Tuesday, 21 January 2014

மூன்றாம் வகுப்பில் ஒரு நாள்

 

(ஜெயரமணி)

மூன்றாம் வகுப்பில் ஒரு நாள்

(ஜெயரமணி)

அன்று மாநகராட்சி பள்ளியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியர், தன்னுடைய தாயாரின் திடீர் மரணத்தால் அன்று பள்ளிக்கு வர இயலவில்லை. அவரின் நிலையை அறிந்த தலைமை ஆசிரியர், அங்கிருந்த மற்ற ஆசிரியர்களிடம் சொல்லி, அந்த மூன்றாம் வகுப்பையும் கவனிக்கச் சொல்லி விட்டு தன் சக ஆசிரியரின் வீட்டு துக்கத்திற்கு சென்று விட்டார். போகும்போதே அவரால் திரும்பவும் வர இயலாது எனவும் சொல்லிச் சென்றார்.. அதனால், மற்ற ஆசிரியர்களும் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு, அவர்களுடைய வகுப்பிலேயே இருந்து கொண்டு, மூன்றாம் வகுப்பில் உள்ள மானிடரான கதிரவனையே வகுப்பில் மற்றவர்கள் சத்தம் செய்யாது, ஏதாவது பாடம் படித்துக் கொண்டோ, அல்லது வேறு ஏதும் எழுத்து வேலைச் செய்து கொண்டே இருக்குமாறு சொல்லி விட்டுச் சென்று விட்டார்கள்.

முதலில் கதிரவன் எழுந்து “இன்று என்ன பாடம் படிக்கலாம். வகுப்பில் இருப்பவர்களின் விருப்பத்தைச் சொல்லுங்கள்” எனவும் கேட்டான்/ அவ்வளவுதான் இருக்கும் மாணவர்கள் அனைவவரும் தங்களுக்கு விருப்பமான பாடத்தையே படிக்கலாமென முதலில் சொல்ல, அப்படியே எல்லாரும் சிறிது நேரம் படிக்கலானார்கள். நேரம் சென்றது, மாணவர்களில் ஒருவன் எழுந்து :”இன்றுதான் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. ஏதாவத் நமக்குள்ளேயே அமைதியாக விளையாடிக்கொண்டிருக்கலாம்” எனக் கேட்க,கதிரவன் “அதெல்லாம் கூடாது. நமக்கு அடுத்தவாரம் பரீட்சை வருகிறது. அதனால் எல்லாருமே ஒழுங்காக சத்தமில்லாமல் படிக்க வேண்டுமெனச் சொல்லி, எல்லா மாணவர்களும் தங்களுடைய கணக்கு நோட்டை எடுத்து, கடைசியாக நடந்த பாடத்திலுள்ள கணக்குகளைப் போடலாம்” எனவும் சொல்லி, தானும் போட ஆரம்பித்தான். பத்து நிமிஷம் சென்றது. வகுப்பில் சிறிய சலசலப்பு வந்தது. முதலில் இரு மாணவர்கள், மற்றவர்கள் போடும் கணக்குகளையெல்லாம் தப்பு எனச் சொல்ல, மற்ற இரு பேர்கள், அப்படியென்றால், நீ போடும் கணக்கு மட்டும் சரியா. எனக்குத் தெரியாத நீ பக்கத்திலிருப்பவனைப் பார்த்துகாப்பி அடிப்பது எனவும் சொல்ல, சண்டை பெரியதாகியது.

உடனேயே பக்கத்தில் இருப்பவர்கள் இரு பிரிவாக மாறி, ஒருவரை ஒருவர் ஏசுவதும், கேலி பண்ணுவதும் என சப்தம் அதிகமாகியதால், கதிரவன் எல்லாரையும் ஒரு ஸ்கேலை எடுத்துக் கொண்டு, “உடனடியாக அமைதியாக இல்லையென்றால், என்னிடம் எல்லாரும் அடி வாங்க வேண்டுமெனவும்” பெரிய குரலில் அதட்டினான். அப்படி அவனின் அதட்டலைக் கேட்ட, வகுப்பில் முரட்டுத்தனத்திற்குப் பேர்போன மாரியப்பன் ”என்னடா, நீ பெரிய்ய இவனா? உன்னைப்பற்றித் தெரியாதா? நீ எப்படி மானிடர் ஆனாய் என” எனவும் கேட்க, கதிரவன் உடனேயே “நாந்தான் இன்று இந்த வகுப்புக்குத் தலைவன். ஆசிரியர் இல்லையென்றால், எனக்குத்தான் நீங்கள் கட்டுப் பட வேண்டும். என்னைக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது” எனச் சொல்லி விட்டு, எழுந்த பேசிய மாரியப்பனை “நீ அமைதியாக இருப்பதானால் இங்கு இரு. இல்லையென்றால் வெளியேப் போ.” எனவும் சொல்லி, மற்ரவர்களையும் ஒரு முறைக் கோபமாகப் பார்த்து விட்டு, தன்னிடத்தில் அமர்ந்தான். அவனுடைய நண்பர்கள் இருவரும் அவனிடம் “நீ அப்படி கண்டிப்பாக இருந்தால்தான், அந்தப் பையன் அடங்குவான். அவனின் திமிரைக் கண்டு நாம் பயப்பட வேண்டாம்”எனவும் அவனுக்கு உசுப்பேத்தி விட்டார்கள். அப்படியே பகல் நேரம் முடிக்கும் மணியும் அடித்து விட, எல்லாரும் போய் விட்டார்கள்.

மறுபடியும் மாணவர்கள் வந்த போது, காலையில் இருந்தவர்களைவிட நான்கைந்து பேர் குறைந்திருந்தார்கள். கதிரவன் மற்றவர்களிடம் அது பற்றி கேள்வி கேட்டபோது, ஒரு சிலர், “நீதான் காலையில் அவர்களிடம் கோபமாகப் பேசினாயே. அப்படி இருக்கும்போது அவர்கள் இ[ப்ப உன்னிடம் சொல்லிக்கொண்டா போவார்கள்.:எனக் கேலியாகவும் சிறிது கோபமாகவும் பதில் சொல்ல, அவனுக்குச் சங்கடமாகியது. அவர்களிடம் :நானாகவா இங்கு மானிடராக இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்?. நீங்களாகத்தானே சேர்ந்து என்னைத் தேர்ந்து எடுத்து விட்டு, இப்ப என் சொற்படி கேட்கவில்லையென்றால் என்ன அர்த்தம்:எனவும் வருத்தத்துடன் சொல்லி விட்டு மௌனமாக அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து, வராமல் இருந்த அந்த நான்கைந்து பேர்களும் வகுப்புக்குள் வந்தார்கள்.

மற்றவர்கள் எல்லாரும் மௌனமாகவே ஏதாவது ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு, வரைவதோ, அல்லது கேலிசித்திரங்கள் தீட்டுவதோ எனக் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மிகவும் சாதுவான, படிப்பில் ஆர்வமுள்ளவன் எழுந்து “இன்று வகுப்பாசிரியர் இல்லையென்றால், நாம் இப்படி நாள் பூராவும் ஒன்றும் படிக்காமல் வீணாக்கலாமா. எல்லாரும் சேர்ந்து ஏதாவது ஒரு பாடத்தைப் படிக்கலாமே” எனக் கேட்கவும், அதற்கு ஒப்புக் கொண்ட சிலர் “ஆமாம். எல்லாருமாக படிக்கலாம். இன்று சயின்ஸ் படிக்கலாம் என சிலர் சொல்ல, வேறு சிலர் “அது போர். வேண்டாம். தமிழ் செய்யுள் படிக்கலாம்” எனக் கூற, வேறு சிலர் “போடா பண்டிதா, உனக்குத் தமிழ் நன்றாக வரும் என்பதால் எங்களுக்கும் அதையே படிக்கச் சொல்லுகிறாயா. வேண்டாம்” நாம் ஆங்கிலம் படிக்கலாம். நேற்று சார் நடத்திய பாடத்தையே திரும்பவும் படிக்கலாமேனவும் சொல்லி, அவர்கள் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்தார்கள்.

முரளி சொன்னவுடனே, ஆங்கிலத்தில் அதிகமாக ஈடுபாடு இல்லாத சிலர் எழுந்து “என்னடா நீங்கள் எல்லாம் நன்றாக ஆங்கிலம் படிப்பதால் அதையே எப்பவும் படிக்க வேண்டுமெங்கிறீர்கள். நீங்கள் எல்லாம் “பிரிட்டிஷ்ல் பொறந்தவர்களா? அதிகமாக வெள்ளைக்காரனைப் போல ஆங்கில் மோகம் கொண்டு இருக்கிறீர்கள். தாமஸ் சொன்னதுபோல் நாமெல்லாம் தமிழே படிக்கலாம் எனக் குரல் கொடுக்க, வேறு சிலர் எழுந்து “நீங்கள் யார் தீர்மானம் செய்ய. எங்களையும் கேட்க வேண்டாமா? எங்களுக்கு இப்ப டிராயிங்க பன்னத்தான் பிடிக்கும். எல்லாரும் சேர்ந்து ஆளாலுக்கு சத்தம் போட பக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியர் அங்கே வந்து அவர்களையெல்லாம் கண்டித்து உட்காரச் சொல்லிச் சென்று விட்டார்.

அந்த ஆசிரியர் சென்றபின், கதிரவன் எழுந்து மற்றவர்களைப் பார்த்து “இப்போ உங்களுக்குத் திருப்தியா? வகுப்பில் ஆசிரியர் இல்லையென்றால் நாந்தானே உங்களுக்குக் தலைவனாக இருக்க வேண்டியவன். அதற்கு ஒத்துக் கொண்டுதானே என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். இன்று காலையில் வந்தவுடன் நம்மையெல்லாம் நேற்றே ஆசிரியர் என்னச் சொல்லிச் சென்றார் எனபதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தித்தானே, நமக்கு நேற்று எடுத்த கணக்குகளையெல்லாம் மீண்டும் ஒருமுறை போட்டு பார்க்கச் சொன்னேன். ஆனால் அது பிடிக்காதவர்கள் செய்த கலாட்டாக்களினால், நம்முடைய இன்றைய பாடம் வீணாகியதே. நாளை வாத்தியார் வந்து கேட்டால் யார் என்ன பதில் சொல்வீர்கள்? உங்களால் எனக்குத்தான் கெட்ட பெயர்.” எனச் சொல்லி தன்னுடைய வருத்தத்தை ச் சொல்லிவிட்டு தன்னுடைய இடத்திற்குச் சென்று அமர்ந்தான்.

கதிரவனின் வருத்தத்தைக் கண்ட மற்றவர்கள் எல்லாருமே சேர்ந்து முதல் முதலாக எழுந்து கணக்கு வேண்டாமெனச் சொன்னவனைப் பார்த்து “இப்படியெல்லாம் நடந்தது உன்னால்தான். நீ மட்டும் எதுவும் சொல்லாமல் உனக்குனிஷ்டமில்லையென்றால் கணக்குப் போடாமல் சும்மா இருந்திருந்தாலே நல்லாயிருக்கும். அ;ப்படிச் செய்யாது, நீயும் உன்னைத் தொடர்ந்து மற்றவர்களும் செய்த வாக்குவாதத்தினால்தான் இன்றைய நம்முடைய ஒரு நாள் பள்ளி நேரம் வீணாகியது. அட கணக்குத்தான் முழுசாக போடவில்லை. வேறு ஏதாவது ஒரு பாடமாவது அக்கறையாக படித்தோமா> இல்லையே. நாய் வாய் வைத்தது [போல் ஆளாலுக்கு ஒரு பாடம் படிக்க யோசனைச் சொல்லி, அதையும் முழுவதுமாக செய்யவில்லை.”எனக் குறை கூறிக் கொண்டிருக்கு போதே அன்று மாலை வகுப்புகளும் முடிந்து, மணி அடித்து விடவே, மாணவர்கள் எல்லாரும் சந்தோஷத்துடன் கத்திக் கொண்டே வகுப்பை விட்டு வெளியே ஓடினார்கள்..

ஒரு நாளிலேயே தங்களுடைய ஆசிரியர் இல்லையென்றால்கூட ஒழுங்காக இருக்க இயலாத விளையாட்டுப் பையங்களின் பள்ளியின் ஒருநாள் வகுப்பும் முடிந்தது.

No comments:

Post a Comment