நிதி, மதி, ...நீதி எது வெல்லும்?
(ஜெயரமணி)
திருச்சி
மாவட்டத்தைச் சேர்ந்த மணச்சனல்லூரில் இருக்கும் ஒரு அரசுமேல்நிலைப் பள்ளியின்
ஆசிரியரான சின்னசாமியின் மனதில் ஒரு கவலை இருந்த்து. அவர் வேலை செய்யும் பள்ளியின்
தலைமைஆசிரியர் இந்த வருடமுடிவில் ஓய்வு பெறுகிறார். அடுத்த்த்தாக யார் வரவேண்டுமென தீர்மானிக்கும்,
அதிகாரிகள், அரசியல் ஆட்சியர்கள் கூடி இன்று பிற்பகலில் முடிவு செய்யப் போவதையும்
அறிந்திருந்தார். மூப்பின்படி அவர்தான் சீனியர்.
ஆனால், கல்வித் தகுதியின்படி, அவரை விட அதிகமாக படித்த இளம் வயதினர்கள்
மூன்று பேரும் அந்த்த் தகுதி பட்டியலில் உள்ளனர். அவர்கள் எல்லாரும் எம்.ஏ.
பிஹடி.பட்டம் பெற்றவர்கள். அவர்களுக்கும் பத்து வருட அனுபவமும் உண்டு. தற்போதைய
அரசு ஆணையின் படி, மேலிநிலை வகுப்புகளுக்கு அதிகமாகப் படித்தவர்களுக்குத்தான்
முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இருக்கு.
மாணவர்களின் வருங்காலத்திற்கு, புதியதாக நிறைய படித்தவர்கள்
தேவைப்படுகிறார்கள். அந்தப் பதவி தனக்கு கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை
இல்லை. அவருக்கு இன்னும் ஐந்து வருடங்கள்தான்
இருக்கு.
அந்த
ஊர் முனிசுபல் சேர்மன் சங்கரதேவரின் மகனும் அதே பள்ளியில், 12ஆம் வ்குப்பில்
படிக்கிறான். அவன் படிப்பில் சுமாருக்கும்
கீழேதான். எல்லா பாடங்களிலும் 20க்கு மேல்
எடுக்க மாட்டான். ஆனால், அவன் சேர்மனின்
மகன் என்பதால், ஆசிரியர்கள் அவனுக்கு எப்படியாவது பாஸ் மார்க் போட்டு
விடுவார்கள். இல்லையென்றால், சேர்மனின்
இளையதாரத்தின் கோபத்திற்கு ஆளாகவேண்டும். அவருக்கு அளவிட முடியாத பேராசை வந்தது.
அதுதான், தன் மகன் பள்ளியிலேயே முதல் மாணவனாக மட்டுமல்ல, மாவட்ட்த்திலேயே முதலாக
வரவேண்டும் என்பதுதான். அவருக்கும்
தெரியும், தன்னுடைய மகனான தினகரனால் முடியாது என. அதற்கென்ன, கணவருடைய பதவி,
ஆட்சிபலம் எல்லாம் இருக்கும்போது, தன்னுடைய ஆசை நிறைவாறாமலா போய்விடும் என்.
அதனால், அவர் முதல் இரவில், கணவர் தன்னைத் தேடி வந்தபோது, வைத்த கோரிக்கை
எப்படியாவது தங்களுடைய மகன் தினகரன், மாவட்ட்த்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற
வைக்கவேண்டியது, அவருடைய சாமர்த்தியம், கடமை, கட்டாயம் என உறுதியாகச் சொல்லி
இருந்தார். இதுவே சேர்மனுக்கு பெரிய
தலைவலியாகி விட்டது. மனைவியிடம் இருந்த
மோகம் அவரை எப்படியாவது அவளுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும் முடிவு செய்தார்.
அப்போதுதான்
ஆசிரியர் சின்னசாமி, அவரை நேரில் பார்த்து பேச வேண்டுமென, அவருடைய மகனின் மூலம்
நேரம் கேட்டு இருந்தார். அவர்மூலம்,
எப்படியாவது தன் மகனுக்கு உதவ முடியுமா எனவும் சேர்மன் யோசித்தார். சின்னசாமி, வந்தவுடனே அவரிடம் பொதுவாக விசாரித்து
விட்டு, அவருடைய கோரிக்கையில் இருக்கும் சிக்கல்களையும் சொல்லி, தான் தன்னால்
முடிந்த வரை, அவருக்காக மற்றவர்களிடம் எடுத்துப் பேசுவதாகவும் சொல்லி, அவருக்கு
கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தினார். பிறகு
மெதுவாக, அவரிடம் “சார்,
==2==
எனக்கு உங்களால் ஒரு சின்னக் காரியம் ஆக
வேண்டும். செய்வீர்களா?” எனக் கேட்டதும், சின்னசாமியும் “ஐய்யா, நீங்கள் சொல்லி,
நான் மாட்டேன் என்றா சொல்வேன். நீங்கள் கேட்பது எதுவனாலும், நான் கட்டாயம்
முடித்துத் தருகிறேன். கவலை வேண்டாம்சொல்லுங்கள்” என அவருக்கு உறுதியும்
கொடுத்தார்.
“ஒன்று
மில்லை, என் மகன் தினகரன் படிப்பில் எப்படி இருக்கான், இந்த வருடம் நல்ல
மார்க்கில் தேர்ச்சி அடைவானா? “ எனவும் கேட்டார்.
கவலைப்படாதீர்கள், நான் அவனுக்குத் தனியாக உங்கள் வீட்டிற்கே
வந்து, பாடங்களைப் புரியும்படி சொல்லிக் கொடுக்கிறேன். அவனை நல்ல மார்க் எடுக்க வைக்கிறேன்” எனவும் உற்சாகத்துடன் சொன்னார்
சின்னசாமி.
“அவனுடைய
தாயாருக்கு, மாவட்ட்த்திலேயே முதல் மாணவனாக அவன் தேர்ச்சி பெறவேண்டுமென்பதுதான்
ஆசை. அதை நீங்கள்தான் எப்படியாவது செய்ய வேண்டும்” எனச் சொல்லிவிட்டு, சிரித்தார்.
சின்னச்சாமிக்குத் தலை சுற்றியது.
வகுப்பில் 20 மார்க்கூட எடுக்காதவனை, எப்படி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக
தேர்ச்சி பெற வைப்பது என.
சின்னசாமி,
மனம் விட்டு சொல்லுங்கள். உங்களின்
பள்ளியில் எந்த மாணவன் எல்லா பாடத்திலும் முதல் மார்க் எடுக்கிறான்” என. அதற்கு
சின்னசாமி, “ஐயா, நம்ம ஊர்க்கோடியில் செருப்புத் தைத்துக் கொடுப்பானே, சின்னானின்
பையன் மாரிதான் எல்லா வகுப்பிலும், எல்லா பாடத்திலும் முதல் மார்க் எடுப்பான்.
சின்னானும், இரண்டு வருஷத்திற்கு முன்பு பரவிய விஷஜுரத்தில் இறந்து விட்டான். பாவம், அவனுடைய மனைவி அஞ்சலைதான், அக்கம்பக்கத்தில்
இருப்பவர்களுக்கு எடுபிடி வேலை செய்து, ஊராரின் துணிகளையெல்லாம் தோய்த்துக்
கொடுத்து, வாழ்கிறாள். அவளுக்கு
எப்படியாவது தன்னுடைய மகனை நல்லபடியாக படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு
வரனும்னு கனவு. அதற்கேற்றபடி, மாரிக்கும் கற்பூர புத்தி. வகுப்பில் பாட்த்தை சொல்லும்போதே, கவனத்தில்
சிறிதும் சிதறவிடாமல், கவனித்துக் கொள்வான்.
ஒருமுறை காதில் கேட்டாலே போறும், அது அப்படியே அவன் மனதில் திடமாகப்
படிந்து விடும். அது மட்டுமல்லாது, அவனும்
தினமும் சிறிது நேரம்கூட வீணாக்காமல் படிப்பான்.
படிப்பைத் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. என்னிடம் சொல்வான் “ஐயா, நான் இந்தவருடத்துடன்
படிப்பை முடிக்க விரும்பவில்லை. மேலும்
படித்து, ஒரு கலைக்டராக வரவேண்டும்.
அதற்கு ஏற்ப, எப்படியாவது இந்த வருஷத்தில் நான் இந்த மானிலத்திலேயே முதல்
மாணவனாக வரவேண்டும். அப்பத்தான், எனக்கு
ஒரு நல்ல அரசு கல்லூரியில் பட்டப் படிப்பிற்கு வழி கிடைக்கும். என் அம்மா ஏழை. எங்களால் அதிகம் செலவு செய்ய
முடியாது. என் அம்மா பாவம், நாளைக்கு 20
மணினேரம் உழைக்கிறார். இன்னும் கொஞ்ச
காலத்தில், நான் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து அவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள
வேண்டும். அதுதான் என்னுடைய இலட்சியம்.
இதற்காகத்தான், நான் ஒரு வினாடிகூட வீணாக்காமல் படிக்கிறேன். நான்
நல்லபடியாக தேர்ச்சி பெறவேண்டுமென எனக்கு ஆசி கூறுங்கள்” என என்னிடம்
சொல்லுவான். மிகவும் நல்ல பிள்ளை. எனக்கும், அந்தப் பிள்ளை நல்ல நிலைக்கு
வரனும்னுதான் ஆசை. நான்கூட உங்களிடம்தான்,
அவனுடைய மேற்படிப்பிற்காக உதவி கேட்க வேண்டுமெனவும் இருக்கிறேன்.” எனவும்
சொன்னார்.
அதைக்
கேட்டவர் “அதெல்லாம் சரிதானப்பா. ஆனால்,
ஒன்றை யோசித்துப் பார்த்தாயா. நம் ஊரில்
செருப்புத் தைத்துக் கொடுத்தவனின், மகன் இந்த ஊருக்கே கலைக்டராக வந்தால், நீங்கள்
எல்லாரும் அவன் முன் கைகட்டி நிற்க வேண்டியிருக்குமே. அவன் சாதி என்ன. அவன் கலைக்டராக, நம்மூர் கோவிலுக்குள்
நுழைந்தால், அதை நம்மால் தடுக்க முடியுமா? அவன் ஆசைப் படலாம். அதற்குத் தகுதி வேண்டாமா? நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். நீ
எப்படியாவது, அந்த மாரியை விட்டு விட்டு, என்னுடைய மகன் தினகரந்தான் பள்ளியில்,
மாவட்டத்தில் முதல் மார்க் எடுக்க வேண்டும். நீங்கள் எப்படிச் செய்தாலும், உங்களுக்கு ஒரு
கஷ்டமும் வராமல், நான் பார்த்துக் கொள்ளுவேன். கவலை விட்டு விடுங்கள், வரும் ஆண்டு
முதல் நீங்கள்தான், நமது அரசு மேல்னிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். பார்த்துச்
செய்யுங்கள்” எனச் சொல்லி விட்டு, அவருக்கு போவதற்கு உத்திரவும் கொடுத்தார். அப்பத்தான், அவருடைய மனைவி அவரிடம் வந்து அவரை
உள்ளே அழைத்தார். உள்ளேச் சென்றவர்,
கையில் ஒரு சின்னத் தோல்ப்பையைக் கொடுத்தார்.
அதைத் திறந்து பார்த்தால், அதில் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. பயப்படாதீர்கள். எனக்குத் தெரியும், உங்களுடைய பெரிய மகளின்
திருமணத்திற்காக, மாப்பிள்ளை வீட்டார், வரதட்சினை, சீர் வகைகள் என இரண்டு
இலட்சத்திற்கு கேட்டிருப்பது. உங்களின்
மனைவி, என் மனைவியிடம் கோவிலில் சொல்லி, வருத்தப்பட்டார்களாம். இனிமேல், உங்களின் குடும்பம் என்னுடையது. உங்கள் மனைவி என் சகோதரி. நீங்கள் திருமணத் தேதியை நிச்சயம் செய்யுங்கள்.
நான் துனை இருக்கேன்” எனச் சொல்லிவிட்டு, அவரின் கையில் அந்தப் பையைத் திணித்து
விட்டு, அவரை அனுப்பி வைத்தார். சின்னசாமியின் கையில் மட்டுமல்ல, மனதிலும் பாரத்தை
ஏற்றி வைத்து விட்டார்.
வீட்டிற்கு
வந்தவர், உடனடியாக அந்தப் பையைத் தன்னுடைய பீரோவின் அடியில் வைத்து விட்டார்.
மெதுவாக, தன்னைச் சுத்தம் செய்து கொண்டு, மாலை நேர பூஜைக்கு அமர்ந்தார். தன்னுடைய மனதில் இருக்கும் பாரத்தை பகவானிடம்
வைத்தார். தான் இருபத்து இரண்டு வருஷங்கள் பனியாற்றிய உத்தமான ஆசிரியைத்
தொழிலுக்கு ஒரு பங்கம் வருமோ? தன்னிடம்
படிக்கும் எல்லா மாணவர்களையும் ஒன்று போல்தானே, தன் மக்களாக நினைத்து
வந்திருக்கிறேன். இப்ப, என்னுடைய சுய நலத்திற்காக, ஒரு மாணவனின் எதிர்காலத்தை
அழிப்பதா? பள்ளியில் தேர்ச்சி
பெறாவிட்டாலும், சேர்மனின் மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால், படிப்பைத் தவிரவேறு எந்த ஒரு ஆதாரமும்
இல்லாத மாரியின் எதிர்காலம், அவனுடைய கல்வியினால்தானெ கிடைக்கும். அவனுடைய விடா முயற்சி, ஆர்வம், தளரா உழைப்பு
எல்லாமே தெரியுமே? கீழ்நிலையில் இருக்கும்
ஒரு மாணவனைத் தானே ஆசான் தூக்கி விடவேண்டும்.
மாறாக, அவனுடைய அழிவிற்காகவா நாம் ஆசிரியராக இருக்கிறோம். என்னபதவி உயர்வு வேண்டும். எல்லாருக்கும், ஒழுக்கம், நேர்மை என போதித்து
விட்டு, தான் இன்று அதர்மத்திற்கு அடிமையாக இருப்பதா? என்னைரு தாலும்,இன்னும்
ஐந்து வருஷங்கள் தானே என் பதவி, பட்டமெல்லாம்.
அதுவும், நான் ஐந்து ஆண்டுகாலம் கட்டாயம் வாழுவேன் என்பது என்ன நிச்சயம்.
வேண்டாம், பதவி உயர்வுக்காக, தரம் தாழ்ந்து நிற்க வேண்டாம். ஆசான் தப்பு செய்தால், கலைத் தெய்வமான சரஸ்வதி
மன்னிக்க மாட்டாள். கட்டாயம் தண்டனை
உண்டு. மனிதர்களிடம் தப்பை
மறைக்கலாம், ஆனால், தெய்வத்திடம்
முடியுமா? வேண்டாமிந்த பாவப்பட்ட
ஆசை. நாளைக்கேச் சென்று சேர்மனிடம்
பணிவாக,என்னால் இந்த்தைய பாவத்தைச் செய்ய முடியாது. மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்கு பதவி உயர்வு இல்லையென்றாலும் சரி. எனது தொழிலுக்கு, மனச்சாட்சிக்கு மாறாக நான்
எதுவும் செய்ய மாட்டேன்” எனச் சொல்லி, அவர் கொடுத்த அந்த பாவச்சுமையை
அவரிடமேதிருப்பிக் கொடுத்து விடவேண்டும், எனவும் மனதில் முடிவெடுத்தார்.
தாம்
இன்று தம்மால் முடியாதென்றால், கட்டாயம் சேர்மன் வேறு வழியில் தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்வார். அதை நம்மால்
எப்படித் தடுக்க முடியும். ஒரே வழிதான், தானே செய்வதாக அவரிடம் பொய்யான வாக்குச்
சொல்லி, கடைசிவரை அவரை வேறு வழியில் சிந்திக்க விடாமல்செய்து விட வேண்டும். கடைசியில், தான் ஒன்றும் செய்யவில்லை எனத்
தெரிந்து, தன்னைத் தண்டித்தாலும், பரவாயில்லை, ஒரு ஏழையின் எதிர்காலம் நம்மால்
இருளக் கூடாது. அதனால், அந்தப் பாவப் பணம்,இங்கேயே இருக்கட்டும்,. அதனால், தனக்கு என்ன கஷ்டம் வந்தாலும், பகவான்
துனை இருப்பார். தம்முடைய தொழில் தர்ம்ம் நம்மைக் காக்கும் எனத் திடமான முடிவுக்கு
வந்தார்.
தான்
ஆசிரியன் என்பதை மறக்காமல், தினகரனுக்கும் தனிக் கவனம் செலுத்தி, அவனின் மனதில்
பதியும்படி பாடங்களை எடுத்தார். நிறைய
வீட்டுப் பாடங்களைக் கொடுத்து அவனைத் தயார் படுத்தினார். அவனுக்குள்ளும் படிக்க வேண்டுமென ஆர்வத்தையும்
வளர்த்தார். சேர்மனும், சின்னசாமி தன்
மகனிடம் அதிக அக்கறைக் காட்டுவதைக் கண்டு மகிழ்ந்தார். சமயம் கிடைக்கும்
போதெல்லாம், அவரிடம் திடீரென தினகரன் தேர்வில் அதிக மார்க் எடுப்பதைப் பார்த்து
யாருக்கும் எந்த சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தானே அவனை ஊக்குவித்துப்
படிக்கச் செய்வதாகச் சொல்லிவிட்டார். அவ்வப்போது சேர்மனின் மனைவி அவரிடம் “என்
பிள்ளை விஷயத்தில் நீங்கள் ஏதாவது திரிசமன் செய்தால், நான் சும்ம இருக்க மாட்டேன்.
அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” எனவும் அடிக்கடிச் சொல்லி வந்தார். தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும்போது, தினகரன்
தன் பருவத் தோழர்களுடன், சைக்கிளில் போட்டி போட்டுக் கொண்டு பந்தயம் செய்து
கொண்டு, கண்மண் தெரியாமல் ஓட்டி, எதிரில் இருந்த ஒரு பெரிய மரத்தில் மோதி, தலையில்
பெரியக் காயம் பட்டு, நினைவு தப்பி விழுந்தான்.
விஷயம் தெரிந்து, அருகில் இருப்பவர்கள் அவனை உடனடியாக சேர்மன் வீட்டுக்குத்
தூக்கிச் சென்று, அங்கிருந்து அடுத்த ஊரில் இருக்கும் ஒரு தனியார்
ஆசுபக்த்திரியில் சேர்த்தார்.
அடிபட்டதால், அதிர்ச்சியுடன், வலியும் அதிக மாக இருக்கிறதெனச் சொல்லி, அவனை
அங்கேயே தங்க வைத்து வைத்தியம் செய்தார்.
==6==
தலையில் மூன்று தையலும் போட்டார்கள். கட்டு பிரிப்பதற்கும், அவன் எழுந்து நடமாட
பத்து நாட்கள் ஆகுமெனவும் சொல்லி விட்டார்கள்.
தன்னுடைய மகன் தேர்வு எழுதுவானா எனவேத் தெரியாது சேர்மனும், அவருடைய மனைவியும்
தவித்தார்கள். டாக்டர் அவர்களிடம் “இப்ப
அவனுடைய உடல்னலம்தானே முக்கியம். இப்ப
பரிட்சை எழுதாவிட்டால், அடுத்த செப்டம்பரில் எழுதி தேரலாம். அவனுக்கு மருத்துவக் காரணத்தால், இந்த வருட
பரிட்சை எழுத இயலாது என நாங்கள் ஒரு சர்டிபிகேட் கொடுத்தால் போதும். எனச் சொல்லி
தேற்றினார்கள். சேர்மனின் மனதில் ஒரு
குற்றௌணர்ச்சியும் எழுந்த்து. தன்னுடைய பண
பலத்தால், பதவி பலத்தாலும், மனைவியிடம் உள்ள மோகத்தாலும், தந்தையற்ற ஒரு ஏழைச்
சிறுவனை என் மகனுக்கு எதிரியாக நினைத்த்து எத்தனை பாவமானது. அந்தப்பாவமானச் செயலுக்குத்தான் பகவான் தன்
மகன் மூலம், தன்னை தண்டித்து விட்டாரா?
தினகரன் எப்படி படித்தாலும், நம்மால் அவனை மேலே படிக்க வைக்க வசதி உண்டு.
ஆனால், மாரிக்கு, அந்த வசதி இல்லையே.
சின்னசாமியிடம்
பேச வேண்டுமென இருந்தவரைப் பார்க்கவே சின்னசாமி வந்தார். வந்தவர் தினகரனிடம் அன்பாக பேசினார். “தினா, உனக்கு ஒன்றும் இல்லை. இன்னும் நாங்கு
நாளில் நீ எழுந்து நடக்கலாம். நான்
உன்னுடன் துனையாக இருந்து, நீ பரிட்சை எழுத வைக்கிறேன். நீ நன்றாகப் படித்திருக்கிறாய். நான் இங்கே வந்து, உனக்கு பாடங்களை வாயால் சொல்லுகிறேன். மாரியும், உன் அருகில் இருந்து உனக்குப்
பாடங்களைப் படித்துச் சொல்லுவதாக சொல்லுகிறான். அதனால், நீ தைரியமாக இரு” என
அவனுக்கு பலவகையில் தைரியம் சொல்லி, அவனைத் தெளிவு படுத்தினார். மாரியும் வந்து,
அவனிடம் பரிவாக, பாடங்களையும் அதற்கான விளக்கங்களையும் எடுத்துச் சொன்னான். பக்கத்தில் இருந்து, அதைக் கவனித்த சேர்மனின்
மனதிலும், இத்தனை அறிவுள்ள சிறுவனை, நான் எதற்காக வெறுத்தேன். நல்ல காலம், அதிகமாக எந்த தப்பும் பண்ணாமல்,
பகவான் என்னைத் தண்டித்து, காப்பாற்றி விட்டார் எனவும் மனதிற்குள்
சொல்லிக்கொண்டார்.
சின்னசாமியிடமும்
“சின்னசாமி, நான் உங்களிடம் சொன்னதை மறந்து விடுங்கள். கல்வி எல்லாருக்கும் உரியது. அதற்கு செல்வச் செழிப்போ, பதவியின் துனையோ
கொண்டு, அதனை அழிக்க முற்பட்டால், தெய்வம்
மன்னிக்காது. என் பேராசையால் எழுந்த கெட்ட
ஆசையை நான் மறந்து விட்டேன். உங்களுக்குக்
கொடுத்த பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டாம், உங்களின் மகளுக்கு என்
திருமண உதவியாக இருக்கட்டும். மாரியின்
மேற்படிப்பு இனி என் பொறுப்பு. எனக்கு,
தினகரன் போல் மாரியும் ஒரு பிள்ளைஎன எடுத்துக் கொள்கிறேன் . எனக்குத் தெரியும்,
என்னுடைய கோரிக்கையினால் நீங்கள் எத்தனை மன வேதனை அடைந்தீர்கள் என். ஒரு
ஆசிரியனுக்குத் தகாத காரியத்தை நான் உங்களைச் செய்யச் சொன்னதற்கு காரணம், என்னிடம்
உள்ள பதவி, பட்டம், பணம்தான். உங்களுடைய
ஏழ்மை நான் பயன் படுத்தப் பார்த்தேன். என்னை மன்னித்து விடுங்கள், நீங்கள் எந்த வித மன உறுத்தலின்றி உங்களின்
தொழிலைச்
==6==
செய்யுங்கள்.
ஆசிரியர் தொழிலின் உயர்வை நான் புரிந்து கொண்டேன்: எனச் சொல்லி, அவரை மனத்
சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தார்.
மாரியின்
ஆசைப்படியே, தேர்வில் மாவட்ட்த்திலேயே முதல் மாணவனாக வந்தான். அவனால், பள்ளியே
பெருமை பெற்றது. தினகரனும், நல்ல
மதிப்பெண்களுடன் தேர்வு பெற்றான். தன்னை வணங்கிய மாரியைத் தூக்கி, தன்னோடு
அனைத்துக் கொண்ட ஆசிரியர் சின்னசாமி, “மாரி, சரஸ்வதி உன்னைக் கைவிட மாட்டாள்.
சத்தியமும், தர்மமும் எப்பவும் உனக்குத் துனை இருக்கும்” என ஆசிர்வதித்தார்.
அவருடைய மனதிற்குள் “என்னுள் நடந்த போராட்ட்த்தில், எங்கே நிதிமகள், மதிமகளையும்,
நீதித்தாயையும் அழித்து விடுவாளோ என தன்னுள் எழுந்த பயத்திற்கு இன்று பதில்
கிடைத்து விட்டது. நீதித்தாயின் முன் எந்த
சக்தியும் எதிர்க்க முடியாது. தர்மம்தான்
வெல்லும். தக்க சமயத்தில், தனக்குத்
துனை நின்று தன்னுடைய தொழிலுக்குத் துரோகம்
செய்வதைத் தடுத்த அந்த பரம்பொருளுக்கு மனதிற்குள் ஆயிரம் துதிகளைப் பாடிப்
போற்றினார். அவரின் கண்களில் நீர்
நிறைந்தது.
No comments:
Post a Comment