்தா, என்னை எழுப்பாமல் நீயே போய்வந்தாயா? எனவும் கேட்டாள். ஆனால் அவளின் கேள்விக்குப் பதில் சொல்ல அவனுக்குத் தெரியவில்லை. அங்கு வந்த வாசுகியோ “அத்தை, அத்தானுக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய தேவைகளைச் செய்து கொள்ளச்சக்தி வந்து விடும் பாருங்கள்” எனச் சொன்னாள். “எப்படிச் சொல்கிறாய். உன்னிடம் டாக்டர் எதுவும் சொன்னாரா” எனக் கேட்ட சரசாவிற்கு “அப்படி ஒருவரும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் தினமும் தன்னுடைய அந்தரங்கத் தேவைகளுக்கு உங்களிடம் சகஜமாக செய்து கொள்ளும் அத்தான், இன்று நான் அவருக்கு உதவ சென்றபோது, என்னை உள்ளே வர விடாது, தானே கதவைச் சார்த்திக் கொண்டு, தன்னுடைய உடம்பைச் சுத்தம் செய்து கொண்டு வந்தார். அதிலிருந்து, அத்தானுக்கு நீங்கள் சொல்வதுபோல் பசி எனற இயற்கையான ஒரு உணர்ச்சி மட்டும்மல்ல, அவரிடம் கூச்சமும் ஏற்படுகிறது. அந்தக் கூச்சத்தினால்தான், என்னை அவருடைய உதவிக்கு அனுமதிக்க வில்லை, தானாகவே செய்து கொண்டு விட்டார். உங்களிடம் தாயார் என்ற உணர்வால், அவர் தன்னுடைய கூச்சத்தைக் காட்டவில்லை. ஆனால், என்னை ஒரு பெண் என உணர்ந்து கொண்டதால், உங்களிடம் உள்ள உரிமையை என்னிடம் எடுத்துக் கொள்ள அவரால் முடியவில்லை. இதுவும் அவருடைய மன நிலை சீரடைய ஒரு வழியாக இருக்கும் என எனக்குச் தோன்றுகிறது” எனச் சொன்னாள்.

தன்னுடைய மருமகளின் வாதத்தில் இருக்கும் அர்த்தத்தை சரசாவால் பூரணமாக புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் வாசுகியை சிறிது நேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தவள், “என்னவொ சொல்கிறாய். எனக்குப் புரியவில்லை. எனக்கு வரவர அவன் நிலையில் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை. பகவான் அருளால் உன் ஆசையாவது நிறைவேறட்டும்.”என மெதுவாகச் சொல்லி பெரிய மூச்சும் விட்டாள். அத்தையின் சந்தேகத்தையும், அவளின் மனக் கஷ்டத்தையும் புரிந்த வாசுகி, அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை யென்றாலும், அவள் மனசில் வசந்தன் வெகு சீக்கிரம் குணமாகிவிடுவான் என்று திடமான நம்பிக்கை வந்தது.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வாசுகியும் தவறாது தன்னுடைய வீட்டின் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குப்போய் வந்தாள். ஒரு நாள் அவளிடம் கோவில் பூசாரி “என்னம்மா வசந்தனுக்கு உடம்பு தேறி வருகிறதா? எப்படி இருக்கிறான்” எனக் கேட்டார். அவரிடம் மெதுவாக “வேகமான முன்னேற்றம் எதுவும் இல்லை. எனக்கு மட்டும் அவர் பழையபடி ஆகிவிடுவார் என ஒரு சின்ன நம்பிக்கை உண்டு. ஆனால் அத்தையால் அப்படி திடமாக இருக்க முடியவில்லை. மிகவும் மனம் தளர்ந்து போய்விட்டார்” என பதிலுரைத்தாள். பிறகு அவரிடமே கேட்டாள்,”பூசாரிமாமா, எனக்காவும் அத்தைக்காகவும் நீங்கள் அம்மனிடம் உத்திரவு கேட்டுச் சொல்ல முடியுமா? என. சிறிது நேரம் பூசாரியும், அம்மனின் முன் தீபாராதனையை எடுத்தார். கொஞ்ச நேரம் அம்மனின் முகத்தையேப்பார்த்துக் கொண்டிருந்தவர், அவளிடம் “அம்மா உன் நம்பிக்கை திடமாக பலிக்கும். நீ ஒரு ஏழு நாட்கள் அம்மனுக்கு விரதம் இரு. உன் விரதம் பூர்த்தியடையும் அன்று, உன் கையால் ஒரு பச்சை நிறப் புடவை ஒன்றை அம்மனுக்கு சாத்திவிடு. உங்கள் கவலையெல்லாம் பாசி விலகுவது போல் விலகிவிடும்: என்றார். பூசாரியின் வாக்கு அவளுக்குள் ஒரு தேவவாக்காகியது. பூசாரியிடம் அம்மனுக்கு விரதம் இருக்கும்போது கடை பிடிக்க வேண்டிய நிபந்தனைகளைக் கேட்டுக்கொண்டாள். அவரும் விபரங்களைச் சொல்லி விட்டு, வரும் அம்மாவாசை அஷ்டமி முதல் ஏழு நாட்கள் அம்மனுக்கு விரதம் இரு. பௌர்ணமியன்று மாலை சந்திரோதயம் ஆன பின்னர், நீ வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி, உன் விரதத்தை முடித்துக் கொள். எல்லாம் அம்மனின் அருளால் நல்ல படியாகவே முடியும். கவலைப் படாதே. உன் அத்தையிடமும் சொல்லிவிடு”எனவும் உத்திரவு கொடுத்தார். அவளும் மன நிம்மதியுடன் அம்மனை வேண்டிக் கொண்டு வீட்டிற்குப் போனாள். பூசாரி சொன்னதுபோல் அவளும் அம்மாவாசை கடந்து, வந்த அஷ்டமி முதல் தன்னுடைய நோன்பை ஆரம்பித்தாள். காலையில் எழுந்தவுடன் வீட்டில் குளித்து முடித்து, சுவாமி விளக்கு ஏற்றி, நமஸ்காரம் செய்து விட்டு, தன்னுடைய அத்தைக்கும் நமஸ்காரம் செய்தாள். பின் ரொம்ப சிரத்தையுனும், பக்தியுடனும் தன்னுடைய நோன்பை ஆரம்பித்துக் கொண்டாள். பூசாரி சொன்னபடியே, ஒரு வாரம் முழுவதும், அன்னமின்றி, கஞ்சியுடன், ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, விரதத்தைக் கடை பிடித்தாள். பூசாரி சொன்னது போல் ஒரு பச்சை நிறத்தில் புடவையும் வாங்கிவந்தாள்.

பௌர்ணமி வந்தது. அன்று மாலையில் கோவிலுக்குப் போய் தன்னுடைய வேண்டுதலைச் செய்து, விரதத்தை பூர்த்தி செய்யவும் இருந்தாள். வாங்கிய புடவையை சுவாமி படத்தின் கீழேயே வைத்திருந்தாள். அன்றும் அவள் தன்னுடைய அலுவலகத்திற்கும் போய்வந்தாள். வந்தவள், மாலையில் ஒரு முறை குளித்து விட்டு, கோவிலுக்குப் புறப்பட இருந்தாள். அவள் குளித்துக் கொண்டிருக்கும் போது வசந்தன் மட்டும் வீட்டின் முன் வாராண்டாவில் இருந்தான்.

அப்போது, அந்தத் தெருவில் ஒரு பெண் பிச்சைக்காரி, தன்னுடைய குழந்தையுடன், வீடு வீடாக பிச்சை கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். வசந்தனின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வாசலில் அவள் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர்கள் வீட்டிலிருந்து ஒரு மூர்க்கமான மனிதர் வந்து, :போ போ எப்பப் பார்த்தாலும், யாராவது வந்து பிச்சைக் கேட்டுத் வந்து கொடுக்கும் தொந்திரவுக்கு எல்லையே இருக்காது. உனக்கெல்லம் போட மாட்டேன். நீ இங்கிருந்து போய் விடு” என மிகவும் கோபமாக அவளைத் துரத்தினான். அப்போது அவளிடம் இருந்த குழந்தையும் பசியால் அழத்தோடங்கியது. குழந்தையின் அழுகையைச் கேட்டவனுக்கு, கோபம் அதிகமாகியது உனக்கெல்லாம் எதற்கு ஒரு குழந்தை? யாருடையதை திருடி வந்து பிச்சையெடுக்கிறாய்? எனச் சொல்லியபடியே, உள்ளேயிருந்து ஒரு வாளி தண்ணீர் கொண்டுவந்து, அவளின் மேல் கொட்டி அவளை விரட்டினான். பிச்சைக்காரியின் புடவை முழுவதும் நனைந்து போய், குழந்தையுடன் அவள் நடுங்கிக் கொண்டே, பயத்தால் அங்கிருந்து நகர்ந்தாள்.

உடம்பு பூரா நணைந்து, குழந்தையுடன் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பிச்சைக்காரியைப் பார்த்த வசந்தனுக்கு மனதில் எதோ வேதனை ஏற்பட்டது போல. உடனடியாக அவளுக்கு எதுவும் கொடுக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. உள்ளே வந்தவனின் கண்களில் வாசுகி அம்மனுக்காக வாங்கி வைத்திருந்த புடவை கண்ணில் பட்டது.என்ன செய்யப் போகிறோம் என எதுவும் யோசிக்காமல், அந்தப் புடவையை கையில் எடுத்துக் கொண்டு வந்து வாசலில் பயத்துடன் நின்று கொண்டிருந்த பிச்சைக்காரியிடம் கொடுத்தான். அந்தப் புடவையை வாங்கிய அந்தப் பெண் வசந்தணைப் பார்த்து, நன்றியுடன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, திரும்பிப் போனாள். அவள் போவதை பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு திருப்தியும், ஆனந்தமும் ஏற்பட்டது.

கோவிலுக்குத் தயாரான வாசுகி அம்மனுக்காக வாங்கி வைத்திருந்த புடவையை எடுக்க சுவாமி உள்ளுக்குப் போன பிந்தான், அங்கு புடவையைக் காணாமல், அத்தையிடம் வந்து “அத்தை. நீங்கள் சுவாமியிடமிருந்த புடவையே எடுத்து எங்கே வைத்திருக்கிறீர்கள் எனவும் கேட்டாள். அதற்கு அத்தையோ “நான் எதையும் எடுத்து வைக்கவில்லையே. அங்கேயே நன்றாகப் பார்” எனப் பதில் கொடுத்த படியே வந்தாள். அவளும் வாசுகியுடன் சேர்ந்து புடவையைத் தேடினாள். அப்போது தான் வாசலிருந்து உள்ளே வந்த வசந்தனைப் பார்த்த சரசா :வசந்தா நீ புடவையைப் பார்த்தாயா? எனக் கேட்டாள். அம்மா கேட்டதைப் புரிந்து கொண்டவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவன் திரும்பவும் வாசலுக்கு சென்று தெருவில் போய்க் கொண்டிருந்த பிச்சைக்காரியைப் பார்த்தான். அவனின் செயலுக்கு காரணம் தெரியாத சரசா அவனிடம் “என்னடா நான் கேட்டால், நீ பதில் சொல்லாமல், வாசலுக்குப் போனால் என்ன அர்த்தம்? எனவும் கேட்டாள். அவனுடன் வாசலுக்கு வந்த வாசுகியும் வசந்தன் பார்த்தப் பெண்ணைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு மனம் திடுக்கின்றது. “அத்தை அத்தான் செய்த வேலையைப் பார்த்தீர்களா? அம்மனுக்கு வைத்திருந்த புடவையே வாசலில் வந்த ஒரு பிச்சைக் காரப் பெண்னுக்குக் கொடுத்துவிட்டாரே? என்னுடைய விரதம் வீணாகியதே” எனத் துக்கம் மேலிட கண்களில் நீர் பெருக வசந்தனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

தன்னுடைய விரதம் வீணானதை உணர்ந்த வாசுகிக்கு ஒரு சில நிமிஷங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளால் தன்னுடைய ஏக்கத்தையும், துக்கத்தையும் தாங்க முடியாது, வசந்தனைப் பார்த்து “ஏனத்தான் இப்படி செய்து விட்டீர்கள். நான் உங்களுக்காகத்தானே அம்மனுக்கு வேண்டிக்கொண்டு விரதம் இருந்தேன். விரதத்தை முடித்துக் கொண்டு, அம்மனுக்கு சார்த்துவதற்காக வாங்கி வைத்திருந்த புடவையை நீங்கள் வாசலில் வந்து பிச்சைக் கேட்ட ஒரு பெண்னுக்குக் கொடுத்துவிட்டீர்களெ? இனி எப்படி நான் அம்மனுக்குப் புடவை சார்த்தி, என்னுடைய விரதத்தை பூர்த்திபண்ணமுடியும்? எப்படியாவது நீங்கள் பழைய அத்தானாக வேண்டுமென்றுதானே நாங்கள் இருக்கிறோம். பகவானுக்கே உங்களிடம் கருணை இல்லாததால்தான் உங்களுக்கு இப்படியெல்லாம் செய்யத் தோணுகிறதோ? எல்லாம் என் விதி. என் அதிர்ஷடம் நன்றாக இருந்தால், என் அப்பா அம்மா ஏன் தீக்கு இரையானார்கள். நன்றாக இருந்த நீங்களும்தான் ஏன் ஒரு விபத்தில் உங்களின் வாழ்வும் நாசமாக வேண்டுமா?” எனப் பலவிதமாகச்சொல்லி தன்னுடைய ஏமாற்றத்தை வெளியிட்டாள். வாசுகியின் ஏக்கத்தைக் கண்ட, சரசாவிற்கும் துன்பம் அதிக மாகியது. அத்தனைக்கும் காரணமாக இருக்கும் வசந்தனின் மீது அவளின் கோபம் எல்லையைக் கடந்தது. தன்னிலை மறந்தவள், தன்னுடைய கையில் வைத்திருந்த துணி உலர்த்தும் கம்பால், வசந்தனை வாசற்படியிலேயே அடிக்கலானாள். திடீரென்று தன்னுடைய அம்மா தன்னை கம்பால் அடிக்க ஆரம்பித்த்தும், வசந்தன் வாசற்படியிலிருந்து வேகமாக உள்ளே வந்து, அங்கு அழுது கொண்டிருந்த வாசுகியின் பின்னால் வந்து அவளைக் கட்டிக் கொண்டே “வாசுகி அம்மா அடிக்கிறா. நான் என்ன செய்தேன். என்னைக் காப்பாற்று” எனக் கூறிக் கொண்டே, அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதான். அப்படியே “அம்மா, எனக்கு வலிக்குதம்மா. அடிக்காதே. நான் இனிமேல் எதுவும் செய்ய மாட்டேன் என்னை ஏன் அடிக்கிறாய்? என ஒரு குழந்தைபோல் அழுத வண்ணம் தன்னுடைய தாயாரைப் பார்த்துக் கெஞ்சினான்.

தன்னுடைய அத்தை வசந்தனை கம்பால் அடிக்கத் துனிந்தவுடன், வாசுகி மிக பலமாக வசந்தனை தன்னுடன் அனைத்துக் கொண்டு, அத்தையின் கைகளில் இருந்த கம்பை வாங்கி இரண்டாக உடைத்துப் போட்டாள். பிறகு அத்தையைப்பார்த்து, “நீங்கள் ஏனிப்படி முரட்டுத்தனமாக அத்தானிடம் நடந்து கொள்கிறீர்கள். இப்படி அத்தானை அடிப்பதால், அந்தப் பெண்னிற்குக் கொடுத்த புடவையை நீங்கள் திரும்ப வாங்க முடியுமா? அல்லது அதைத்தான் மீண்டும் அம்மனுக்குச் சார்த்த முடியுமா? நம்முடைய நல்ல நேரம் இன்னும் வரவில்லை. அதற்காக அத்தானிடம் வருத்தப் படுவது சரியா? என்ன செய்தோம் எனக் கூடப் புரியாமல். உங்களின் கோபத்திற்கோ, நீங்கள் அடிப்பதற்கோ காரணம் தெரியாது, அழும் அவரைப் பாருங்கள். அம்மனுக்கு நான் இன்னும் பக்தியாக, தீவிரமாக விரதம் இருக்க வேண்டுமென விருப்பமோ அல்லது என்னுடைய விரதத்தில் ஏதும் குறை இருக்குமோ? இனிமேல் என்ன செய்ய வேண்டுமென தெரிந்து, அதனைச் செய்யத்தான் வேண்டுமே தவிர, விபரம் புரியாது, தவிக்கும் இந்த வளர்ந்த குழந்தையை தண்டிப்பது சரியல்ல. இதனால் நமக்கு இன்னும் பாவம் தான் கூடும். எனக்காவாவது தயவு செய்து நீங்கள் அத்தானிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அப்படி உங்களுக்கு அத்தான் பேரில் வருத்தம் வரும்போது, அந்த வருத்தத்தை என்னிடம் காட்டுங்கள். நான் உங்களின் அத்தனை தண்டனைகளையும் ஏற்றுக் கொள்ளுகிறேன். இனி மாமாவின் பேரில் ஆணையிட்டுச் சொல்லுங்கள் “அத்தானிடம் வருத்தம் கொள்ளாதீர்கள். அவரிடம் அன்பையும், பரிவையும் தவிர வேறு எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாதீர்கள்” எனப் பாதி கோபமாகவும், பாதி கெஞ்சலாகவும் சொல்லி அத்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கண்களில் நீர் வழிய நின்றாள். சரசாவிற்கும் தன்னுடைய கோபத்தால் தான் வசந்தனிடம் கடுமையாக நடந்து கொண்டது தவறென்றும் பட்டது. அதனால் ஓன்றும் பேசாமல் தலையைக் குனிந்துகொண்டே, தன்னுடைய புடவைத் தலைப்பால் தன்னுடைய கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே, வசந்தனின் அருகில் போய் அவனின் கண்களில் வழிந்த நீரையும் துடைத்து விட்டாள். வசந்தனும் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, விசும்பினான். சிறிது நேரம் சென்ற பின், வாசுகி அத்தையிடம் சென்று, “அத்தை நான் அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு வருகிறேன். அத்தானைப் பார்த்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

கோவிலுக்கு போனவள், பூசாரியிடம் மெதுவாக தன்னுடைய வீட்டில் நடந்ததைச் சொல்லி, தன்னுடைய விரதம் பாதியில் தடை பட்டதால், தான் மீண்டும் விரத மிருக்கலாமா எனவும்கேட்டாள்.

வாசுகி சொன்னதைக் கேட்ட பூசாரிக்கோ ஒன்றுமே புரியவில்லை. “என்னம்மா சொல்கிறாய்? உன்னுடைய விரதம் இடையில் தடைபட்டதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சற்று முந்தானே உங்களின் வீட்டிலிருந்து ஒரு பெண் வந்து, நீங்கள் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லி, ஒரு பச்சை நிறப் புடவையைக் கொண்டு வந்து ஆபிசில் கொடுத்து, ரசீதைக் கூட வாங்காது போய் விட்டாள். நானும் எப்படியும் நீ வருவாய். உன்னிடம் ரசீதை கொடுக்கலாம் என இருக்கிறேன். நீ என்ன வென்றாய் வேறு மாதிரி சொல்லுகிறாய். அப்படியானால் வந்திருந்த பெண்ணை நீங்கள் அனுப்பவில்லையா? அவர்கள் யார்? “ என பூசாரியும் வினவினார். பூசாரி சொன்னதைக் கேட்ட வாசுகிக்கும் தலைச் சுற்ற ஆரம்பித்த்து. பூசாரியிடம், “பூசாரி மாமா, நான் சொன்னதுதான் உண்மை. அம்மனுக்காக நாங்கள் வாங்கி பூஜை அறையில் வைத்திருந்த புடவையைத் தான் அத்தான் வாசலில் வந்து பிச்சை கேட்ட பெண்ணுக்குக் கொடுத்து விட்டார். புடவையைக் காணாமல் நாங்கள் அவரிடம் கேட்ட போது, அவர் ஓன்றும் சொல்லாமல், வாசலுக்குச் சென்று, அந்தப் பச்சை நிறப் புடவையை எடுத்துக் கொண்டு ஒரு கைக்ழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் ஒரு பெண் பிச்சைக்காரியைக் காட்டினார். அவளிடம் நான் அம்மனுக்காக வாங்கி வைத்திருந்த புடவை இருப்பதைப் பார்த்தவுடன் எனக்குப் புரிந்தது. அத்தான் வாசலில் நின்று கொண்டிருக்கும்ப்போது வந்த பிச்சைக்காரப் பெண்னிடம் பரிதாபப்பட்டு உள்ளேயிருந்த அந்தப் புடவையைக் கொடுத்துவிட்டாரேன்பது. அதைக் கண்ட அத்தைக்கு மிகவும் வருத்தமும் கோபமும் வந்தது. தான் என்ன செய்கிறோம் எனக் கூட உணராது, தன் கையில் வைத்திருந்த துணி உலர்த்தும் கோலால் வசந்தனை நன்றாக அடித்து விட்டார். வலியால் துடிக்கும் வசந்தனை நான் தான் சமாதானப்படுத்திவிட்டு, அத்தையிடமும் இனி எக்காரணம் கொண்டும் அத்தானிடம் கடுமையாக இருக்க வேண்டாமென்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டேன். சிறிது நேரம் கழித்தபிந்தான், நானே மனச் சாந்திக்காக கோவிலுக்கு வந்து, உங்களிடம் சொல்லி, பரிகாரம் என்ன செய்யவாம் என கேட்டுக் போக வந்தேன்.

வாசுகி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த பூசாரி, :அம்மா வாசுகி இன்று நடந்ததெல்லாம் அம்மனின் விளையாட்டுப் போல்தான் இருக்கிறது. திடீரென்று ஒரு பெண் வந்து, நீ கொடுத்த அனுப்பியதாகச் சொல்லி, இந்தப் புடவையை என்னிடம் கொண்டு வந்தாள். நானும் அவளுடனே ஆபிசுக்கு வந்து, அந்தப் புடவைக்கு கட்டண சீட்டுப் போட்டு அவளிடம் கொடுக்கத் திரும்பிய போது அந்தப் பெண்ணைக் காணவில்லை. நானும் அவள் பிரகாரம் சுற்றி விட்டு வருவாள் அப்போது கொடுத்து விடலாம் என இருந்தேன். ஆனால் அவளைக் காணாமல், நீ வந்து உங்கள் வீட்டில் நடந்த வேறு ஒரு விஷயத்தைச் சொல்லுகிறாய். எனக்கென்னமோ அம்மந்தான் தானே நேரில் வந்து வசந்தனிடம் தன்னுடைய காணிக்கையை வாங்கிக் கொண்டாள் எனப் படுகிறது. எப்படியோ உன்னுடைய விரதமும் பூர்த்தி யானது, அம்மனும் உன்னிடம் கருணை கொண்டு விட்டாள். இல்லையென்றால் திடீரென்று உங்களின் வீட்டுவாசலுக்கு ஒரு பெண் பிச்சைக்காரி வருவதும், வசந்தன் அவளுக்கு நீ வாங்கி வைத்திருந்த புடவையைச் கொடுத்ததும் அம்மனின் விளையாட்டுத்தான். இனி நீங்கள் எந்தக் கவலையும் பட வேண்டாம். வசந்தன் கூடிய சீக்கிரம் குணமடைவான். நீ இதை அத்தையிடம் சொல்லி அவர்களை வருத்தப் பட வேண்டாமென்றும் சொல். உங்களின் கஷ்டகாலம் தீரும் நேரம் வந்து விட்டது. நீ சந்தோஷமாகப் போ: எனச் சொல்லி, அம்மனின் பாதத்திலிருந்து நிறைய புஷ்பங்களை எடுத்து, குங்குமத்துடன் அவளின் கைகளில் கொடுத்தார்.

பூசாரியின் மூலம் அம்மனின் அருள் தங்களுக்குக் கிடைத்ததை வாசுகியும் உணர்ந்தாள். அவளின் மனமும் சந்தோஷத்தால் பொங்கியது. உடனடியாக வீட்டிற்குப் போய் அத்தையிடம் கோவிலில் நடந்த விஷயங்களைச் சொல்லி, அத்தையையும் ஆனந்தப்படச் செய்ய, வீட்டிற்குச் சென்றாள்.

வாசுகியின் மூலம் அம்மனின் அனுக்கிரஹம் தங்களுக்குக் கிடைத்தது என சரசாவும் நீண்ட நாட்களுக்குப் பின் மன நிறைவு கொண்டாள்.மறுநாள், வசந்தனின் பள்ளி கால நண்பன் குமார் வந்தான். அவன் நீண்ட காலமாக அவர்களைப் பார்க்க வில்லை. அவன் பள்ளிபடிப்பு முடிந்தவுடன், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். பிறகு மேல் படிப்பிற்காக அந்நியநாட்டிற்குச் சென்று விட்டான். அங்கேயே பயிற்சி முடிந்து, சில காலம் பணியாற்றி அனுபவத்துடன், திரும்பவும் தன்னுடைய ஊருக்குவந்திருக்கிறான். வந்தபிந்தான், தன் நண்பர்களின் மூலம் வசந்தனுக்கு நேர்ந்த விபத்தையும், அதன் பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட கஷடங்களையும் அறிந்து கொண்டவன், தானும் ஒருமுறை வசந்தனை நேரில் பார்க்க விரும்பி, அவர்கள் வீட்டிற்கு வந்தான். வந்தவன்,வாசுகியிடம் அவனுக்கு நடந்த சிகிச்சை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டான். அது சம்மந்தமான எல்லா ரிப்போர்ட்டுக்களையும் தீவிரமாகப் படித்தான்.வாசுகியும், அவனிடம் மருத்துவத்திற்குப் பிறகு அவனிடம் ஏற்பட்ட சின்னச்சின்ன மாற்றங்களையும் தெரிவித்தாள். அவளுக்கு வசந்தன் திரும்பவும் தன்னுடைய சக்தியெல்லாம் பெறுவான். பழயபடியே தன்னுடைய தாயாரிடம் பரிவாகவும், வீட்டிற்கு ஒரு பொறுப்பான பிள்ளையாகவும் மாறிவானென தன்னுடைய மனதில் ஏற்படும் தீவிரமான நம்பிக்கையையும் தெரிவித்தாள். குமாரும் அவளிடம்.”வாசுகி என்ன காரணத்தால் வசந்தன் தன்னிலை பெறுவான் என உனக்குள் ஒரு நம்பிக்கை உதயமாயிற்று” எனவும் கேட்டான்.

“குமாரண்ணா, வசந்தனுக்கு விபத்திற்குப் பிறகு பசி என்ற உணர்வுதான் முதலில் இருந்தது. பசித்தால் கூட பசிக்கிறது எனச் சொல்லாமல், அம்மாவிடம் வந்து தன்னுடைய வயிற்றைத் தடவித்தான் காட்டுவார். அப்போது அவருக்குப் பசி எனப் புரிந்து, நாங்கள் அவருக்கு உணவு கொடுப்போம். அவருடைய தேவைகளையெல்லாம் அவரின் அம்மாதான் செய்வார். சிலவற்றை அத்தை வேறு இடத்தில் இருந்தால், நான் உதவி செய்வேன். மறுக்காமல் ஏற்றுக் கொள்வார். அப்படியிருக்கும்போது ஒரு நாள் அவருக்கு தன்னுடைய இயற்கை தேவைக்கு தாயாரை எதிர்பார்த்தார். அன்று அத்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் தூங்கிக்கொண்டு இருந்தார். அதனால் நானே அவரை பின்பக்கம் அழைத்துச் சென்றேன். அவரின் உடலைச் சுத்தம் செய்ய, உள்ளே செல்ல முயன்றபோது, என்னை அனுமதிக்க வில்லை. தானே தன் உடலைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்தார். வந்தவரின் முகத்தில், என்னைப்பார்த்தவுடன் ஒரு வெட்கப்பார்வை பார்த்து விட்டு, தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். எனக்கும் அன்று அவரிடம் ஒரு சின்ன மாறுதலும், அவரின் உணர்ச்சியில் ஒரு முன்னேற்றமும் தெரிந்தது. அவருக்கு பசி என்ற ஒரு உணர்வுமட்டுமின்றி, பாலினக் கூச்சமும் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். திரும்பவும் ஒரு முறை, நான் அவர் திரும்ப தன்னுடைய சக்தியடைய வேண்டி, அம்மனுக்கு விரதம் இருந்தேன். விரதம் பூர்ததியடையும்போது அம்மனுக்கு சார்த்த ஒரு பச்சை நிறத்தில் புடவையும் வைத்திருந்தேன். நான் அன்று விரதத்தை பூர்த்தி செய்து, கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு என்னுடைய காணிக்கையைச் செலுத்த இருந்தேன். அன்றுதான் எங்கள் வீட்டின் முன் ஒரு பெண் பிச்சைகாரி வந்து, தன்னுடைய கையில் ஒரு குழந்தையுடன் பிச்சை கேட்டு வந்திருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் அத்தானுக்கு அந்த ஏழைப் பெண்ணிற்கு எதுவும் செய்ய வேண்டுமென்ற உணர்வு தோன்றியது. அதனால் அவர் உடனடியாக வந்து எங்களிடம் எதுவும் கேட்காமல், அம்மனுக்காக வைத்திருந்த புடவையை கொண்டுபோய் அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டார். நாங்கள் புடவையைச் தேடிய போது, வாசலுக்குச் சென்று தான் புடவை கொடுத்தப் பெண் போவதை எங்களிடம் சொல்லாமல், தானே பார்த்துக் கொண்டபடியே, நாங்கள் வைத்திருந்த புடவையை தான் ஒரு ஏழைக்குக் கொடுத்து விட்டதை சொல்லாமல் சொல்லிக் காட்டினார். இந்த இரண்டு சம்பவங்களால் எனக்கு ஏற்பட்ட நம்பிக்கைத்தான் அத்தான் கூடிய சீக்கிரம் தன்னுடைய சக்திகளை திரும்பப் பெறுவார் என். அத்தானுக்கு பாலின கூச்ச உணர்வும், ஒரு ஏழை பெண்ணிடம் இரக்க உணர்வும் தோன்றியதுதான் என்னுடைய நம்பிக்கைக்கு ஆதாரம். இப்பச் சொல்லுங்கள் குமாரண்ணா, எங்களுடைய அத்தான் உடல்நிலை தேறுவதற்கான சாத்தியங்கள் இருக்கா இல்லையா?” என மிகமிக மென்மையாகவும், உணர்ச்சிகளுடனும் சொல்லி முடித்தாள் வாசுகி.

வாசுகியின் விபரமான பேச்சைக் கேட்ட குமாருக்கும் தன்னுள் ஒரு நம்பிக்கை உதய மாயிற்று. சரசாவிடம் “மாமி நீங்கள் கவலைப் படாதீர்கள். நான் இப்போது இந்த ஊரிலுள்ள ஒரு பெரிய ஆஸ்பத்திரியில்தான் மூளைசம்மந்தமான மருத்துவராகச் சேர்ந்துள்ளேன். இனி நான் என்னுடைய நேரடி பார்வையில் வசந்தனை எங்களின் மருத்துவமணையிலேயே சேர்த்துக் கொண்டு, அவனுக்கு மேற்படி என்ன சிகிச்சைமேற் கொள்ளலாம், அதற்குத் தேவையான சிகிச்சைகளையும் ஆரம்பித்து விடுகிறேன். கூடிய சீக்கிரம்,நாம் நம்முடைய வசந்தனை என்னுடைய பழைய நண்பனாகப் பார்க்கலாம். நீங்கள் தைரியமாக இருங்கள். அம்மன் உங்களையெல்லாம் ஒரு நாளும் கைவிட மாட்டாள்”. இனி வசந்தன் என் பொறுப்பில் இருப்பான். நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” எனக் கூறிவிட்டு, வாசுகியிடம் “வாசுகி உன்னுடைய உறுதி சீக்கிரம் பலிதமாகும். நாங்களெல்லாம் உனக்கு துணையாக இருப்போம்” எனக் கூறி விட்டுச் சென்றான்.

அவன் சொன்னபடியே, அடுத்த நாள் முதல் வசந்தனின் சிகிச்சை ஆரம்பமாகியது. அம்மன் அருளால், அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடையசக்திகளெல்லாம் திரும்பவும் உண்டானது. ஒரு சிறிய அறிவை சிகிச்சை முடிந்தபின், வசந்தனின் உடலில் நல்ல முன்னேற்றமும் தெரிந்தது. தாளாத்துன்ப அலைகளுக்குப் பின் அந்தக் குடும்பத்தில், சந்தோஷ அலைகள் வீசத்தொடங்கியது. அம்மனின் கடைக்கண் பார்வை அங்கு நிறைந்தது.வ்

No comments:

Post a Comment