(ஜெயரமணி(
வாழ்வு தந்த தெய்வம்
(ஜெயரமணி)
இப்போ மாலை நேரம். வைதேஹியும், மயூரியும் பிரகதீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ள சிவகங்கை பூங்காவினுள் சென்று, அங்கு ஒரு கோடியில் இருந்த பெரிய வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த சினேகிதிகள். வைதேஹி திருமணமானவள். மயூரி சமீபத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து யாருமற்றவளாகி, தனியாக இருப்பவள். அவள் பத்து வகுப்பிற்குப் பின், அங்குள்ள ஒரு மெடிக்கல் லாபில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறாள். வருமையான குடும்பநிலை. அவளின் வருமானத்துடன், வாடகையில்லாமல், ஒரு சிறிய ஓடுப்போட்ட வீட்டில் வசித்து வருகிறாள்.அது ஒன்றுதான் மயூரிக்குத் தன் தாய்வழி வந்த சீதனம். அவளுக்கு வைதேஹியைத்தவிர வேறு யாருடனும் அதிக ஒற்றுதல் இல்லை. அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச அந்த சிவகங்கை பூங்காதான் இடம்.
வந்தவுடனே வைதேஹி கேட்டாள் :”மயூ, நீ சொன்னபடியே பரிசோதனை செய்து பார்த்தாயா? என்ன முடிவு தெரிந்தது?” எனப் அதற்கு மயூரி முதலில் ஒரு சில நிமிடங்கள் பதில் ஒன்றும் சொல்லாது மௌனமாக இருந்தாள். பிறகு மெதுவாக சிறு விம்மல்களுடன் சொல்ல ஆரம்பித்தாள். “வைதெஹி, நான் பயந்த படிதான் ஆகியிருக்கிறது. இப்போது என்னுடைய நிலைமை மிகவும் கேவலமாகி விட்டது. தாய் தந்தை இல்லாத ஒரு பெண், இப்படிப்பட்ட ஒரு அவமானத்திற்கு ஆளாகியபின், அவளிடம் யாருக்குத்தான் கரிசனம் இருக்கும். இனி இந்த ஊரில் என்னால், என்னைப் பெற்றவர்களின் மரியாதையும் போய் விட்டது ஏழையாக இருந்தாலும், இருவரும் ஒரு கௌரவத்துடன் வாழ்ந்தார்கள். என்னால் இன்று அந்தக் கௌரவமும் போய்விட்டது..இனி நான் எப்படி இந்த ஊரில் இருக்க முடியும். இனி என்னுடைய அத்தையைஎப்படி பார்க்க முடியும். ஏற்கெனவே என் மீது அவர்கள் எல்லாருக்கும் அதிக கோபம் இருந்தது. இப்போ என்னுடைய இந்த நிலையைப்பற்றித் தெரிந்தவுடன், அவர்களுக்கு எல்லாம் எவ்வளவு சந்தோஷம் இருக்கும். இனி என்னை இந்த ஊரை விட்டே துரத்திவிட்டு, என்னுடைய வீட்டையும் அவர்கள் சுலபமாக எடுத்துக் கொண்டு விடுவார்கள். என்னைத் தன் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொண்டிருந்தால், அவர்களுக்கு சம்பளமில்லாத ஒரு வேலைக் காரியாகவாவது நான் இருந்திருப்பேன். இப்போ பார். நான் என்னைப் பற்றி என்ன சமாதானம் சொல்லிக் கொள்ள முடியும். நான் ஒரு முட்டாள், இந்த சுகுமாரனை நம்பி அவர்களையும் பகைத்துக் கொண்டேன்: என பலவாராகச் சொல்லி அழச் செய்தாள்,.
மயூரி சொன்னதைக் கேட்டவுடன் வைதேஹிக்கும் ஒரு நிமிடம் இந்த உலகமே சுற்றுவதாகத் தோன்றியது. பாவம் எப்படிப்பட்ட அப்பாவியான ஒரு சின்னப் பெண்னை ஏமாற்றவும் ஒருவனுக்கு மனசு வந்ததே. இந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாலே யாருக்கும் ஒரு பாசமும், பரிவும்தானே ஏற்படும். அவனையே முழுவதுமாக நம்பி இழந்தவளை எப்படி ஏமாற்ற திட்டம் போட்டுப் பழகி யிருக்கிறான் இந்த அயோக்கியன். அவன்மட்டும் என் கண்ணில் பட்டால், அவ்வளவுதான் அவனை ஒரு வழி பண்ணிவிட்டு, ஜெயிலுக்குக் கூடப் போவேனே.” என தன் மனதுக்குள் சுகுமாரனைத் திட்டிக்கொண்டே மயூரியிடம் கேட்டாள்.
நீ அவனைப் பார்த்துக் கேட்பதற்கென்ன? உனக்கு யாருமில்லை என அவனுக்குத் தைரியமா? யாரில்லாவிட்டாலும் உனக்கு என் குடும்பம் இருக்கு ஆதரவாக.. அவனைப் போய் பார்த்து, இப்படியாகிவிட்டது எனச் சொல்லி, உடனடியாக உன்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்” எனவும் சொன்னாள்..
‘அவன் இருக்குமிடமும் தெரியவில்லை. அவன் வேலை செய்யும் கம்பெனிக்குப் போனேன். அங்கு அவனைஅவன் நடத்தை காரணமாகவும், அங்கும் அவன் நிறைய தப்பான வேலைகளைச் செய்து, கம்பெனியின் நல்ல பேரைக் கெடுத்து விட்டதாகவும், அதனால் அவனை உடனடியாக போலீசில் பிடித்துக் கொடுக்க அந்த கம்பெனி முதலாளி முயன்றபோதுதான், அவன் யாரிடமும் சொல்லாமல், ஊரைவிட்டே ஓடிவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். அங்கு யாரிடமும் அவனைப் பற்றி எந்த விதமான தகவலும் என்னால் பெற முடியவில்லை. எனக்குமட்டும் ஏன் இப்படியான ஒரு நிலை. நான் ஒரு முட்டாள்தான். வயசைப் பற்றிக் கவலைப்படாமல், என் அத்தையின் விருப்பப்படியே அவருடைய பிள்ளைக்கு மூன்றாம்தாரமாக வாழ போயிருக்கவேண்டும். அப்போது இந்த ஊரிலெல்லாருக்கும் என் மீது ஒரு பரிதாபம்தான் வந்திருக்கும். பார். இப்போ, என்னுடைய செய்கையால் என் பெயர் மட்டுமல்லாது என்னைப் பெற்றவர்களின் பெயருக்கும் சேர்த்து அவமானத்தை தேடிக்கொண்டேன்.” எனச் சொல்லியபடியே கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள்.
“போதும் அப்படியெல்லாம் பேசாதே. உன் அத்தையின் சுயநலம் இந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாதா? அவளுக்கும்தான் பேரன் பேத்திகள் இருக்கே. அப்படியிருக்கும்போது, உன்னை விட இருபத்து எட்டு வயது பெரியவனான அந்த வரதனுக்கு உன்னைக் கலியாணம் செய்து வைக்க முன் வருவாளா? உண்மையிலேயே அவளுக்கு உன்மீது அக்கரையோ, பரிதாபமோ இருந்தால், அவள் உன்னைத் தன்னுடைய பேரனான சாரங்களுக்குத்தானே கலியாணம் செய்து கொள்ள வேண்டும். உன்னைவிட சாரங்கள் மூன்று வயது பெரியவந்தானே. அப்படியிருக்க, நீ உன் அத்தானுக்கு மூன்றாவதாக வாக்கப்பட்டு அங்கு போனால், நீ அவனை எப்படி உன் மூத்தாளின் மகன் உன் மகன் என் நினைக்கமுடியும். நினைக்கவே சங்ககடமாக இல்லை. உன்னைவிட வயது பெரிய பிள்ளை, பெண் இருக்கும்போது, உன் அத்தானுக்குத்தான் அப்படி என்ன ஒரு அல்ப ஆசை.. நாப்பத்து எட்டு வயதுக்கும் பெண் சுகம் காண மனைவி வேண்டுமா? ஊரில் தாசில்தார் என்றால் சட்டம் அவன் கையிலா? கேட்டால், மனைவி இறந்தபின் ஒருவன் வேறு ஒரு பென்ணை மணப்பது வழக்கம்தானே எனவும் சட்டம் பேசுகிறான். எல்லாருக்கும் தெரியும் அவர்களின் கரிசனத்திற்குக் காரணம் நீ இப்போ இருக்கும் உன் தாயின் வீடுதான். வீட்டு வேலைக்கு செலவில்லாமல் ஒரு வேலைக்காரியும், உன் அத்தானின் பசிக்கு பலியாக தாலி என்ற விலங்கு போட்டு, உன் இளமையும், நீ அனுபவிக்கும் இந்தச் சொத்தும்தான் அவர்களின் கண்களில் உறுத்துகிறது. அதனால்தானே உன் அம்மா எப்பவோ விட்டுப்போன தன்னுடைய சித்தியின் தம்பி பிள்ளையை உறவென்று நினைத்துக் கூட்டிவந்தாள். அவன் உன்னிடம் உண்மையாக இருப்பானென்றுதான் நாங்கள் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தோம். பாவி, அவனும் உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று காட்டியிருக்கிறான். உன் அப்பா இருக்கும்போதே உன் அம்மா அவனைப் உனக்குக் கலியாணம் செய்து வைத்திருக்கவேண்டும். விட்டுவிட்டாள்.” எனவும் வைதேஹி தன்னுடைய சினேகிதியின் நிராதரவான நிலையைப் பார்த்து துக்கப்பட்டு பலவாறாக பேசினாள்.
நீ நினைப்பதுபோல் என் அப்பா அவனை நம்பவில்லை. ஆரம்பித்திலிருந்தே அவருக்கு அவனைப் பற்றி சரியான எண்ணம் இல்லை. அவனுடைய அலட்டலும், ஆணவமும், அகம்பாவமும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் என் அம்மாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். தானிருக்கும்வரை மயூரியின் கலியாணத்திற்கு மற்றவர்களின் தலையீடு வேண்டாம். என. அவரின் அக்காவின் குடும்பத்தைப் பற்றியும், அவரின் கோபங்கள், முரட்டுக் குணம், வரதனின் கெட்டசகவாசங்கள், குணங்கள் எல்லாம். என்ன அவர்களிடம் உள்ள செல்வாக்கால் அவர்களின் தப்புகள் மறைக்கப்பட்டன. தாசில்தார் குடும்பம் என்ற பெயரில் ஊரில் உள்ளவர்களின் சொத்துக்களைச் சூறையாடுவதும், தன்னிடம் வேலை செய்பவர்களை மிகவும் கேவலமாகவும் கொஞ்சமும் மனிதாபமின்றி துன்புறுத்துவதும் எல்லாருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் ஊரில் ஒரு பெரிய குடும்பம். பணத்தால் மிதந்த குடும்பம். மற்றவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் அவர்களின் பணம்தானே உதவுகிறது. அதனால் எல்லாரும் வாயிருந்தும் ஊமையாக இருக்கவேண்டிய கட்டாயம். அப்படி யில்லையென்றால், அந்த ஊரில் உள்ள ஒருவராவது ஒரு இருபது வயது கூட பூர்த்தியாகாத, என்னை அவருடைய பிள்ளை என்னைவிட இருபத்துஎட்டு வயது மூத்தவரான, ஒரு கிழவருக்கு மூன்றாம்தாரமாக்க என்னுடைய அத்தைக் வந்த போது, தடுத்தார்களா, இல்லை இது தர்மமல்லவென ஒருவராவது எதிர்த்துச் சொன்னார்களா. பாவம் அவர்களின் கைகளும், வாயும் கட்டித்தான் இருந்தன. எப்படியிருந்தாலும், என் அப்பா என் திருமணவிஷயத்தில் உறுதியாகத்தான் இருந்தார். என்னை ஒரு நல்லவனுக்கு முதல்தாரமாகத்தான் கொடுப்பதென்று. அதற்காகத்தான் எங்களுடைய வீட்டையும் கடனின்றி வைத்திருந்தார். கலியாணத்திற்கு சீதனமாக அந்த வீட்டைக் கொடுத்து, தன்னிடம் இருக்கும் வசதியைக் கொண்டு ஓரளவு நிறைவாகத்தான் செய்ய ஆசைப்பட்டார். ஆனால் என் துரதிஷ்டம். அவரின் ஆயுள் முடிந்தது. அப்போ வந்த சுகுமாரனும், என் அம்மாவுனே ஒட்டிக்கொண்டு எங்களுடனே இருந்து வந்தான். அம்மா ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தாள். என்னை ஊரரிய மணம் செய்து கொள்ளும்வரை அவன் எங்கள் வீட்டில் ஒரு இரவு கூட தங்கக்கூடாது என்பதிலும் நானும் அவனும் ஒரு வினாடிகூட தனியாக இருந்ததோ, தனியாக வெளியேவோ போகக்கூடாதென்றும்.. ஆனால், பகவான் எனக்கு வேறு விதிதான் எழுதியிருந்திருக்கிறார். இல்லையென்றால் என் அப்பா போன சுருக்கிலேயே அம்மாவும் போக வேண்டுமா? என் கலியாணத்திற்கு, அப்பாவின் வருடம் முடியவேண்டுமென அவள் நினைத்திருந்தது தப்பா? எல்லாம் என் தலைவிதி. இப்போ நான் என்னையே இழந்து விட்டு, என்னை இருட்டில் களங்கப்படுத்திய அந்த சுகுமாரனையும் வெளிச்சத்தில் கொண்டு வர முடியவில்லை. என்னுடைய அத்தையின் வீட்டிலும் நுழைய வசதியில்லை. களங்கத்துடன் நான் இங்கு யார் முன் நிற்க முடியும். உன்னைத்தவிர இந்த ஊரில் வேறு யார் இருக்கிறார்கள்? என மயூரியும் தன் துக்கத்தைச் சொல்லி அழவும் செய்தாள். சினேகிதிகள் இருவரும் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்கள்.
பிறகு வைதேஹீ கேட்டாள் “மயூ, இனி என்ன செய்யப் போகிறாய். நீ எத்தனைநாட்கள் இதையெல்லாம் மறைக்க முடியும். இந்த ஊரில் வம்பு பேசுபவர்களின் வாயும் கண்ணும் சும்மா இருக்காதே. அவர்களுக்கு எப்பவும் யாரைப் பற்றியாவாது இல்லாததும் பொல்லாததும் சொல்லி வம்பு பேசுவதுதான் சுகமாச்சே. அப்படி அலைபவர்களின் கண்களில் நீ மட்டும் தப்பவா முடியும்? நான் வேண்டுமானால் என் கணவரிடம் பக்குவமாக நீ தனியாக இருப்பதாகவும், உனக்கென்று நிச்சியம் செய்த சுகுமாரன் இப்போதெல்லாம் உன் வீட்டுக்கு வருவதில்லை எனச் சொல்லி,அவனைப் பற்றிய விபரங்களை அவனுடைய ஆபிஸில் இரகசியமாக விசாரிக்கச் சொல்லட்டுமா?" எனவும் கேட்டாள். அதற்கு மயூரி “அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. என்னைத் தவிர, அந்த அயோக்கியனை இன்னோரு பெண் தன் குழந்தையுடனும், அவளுடைய தகப்பனாருடனும் தேடிக்கொண்டு, இரு நாட்களுக்கு முன் என்னுடைய வீட்டிற்கே வந்தார்கள். இவன் அந்தப் பெண்ணையும் ஏமாற்றி, ஒரு குழந்தை அவளுக்குக் கொடுத்து விட்டுவந்திருக்கிறான். அவர்கள் அவன் இந்த ஊரில் இருப்பதாகத் செய்தி அறிந்து, அவனைப் பார்க்க என் வீட்டிற்கே வந்தார்கள். அவர்களிடம் எனக்கு அவனைப் பற்றி எதுவும் தெரியாது, அவன் என் தாயாரின் தூரத்து வழி உறவுதான். என் தாய், தகப்பனர் மறைவுக்குப் பின், அவன் இங்கு வருவதில்லை எனவும் சொன்னேன். அந்தப் பெண்பிறகு என்னிடம் தனியாக உள்ளே வந்து கேட்டாள் “உன்னைக் கேட்பதால் தப்பாக நினைக்காதே, நீ அவனிடம் உன்னை இழந்து விடவில்லையே. அவனைப்போல் ஒரு ஏமாற்றுக்காரனை இந்த உலகில் இருக்க மாட்டான். நீ அவனிடம் ஏமாந்து விட்டால், நீயும் என்னுடன் வா, நாமிருவரும் சேர்ந்து அவனைத்தேடுவோம்: எனவும் சொன்னாள். நான்அவளிடம் அப்படியெல்லாம் இல்லை எனச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டேன். இப்போ சொல், நான் இனியும் அவனைத் தேடுவதில் எதாவது பலன் இருக்குமா?” என மயூரி பதில் சொன்னாள். நாளாக நாளாக உன் நிலைமை மோசமாகி விடுமே, என்ன செய்யப் போகிறாய்? என வைதேஹி கேட்டதற்கு, பதிலாக மயூரியும் சொன்னாள்.
அதுதான் எனக்கும் பயமாயிருக்கு. ஒன்று மட்டும் உறுதி. நான் இனிமேல் இந்த ஊரில் இருந்து கொண்டு, என்னால் என்னைப் பெற்றவர்களின் பெருமையை சீரழிக்க மாட்டேன். எப்படியாவது இந்த ஊரைவிட்டுப் போகப்போகிறேன். என்னைத் தெரியாத ஊரில் எனக்கு உண்மையாக உதவ யாராவது ஒருவரைக் கூட பகவான் காட்ட மாட்டாரா? நான் என்னதான் தப்பு செய்திருந்தாலும், எனக்கு ஒருனாள் அவரிடம் மன்னிப்புக் கிடைக்காதா? ஒரு நல்ல வயதான பெண் டாக்டரைப் பார்த்து, என்னைப் பற்றியும், நான் சிதைந்து போனதைப் பற்றியும் சொல்லி, எப்படியாவது என்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளுவேன். பிறகு, எனக்குத் தெரிந்த மெடிகல்லாப் உதவியாளராக எங்காவது கண்காணாத இடத்தில் சேர்ந்து கொண்டு, என் பெற்றோர் நினைப்பில் என் நாளைக் கடத்திவிடுவேன். அங்கேயே ஏதாவது ஒரு ஆனாதை இல்லத்தில் என்னுடைய வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்துக் கொண்டு, எனக்குத் தங்க இடமும், பாதுகாப்பும் கேட்பேன். அங்கே என்னால் முடிந்த வேலைகளைச் செய்து கொண்டு, என் வழியைப் பார்த்துக் கொள்ளுவேன். ஒன்று மட்டும் இனியோருமுறை நான் ஒரு ஆணின் துனையில் இருக்கமாட்டேன். ஒரு முறை ஒருவனை நம்பியது போதும்,: எனச் சொன்ன மயூரியிடம் கேட்டாள் வைதேஹி :எந்த ஊருக்குப் போவாய். உனக்கு இந்த ஒரு தஞ்சாவூர் டவுனைத் தவிர வேறு எந்த இடம் தெரியும்?” எனப் பரிவுடன் கேட்டா
நான் வேலை செய்த லாபில் ஒரு வயதானவர் வந்தார் ஒருமுறை. அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார் அவர் மதுரைக்குப் பக்கத்தில் சோழவந்தான் என்னும் கிராமத்தில், ஒரு ஆனாதை ஆசிரமத்தில் பொறுப்பாளராக இருப்பதாகவும், அங்கு அவருக்கு உதவியாக வேலை செய்ய யாராவது கொஞ்சம் படித்திருந்தால்கூட போறும், தேவையென்றும் சொல்லியிருக்கிறார். அவர் என்னிடம் சொல்லிச் சென்று, இரு மாதங்கள் கூட ஆகவில்லை. என்னிடம் அவருடைய விலாசம் இல்லை. ஆனால் அந்த ஆசிரமத்தின் பெயர் எனக்கு நியாபகத்தில் இருக்கிறது. அதனால், நான் எப்படியாவது, அங்கு போகவேண்டுமென முடிவு செய்து, இன்றே இரவில் கடைசியாக கிளம்பும் 12 மணி பஸ்ஸில் மதுரைக்குப் போகவும் டிக்கெட் வாங்கிவிட்டேன். நான் உன்னிடம் மட்டும் சொல்லி விட்டுச் செல்ல வேண்டுமென்றுதான் இன்று எப்படியும் உன்னுடன் ;பேச வேண்டும் என உன்னை கட்டாயம் வரச் சொன்னேன். நான் எனக்கு தேவையான பணமும், கொஞ்சம் என்னுடைய துணிமனிகள், ஆபத்திற்கு உதவ என் தாயாரின் சங்கிலி, வளையல் என இருக்கும் இரு நகைகள், வீட்டுப் பத்திரம், என்னுடைய படிப்புச் சான்று, நான் வேலை செய்த லாபின் அதிகாரியிடமிருந்து ஒரு சிபாரிசு கடிதம் என எல்லாம் முன்னேற்பாடாகவே வாங்கி வைத்திருக்கிறேன். எப்படியும், இன்று இரவுக்குள் இந்த ஊரைவிட்டுப் போய்விடுவேன். இனிமேல் உன்னைப் பார்ப்பேனோ என்னவோ தெரியாது. உன்னை என்றும் மறக்க மாட்டேன். நீயும் எனக்காகப் பிராத்தனை செய்.” எனச் சொல்லிவிட்டு, துக்கம்தாளாது ஒரு குழந்தை போல் வைதேஹியின் மடியில் விழுந்து கதறி அழுதாள். தன்னுடைய துக்கமும் தாளாமல், வைதேஹியும் அழுது கொண்டே, “மயூ, பார் இது பொது இடம். இங்கு எல்லாரும் இருக்கிறார்கள். நீ இப்படி அழுதால் மற்றவர்கள் என்ன எனக் கேட்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீ திடமாக முடிவெடுத்து இருக்கிறாய். எத்தனை காலம்தான் பகவான் ஒருத்தியைசோதிப்பார். இனிமேலாவது அவருடைய கடைக்கண் பார்வை உன்மேல் விழட்டும். அவரின் உதவி யார்மூலமாவது உனக்குக் கிடைக்கும். ஊரில் எல்லாருமே இராவணனாக இருக்க மாட்டார்கள். ஒரிருவராவது பகவான் கண்னனைப் போல் ஆபத்பாந்தவனாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவரை அந்த பகவான் இன்று இரவே உனக்காக அனுப்பி வைக்கட்டும். இதுவே என்னுடைய ஒரே பிராத்தனை. எங்கிருந்தாலும், முடிந்த போது எனக்கு சாதாரணமாக ஒரு கடிதம் போடு. நான் கூடியவரை அதை மற்றவர்கள் தெரியாமல் வைத்துக் கொள்ளுகிறேன்”. கடிதத்தை என் அம்மாவின் வீட்டு விலாசத்திற்கே போடு. எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ அத்தை இருக்கிறார். அவர் கவனத்திற்கு எதேனும் கிடைத்தால், உடனேயே ஊரில் எல்லாருக்கும் பரப்பிவிடுவாள். அவளுக்கு வேறு பொழப்பு இல்லை. ஊர் வம்புக்கே அலைபவள்:/ எனச் சொல்லி அவளைச் சமாதானப்படுத்தினாள். பிறகு சினேகிதிகள் இருவரும் வீட்டிற்குத் திரும்பினார்கள். அவர்கள் நினைத்தார்கள் தங்களை யாரும் கவனிக்க வில்லையென. ஆனால் உண்மை அதுவல்ல.
அந்தச் சிவகங்கைப் பூங்காவில் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த மரத்தின் பின்புறத்தில் இருந்த ஒரு பெஞ்சில் ரகுநந்தன் உட்கார்ந்திருந்தான். அவன் அன்று காலையில்தான் ஒரு நண்பனைப் பார்க்க, மதுரையிலிருந்து வந்தான். அவனுடைய நண்பன் ஊரில் இல்லை. அதனால் அவன் மேலும் இருநாட்கள் தங்கியிருந்து பார்த்துவிட்டுப் போகலாமென நினைத்திருந்தான். ஆனால் அவனுடைய திட்டம் மாறிவிட்டது. மரத்தில் நிழலில், சுற்றுப்புறத்தை மறந்து, தங்களின் துன்பங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த இரு பெண்களைப் பார்த்தான். அதில் மிகவும் சிறு வயதாயிருந்த மயூரியின் பேச்சிலிருந்து அவளுக்கு ஏற்பட்ட துன்பத்தை தெரிந்து கொண்டான். அவன் மனமும் அந்தப் பெண்ணின் ஆதரவற்ற நிலையைப் புரிந்துகொண்டு வருத்தம் கொண்டது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே,ரகுநந்தன் அவர்களிருவரையும் கூர்ந்து பார்த்தான். மயூரியின் முகத்தைப் பார்த்தால், கள்ளங்க்கபடமற்ற தூய்மையான பளிங்குபோல் இருந்தது. அதிகமாகப் போனால், இருபது வயதைக் கூட நெருங்கியிருக்காது. அத்தனை சின்ன வயதுக்குள், அவளுக்கு எத்துனைத் துன்பங்கள் வந்திருக்கின்றன. பகவானின் சோதனைதான். அவளுக்கு ஒரு திருமணம் முடிக்கும்வரைக் கூட அவளின் பெற்றோர்களின் ஆயுள் இல்லை. உறவெனச் சொல்லிக் கொண்டு இருந்தவர்களும், அவளின் ஏழ்மையையும், தனிமையையும் பயன்படுத்திக் கொண்டு, அவளிடமிருந்த சொத்தைப் பறிக்கத்தான் பார்த்திருக்கிறார்கள். தாயாரால் நல்லவெனெறும்,உறவென்றும் நம்பிய ஒருவனோ அவளுடைய வாழ்க்கையையே சிதரடித்துவிட்டான். பாவம் இந்த பரந்த உலகில், தனக்கென யாருமின்றி, பருவ வயதுப் பெண் எப்படித்தான் வாழ முடியும். வேங்கைகள் கூடியிருக்கும் காட்டிலொரு மருண்ட மானாக இருப்பவளுக்கு தன்னால் ஏதாவது உதவ முடியுமா? எனவும் மனதுக்குள் துக்கித்தான். அப்போது அவனின் கண்களில் முன் அவனுடைய தாயாரின் விதவைக் கோலமும் அதன் பின்னனிகளும், , அவனுடைய மாமாவின் அறிவுரைகளும் வந்தன. மாமா சொல்வார் “இந்தப் பரந்த உலகில் உள்ள எல்லாருக்குமே கஷ்டங்கள் வரும். நம்மால், உலகிலுள்ள எல்லாருடைய துன்பங்களையும் தீர்க்க முடியாது. நாமென்ன ஆயிரங்கரங்கள் கொண்ட பரந்தாமனா, அல்லதுஆயிரம் கண்ணுடையாளா? இல்லையே. நாமும் சராசரி மனிதர்கள்தானே. இருப்பினும், நம்மால் முடிந்த வரை ஒருவருடைய துன்பத்திலாவது பங்குகொண்டு, அவர்களின் துன்பத்தைப் போக்கினால், அதுவே ஆயிரம் கோவில் கட்டினதுக்குச் சமம். உன்னால் முடிந்தவரை துன்பப்படுபவர்களுக்கு உதவியாக இரு” என அடிக்கடி சொல்லுவார். ரகநந்தனும் இப்போ இந்த அனாதைப் பெண்ணிற்கு, தன்னால் எப்படியாவது உதவ முடியுமா எனவும் யோசித்தான். அவனுடைய மனதில் ஒரு தீர்மானமும் உண்டானது. அதனால், அவன் மனதிலேயெ தன் தாயாரிடம் “அம்மா, நீ பட்டக் கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தப் பெண்ணும் உன் மாதிரி வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து தனியாகவாழக் கூடாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென என் அறிவுக்கு நீ சொல். உன்மீது சத்தியமாகச் சொல்கிறென். :இனி ஒரு நாள் கூட இந்தப் பெண் மயூரி, தன் வாழ்நாளில் கண்ணீர் விடக்கூடாது. அதற்காக, நான் என் வாழ்வையே அவளுக்காக அர்ப்பணிக்கச் செய்கிறேன்” எனவும் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். அதே சமயம் அவன் மனதில் ஒரு சின்னச் சந்தோஷமும் உண்டானது. மயூரி தான் போகப்போவதாகச் சொன்ன இடம்தான். அந்த சோழவந்தானின் அவனால் மயூரியின் பாதுகாப்புக்கு சரியான துனையாக இருக்க முடியும். தற்போது அவன் அந்த ஊர் அரசு மருத்துவமனையில்தான் ஒரு இளம் மருத்துவராகப் பணியாற்றுகிறான். அதனால் அவனும் அவள் இருக்கக்கூடிய ஊரிலேயே இருப்பான். தான் விரும்பியபடியே அவளுக்குத் துனையாக இருப்பதற்கு பகவானின் சித்தம் அதுதான் போல. அதனால்தான் அவள் மற்ற ஊர்களையெல்லாம் விட்டுவிட்டு சின்னக் கிராமமான சோழவந்தானைத் தேடி வருகிறாள்.எனவும் அவன் மனதில் ஒரு எண்ணம் உண்டானது.
அவர்கள் இருவரும் தனித்தனியாக இரவு பனிரென்டு மணி பஸ்ஸுக்காக தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்கள். பஸ் வந்தவுடன், முதலில் மயூரி ஏறினாள். அவளுக்குள் ஒரு பரபரப்பு. தான் தனியாக இரவு நேரத்தில் இந்த ஊரைவிட்டுப் புறப்படுவதை யாரும் பார்க்கக்கூடாதே என். அதனால் அவள் பஸ்வந்தவுடனே ஏறி, உள்ளேப்போய் ஒரு இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். கீழே நின்றிருந்த ரகுநந்தனும் பஸ் கிளம்பும்வரை காத்திருந்து, மற்றவர்கள் எல்லாம் ஏறியபின், தானும் ஏறினான். மயூரியின் இருக்கைக்கு அருகில்தான் அவன் அமரும் இடமும் இருந்தது. அவன் ஜன்னலோரம் உள்ள இடம் தான் வாங்கீருந்தான்.. ஏறியவுடன் அவனிடம் மயூரி கேட்டாள். “ உங்களின் இடம் இதுதானே. நான் இந்த ஜன்னலின் ஓரத்தில் பயணம் செய்வது உங்களுக்குச் சம்மதமா?” எனவும் கேட்டாள்.
அதற்கு ரகுநந்தனும் “எனக்கு எப்போ பயணம் செய்தாலும், இப்படி ஜன்னல் ஓர இருக்கையைதான் தேடி பதிவு செய்வேன். இன்று இந்த இடத்தை நான் உனக்காக விட்டுக் கொடுக்கிறேன், நீ அதில் பயணம் செய்.: எனச் சொல்லிக் கோண்டே, தன்னுடைய பையை மேல் அடுக்கில் வைத்தான். மயூரியின் கால்களின் கீழே வைத்திருந்த பைகளைப் பார்த்துக் கேட்டான் :ஏன் இவைகளை கீழேயே வைத்துக் கொண்டிருக்கிறாய். மேலே சௌகரியமாக வைக்கலாமே” என்.
அதற்கு மயூரி சொன்னாள் எனக்கு கையை அவ்வளவு உயரம் தூக்கி வைக்க முடியாது. மேலும் நான் இறங்கும்போது என் பைகள் கீழேயே இருந்தால், எனக்குச் சௌகரியமாக எடுத்துக் கொண்டு இறங்க முடியும்”
நீ எங்கே இறங்க வேண்டும்:.
மதுரையில். பிறகு சோழவந்தானுக்குப் போகவேண்டும்.
நானும் மதுரைக்குப் போய் சோழவந்தான் தான் போக வேண்டும். இப்போ உன் பைகளை நான் மேலே வைத்து விடுகிறேன் நான் இறங்கும்போது உன்னுடைய பைகளையும் எடுத்துக் கொடுக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு, அவளுடைய பைகளையும் மேலேயே தன்னுடைய பையின் அருகில் வைத்துவிட்டான்.
நீ ஏன் தனியாக இராத்திரி பயணம் செய்கிறாய். பகலில் நல்ல பாதுகப்பாகப் போகலாமே. அல்லது உன்னுடன் வேறு யாராவது வரக்கூடாதா?எனக் கேட்டவனிடம், “எனக்கு எப்போதும் தனிமைதான். எனக்கென்று இப்போ யாருமில்லை. அதனால் இரவானாலென்ன, பகலானாலென்ன இரண்டும் ஒன்றுதான் எனக்கு உறவென சொல்லிக்கொள்ள ஒருவருமில்லை. என் அப்பா, அம்மா இருவரும் காலமாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. இனிமேல் என் வாழ்நாள் பூரா தான் ஒரு தனி மனுஷிதான்” என வருத்தத்துடன் சொன்னாள். அதற்கு ரகு, “அப்படிச் சொல்லாதே. உலகில் நீ மட்டும் தனியாக இல்லை உன்னைச் சுற்றி மனிதர்கள் கூட்டம் இருக்கு. உன்னைப் போல் எல்லாரும் எனக்கு உறவென சொல்லிக்கொள்ள யாருமில்லை என நினைத்தால், இந்த உலகம் ஒரு ஸுன்யமான காடாகும். ஏன் எனக்குக்கூடத்தான் யாருமில்லை. நானும் உன்னைப் போல் உறவற்ற ஒருவந்தான். எல்லாருக்கும் ஒரு விதி யிருக்கு. அதுபடிதான் நடக்கும்” எனச் சொல்லி விட்டு சீட்டில் அமர்ந்தான். ;பிறகு மயூரியின் சீட்டை நன்றாகச் சாய்ந்து கொள்ளுமாறு சாய்த்துக் கொடுத்துவிட்டு, தன்னுடையதையும் சாய்த்துக் கொண்டு, “இப்போ சௌகரியமாக சாய்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் ;பார்” எனச் சொல்லி அவளைப் பார்த்துச் சின்னதான சிரித்தான்.
மயூரி சிறிது நேரம் ஜன்னலின் வழியாக வேடிக்கைப் பார்த்து வந்தாள். திடீரென்று ரகுநந்தனைப் பார்த்து :உங்களுக்கு நிச்சயமாக இந்த ஜன்னல் ஓரம் வேண்டாமா?” எனவும் குழந்தைதனமாகக் கேட்டாள். அதற்கு அவன் :நாந்தான் சொன்னேனே, இன்று உனக்காக நான் இந்த இடத்தை விட்டுத் தருவதாக. அதனால், நீ மதுரை வரும் வரையில் சந்தோஷமாக வேடிக்கைபார்த்துக் கொன்டே வா” என சிரித்தபடியே சொன்னான். அதற்கும் மயூரி சந்தோஷமாக :தேங்க்க்ஸ்” என சொல்லி, தன்னுடைய ஆனந்தத்தைக் காட்டினாள். அவளுடைய குழந்தைத்தனமான முகத்தில் தெரிந்த சிரிப்பும், சந்தோஷத்தால் ஏற்பட்ட சிவப்பும் அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த அழகுசிலையை சீரடித்த அந்த அயோக்கியனை ஒரு நாள் கண்டால் போதும், அன்றே அவனை இனிமேல் எந்தப்பெண்ணிடமும் நெருங்காதபடி ஊனமாக்கி விடவேண்டும்: எனவும் மனதுக்குள் கருவினான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மயூரி தன்னையும் அறியாது தூங்க ஆரம்பித்தாள். திடீரென்று மழையும், குளிர் காற்றும் அடிக்கலாயிற்று. பஸ்ஸில் இருந்தவர்கள், ஜன்னல் கண்ணாடிகளை மூடிவிட்டாலும், பருவ கால மழை யானதால், குளிரும் அதிகமாகியது. மயூரி குளிர் தாங்காமல், தன்னுடைய புடவைத் தலைப்பை எடுத்துப் போர்த்திக் கொண்டாலும்,குளிரால் அவளின் மெல்லிய உடல் நடுங்காலாயிற்று. அதைப் பார்த்த, ரகுநந்தன், தனுடைய பையிலிருந்து ஒரு கம்பளிச் சட்டையை எடுத்து அவளிடம் கொடுத்து, :இதைப் போட்டுக் கொள். குளிருக்கு அடக்கமாக இருக்கும்” எனவும் சொல்லி, அதை அவள் போட்டுக் கொண்டவுடன், அவளுடைய தலைக்கும் ஒரு சால்வையை மடித்துப் போர்த்தினான். அவனுடைய பரிவான செயலைப் பார்த்த மயூரிக்கு தன்னையுமறியாமல் கண்கள் கலங்கின. அதைப் பார்த்து :ஏன் அழுகிறாய். உடம்புக்கு சரியில்லையா” எனக் கேட்டவனிடம், “என் அப்பா, அம்மாவிற்குப் பிறகு என்னிடம் இத்தனை பரிவாக யாரும் அன்பும், கரிசனமும் காட்டவில்லை. இன்று நீங்கள், முன்பின் தெரியாத என்னிடம் இத்தனை பாசம் காட்டியது, என்னால் தாங்க முடியவில்லை: அதற்கு ரகு “நான் ஒன்றும் அதிகமாகச் செய்யவில்லை. சராசரி மனித நேயம் உள்ளவர்கள் செய்வதைத் தான் நானும் செய்தேன். நீ கவலைப் படாதே, நான் நீ விரும்பும் வரை உனக்கு உதவியாகவே இருப்பேன். நீ எதை நினைத்தும், மனம் கலங்காதே” எனபரிவாகச் சொல்லி, அவளை நிம்மதியாக தூங்கச் சொன்னான
மதுரை வந்தவுடன், பஸ்ஸிலிருந்த கூட்டம் எல்லாம் இறங்க ஆரம்பித்தார்கள். ரகுவும், தன்னுடைய பையுடன், மயூரியின் பைகளையும் எடுத்துக் கொண்டு இறங்க முன் வந்தான். அப்போது அங்கிருந்த ஒரு வயதானவர் அவனிடம் “தம்பி, எனக்காக நீ இந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வரமுடியுமா? என்னால் தூக்க முடியாது.”எனக் கேட்க, அவருக்கும் “அதனாலென்ன, நீங்கள் ஒரு நிமிஷம் இங்கேயே இருங்கள். நான் இந்தப் பெண்ணுடன் என் பைகளை வைத்துவிட்டு, வந்து உங்களுடன் வருகிறேன்” எனச் சொல்லி கீழே இறங்கினான். அவன் மயூரியிடம்,”நீ இங்கேயே இரு” நான், அந்தப் பெரியவரை ஒரு ஆட்டோ பார்த்துஏற்றிவிட்டு வருகிறேன்” எனச் சொல்லிச் சென்றான். ரகு அந்தப் பெரியவரின் பெட்டியை எடுத்துக் கொண்டு, அவரையும் கை பிடித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போய் அவருக்கு ஒரு ஆட்டோ பேசி, அவரை அதில் ஏற்றி அனுப்பிவிட்டு, திரும்பி பார்க்கும்போது அங்கே மயூரி இல்லை. அவனுக்கு ஒரு நிமிஷம் அதுவும் புரியவில்லை. கண்கள் நாலாபக்கமும் தேடின.
கடைசியில் அவள் ஒரு இருட்டான பகுதியில் நின்றிருந்தாள். அவளைச் சுற்றி, சில விடலைப் பசங்கள் சேர ஆரம்பித்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் மயூரிக்கு ஒரு பயமும் வந்தது. தான் ரகு சொன்னதைக் கேட்காமல் இருட்டான பக்கத்திற்கு வந்தது தப்போ எனவும் பயத்துடன், ரகு எங்கிருக்கிறான் எனவும் பார்க்கலானாள். இருட்டில் அவள் பயத்துடன் நிற்பதைப் பார்த்த ரகுவிற்கு ஒரு நிமிஷம் கோபம் வந்தது. உடனடியாகத் தன் கையில் இருந்த பைகளுடன் அவளிருக்குமிடம் வந்து, “நாந்தான் உன்னை அங்கேயே இருக்கச் சொன்னேனே. அங்கேயில்லாமல், நீ ஏன் இப்படி இருட்டில் வந்து நிற்கிறாய்? நான் வரும்வரை காத்திருக்க முடியவில்லையா? அத்தனை அவசரம் எதற்கு? எனவும் கோபமாகக் கேட்டான். அவன் வரும்வரை அவளைச் சுற்றி நின்றுகொண்டிருந்த விடலைப் பசங்களைப் பார்த்து, “என்னடா உங்களுக்கு வேண்டும். போங்கடா உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு” எனவும் அவர்களிடம் கோபமாகக் கேட்டான். அதற்கு அவர்களில் ஒருவன், “சார். நாங்கள் ஒன்றும் தப்பான எண்ணத்தில் இவங்களைச் சுற்றி வரவில்லை. அவர்களுக்கு ஆட்டோ தேவைப்படுமோ எனதான் இங்கிருந்தோம்” எனச் சொல்லிக் கொண்டே, அங்கிருந்து எல்லாரும் போக ஆரம்பித்தார்கள். ரகுவின் கோபத்தைப் பார்த்த மயூரிக்கும் பயம் உண்டானது. தன்னுடைய தப்பு என்ன என்பதைப் புரிந்து கொண்டவன் அவனிடம் மெதுவாக “நான் வெளிச்சத்தில் நின்றால், என்னைச் தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடக் போகிறார்களேயென பயந்து, இந்த இருட்டில் நீங்கள் வரும்வரை நிற்கலாம் எனத்தான் வந்தேன். ஆனால், இங்கும் இப்படி ஒரு பயம் உண்டு என எனக்குச் தெரியாது. என்னால் இந்த உலகத்தைப்புரிந்து கொள்ளவே முடியாது போல் தான் இருக்கு. இப்படியே பயந்து பயந்து எத்தனை காலம் இருப்பேனோ புரியவில்லை:எனவும் சொன்னாள்.
மயூரிக்கு புரியும்படியாகவே சொல்ல ஆரம்பித்தான் ரகு. “நீ தனியாக வந்த போதே இந்தமாதிரியான சோதனைகளையெல்லாம் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும். உங்கள் ஊரில் மட்டுமல்ல, எந்த இடத்திலும் இப்படிப்பட்ட ஒரு கும்பல் இருக்கத்தான் செய்யும். அதனால்தான், நான் நேற்றிலிருந்தே உனக்குச் துனையாக வருகிறேன். நீ சோழவந்தானின் யாரைப் பார்க்க வந்தாயோ, அவரிடம் உன்னைப் பாதுகாப்பாகச் சேர்க்கும்வரை, நான் உனக்குப் பாதுகாப்பாக இருப்பேன். நீயும் தயவுசெய்து என்னைப் பற்றி வேறு மாதிரி எண்ணிக்கொண்டு, தனியே எங்கும் போகாதே. அவ்வளவுதான் நான் இப்போ உனக்குச் சொல்லுவேன்” என தன்னுடைய கோபம் குறையாது சொல்லிவிட்டு, அவளுடைய பைகளையும் தூக்கிக்கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தான். ரகு அங்கிருந்த கால அட்டவணையைப் பார்த்து, முதல் பஸ் சோழவந்தானுக்கு காலை 6.15 எனப் போட்டிருந்ததைப் பார்த்துவிட்டு, “நல்லது நேரம் நிறையவே இருக்கிறது. நாமிருவரும் ஒரு ஹோட்டலுக்குப் போல் காப்பிசாப்பிட்டுவிட்டுப் பஸுக்குப் போகலாம”எனசொல்லிக்கொண்டே, பக்கத்திலிருந்த ஒர் ஹோட்டலுக்குள் சென்றான். அங்கு இருந்த குடும்ப பகுதிக்குப் போய் பைகளை வைத்துவிட்டு, பாத்ரூமுக்குள் போய் முகம் கழுவிக்கொண்டு வந்தவன், மயூரியையும் போய் முகம் அவம்பிக் கொள்”எனச் சொல்லிவிட்டு, தாங்கள் சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்தான். இருவரும் பிறகு சோழவந்தான் பஸ்ஸில் சென்று அமர்ந்தார்கள். தன்னிடம் எதுவுமே பேசாமல், பயத்துடன் வரும் மயீரியைப் பார்த்த ரகு, “எனக்கு உன் மீது கோபம் இல்லை, உனக்கு ஏதும் கஷ்டம் வரக்கூடாதென்றுதான், நான் அப்படி கடுமையாக இருந்தேன். என்னிடம் பயம் வேண்டாம்: என மெதுவாகச் சொல்லிவிட்டு, பயணம் செய்யலானான். காலை 8.00 மணிக்கு சோழவந்தான், வந்தவன், உடனடியாக ஒரு ஆட்டோவைப் படித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் வாசற் சுவற்றில் இருந்த “டாக்டர் இரகுநந்தன், எம்.பி.பி.எஸ்” என்ற போர்டை பார்த்தவளிடம், சிரித்தபடியே அது நாந்தான். இங்கு ஒரு அரசு மருத்துவமணையில்தான் வேலை பார்க்கிறேன்: எனச் சொல்லிக்கொண்டே, அவளையும் உள்ளே அழைத்துச் சென்றான். பிறகு மயூரியிடம், நீ கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு குளிக்கப்போ. உனக்கு எல்லாம் வசதியாகத்தான் இருக்கும். நானும் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்கிறேன்”என்ச் சொல்லிவிட்டு, இங்கிருந்த சோபாவின் படுத்தான்.
மயூரிக்குத் தூங்கப் பிடிக்கவில்லை. அதனால் அவள் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். இது ஒரு சின்ன வீடுதான். தனியானது, இரகுநந்தனுக்கு முன்பாக வேலை செய்த ஒரு டாக்டரின் உறவினர் வீடுதான். அதனால் இரகு தான் அந்த ஊரில் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே அதே வீட்டில் இருக்கவும் அவர் அனுமதித்தார். தான் கொடுத்ததுபோல் தன்னுடைய உறவினருக்கு ஒரு வாடகையைச் கொடுத்துக் கொண்டு இரகு அதே வீட்டில் இருக்கவும் ஏற்பாடு செய்து விட்டுப் போனார். அது ஒரு படுக்கை அறை, சமையல் அறை, சாமாங்கள் வைக்க, பூஜைக்கு என ஒரு பிரிவு, நடுவில் ஒரு கூடம். பின்னால் ஒரு தாவாரம், குளியல் அறை, மறைவுக்காக ஒரு ஆறை, சின்ன தோட்டம் என வீடு வசதியாகவும், அழகாகவும் இருந்தது. மயூரி வீட்டைச் சுற்றி விட்டு, குளிக்கலானாள். குளித்த பின், சமையல் அறைக்குள் நுழைந்து, அங்கே இரகு ஊருக்கு வருமுன் தேய்க்காமல் அங்கிருந்த சில பாத்திரங்களைச் சுத்தமாக தேய்த்து எடுத்து வைத்தாள். பிறகு பூஜை அறைக்குள் சென்று, அதையும் சுத்தம் செய்து, சின்னக் கோலமும் போட்டவுடன், அவளையுமறியாமல் அவள் சின்னதான குரலில் தினப்படி ஸ்லோகங்களைச் சொல்லவும் தொடங்கினாள். கூடத்தில் சோபாவின் தூங்கிக் கொண்டிருந்த இரகுவுக்கு மயூரியின் ஸ்லோகச்சத்தம் கேட்டு கண் முழித்தான்.
கண்முழித்த இரகு பூஜை அறையிலிருந்து வந்த ஸ்லோகங்களின் இனிமையான இரரகத்தால் கொஞ்சம் பரவசமடைந்தான். மெதுவாக சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தான். ஆங்கு மயூரி பாத்திரங்களையெல்லாம் அழகாக அடுக்கிக் கொண்டிருந்தாள். அடுப்பின் மீது குக்கரில் எதோ வைத்திருந்தாள். அது தயாராகிக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் காய்கறிக் கூடையும், ஒரு அருவாள்மணையும் எடுத்து வைக்கபட்டிருந்தது. அதைப் பார்த்தவனுக்கு மனதில் ஒரு நிம்மதியும், சந்தோஷமும் வந்தது. மயூரி கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்திருப்பதைப் புரிந்து கொண்டான். அவனைப் பார்த்த மயூரி, “உங்களைக் கேட்காமல் நானாகவே சமையல் அறைக்குள் நுழைந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டேனென்று உங்களுக்கு கோபமா? எனவும் கேட்டாள். அதற்கு இரகு :எனக்கு இப்போதான் மனசு சமாதானமாக இருக்கிறது. நீ இந்த வீட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம். என்னால் முடிந்த வரையில் உன் மனம் சந்தோஷப்படுவதுபோல் இருப்பேன். நீ எந்த விதமான உருத்தலுமின்றி, இதை உன் வீட்டைப்போல் நினைத்து இருந்தால் அதுவே எனக்கு மிகவும் திருப்தியாகும்.ஆமாம், உனக்குத் தேவையானதெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டாயா? உனக்கு வேறு எதுவும் தேவைப்படுமா?” எனவும் கேட்டான். மயூரி அவனுக்குப் பதிலாகச் சொன்னா:ள். “எனக்கு ஓய்வு எடுக்கனும்னு தோணலை. சும்மா இருப்பதற்கு இங்கு எதாவது வேலை செய்தால் மனதிற்கு நிம்மதியாக இருக்கும்போல் இருந்தது அதனால்தான் குளித்து உள்ளே வந்து, சமையில் அறையில் உள்ள பாத்திரங்களைச் தேய்த்து வைத்தேன். ;பூஜையறையில் சுத்தம் செய்து சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு, என் வீட்டில் சொல்வதுபோல் என்னையுமறியாமல் வாய்விட்டு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதனால் உங்களின் ஓய்வும் கலைந்ததா? என.
இரகுவும் சகஜமாக “அப்படியில்லை, எனக்குப் பசி வந்து விட்டது. அதனால்தான் எழுந்து உன்னையும் கூட்டிக்கொண்டு ஏதாவது ஒரு ஹோட்டலுக்குப் போகலாமென நினைத்தேன். ஆனால், நீ அதற்கெல்லாம் அவசியமில்லாமல், என் பசிக்கு சரியாக, தயாராகவே சமைக்க ஆரம்பித்து விட்டாய். இன்னும் எவ்வளவு நாழியாகும்> நானும் குளித்துவிட்டு வருகிறேன் என சொல்லி குளிக்கச் சென்றான். இரகு வருவதற்குள் , மயூரியும் சின்னதாக சமையல் முடித்து தயாராகவே இருந்தாள். இரகு வந்தவுடன் அவன் சாப்பிட அங்கிருந்த மேஜையில் பரிமாற தயாராக இருந்தாள். உள்ளே வந்த இரகுவும், மயூரியிடம் “உனக்கு மிகவும் நன்றியம்மா. என் பசிக்கு தயாராகவே உணவு வைத்திருக்கிறாய். வா நீயும் என்னுடனே சாப்பிடலாம்: எனச் சொல்லிக்கொண்டே, அவளுக்கும் தனக்குமாக உள்ளேயிருந்து இரண்டு தட்டுகளை எடுத்தான். மயூரி “முதலில் உங்களுக்குப் போட்டுவிட்டு, பிறகு நான் சாப்பிடுகிறேனே” எனச் சொல்ல, இரகு “அதெலாம் வேண்டாம். இரண்டு தட்டு இருக்கு. இருவருமே சேர்ந்து சாப்பிடலாமென சொல்லிய, அவளையும் தன்னுடையே சாப்பிடச் செய்தான். உண்மையிலேயே மயூரியின் சமையல் மிகவும் ருசியாகவே இருந்தது. இரகுவும் மிகவும் இரசித்து, திருப்தியாகச்சாப்பிட்டான். கடைசீயில் சொன்னான் “எங்கம்மா போனபின், இன்றுதான் இந்தமாதிரி ருசியான சாப்பாட்டை நான் சாப்பிடுகிறேன். ஹோட்டலில் எல்லாம் காசுதான். ருசியெல்லாம் பார்க்கக்கூடாது. என்னுடைய சமையலோ ஓரளவுக்குத்தான் இருக்கும். என்னைத் தவிர அதை வேறு யாராலுமே சகித்துக் கொண்டு சாப்பிடமுடியாது. அத்தனை மோசமாக இருக்கும். எல்லா நாளும் வெளியில் போய் சாப்பிட முடியாது. அப்படிபட்ட நாளில் எனக்கு நானே போட்டுக்கொள்ளும் ஒரு தண்டனைதான் என் சமையல்” எனவும் சிரித்துக் கொண்டே சொன்னான். இருவரும் சாப்பிட்டபின், மயூரி சமையல் அறையைச் சுத்தம் செய்துவிட்டு, வெளியில் வந்தாள். வந்தவளிடம் இரகு கேட்டான் :நீ இங்கே ஒருவரைப் பார்க்க வந்தாயே, அவரின் விலாசம், ஃபோன் நம்பர் வைத்திருக்கிறாயா? சொல், அவருடன் பேசலாம் எனவும் சொல்ல, மயூரி அவனிடம் ஒரு சின்ன சீட்டை எடுத்துக் கொடுத்து, “நான் என் கைப்பையில் வைத்திருந்த ஒரு சின்ன குறிப்புத்தான் இது. இதைத்தவிர வேறு எந்த விபரமும் எனக்குத் தெரியாது. அவருடைய பெயர் மட்டும்தான் தெரியும். அவர் பெயர் “இராஜாராமன்” எனவும் சொல்ல, இரகு அந்த நம்பருக்குப் போன் செய்தவுடன், அங்கிருந்த ஒரு பெண் எடுத்துப் பேசினாள். உடனே மயூரியிடம் ஃபொனெக் கொடுத்துவிட்டு, “மயூரி, முதலில் நீ யாருடன் பேச விரும்புகிறாயோ அவர் இருக்கிறாரா என விசாரி, பிறகு அவர் வந்தால் உன்னைப் பற்றிச் சொல்” எனச் சொல்லிக்கொண்டே கொடுத்தாள்.
மயூரியும் ஃபோனில் “இராஜாராமன் சார் இருக்கிறாரா? எனக்கு அவரிடம்தான் பேச வேண்டும்: எனச் சொல்லி, மறுபக்கத்திலிருந்து “நீங்கள் இனிமேல் இராஜராமனிடம் பேச முடியாது, உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. அவர் காலமாகி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இப்போ நானும், என் கணவரும்தான் இந்த இல்லத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேம். எங்களுக்கு இல்லத்தில் பாதுகாப்பாளர் சம்பளம் தருகிறார். உங்களுக்கு இந்த இல்லத்தில் ஏதும் விபரம் வேண்டுமா? அப்படியென்றால், நீங்கள் யாரென்று சொல்லுங்கள். எங்கிருந்து பேசுகிறீர்கள் எனவும் சொல்லுங்கள். நான் குறித்து வைத்துக் கொண்டு, என் கணவர் வந்தவுடன் அவரிடம் சொல்லி, உங்களுடன் பேசச் சொல்லுகிறேன்” என பதில் சொன்னான். அதைக் கேட்ட மயூரிக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வப்போகிறேம் எனவும் தெரியாது திகைத்தாள். அவளின் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பார்த்த இரகு :அவள் எதிர்பாத்தவர் இல்லை என்பதால் இனிமேல் அவள் என்ன செய்யப்போகிறாள் எனவும் தெரியாது அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். மயூரிக்கோ தாளமுடியாத அழுகை வர, ஒன்றும் பேசாமல் ஃபொனை வைத்து விட்டாள். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, உடல் குலுங்க அழலானாள்.
மயூரி தன்னுடைய துக்கம் தீருமட்டும் அழட்டுமென இரகு சிறிது நேரம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிஷங்கள் சென்றன. ஆனால் மயூரியின் அழுகை நிற்கவில்லை. இரகு எழுந்திருந்து, அவளுக்கு ஜுல்லென்று ஒரு பாட்டில் தண்ணீருன், , அத்துடன் ஒரு கர்சீப்பையும் நீரில் நனைத்துக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்துவிட்டுச் சொன்னான் “மயூரி, போதும் அழுதது. இப்போ அழுவதால் எந்தப் பலனும் இல்லை. நீ இனி மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என யோசிக்கவேண்டிய நேரம் தான் இது. கண்ணைத் துடைத்துக் கொண்டு, கொஞ்சம் தண்ணீர் குடி. மனம் ஆறுதலடையும்” என மிகவும் பரிவோடு சொன்னான். அவனின் முகத்தைப் பார்த்த மயூரி “இனிமேல் என்ன செய்ய இருக்கு. நான் எதை நம்பி, தனியாகப் பயணம் செய்தேனோ, அது இல்லையென்றாகிவிட்டது. இனிமேல் எனக்கு இந்த உலகில் யாரை நம்பி இருக்கமுடியும்” எனவும் மெதுவாகச் சொன்னாள்.
இந்த உலகம் ஒருவரை நம்பி மட்டும் இல்லை. நீ இந்த முடிவுக்கு வர யார் காரணம். யாருடைய யோசனை இது: எனக் கேட்க, :அப்படியாரும் எனக்கு யோசனை கூற இல்லை. என்னைப் பற்றிய எல்லாமே என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். கொஞ்ச நாட்களாக என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் துன்பமான கட்டத்தில், எனக்கென்று அறிவுரை கூறக்கூட யாருமில்லை. மேலும் எனக்கேற்பட்ட அவமானத்தை நான் யாரிடம் சொல்ல முடியும். என்னைப் பற்றி உங்களுக்கு எந்த விபரமும் தெரியாது. ஏதோ பஸ்ஸில் பார்த்தீர்கள், என் மீது பரிதாபப் பட்டு கூட்டி வந்தீர்கள்.” எனச் சொன்ன மயூரியைத் தடுத்து, இரகு “உன் எண்ணம் தப்பு நான் உன்னை தஞ்சாவூரிலேயே பார்த்திருக்கிறேன். நான் உன்னைப் பார்த்த சூழ்நிலையைப் பற்றி இப்போ நானே சொல்கிறேன். ஏனென்றால் நீ உன் இழந்த சுகங்களைப் பற்றியும், உன்னுடைய இன்றைய துன்பமான வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நியே உன் சினேகிதியிடம் சொல்லி வருத்தப்பட்டதை நானும் என் காதால் கேட்டேன். அந்த ஒருமுறை நான் பட்ட வேதனை போறும். இனியோரு முறை நீ அந்தச் சோகத்தை சொல்லும் வேதனையும் உனக்கு வேண்டாம். அதை மறுபடியும் கேட்கும் கொடுமையும் எனக்கு வேண்டாம். இப்போநான் சொல்வதை மட்டும் நீ கேட்டுக்கொள்.
“நான் நேற்று காலையில்தான் என் நண்பர் ஒருவரைப் பார்க்க தஞ்சாவூர் வந்தேன். அவர் எனக்கு அந்த ஊரில் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருப்பதாகவும்.நான் ஒரு முறை வந்து அந்தப் பெண்ணப் பார்த்தபின், முடிவு செய்யலாமென அவரின் அழைப்பின் பேரில் வந்தேன். ஆனால் நேற்று அவர் வேறு ஒரு முக்கிய காரியமாக வெளியூர் சென்றுவிட்டதாகவும். என்னை வந்தால் ஒரு நாள் தங்கச் சொன்னதாகவும் அவரின் வீட்டில் சொல்லவே, நானும் ஒரு நாள் தங்கி அவரைப் பார்க்க முடிவு செய்தேன். அப்போதுதான், பொழுது போக சிவகங்கைப் பூங்காவிற்கு வந்தேன். அங்கு இருந்த பெரிய மரத்தின் அடியில் இருந்த ஒரு பெஞ்சில் இருந்தேன். அப்போ, இரு பெண் மான்களும் அந்த மரத்தினடியில் வந்தமர்ந்தார்கள். அவர்களில் ஒரு மான் மிகவும் அழகாக, தன் பெரிய மருண்ட மான்விழிகளில் துன்பமும் வேதனையும் மின்ன, இன்னோரு மானோடு வந்தது. ஒரு முறை அந்த சின்ன அழகான மானைப் பார்த்த என் மனதில் ஒரு முடிவும் வந்தது. முடிந்தால் என் நண்பரின் மூலம் இந்த மானைப் பற்றிய விபரம் அறிந்து, அந்தச் சின்னமானையே என்னுடையதாக்கிக்கனும்கிற ஒரு ஆசையும் வந்தது. அதனால் என்னையுமறியாமல் அந்த இரு மான்களையும் கவனித்தேன். அப்போதுதான், அந்த இருவரும் தாங்கள் எதோ தனியாக இந்த பூங்காவில் இருப்பதாக எண்ணி, தங்களுக்குள் விபரமாகப் பேச ஆரம்பித்தார்கள். நானும் அவர்களிருவரின் அருகிலேயே, மரத்தில் பின்பிக்கத்தில் இருந்தபடியால், என்னால் அவர்களின் சம்பாஷனை முழுவதும் கேட்க முடிந்தது. அப்போதுதான், அந்த சின்ன மானின் வாழ்வில் எத்தனை இழப்புகள், சோதனைகள், இந்த சின்ன வயதில், யாருமற்று, எந்த உறவும், ஆதரவுமின்றி, தனக்கேற்பட்ட அவமானத்திற்கு பயந்து, பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு, இரவோடு இரவாக வேறு முன்பின் தெரியாத இடத்திற்கு வரவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையும், ஒரு மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு வயதுப்பெண், இந்த உலகில்த் தனியாக போராட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் என் மனக்கண்ணிலும் ஒரு பெண் தோன்றினார். அவர் என்னுடைய தாயார். அவர் என்னிடம் :இரகு இனிமேல் நீதான் அந்தப்பெண்ணுக்குத் துனையாக இருக்க வேண்டும். காலத்தில் கோலத்தால், பாதிக்கப்பட்ட அபலைப்பெண். அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு காட்டு” எனச் சொல்வதுபபோல் உணர்ந்தேன். அப்போதே என் மனதிற்குள் ஒரு சத்தியமும் செய்து கொண்டேன். “இந்தப் பெண்ணிற்கு என்னால் கட்டாயம் ஒரு நல்ல வாழ்வு காட்ட முடியும் அதற்காக, நான் எப்படியும் அந்த பெண்ணின் அருகிலேயே இருக்க வேண்டும். என்னை அந்தப் பெண் நம்பும்படியாக, நான் அவளிடம் உண்மையாக பரிவோடும், அன்பாகவும் இருக்க வேண்டும். என்னைச் சந்தித்தபின், இனியோரு முறை அந்தப் பெண் எந்தக் காரணத்திற்காகவும், வேதனைப் பட்டு, கண்களில் நீர் சிந்தக் கூடாது: எனவும் தீர்மானித்தேன், அதற்கேற்றபடி, நீயும் இப்போ நான் வாழும் சோழவந்தானுக்கே வர முடிவு செய்திருப்பதாக, உன் தோழியிடம் சொன்னதைக் கேட்டவுடன், உனக்கு நான் உதவ பகவானின் உத்திரவும் கிடைத்தது போல் சந்தோஷப்பட்டேன். அந்த வினாடியே என்னால் உனக்கு நிச்சயமாக நேற்று இரவு முதலே துனையாக இருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தேன். அதனால் நானும் உடனடியாக, நேற்றே இரவு பஸ்ஸில் மதுரைக்கும் பயணமானேன். பிறகு நடந்தது உனக்குத் தெரியும். நான் முன்பே உனக்குத் துனையாக இருக்க வேண்டுமென தீர்மானித்துதான், உன்னைச் தொடர்ந்தேன்.: எனவும் விபரமாகச் சொன்னான்.
இரகுவின் விபரமான பேச்சைக் கேட்டபிந்தான் மயூரிக்கு அவன் நேற்று இரவு பஸ்ஸில் தன்னிடம் பரிவாக நடந்துகொண்டதின் காரணம் புரிந்தது. யாருமற்ற தனக்கு முன்பின் தெரியாத ஊரில் உதவுவதற்காகவே பகவான் அவனை அனுப்பியிருப்பாரோ எனவும் அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. பிறகு அவனிடம் மெதுவாகக் கேட்டாள், “என்னைப் பற்றி எல்லாவிபரங்களையும் தெரிந்த நீங்கள் எனக்கு எந்த மாதிரி துனையாக இருக்க முடியும். என்னுடைய கறையை நான் சுமந்து கொண்டுதான் வந்திருக்கிறேன். என்னால் மற்றவரின் வாழ்க்கையையும் துன்பத்தில் ஆழ்த்த எனக்கு மனமில்லை. உங்களால் முடிந்தால், என்னை ஏதாவது ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிடுங்கள். பிறகு நான் எப்படியாவது என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன்: என.
உலகம் என்பது நீ நம்பி வந்த அந்த ஒருவரை மட்டும் இல்லை. இப்போ உனக்கு சட்டென்று யாரையும் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். நீ இதுவரை உன் வாழ்வில் ஒருவரைத் தான் சந்தித்திருக்கிறாய். துரதிர்ஷடமாக அவரும் உன்னிடம் உண்மையாக இல்லை. எப்போ நீ இந்த உலகைச் தனியாக சந்திக்க முடிவெடுத்து வந்தாயோ, அப்பவே நீ பலவேறு சூழ்நிலைகளைச் சந்திக்கவும் வேணும். முதலில் நீ தனியாக இருக்கக் கூடாது. உனக்கென்று ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். நீ என்னைப் பற்றி எப்படி நினைத்திருக்கிறாயோ தெரியாது. ஆனால் என் இதயபூர்வமாக, என் தாயாரின் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் உனக்கு, என்றும் உண்மையான பாதுகாவலாகத்தான் இருக்க விரும்புகிறேன். உன்னைப் பார்த்தவுடன் என் மனதில் ஒரு சலனம் வந்தது உண்மைதான். அதனால் நீ என்னை நம்ப பயப்படவேண்டாம். நான் உன் மனம் விரும்பும்படிதான் இருப்பேன். நீ என்றும் உனக்கு ஆதரவான மனிதர்களுடன் இருப்பது போல் என்னுடன் இருக்கலாம். உனக்கு என் மீது ஒரு சந்தேகமும் வரலாம். எதற்காக, உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும், உன்னை பாதுகாக்க நான் முன் வருகிறேன் என. காரணம் சொல்கிறேன்.
நீ இன்று இருக்கும் இந்தத் துன்பமான காலகட்டத்தில் என் தாயாரும் ஒரு நாள் இருந்தாள். இன்று உன்னுள் வளரும் ஒரு உயிர்போல் அன்று அவள் வயிற்றில் நான் வளர்ந்தேன். தாய்தந்தையற்ற என் தாயார், தன்னுடைய சகோதரனுடன் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் என் மாமாவின் பள்ளிச் சினேகிதன் ஒருவன், தன்னுடைய பெற்றோர், உடன் பிறந்தோர், தங்களுடைய வீடு, சொத்து எல்லாவற்றையும் இயற்கையில் சீற்றத்தால் இழந்து, என்னுடைய மாமாவின் துனையைத் தேடி வந்தான். முதலில் மாமாவுடன் அவருடைய வியாபாரத்தில், அவர் நடத்திய சாப்பாட்டுக்கடையில் துனையாக இருந்தான். என் மாமாவின் உதவியால், அந்த ஊரிலிருந்த ஒரு தர்ம சத்திரத்தில், மாதம் பணம் கொடுத்து, தான் தங்க இடம் பெற்றிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் என் மாமாவின் வியாபாரத்தில் நல்ல தேர்ச்சியைக் காட்டினான். அவன் சென்ற இடமெல்லாம் அவனுடைய வாய்ப்பேச்சு சாமர்த்தியத்தால், மாமாவிற்கு நல்ல வருமானமும், புகழும் கிடைத்தது. மாமாவின் நண்பர்களும், துனை வியாபாரிகளும் மாமாவிடம் இன்னும் கொஞ்ச நாள் போனால், உன் நண்பன் உன்னைக்கூட வியாபாரத்தில் தோற்கச் செய்து விடுவான். பலே கைகாரன். எனப் பெருமையாகவும்., அதே சமயம் என் மாமாவின் மனதில் ஒரு சந்தேகத்தையும் விதைத்தார்கள். அதனால் என் மாமா அவனை அதிகம் வெளியே அனுப்பாது, கூடியவரையில் தன்னுடைய சாப்பாட்டுக்கடையிலேயே இருக்குமாறு செய்தார். அதனால் அவர் அடிக்கடி வெளியூர் போகவேண்டியிருந்தது. அப்படி இருக்கும்போது, அந்த நண்பரும், என் தாயாரும் மனம் விட்டுப் பழக ஆரம்பித்தார்களாம். என் தாயாருக்கு அவர் தன்னுடைய அண்ணாவின் நண்பர் என்பதாலும், தற்போது அவர் தன் சகோதரனின் ஆதரவில் இருப்பதால், தன்னுடைய எதிர்காலம், அவருடன் சந்தோஷமாக இருக்குமெனவும் நம்பினாராம். அதனால் அவர் தன் விருப்பத்தையும் அந்த புதியவரிடம் சொல்லி, எப்படியும் தங்களுடைய கலியாணத்தை தன்னுடைய அண்ணா நடத்தி வைப்பாரென்றும் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அப்போ அவரும் “நான் உன்னைக் கலியாணம் செய்யும் முன் என்னுடைய வசதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். நான் உன் அண்ணனைப் போல் வியாபாரம் செய்யனும். அதற்குதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வருகிறேன். குறிப்பிட்டளவு பணம் சேர்ந்தபோது, உன் அண்ணாவின் உதவியுடனே தனியாக ஒரு வியாபாரத்தை தொடங்கி, உன்னையும் மணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம்” எனவும் உறுதியாகச் சொல்வாராம். அதனால் இருவரும் எந்தவிதமான மன உறுத்தலின்றி, சந்தோஷமாக இருந்தார்களாம். தன்னுடைய நண்பனின் கணக்கில் அவ்வப்போது அதிகமாகப் பணம் சேர்வதைக் கண்டு, என் மாமாவும் தன்னுடைய கடை கணக்குகளை தூண்டிப் பார்க்கலானார். அப்போதான், தன்னுடைய வியாபாரத் தோடர்பு உள்ளவர்களிடம், தன்னுடைய நண்பன் தனியாகவும் சில சின்ன சின்ன வியாபாரங்களைச் செய்வதையும், அதனால் தன்னுடைய வழக்கமான வியாபாரம் தடை பட்டதையும் உணர்ந்தார். அதனால் ஒரு நாள் கோபம் கொண்டு தன் நண்பரிடம் “நான் உன்னை எனக்குத் துனையாக வேலைச் செய்யத்தான் வைத்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது, என் வியாபார விஷயமாக நீ போகும் இடத்தில், நீயாக தனியாக எப்படி ஒரு வர்த்தகம் செய்யலாம். இனிமேல் உன்னை நம்பி என் வர்த்தகத்தை நான் விடக்கூடாது. உனக்கு தனியாக இருக்கனும்னு ஆசை வந்தபின், நாமிருவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. இதுவரை நீ என்னை ஏமாற்றிப் பணம் சேர்த்தது எனக்குத் தெரியும். அதனால், நீ இன்றே இந்த ஊரைவிட்டுப் போய்விடு. நான் உன்னை நல்லவனென்று சேர்த்துக்கொண்டேன். ஆனால் நீ எனக்குத் துரோகம் செய்துவிட்டாய்? எனக் கோபமாகப் பேசி, அவரை கண்டபடி பேசி, அடித்து, அவமானப்படுத்தி, ஊரைவிட்டுத் துரத்திவிட்டார்.
தன்னுடைய நண்பன் போனதைப் பற்றித் தன் தங்கையிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், தினமும் வரும் அவர் வராததால், ஒரு நான் என் தாயார் தன் அண்ணாவிடம் கேட்டாராம் அவர் ஏன் இப்போ அடிக்கடி பார்க்கமுடியவில்லை, நீ ஏதாவது ஊருக்கு அனுப்பியிருக்கிறாயா”என. அப்போதான் என் மாமா சொன்னார்ராம், அவன் என்னிடம் திருட்டுத்தனம் செய்துவிட்டான். அதனால் நான் துரத்தி விட்டேன். இனி அவன் வரமாட்டான்: என. மாமாவின் கோபத்தைப் பார்த்த என் தாயாருக்கு முதலில் பயம் அதிகமாகியதாம். தன்னுடைய நண்பன் திருட்டுத்தனம் செய்தான் என்பதை, அவரும் தானும் பிரியமாகப் பழகுவதைத்தான் அண்ணா அப்படிச் சொல்கிறார் என. அதனால் தன்னுடைய மனதில் இருப்பதை சொல்லாமல் மறைத்து விட்டாராம்.
ஆனால் அவர் மறைத்தாலும், மறைவில் நடந்த தொடர்பின் விளைவு மறைவில்லை. அது என் தாயாருக்குத் தெரிந்தபோது, மிகவும் பயந்தாராம். ஊராரின் கண்களில் தான் எத்தனை அவமானப்பட வேண்டுமென்றும், தன்னுடைய அண்ணானின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமென்றும். அதே சமயம் நாட்கள் அதிகமானால், தன்னால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ள முடியாது, வேறு யாரையும் பார்க்க முடியாது எனப் புரிந்து, ஒரு நாள் இரவில் என் மாமா இல்லாதபோது, அரளிவிதையை அறைத்துக் குடிக்க முயற்சி செய்தாராம். அப்போ திடீரென்று வந்த மாமா, தன் தங்கையின் நிலையைப் பார்த்து சந்தேகப்பட்டு “நீ இந்த இருட்டில் உட்கார்ந்து என்ன குடிக்கிறாய்? எனக் கேட்டபடி, தங்கையில் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கிப் மோந்து பார்க்க, அது அரளிவிதைவிஷம் எனத் தெரிந்து, :நீ இதைக் குடிக்க என்ன காரணம், என்ன தப்புச் செய்தாய்.? எனக் கேட்டு, அவளை அடிக்கலானார். அப்போ என் தங்கை தன்னுடைய தப்பைச் சொல்லி, தானும் உன் நண்பரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாக, ஆசையாகப் பழகியதையும், அவளைக் கலியாணம் செய்து கொள்ள தன்னுடைய வசதியை உயர்த்திக் கொள்ள, சின்னச் சின்ன வியாபாரம் செய்து தனியாகப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும், உன்னுடைய ஆசியால் என்னையும் திருமணம் செய்து கொண்டு, தனியாக என் பேரில் ஒரு வியாபாரத்தையும் ஆரம்பிக்க இருப்பதாகவும் சொல்லி, என்னிடம் சத்தியம் செய்து கொடுத்தார். நானும் நீயும் அவரும் நண்பர்கள் தானே என நினைத்து, என் மனம் ;போல் அவருடன் சந்தோஷமாக இருந்தேன். ஆனால் நீயோ அவர் உன்னிடம் திருட்டுத்தனக் செய்ததாகச் சொல்லி, அவரை இந்த ஊரைவிட்டே துரத்திவிட்டாய். நானும் உன் கோபத்திற்குப் பயந்து உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இப்போ அவருடைய குழந்தை என்னிடம் வளரும் நிலையில், என்னால் இனி உயிருடன் இருக்க முடியாது. அதனால்தான், என் அவமானம் என்னுடன் போகட்டும் என உன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவுசெய்து, இதைக் குடிக்கலானேன். அதற்குள் நீ வந்து விட்டாய்? என்னை மன்னித்து விடுண்ணா. என்னால் அவர் என்னை ஏமாற்றுவார் என நினைக்க முடியவில்லை. நானும் உனக்குத் தெரியாமல், அவர் இந்த ஊரில் எங்காவது வருவாரா எனவும் பார்த்தேன் ஆனால் அவர் வரவில்லை. என்னைச் சாகவிடு. உனக்குப் புண்ணியமாகப் போகும். யாரும் கேட்டால், எனக்குத் தீராதவயிற்றுவலி. தாளாமல் மருந்து சாப்பிட்டுவிட்டேன் எனச் சொல்லிவிடு. யார் உன்னைக் கேட்கப் போகிறார்கள்: எனவும் வருத்தத்துடனும், அழுகையுடனும் சொன்னாராம்.
பதிலுக்கு என் மாமாவும் :பவானி, நான் முன்பின் யோசிக்காமல், அவனிடம் சரியான காரணத்தைக் கூடக் கேட்டுத்தெரிந்துக்காமல், என் புத்தியில் பட்டபடி, முன் கோபத்தால் அவனை அவமானப்படுத்திவிட்டேன். அவன் பணம் சேர்த்ததை நான் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டேன். எனக்குப் போட்டியாக அவனும் வியாபாரம் செய்யப் போகிறான் என நினைத்து, என் வியாபாரம் அழிந்து விடக்கூடாதென்று, அவனை அப்பவே ஊரைவிட்டு துரத்தியது மட்டுமின்றி, அவன் யார்யாருடன் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்திருந்தானோ, அவர்களிடம் எல்லாம் அவன் என்னிடம் திருடிவிட்டதாகச் சொல்லி, அவனால் எங்கும் நிற்க முடியாது செய்து விட்டேன். அதனால், அவன் இப்போ எங்கு இருக்கிறான் என்ன செய்கிறான் என்பதெல்லாம் எனக்குச் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் அவன் என் கண்முன் இல்லாமல் போனதுதான் சந்தோஷம் என இருந்து விட்டேன். ஆனால் என் புத்திக்குப் படவில்லை, உனக்கும் அவனுக்கும் அப்படி ஒரு உறவு உண்டாகும் என. என் வியாபாரத்தில் தான் போட்டியாக அவன் வரக்கூடாதென்று முக்கியமாக நினைத்தேனே தவிர, உன்னை[ப் பற்றி நான் நினைக்கவே யில்லை. அப்படியிருந்தால், வயதான ஒரு பெண்ணை வீட்டில் வைத்திருப்பவன், அவளுக்கு காலாகாலத்தில் ஒரு திருமணம் செய்யனும்னு நினைக்காமல், பெரியவர்கள் இல்லாத வீட்டில் உன்னுடன் தனியாக அவனையும் இருக்கச் செய்திருப்பேனா, பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில்லேயெ வைத்திருந்தது என்னுடைய தப்புத்தானே, கண் எதிரில் இருந்த ஒரு நல்லவனை அடையாளம் காணாமல், துரத்தி விட்டு, உன்னுடைய வாழ்க்கையையும் அழித்து விட்டேனே. அம்மா, நீ இப்பவாவது என்னிடம் சொன்னாயே. நீ உன் மனதில் இருப்பதை என்னிடம் கொஞ்சம் முன்பே சூசகமாகச் சொல்லியிருந்தால் கூட, நான் இப்படி நடந்து கொண்டு, உன்னையும், அவனையும் பிரித்து இருக்கமாட்டேனே. எனக்குச் தெரியாதே. இனி அவனை நானே எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, அவன் காலில் விழுந்தாவது மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவனை அழைத்து வந்து, உனக்கே திருமணம் செய்து கொடுத்து, அவனுக்கும் இந்த வியாபாரத்தையும் கொடுப்பேன். நீ தைரியமாக இரு” எனவும் ஆறுதல் சொல்லிச் சென்றார். ஆனால் அவரின் முயற்சி பலிக்கவில்லை,
மாமா அவனைத் தேடிப்போன போது அவன் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருந்ததைப் பார்த்து,அவனிடம் நீ என் தங்கையிடமும் பழகிவிட்டு, அவளுக்கும் ஒரு கர்ப்பத்தைக் கொடுத்துவிட்டு, இப்படி இங்கு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது சரியா, உனக்கு மனசாட்சியில்லையா? எனக் கோபமாகக் கேட்டபோது, அவர் “உன் தங்கையைக் கலியாணம் செய்து கொண்டு, உனக்கு வாழ்நாள் பூராவும் அடிமையாக இருப்பேன் என்றா எதிர்பார்த்தாய், நான் உங்களையெல்லாம் விட்டுவிட்டு வந்து விடேனே, இப்பே வந்து என்னிடம் உன் தங்கை கர்ப்பமாக இருப்பதற்கு நான் தான் காரணம் என்று எப்படி சொல்லுவாய்? எங்கேயோ மோசம் போனவளை சுலபமாக என்னிடம் தள்ளிவிடலாமா என்றுதானே இன்று என்னைத் தேடி வருகிறாய். அன்று நான் சின்ன சின்ன வியாபாரம் செய்து கொஞ்சம் பணம் சேர்த்தது பெரிய தப்பாகச் சொல்லி, என்னை எத்தனை அவமானப் படுத்தினாய், இன்றுவந்து என்னிடம் கொஞ்சமும் வெட்கமில்லாமல் உன் தங்கையை மணம் செய்து கொள் எனக் கேட்கிறாய்? இப்போ நான் தனியாக ஒரு வியாபாரம் செய்து நல்லபடி தான் இருக்கிறேன். எனக்கென்று ஒரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டு என்வரையில் சுகமாக இருக்கிறேன். இங்கே வந்து உன் அதிகாரத்தைக் காட்டாதே. நானும் என்னால் என்ன செய்யமுடியுமோ அத்தனியும் செய்வேன். உண்மையாக இருந்தவனுக்குத் திருட்டுப்பட்டம் கட்டினாய். இப்போ உன் குடும்பமே அவமானப்படும்படியாகி விட்டது. இனியும் இங்கே நின்றுகொண்டு மரியாதையைச் கெடுத்துக் கொள்ளாதே. வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போ” என கொஞ்சமும் மனிதாபமின்றி, நான் அவன் கஷ்டப்பட்டு வந்த போது ஆதரவாக இருந்து செய்த உதவியையெல்லாம் மறந்து விட்டு, ஒரே ஒர்முறை முன் கோபத்தால் அவனிடம் கடுமையாக நடந்துகொண்டது பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படிபட்ட ஒரு மனசாட்சியில்லாதவனுக்கு என் தங்கையைக் கட்டாயப்படுத்திக் கொடுக்க என் மனது வரவில்லை. அதனால்தான் என் தங்கையிடம் அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை என உண்மையை மறைத்து சொல்லி விட்டேன். இருவரும் சொந்த ஊரைவிட்டு, இரவோடு இரவாக இந்த ஊருக்குள் வந்து, பிறகு இங்கிருப்பவர்களின் உதவியால், ஒரு வழியாக பிழைக்கலானோம்.
நாங்கள் வரும்வழியில் எங்களுடன் ஒரு பெண்ணும் அவளுடைய தாயாரும் வந்தார்கள். அவர்களின் பெண்ணுக்கு கணவன் சமீபத்தில்தான் மரணம் அடைந்தானாம், அப்போ அந்த பெண் இரு மாதங்கள் கர்ப்பமாக இருந்தாளாம். என்ன செய்வது சின்ன வயதில், குழந்தை பிறக்குமுன்பே என் மகள் விதவையாகி விட்டாள். இனியே அவளையும், அந்தக் குழந்தையும் நாங்கள்தான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும்: என வருத்தப்பட்டுக் கொண்டு வந்தாளாம். அவளைப் பார்த்த என் தங்கையும் அன்றே ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். நாங்கள் புதிதாக வந்தவுடன், தன்னுடைய பு, பொட்டு, மங்கலச் சின்னங்களையெல்லாம் அழித்துக் கொண்டுவிட்டாள். தான் ஒரு விதவையைப்போல் தோற்றமளித்தாள். நான் காரணம் கேட்டதற்கு “அண்ணா, விதவைத் தங்கையை குழந்தையுடன் நீ மானமாக காப்பாற்றமுடியும். ஆனால் திருமணமாகாமல் குழந்தையுடன் இருக்கும் தங்கையை ஊராரின் அவமானத்திலிருந்து எப்படிநீ காப்பாற்றுவாய். என்னைப் பொறுத்தவரையில், நான் அவருடன் நான் மனதார ஒரு மணைவியாகத்தானிருந்தேன். இப்போ அவர் என்னுடன் இல்லை. என் குழந்தைக்கு அவர் இல்லாவிட்டாலும், அவர்தான் தகப்பன். அதனால், நான் இனிமேல் இந்த உலகில் உன் விதவைத் தங்கையாகத்தான் வாழ்வது என முடிவு செய்து விட்டேன். இனியே அப்படியே இருந்து விடுகிறேன் என்றும் சொல்லிவிட்டாள். எனக்கும், என்னால் தான் அவள் வாழ்வு சீரழிந்தது எனற உறுத்தல் இருந்ததால், நானும் அவளுக்காக் திருமணம் செய்யாமல், அவளுக்குப் பிறக்கும் குழந்தையையே என்னுடையதாகவும் எடுத்து வளர்த்துக் கொண்டு இருப்போமென அவள் விருப்பப்படியே, இருவரும் தனியாக, என்னுடன் மட்டும் வாழ்ந்து வந்தார்களாம்..
நான் அவர்களுடன் ஒரு குழந்தையாக இருந்தேனே தவிர, அவர்களிடமிருந்து எந்தவிதமான அதிக பிரியத்தையோ, பாசத்தையோ, அன்பையோ அனுபவிக்கவில்லை. ஏன் எனக்கு அவர்கள் ஒர் பெயர்கூட வைக்கவில்லை. இருவரும் என்னை :அம்பி: எனவே கூப்பிட்டுவந்தார்கள். சின்ன வயதில் என் தாயாருடன் கோவிலுக்குப் போவேன். அங்கு குருக்கள் எல்லாருக்கும் குங்குமம், பூ கொடுப்பார். ஆனால் என் அம்மாவுக்கு மட்டும் கொடுக்கமாட்டார்/ அது எனக்கு உறுத்தலாயிருந்தது. அதனால் ஒருநாள் நான் அந்த குருக்களிடம் :ஏன் மாமா எல்லாருக்கும் நீங்கள் குங்குமம், பூ கொடுக்கும்போது, என் அம்மாவிற்கு மட்டும் தருவதில்லை. நீங்கள் என்னுடைய அம்மாவிற்கும் தரவேண்டும் எனக் கட்டாயமாகச் சொன்னபோது அவர் என்னைப் பார்த்து பரிதாபமாகச் சொன்னார்.”பாவம்டா நீ சின்ன வயது. புரியவில்லை. உன் அம்மா விதவையாகிவிட்டாள். அவளால் இனிமே குங்குமம், பூ எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது, அவளுக்கு யாரும் கொடுக்கவும் கூடாது, இதெல்லாம் உனக்குப் புரியாது. கோபப்படாதே: எனச் சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார். நான் உடனே என் அம்மாவிடம் “உனக்குக் குங்குமம், பூ கொடுக்காத சுவாமி கோவிலுக்கு இனியும் நீயும் வராதே. நானும் வர மாட்டேன்: எனச் சொல்லிக்கொண்டு, அழுது கொண்டே கோவிலிருந்து ஓடிவிட்டேனாம். அன்றுமுதல் என் அம்மாவும் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டாள். விஷயம் தெரிந்து என் மாமா என் அம்மாவிடம் :அவன் ஒரு குழந்தை புரியாமல் சொன்னான் என்பதற்காக, நீயும் பகவானிடம் கோபிக்க முடியுமா. முட்டாள்தனம் செய்யாதே. அவனுக்குப் கொஞ்சம் நாள் போனால் புரிந்து கொள்வான். நீ யோ வேறு எங்கும் போவதில்லை. ஓரே இடம் இந்தக் கோவிலுக்குத்தான் போனாய். அதுவும் இப்போ நின்றுவிட்டது. நாள் பூரா இந்த சின்ன வீட்டுக்குள்ளேயே இருப்பாயா? எனவும் வருத்தப்பட்டுக் கொண்டு பேசினாரே தவிர, என்னிடம் அது விஷயமாகப் பேசவே யில்லை.
என் வீட்டிற்கு எதிரில் ஒரு பள்ளிக்கூட தலைமைஆசிரியரின் வீடு இருக்கும். அவர்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு நாள் அவரின் மனைவி வெளியேச் செல்லும்போது, அவரின் கைப்பையிலிருந்து ஒரு பர்ஸ் கீழே விழுந்தது. அதைப் பார்த்த நான் அதை எடுத்துக்கொண்டு, ஓடிப்போய் அந்த மாமியிடம் கொடுத்து, :மாமி, நீங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பும்போது இந்தப் பர்ஸ் கீழே விழுந்து விட்டது. நீங்கள் கவனிக்கவில்லை. நான் எதிர் விட்டிலிருந்து பார்த்தேன். அதனால் எடுத்துக் கொண்டு வந்தேன். வாங்கிக்கோங்கோ, உங்கள் பர்ஸ். பணம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனவும் பார்த்துச் சொல்லுங்கள்: எனவும் சொல்ல, அந்த மாமி என்னைப் பார்த்து :சமர்த்துப் பையனப்பா. நான் அவசரத்தில் கவனிக்காமல் வந்து விட்டேன். நல்லவேளை உன் கண்ணில் பட்டது. நீ நல்லபையன் என்னிடம் உண்மையாக எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாய். ஆமாம், நானும் உன்னை எதிர் வீட்டில் பார்த்திருக்கிறேன். உன் பெயர் என்ன? எனக் கேட்க, நான் என் பெயர் தெரியாது. ஆனால் என் மாமாவும்,அம்மாவும் என்னை :அம்பி: என கூப்பிடுவார்கள் என்றும் பதில் சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பி ஓடி வந்துவிட்டேன்.
அன்று இரவு அந்த எதிர்வீட்டு மாமா என் மாமாவிடம் வந்து மதியம் நடந்தததைச் சொல்லி, என்னுடைய உண்மைக்கு பாராட்டிவிட்டு, “என்னிடம் நீ எந்த பள்ளியில் படிக்கிறாய்” எனவும் கேட்டார். அதற்கு என் மாமா :எனக்கு இந்த ஊரில் அதிகமாக யாரையும் தெரியாது. நானும் என் தங்கையும் இந்தக் குழந்தையுடன், பிழைக்க வழிதேடி இந்த ஊருக்குவந்தோம். நான் மார்க்கெட்டில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறேன். வரும் வருமானத்தில் ஏதோ மானமாகச் சாப்பிடுகிறோம். அதனால் இவனைப் படிக்க்க வைக்கனும்னுகூட எங்களுக்குத் தோணவில்லை. பாருங்கள். எங்களின் நிலைமை” எனக் கண்களில் நீர்வழியக் கூறினார். அப்போதே அவர் என் மாமாவிடம் “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் இந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமைஆசிரியர். நாளைக்கு நீங்கள் என்னுடன் காலையிலேயே இந்த அம்பியுடன் வாருங்கள். நான் இவனை எங்கள் பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைக்கிறேன். இனிமேல் இவனின் படிப்புக்கு நான் துனையாக இருப்பேன். ஏனென்றால், எங்களுக்கும் ஒரு குழந்தை இல்லை. இனிமேல் இவனையே எங்களின் குழந்தையாக நாங்கள் நினைத்துக் கொள்ளுகிறோம்.: எனவும் சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்த நாள் பள்ளியில் என் பெயரைக் கேட்க என் மாமா “அவனுக்கு நாங்கள் இதுவரை ஒரு பெயரையும் வைக்கவில்லை. சும்மா அம்பி எனக் கூப்பிடுகிறோம்:எனச் சொல்ல, அவரே என்னிடம் “உனக்கு நான் ஒரு பெயர் வைக்கட்டுமா எனக் கேட்டுக்கொண்டே :இரகு” எனச் சொன்னார். அப்போ அங்கிருந்த ஒரு போர்டில் :நா, நந்தபோபால்” என எழுதியிருந்ததைப் பார்த்த நான், அவரிடம் :மாமா, உங்களின் பெயரையும் சேர்த்து எனக்கு “இரகுநந்தன்” என வையுங்களேன் எனக் கேட்டேனாம். அதுவே அவருக்கு மிகவும் சந்தோஷமாக, அவரும் சிரித்துக் கொண்டே “இனிமேல் நீ எங்களுக்கும் ஒரு குழந்தைதானே அதனால் உன் பேர் இனிமேல் “ந, இரகுநந்தன்”எனவே எழுதிவிடுகிறேன்” எனச் சொல்லிக்கொண்டே, அங்கிருந்த ஒரு பாரத்தில் எழுதி என் மாமாவிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார். அன்றுமுதல் எனக்கு இரகுநந்தன்” என ஒரு பெயர் கிடைத்தது. அதுதான் நான் வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலை. அவரின் நேரடி கவனிப்பில் நான் ஒரு நல்லவனாக, பொறுப்பான மாணவனாக இருந்தேன். நான் படிப்பிலும் மிகவும் கவனமாக இருநது, எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாகவே இருந்தேன். பள்ளியிறுதியும், பணிரெண்டாம் படிவத்திலும், பள்ளியிலேயே முதல் மாணவனாகச் தேர்ச்சி பெற்றாதால், அவரின் முயற்சியால் என்னை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்து விட்டார். எனக்கு அரசின் உதவியுடன், கல்லூரிலியேயே இலவசமாகத் தங்கிப் படிக்கவும் இடம் கிடைத்தது. தந்தையற்ற ஏழை மாணவன், விதவையின் மகன் என்கிற சலுகையும் கிடைத்தது. அதனால் நான் அதிகம் சிரமமின்றி, நன்றாகப் படித்து டாக்டராகப் பட்டம் பெற்று, மருத்துவத்த்துறையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, இப்போ இந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமணையில் உதவி மருத்துவராகப் பணியாற்றுகிறேன்.
நான் படிக்கும்போதே என் அம்மா, மாமா இருவரும் காலமாகிவிட்டார்கள். என் தாயார் காலமாகும்போதுதான் என் மாமா என்னிடம் என் பிறப்பின் இரகசியத்தைச் சொல்லி, என் அம்மா ஒரு விதவை யில்லை. திருமணமாகாமல், ஒரு குழந்தைக்குத் தாயானதால், ஊராரின் அவமானத்துக் பயந்து, தனக்குத்தானே விதவை வேடம் போட்டுக் கொண்டு, தன் வாழ்நாள் பூராவும் எந்த ஒரு நல்லதும் அனுபவிக்காமல் போனதைச் சொன்னார். அப்போ அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். “இந்த உலகில் இருக்கும் அத்தனை அபலைப் பெண்களுக்கும் நாம் பாதுகாவலாம இருக்க முடியாது. உன்னால் முடிந்தால் உன் வாழ்வில் துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு முடிந்தவரையில் துனையாக, நல்ல மனிதனாக நடந்து கொள். என்னுடைய முன்கோபத்தால் என் தங்கையின் வாழ்வு அழிந்தது. நான் கொஞ்சம் யோசித்துப் பார்த்திருந்தால், வியாபாரம் என்பது ஒருவரின் தனி உரிமையல்ல. ;புத்தியிருப்பவர்கள் எல்லாரும் அதில் பங்கு கொள்ளலாம் என உணர்ந்திருந்தால், அன்று என் நண்பனை அத்தனை அவமானப்படுத்தி இருக்கமாட்டேன். அதனால், எந்தாளும் நீ கோபத்திற்கோ, அவசரமாக எந்த முடிவுக்கும் வராதே. நாங்கள் உனக்குச் சொத்து வைக்க வில்லை. நல்ல மனிதனாக வாழு”என ஆசிர்வதித்து விட்டுப் போனார். அன்றுமுதல் எனக்கு என் மாமாவின் வார்த்தைகள்தான் தாரகமந்திரம்.
அதனால்தான், இன்று உன்னைப் பார்த்தவுடன், என் தாயாரின் துன்பமான வாழ்க்கை என் கண்முன் வந்தது. அந்தமாதிரியோரு கொடுமையான வாழ்வுக்கு நீ ஆளாகக்கூடாது. அதனால், இப்போ சொல்கிறேன் “என் தாய், மாமா, உன்னைப் பெற்றவர்களின் மீது சத்தியமாக உனக்குள் வளரும் இந்தக் கருவிற்கு நான் தகப்பன். என்னை நீ உன் குழந்தைக்குத் தந்தையாக எண்ணிக்கொள். இந்த உலகில் ஒரு பாவமும் அறியாத அந்தச் சின்ன உயிர் அவமானப் படக்கூடாது. அதற்காக, நீ என் அம்மாபோல் வாழ்வில் ஒரு மங்கலமுமின்றி, இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். நான் உனக்குக் காவலனாக, ஒரு கணவரனாக இருக்கவே விரும்புகிறேன். அதற்காக, நீ இப்போ இருக்கும் இந்தச் சூழ்நிலையில், உன்னிடம் என்னைச் திருமணம் செய்து கொள் என கேட்கும் கொடுமையை நான் செய்ய விரும்பவில்லை. நீ இப்போ இந்த வீட்டில் ஒரு பாதுகாப்பான உறவுடன், நிம்மதியாக இருக்கவேண்டும். உன் வாழ்வு உன் விருப்பம். நீ இப்போ உன் வயிற்றில் வளரும் சிசுவை அழிக்க விரும்புகிறாய். அது நிதர்சனமானதுதான். உன்னுடைய எதிர்காலம் இந்தக் குழந்தையால் பிரச்சினையாகவோ, அவமானமாகவோ மாறக்கூடாது. அதனால்தான் நான் ஊரரிய இந்தக் குழந்தை என்னுடையது எனக் கூறுவேன். நீ உன் வாழ்வில், யாருடைய தொந்திரவுமில்லாமல் நிம்மதியாக இரு. உன் விருப்பப்படியே, நான் இந்த ஊரில் இருக்கும் அரசு பெண் மருத்துவரிடம் உன்னை அழைத்துப் போகிறேன். உன் விருப்பப்படியே, முதலில் செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன். ஆமாம், இப்போ உனக்கு எத்தனை மாதமிருக்கும். அங்கு யாரிடம் பார்த்து, நீ கருவுற்றிருப்பதாகச் தெரிந்து கொண்டாய்?எனவும் கேட்டான்.
:நான் யாரிடமும் போகவில்லை. என்னுடைய நாட்கள் தள்ளிப்போனதும், என்னுடைய லாபிலேயே என்னுடைய சிறுநீரை எடுத்துப் பரிட்சை செய்து பாத்துக்கொண்டபோதுதான், எனக்குள் ஒரு உயிர் வளரும் நிலை புரிந்தது. அதனால் மிகவும் கலங்கிப்போனேன். யாருடைய உதவியையும் தேடிப்போகவும் வழியில்லை. என் அம்மாவின் உறவென்று வந்தவனைப் போய் பார்த்தேன். அப்போதுதான், அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்பதையும், என்னுடைய நிராதரவான நிலைமையை அவன் உபயோகித்துக் கொண்டுவிட்டதையும் தெரிந்து கொண்டேன். ஒன்று மட்டும் உங்களுக்கு சொல்லிக் கொள்ளுகிறேன். என்னுடைய இந்த நிலைமை நான் சம்மதப்பட்டு என் சுயநினைவில் இருந்தபோது நடக்கவில்லை.
ஒரு முறை எனக்கு அதிகமாக ஜுரம் வந்து, வேலைக்குப் போகவில்லை. அன்று நான் வேலைக்கு வரவில்லை என்பதை என் லாபில் போய்த் தெரிந்து கொண்டவன், நல்லவன்போல் வந்து என்னிடம் பரிவாகப் பேசி, உனக்கு மாத்திரை வாங்கி வருகிறேன் எனச் சொல்லி, ஏதோ இரு மாத்திரைகளை கொடுத்தான். நான் அவனை நல்லவனென்று நம்பி, உண்மையாக எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் அந்த மாத்திரைகளைச் சாப்பிட்டேன் பிறகு என்ன நடந்திருக்குமென நீங்களெ புரிந்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் நான் முழித்தபோது :ஐயோ...என் நிலைமையை என்னாலேயே கண் கொண்டு பார்க்கமுடியவில்லை. பக்கத்தில் அந்த அயோக்கியன் நன்றாக உரிமையுடன் உடம்பில் துணியின்றி உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு நிமிஷம் நான் கோபத்தில் கொதித்து விட்டேன். அவனை அப்படியே விட்டுவிட்டு, என்னைச் சரிபடுத்திக்கொண்டு, சமையல் அறைக்குப்போய் அங்கிருந்த ஒரு விறகுகட்டையை எடுத்துவந்து, அவனை என் ஆத்திரம் தீர வேகமாக அடித்தேன்.
என் அடியால் அவன் மூக்கு உடைந்து இரத்தம் பெறுக, முழித்தவன் என்னைப் பார்த்து “என்னாச்சு உனக்கு, ஏன் அப்படி அடிக்கிறாய்? எனவும் கேட்க, நானோ “பாவி, உன்னை என் அம்மா தன்னுடைய உண்மையான உறவென்றுதான் சேர்த்துக் கொண்டாள். அப்படியிருக்க, என்னை இப்படி அசிங்கப்படுத்தி விட்டாயே..நானென்னடா பாவம் செய்தேன். தாய்தந்தை யில்லாத என்னைப் போய் இப்படி பண்ணிவிட்டாயே இனி நான் எப்படிடா இந்த ஊரில் மற்றவர்கள் முகத்தில் முழிப்பேன்: எனக் கதற, அவனோ என்னிடம் “இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இப்படி ஒரு கூச்சல் போடுகிறாய். ஒரு வயது ஆணும் பெண்ணும் இருந்தால் என்ன நடக்கனுமோ அதுதானே நடந்தது. இப்போ என்ன உன்னைக் கலியாணம் செய்து கொள்ளவேண்டும். நாந்தான் தயாராக இருக்கிறேனே. எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் உன் அப்பாவின் வருஷம் முடியும். உன் அம்மா சொன்னபடியே, அதற்குப்பின் நாமிருவரும் இந்த ஊர் கோவிலில் கலியாணம் செய்து கொள்ளலாம். அ;ப்படியே நீ பயப்படும்படி ஏதும் ஆகியிருந்தாலும், கவலைப்படாதே. நானிருக்கிறேன்: எனச் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே “நீ பெரிய கண்ணகியா? அப்படி ஆடுகிறாய்? எனவும் கேலியாகக் கேட்டுக்கொண்டே சென்றவந்தான். பிறகு அவனைக் காணவேயில்லை:எனத் துன்பத்தைச் சொல்லிக்கொண்டு மீண்டும் அழத்தொடங்கினாள்.
இப்போது இரகுவால் அவளின் அழுமையை அடக்கவும் முடியவில்லை. ஒரு சின்னப் பெண் பாவம் கடும் ஜுரத்தால் தவிக்கும்போது கொஞ்சமும் மனிதாபமின்றி, அவள் உடல் நலத்துடன் இருந்தால் தன்னை நெருங்க விடமாட்டாளென்பதைப் புரிந்த ஒரு அயோக்கியன் அவளுக்கு மருந்து கொடுப்பதுபோல், மயக்க மாத்திரை கொடுத்து, தன்னுடைய பசியைத் தீர்த்துகொண்டுவன் மட்டும் தன் கண்ணில் பட்டால், அவனைத் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுவிட்டு பிறகு எனக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை எனச் செய்வேன் என தன் மனதுக்குள் கோபத்தாலும், துன்பத்தாலும் தவித்தான், நேரம் சென்று கொண்டிருந்தது.
பிறகு மெதுவாக இரகு “மயூரி, இப்போ அழுவதால் எதுவும் தீரப்போவதில்லை. உனக்குத் துன்பமான நேரம். இனிமேல் நீ என்னுடைய யோசனைக்கு வா. நான் இந்த ஊரில் உன்னை என் மனைவி என எல்லாருக்கும் சொல்லிவிடுவேன். அதனால் நீ இங்கிருப்பதை யாரும் ஆட்சேபிக்கமுடியாது. நாளை நான் உன்னை என் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறேன். அங்கு டாக்டரிடம் எப்படி சொல்லவேண்டுமோ அப்படி நான் சொல்லுவேன். நீயாக எதுவும் சொல்ல வேண்டாம். சரி, இப்போ நான் ஒரு டாக்டர் என்கிற வகையில் உன்னைக் கேள்விகேப்பேன். அதற்கு நீ என்ன பதில் சொல். ஆமாம், நீ கடைசியாக விலக்கு ஆனது எப்போ? இப்போ, உனக்குள் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? காலையில் எதுவும் சொர்வாக இருக்கிறதா, மயக்கம் வருகிறதா?எனவெல்லாம் கேட்பார்கள். அதற்கு நீ உனக்கு உண்மையாக என்ன தெரிகிறதோ அதைச் சொல். எந்தக் காரணத்தைக் கொண்டு, நீயாக பரீட்சை செய்து பார்த்து தெரிந்ததாகச் சொல்லாதே. அப்படிச் சொன்னால் டாக்டர்களுக்கு உன்மேல் கோபம் வரும். : எனச் சொல்லிவிட்டு எழுந்தான்.
தன் பெட்டியில் இருந்த ஒரு சின்ன சம்படத்தை எடுத்து வந்தான். இதில் என்னுடைய பாட்டியுடைய திருமாங்கல்யம் இருக்கிறது. இதை என் அம்மாவின் கலியாணத்தின்போது போடுவதற்காக, என் பாட்டி என் மாமாவிடம் தான் சாகும்போது கொடுத்தார்களாம். ஆனால் இதை இன்றுவரை யாருமே உரிமையுடன் போட்டுக்கொள்ளும் காலம் வரவில்லை. அதனால் இது என் மாமா தான் காலமாகும்போது என்னிடம் கொடுத்து, இனிமேலாவது இனி உன் மணைவி போட்டுக்கொள்ளும் நல்ல காலம் வரட்டுமெனச் சொல்லிச் சென்றுவிட்டார். அது என்னிடமே இருந்தது. நான் இப்போ இதை உனக்குக் கொடுக்கிறேன். நீ இந்த மாங்கல்யத்தை, உன் தங்கச்சங்கிலியில் கோத்து போட்டுக் கொள். இதைப் பார்த்தபின் யாருக்கும் உன் மீது எந்த ஒரு சந்தேகமும் வராது, உன் வயிற்றில் வளரும் கருவுக்கும் ஒரு பாதுகாப்பும் ஏற்படும்,.
நீ இதைப் போட்டுக்கொண்டால், அதனால் நான் உன்னிடம் ஏதும் அதிக உரிமை எடுத்துக்கொள்வேனோ என நீ நினைக்கவோ, பயப்படவோவேண்டாம். என் தாயாரின் கோலம் சதா என் கண்களில் இருக்கிறது. அதற்குக் காரணமும் எனக்குத் தெரிந்து விட்டது. என்னை உருவாக்கினவன் நல்லவனா அயோக்கியனா என எனக்குத் தெரியாது. ஆனால் நான் வளர்ந்த இடம் என் தாயின் கரு. அவளின் இரத்தத்தில் நான் வுருவானேன். என் மாமாவின் கண்காணிப்பில் வளர்ந்தேன். அது மட்டுமல்லாது, என் ஆசானும், என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணமாக இருந்த நந்தகோபால்மாமா, அவரின் மணைவி இருவரின் நேரடி கண்டிப்பில், கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் அரவனைப்பில் வளர்ந்தவன். அதனால் நான் எப்பவுமே தர்மத்திற்கு மாறாக நடக்க மாட்டேன். நான் உன்னை பார்த்த வினாடியிலேயே, என் வாழ்க்கையில் உன்னுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழனுன்னுதான் ஆசைப்பட்டேன். ஆனால் உன்னுடைய நிராதரவான நிலையை எனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நான் ஒருபோதும் நினைக்கமாட்டேன். இன்று மட்டுமல்ல, என்றுமே, நியாக உன் மனம் தெளிவடைந்தபின், என்னை ஏற்றுக்கொண்டால், நான் உன்னிடம் கணவனென்ற உரிமையை எடுத்துப்பேன். அதுவரை உனக்கும் உன் வயிற்றில் வளரும், என் குழந்தைக்கும் ஒரு பாதுகாவலனாகாத்தான் இருப்பேன். இதை நீ நம்பவேண்டும்” எனவும் சொல்லிவிட்டு, அந்த சம்படத்தை பூஜை அலமாரியில் சுவாமி தட்டில் வைத்துவிட்டு, நீ இன்றோ நாளயோ இதைப் போட்டுக் கொள்” எனவும் சொன்னான்.
இரகுவின் விவரமான யோசனையைக் கேட்ட மயூரிக்கு மனதில் ஒரு நிம்மதி வந்தது. தான் நிராதரவாக இருக்கும்போது, பகவானாகப் பார்த்துத்தான் இந்த உத்தமரை என்க்குக் காவலனாக அனுப்பியிருக்கிறார். இனிமேல் எனக்கும், என் வயிற்றில் வளரும் அந்த கள்ளமில்லாத உயிருக்கும் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கும். அந்த ஒரு பாதுகாப்பிற்காகவே, இந்த உத்தமருக்கு என் உடலைச் செருப்பாகப் போடவேண்டும். இனிமேல், எனக்கு இவர்மட்டும்தான் தெய்வம். இவரின் கீழேயே என் வாழ்நாள் முடியட்டும் என மனதிற்குள் ஒரு தீர்மானமும் வந்தது. அதனால், அவளும் சிறிது சமாதானமடைந்தாள். இனி தன் வாழ்வில் என்ன நடந்தாலும், தனக்குத் துனையாக இரகு இருப்பார் என்றவுறுதியும் அவளுக்குள் வந்தது. மாலையானதால் முகத்தை அலம்பிக்கொண்டு, சுவாமி விளக்கைஏற்றிவிட்டு, இரகுவுக்குக் காப்பி போட்டாள். இரகுவுக்கு காப்பி கொடுக்கும்போது, மெதுவாக :உங்களின் யோசனைப்படியே இனிமேல் செய்கிறேன். நீங்கள் எது சொன்னாலும், அது என்னுடைய நல்லதுக்குத்தான் எனப் புரிந்து கொண்டுவிட்டேன். இனி நான் நீங்கள் விரும்பும்வரை இங்க்கேயே உங்களின் பாதுகாப்பில் இருப்பேன். உங்களுக்கு என் நன்றியை வார்த்தையால் சொல்ல முடியாது. நீங்களே புரிந்து கொள்ளுங்கள்: எனவும் சொல்லி அவன் முகத்தைப்பார்த்துக் கொண்டே இருந்தாள். இரகும் “இப்போதான் எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது. சரி, நீயும் வா. நாமிருவரும் கடைத்தெருவுக்குப் போய் நாளைக்கு வீட்டிற்கு வேண்டிய சாமாங்களையெல்லாம் வாங்கிவரலாம். நீயும் சமையல் உள்ளேபோய் என்ன இருக்கு, என்ன வாங்க வேண்டுமென ஒரு லிஸ்ட் போட்டுக்கொள். எனவும் சொல்லிவிட்டு, வெளியே கிளம்பத் தாயாரானான். மயூரியும் அவனுடன் கிளம்ப, அவன் “நீ வேறு எதுவும் டிரஸ் மாற்றிக் கொள்ளவில்லையா?எனக் கேட்க, அவள் என்னிடம் மூன்றுடிரஸ்தான் இருக்கு. அதனால், நான் அதை தினமும் போட்டுக் கொள்ள வேண்டும். இன்றுதான் ஒன்றைத் தோய்த்துப் போட்டிருக்கிறேன். மற்றோன்று நாளைக்கு வேண்டும்”எனச் சொல்லிவிட்டு, அவனுடன் கிளம்பினாள்.
வெளியே வந்த இரகு தன் ஸ்கூட்டரை எடுத்தான். மயூரியிடம் “உனக்கு என்னுடன் வண்டியில் வருவதற்கு சம்மதமா? உனக்கு இம்மாதிரி வண்டியில் போய் பழக்கமுண்டா?” எனவும் கேட்டான். அதற்கு மயூரி, “ஒரே ஒரு சமயம் என் லாபிலிருந்து என் சீனியர் ஒரு பெண்ணுடன் இந்த மாதிரி வண்டியில் ஒரு நோயாளியின் வீட்டிற்குச் சென்று இரத்தம் சாம்பில் எடுக்கப் போனேன். அதனால் இப்போ கொஞ்சம் பழகிக் கொள்கிறேன்” எனச் சொல்ல, இரகு :குட். நீ லாபில் இரத்தமெல்லாம் பரீச்சை பண்ணிப் பழக்கமுண்டா? இப்போ என்னுடன் வருவதற்கு தயார்தானா? எனக் கேட்டபடி வண்டியை ஓட்டலானான். முதலில் கொஞ்சம் பயத்துடன் இருந்த மயூரி, சிறிது நேரம் செல்லச் செல்ல தைரியமடைந்தாள். இரகுவும் அவளிடம் :நீ சாதாரணமாக என்னைப் பிடித்துக் கொள். பயப்படாதே. நான் மெதுவாகவே ஓட்டுகிறேன்”என அவளுக்குத் தைரியம் சொல்லி, வண்டியை நிதானமாகவே செலுத்தினான். முதலில் பலசரக்குக் கடைக்குப் போய், மயூரி எழுதி வைத்திருந்த லிஸ்ட்டைப் பார்த்துவிட்டு, கடைக்காரரிடம் கொடுத்து சாமாங்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் எனச் சொல்லி, அதற்குப் பணமும் கொடுத்து கிளம்பும்போது கடைககாரர் கேட்டார் “சார். ஃபமில்யை கூட்டிக் கொண்டு வந்தீட்டிங்க்களா? அதான் சாமான் லிஸ்ட்ல் முதலில் மஞ்சள், குங்குமம் என எழுதியிருக்கு. அம்மா கிர்ராமத்திலிருந்து வந்தவங்களா. அதுதான் நம்ம பாரம்பரிய பழக்கம் இருக்கு” எனவும் சந்தோஷமாகச் சொல்ல, இரகுவும் ஆமாம் அதற்குத்தான் ஊருக்குப் போனேன். இனிமேல் நிறைய சாமாங்கள் வாங்குவேன். வரட்டுமா? என சிரித்தபடியே சொல்லில் கிளம்பினான்.
வண்டியை வீட்டிற்குத் திரும்பாமல், அங்கிகிருந்த ஒரு ரெடிமேட் துணிக்கடைக்குள் சென்றான். போகும்போதே மயூரியிடம் :நீ இப்போ டாக்டர் இரகுவின் மணைவி. அதற்குத் தகுந்தாப்போல் கொஞ்சம் நாகரீகமாகவும். நல்லதாகவும் எடுத்துக் கொள். உனக்கு வேண்டிய உள்ளாடை வகைகளும் எடுத்துக்கொள். இங்கேயே போட்டும் பார்க்கலாம்: எனவும் சொல்ல, மயூரியும் “நானும் தஞ்சாவூரில் என் சினெகிதிகளுடன் இம்மாரதிரி கடைகளுக்குப் போய் பழக்கம் இருக்கு” என சிரித்துக் கொண்டே சொல்லி, அவனுடன் கடைக்குள் சென்றான். கடையில் அவனைப் பார்த்தவுடன் கடை முதலாளி “வாங்க சார் டாக்டர்.நம்ம கடைக்கு இப்பத்தான் முதல் முதலாக வருகிறீர்கள் என்ன வேணும்: எனக் கேட்டுக்கொண்டே, அங்கிருந்த ஒரு பெண்ணிடம் :அம்மா சரசு, டாக்டருக்குத் தேவையானதெல்லாம் எடுத்துக் காட்டு. உள்ளே யிருந்த புததாக வந்திருக்கும் வகைகளைக் காட்டு: எனவும் உத்திரவு இட்டார். பிறகு டாக்டரிடம் “சார் ஊருக்குப் போயிருக்கிறதா சொன்னாங்ககளே. எப்போ வந்தீர்கள்” எனவும் விசாரிக்க இரகுவும் “ஆமாம், ஊருக்குப் போய் என் மனைவியை அழைத்து வந்தேன். இன்று காலையில் தான் வந்தோம் என் சிரித்துக்கொண்டே சொல்லி, பக்கத்திலிருந்த மயூரியிடம் :மயூரி இவர் எனக்கு மகவும் வேண்டப்பட்ட நண்பர். உனக்குத் தேவேயானதை பார்.நானும் வருகிறேன்”எனச் சொல்லிக் கொண்டே அவளையும் கூட்டிக் கொண்டு அந்தப் பெண் வர உள்ளேச் சென்றான். அந்தப் பெண்ணிடம் :என் மணைவிக்கு சுடிதார் செட் கொஞ்சம் டிசைனாகக் காட்டுங்கள்: எனவும் கேட்டு, அங்கிருந்த வகைகளில் கண்களைச் செலுத்தினான். அப்படியே தன்னக்குப் பிடித்தமான இரண்டு, மூன்று வகைகளையும் மயூரியிடம் காட்டி, இது பிடித்திருக்கிறதா? உனக்குச் சரியாக இருக்கா என போட்டுப் பார்: எனவும் சொல்ல, மயூரியும் அந்த சுடிதார் செட்டை எடுத்துப் போட்டு பார்த்து விட்டு அப்படியே வெளியே வந்தாள். வந்தவளைப் பார்த்தவனுக்கு அவளின் அழகும்,முகத்தில் இருந்த சந்தோஷமும் மிகவும் திருப்தியாக இருக்க, உனக்குப் பிடித்தமாதிரி, வேறு வகைகளிலும் எடுத்துக் கொள் எனச் சொல்லி, பிறகு அந்தப் பெண்ணிடம் “எங்களுக்குக் இன்னும் சில வகைகளையும், கொஞ்சம் னைட்டிஃ=களையும் காட்டுங்கள், எனவும் சொல்ல, அவைகளையும் மயூரிக்குப் பிடித்தமானதாக எடுத்துக் கொண்டான். அப்படியே சிந்தடிக், ஷிபான், ஜார்ஜெட் என வகைகளில் டிசைன் போட்ட புடவைகளும், அதற்கு மாட்சாக் பிளவுஸும் ரெடிமேட்லேயே எடுத்துக் கொண்டார்கள். கைநிறைய துணிகளை எடுத்து கொண்டு வந்த மயூரி வீட்டிற்கு வந்தவுடன் இரகுவிடம் :என் வாழ்நாளில் இன்றுதான் முதல் முதலாம எனக்காக புதிதாக உடைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாளும் சில பெரிய வீட்டுப் பெண்களின் பழய துணிகள்தான் எனக்குக் கிடைத்தது.” எனச் சொல்ல், இரகுவும் இத்தனைநாள் நீ ஒரு சாதாரண பெண். இனிமேல் நீ இந்த ஊர் டாக்டர் இரகுநந்தனின் மணைவி. தெரியுமா? இனிமேல் நீயும் அதற்குத் தகுந்தபடிதான் இருக்கப் பழக வேண்டும்” எனவும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சொல்லி, நீ இன்றே இந்த உடைகளை யெல்லாம் போட்டுக் கொள்: எனவும் சொன்னான்.
அவர்கள் இருவரும்அன்றுமுதல் அந்த வீட்டில், இல்லற வாழ்க்கை இல்லாமல், ஒரு ஆதரிச தம்பதிகள்போல் மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்தார்கள். இரகுவும் மயூரிக்கு மதியத்தில் போழுது போக வசதியாக, டி.வி. ஒரு சின்ன ரேடியோவுடன் கூடிய ஒரு டேப்ப்ளேயர் எனவும் வாங்கி வந்தான். அதனால் மயூரிக்கு இந்த வீட்டில் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தாள். அவளும் அக்கம் பக்கத்திலிருந்த வர்களிடமும் சுமுகமாகப் பழகியதால், அவர்களும் அவளிடம் பிரியமாக இருந்தார்கள். காலச் சக்கரம் சுழல, நாட்கள் மாதங்களாக, மயூரியின் வயிற்றில் உருவான குழந்தையும் நன்றாக வளர்ந்தது, இரகுவுடன் மயூரி தவறாமல் ஒவ்வோரு மாதமும் செக்கப்புக்கும் போனாள். இரகு இதனிடையில் ஒருமுறை தஞ்சாவூர் சென்று, வைதேஹியின் வீட்டைக் கண்டுபிடித்துப் போய், அவளிடம் தான் மயூரியைத் திருமணம் செய்து கொண்டதாகவும். அவளுக்கு வளைகாப்புச் செய்ய விரும்புவ்தாகவும். அப்படி தான் ஏற்பாடு செய்தால், அவளால் அந்த விழாவிற்கு வந்து, மயூரியைத் திருப்தி படுத்த முடியுமா எனக் கேட்க, வைதேஹிக்கோ சொல்லமுடியாத ஒரு சந்தோஷம், தன்னுடைய உயிர் சினேகிதி எப்படிப்பட்ட் சூழ்நிலையில் இரவோடு இரவாக யாருமறியாமல், தன்னந்தனியாக இந்த ஊரைவிட்டுப் போனபின், அவளைப் பற்றி ஒரு விபரமும் தெரியாமல் தான் மனதிற்குள் தவித்ததும், சதா பகவானிடம் அவளுக்கு ஒரு நல்ல துனையைக் காட்டு என வேண்டிக்கொண்டதற்கு இப்போதுதான் பலன் தெரிந்ததாகச் சொல்லி, மிகவும் சந்தோஷப்பட்டாள். பிறகு இரகுவிடம் “நீங்கள் எப்ப மயூரியைச் சந்தித்தீர்கள். என விபரம் கேட்க அவனும் தான் மயூரியை தஞ்சாவூரிலியே சிவகங்கைப் பூங்காவில் அவள் வைதேஹியுடன் பேசும்போது பார்த்ததாகவும், அதன் பின் அவர்கள் இருவருக்கும் நடந்த விவாதங்களையும் கேட்டதாகவும் சொல்லி, அவளின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அன்று இரவு முதலே அவளுக்குப் பாதுகாவலாக இருந்ததாகவும். அவள் தேடி வந்த ஆசிரம அதிகாரி காலமானதால், அவரைப் பார்க்க வழியில்லாது அவள் தவித்தபோது, அவளுக்குத் தைரியம் சொல்லி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று, அவளையே திருமணமும் செய்து கொண்டதாகச் சொல்லி, இப்போ மயூரியின் கணவன் நான், அவள் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையதுதான் என அவளிடம் உறுதியாகச் சொல்லி, இப்போ உங்களுக்கு ஓரளவு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். தயவுசெய்து உங்களுக்குப் புரிந்ததை யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள். இது வரும் குழந்தைக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரமாக இருக்குமெனவும் சொல்லிச் சென்றுவிட்டான். இரகுவிடம் பேசியபிந்தான் வைதேஹிக்கும் தன்னுடைய சினேகிதி இப்போ ஒரு நல்ல அமைதியான வாழ்க்கை வாழுகிறாள் எனவும் நிம்மதியடைந்தாள். சுகுமாரன், மயூரியின் அத்தையின் குடும்பத்தார் போல் கொடூர எண்ணம் கொண்ட மனிதர்கள் வாழும், இந்தக் காலத்திலும், இரகுவைப்போல் ஒரு ஆபத்பாந்தவன் இருப்பது பகவானின் அருள்தான் எனவும் மனதில், அவனுக்கு நன்றியையும் செலுத்தினாள். தன் கணவரிடம் இரவில் மயூரியைப் பற்றி தனக்குத் தெரிந்த விபரங்களைச் சொல்லி, அவளின் கணவர் வந்து தன்னை அவளுடைய வளைகாப்புக்கு வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாகவும், தன்னைப் பார்க்க மயூரி மிகவும் விரும்புவதாகச் சொல்லி, அவனிடம் ஒருமுறை இருவரும் ஊருக்குப் போய் மயூரியைப் பார்த்து வரவேண்டுமென தன்னுடைய ஆசையையும் சொல்ல, அவனும் சம்மதித்தான்.
இரகு தன்னுடைய நண்பர்களின் உதவியால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்கிய குருக்களின் உதவியுடன் மயூரிக்கு அந்தக் கோவிலில் வளைகாப்புச் செய்ய தேவையான ஏற்பாடுகளைச் செய்தான். அங்கிருந்த குருக்களின் மூலம் அந்தக் கோவிலில் தவறாமல் லலிதாசகஸ்ரனாமம் சொல்லும் ஒரு வழிபாட்டுக் கூட்டத்திலுள்ள சில வயதானவர்களைப் பார்த்து, தானும், தன் மனைவியும் தாய்தந்தை, மற்ற உடன் பிறந்தொர் யாரும் இல்லாதவர்கள், உற்ற உறவினர்களும் இல்லை. ஆனால், தன் மனைவிக்கு தான் வளைகாப்புச் செய்யவேண்டுமென விரும்புவதால், அவர்களின் உதவியுடன் அதை மதுரைக் கோவிலில் செய்ய அவர்களின் உதவிகிடைக்குமா எனவும் கேட்க, அவர்கள் எல்லாருமே “நாங்கள் எல்லாரும் தாராளமாக உனக்கு வேண்டிய உதவியைச் செய்கிறேம், நாங்களே உன் மனைவிக்கு வளைகாப்பும் நடத்திக் கொடுக்கிறோம் எனவும் உறுதியாகச் சொல்லி, அவனுக்கு மன நிம்மதியை கொடுத்தார்கள். அப்படியே ஒரு நாளும் குறித்துக் கொண்டு, வளைகாப்பிற்குத் தேவையானவற்றையெல்லாம் மதுரையிலேயே வாங்கி, அங்கேயே இருந்த ஒரு வயதான மாமியின் உதவியுடன், அவர்கள் வீட்டிலேலே வேண்டிய சமையல், பலகார வகைகளையும் தயார் செய்தான். குறிப்பிட்ட நாளில் காலையிலேயே மயூரியையும் அழைத்துக் கொண்டு, ஒரு ட்ராவல்காரை ஏற்பாடு செய்து, மயூரியுடன் மதுரைக்குச் சென்றான். அவன் முதலிலேயே வைதேஹிக்கும் தெரிவித்து விட்டதால், வைதேஹிம் தன்னுடைய கணவருடன் மதுரை கோவிலிக்கே நேரே வந்து, மயூரிக்காக தயாராக காத்திருந்தாள்.
காரிலிருந்து இரகுவுடன் கோவில் வாசலில் இறங்கிய மயூரி, அங்கிருந்த வைதேஹியைப் பார்த்தவுடன் சந்தோஷமும், ஆச்சரியமும் தாங்காமல், அப்படியே ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல், கண்களில் கண்ணிர் வழிய நின்றாள். அவளைப் பார்த்த வைதேஹி “மயூ நீ எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம் உன் கணவர் என் வீட்டிற்கு வந்து, உன்னைத் திருமணம் செய்ததையும், இன்று இந்தக் கோவிலில் உனக்கு வளைகாப்பு நடக்க இருப்பதையும் சொல்லி, எங்களையும் அழைத்தார். நாங்களும் வந்தோம். உள்ளே வா என அவளை அனைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றான். உள்ளேச் சென்றபிந்தான் மயூரிக்கு தனக்காக தன் கணவன் எத்தனை ஏற்பாடுகளைச் செய்திருக்கிறான் என தெரிந்தது.
. அங்கிருந்த வயதான பெரிய மாமிகளின் மேற்பார்வையில், மயூரியின் வளைகாப்பு வைபவத்தை மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பித்தார்கள். முதலில் இரகு தன் கையாலேயே, தயாராக வாங்கி வைத்திருந்த ஒரு அழகிய ரோஜா மாலையை, மீனாட்சியம்மனின் பாதங்களில் வைத்து, மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு, அதை தன் கையாலேயே மயூரியின் கழுத்தில் போட்டான். அது மயூரிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பெரியவர்கள் எல்லாருடைய ஆசிர்வாதங்களுடன் மயூரியின் வளைகாப்பு மிகவும், திருப்தியாக நடந்தது, வளைகாப்பு வைபவத்தைத் தோடர்ந்து, வந்திருந்த பெரிய மாமிகள் எல்லாரும் சேர்ந்து, தங்களின் தினப்படி வழக்கமாகச் சொல்லும் “லலிதா சகஸ்ரனாமம், மற்றும் மீனாட்சி அம்மனின் ஸ்லோகங்ககள் எனச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுடன் சேர்ந்து மயூரியும், வைதேஹியும் இராகமாகவே சுநாதத்தோடு சொல்லத் தொடங்கினார்கள். வளைகாப்பு முடிந்தவுடன், அவர்கள் எல்லாருக்கும் இரகு சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தததால், அவனும் வைதேஹியும், அவளின் கணவரும் சேர்ந்து கொண்டு, எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறினார்களள். வந்திருந்தவர்களுக்கெல்லாம் மயூரியையும், இரகுந்தந்தனையும் மனமாற ஆசீர்வதித்தது அவர்களிருவருக்கும் மிகவும் சந்தோஷமாகியது. எல்லாருடைய ஆசிகளையும் பெற்றுக் கொண்டு, மயூரி தன்னுடைய சினேகிதி, அவளுடைய கணவர் எல்லாரையும் கூட்டிக் கொண்டு, தன்னுடைய ஊருக்கு வந்தாள். அன்று முழுவதும் சினேகிதிகள் இருவரும் தனியாக தங்களின் மனம் விட்டு எல்லா விஷயங்களையும் பேசி, தங்களுக்குள் இத்தனை நாள் ஒருவரைஒருவர் பார்க்காமல் இருந்த தாபத்தையும் தீர்த்துக் கொண்டார்கள். மறுநாள் வைதேஹி கிளம்பும்போது, மயூரியிடம், உன்னுடைய குழந்தை பிறந்தவுடன், தெரியப் படுத்து, நான் கட்டாயம் வருவேண் எனச் சொல்லி, விடைபெற்றாள்.
வளைகாப்பு முடிந்து, கொஞ்ச நாளிலேயே மயூரிக்கு மாதம் நெருங்கி விட்டது. அதனால், இரகுவும் கூடிய வரையில் அவளுடனேனே இருந்தான். ஒருநான், இரகு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது, மயூரி மிகவும் சோர்வாக படுத்திருப்பதைப் பார்த்து, அவளிடம் சென்று விசாரித்து விட்டு, அவளின் உடலையும் பரிசோதித்தான். அவளிடம் உனக்கு எத்தனை நேரமாக இப்படி சோர்வாக இருக்கு, என்ன சாப்பிட்டாய் எனவும் கேட்க, அவளோ காலை முதலே தன்னுள் ஒரு வலி வருவதையும், தன்னால் உட்காரக்கூட முடியாமல், படுத்துக் கொண்டே இருப்பதாகவும், இருந்ததால், தன்னால் எதுவும் சாப்பிடக்கூட பிடிக்காமல், ஒன்றும் சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்ல, :வலி எந்தப்பக்கம் வருகிறது என கேட்ட இரகுவுக்கு பதில் சொல்ல வெட்கப்பட்டு, கைகளால் தன்னுடைய அடிவயிற்றையும், பின்பக்க இடுப்பையும் சுட்டிக் காட்டனாள். அது அவளுக்கு பிரசவ வலிதான் எனப் புரிந்து கொண்ட இரகு “என்ன மயூ, உனக்குக் காலையிலிருந்தே உடம்பு சரியில்லையென்றால், என்னிடம் சொல்ல வேண்டியதுதானே? நீ ஒன்றும் சொல்லாததால், நானும் இன்று எனக்கு முக்கியமான டூட்டியானதால், காலையில் நான் சீக்கிரமே போய்விட்டேன். உனக்கு முடியாதபோது, எனக்குப் போன் பண்ணவேண்டியதுதானே. தனியாக, சின்னப்பெண் எப்படி பயத்துடன் இருக்கிறாய்?” என அவளிடம் வருத்தப்பட்டுக் கொண்டு, அவளுக்கு குடிக்க சூடாக ஹார்லிக்ஸ் தயாரித்துக் கொண்டு வந்து, அவளைக் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தான். பிறகு அவளை மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றான்.
அப்படியே அங்கிருந்த அவனுடைய ஆஸ்பத்திரியின் பெரிய பெண் டாக்டரும் மயூரியை மாதாமாதம் செக்கப் செய்தவர்க்கும் தகவல் சொல்லி, அவரும் வந்து பார்த்துவிட்டு, “அப்படியும் இன்னும் ஐந்துமணி நேரமாவது ஆகும். இப்பத்தான் முதல் வலிவந்திருக்கு. அதனால் மயூரி இங்கேயே தனி வார்டில் இருக்கட்டும். நீயும் அவளுடன் இரு. அவ்வப்போது வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானதும், காலையில் லேபர் வார்டுக்குப் போகலாம். நீயே அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள் எனச் சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்குப் சென்று விட்டார்கள். டாக்டர் சொன்னதுபோல் மயூரிக்கும் விட்டுவிட்டு வலி அவ்வப்போது வந்தபோதெல்லாம், இரகு அவளுக்கு இதமாக அருகில் இருந்து, அவள் முகத்தில் துளிர்க்கும் வேர்வையைத் தடைப்பதும், வலியால் முகம் வாடும்போது, அவளின் வயிற்றிலும் தன் கைகளை வைத்து இதமாக தடவிப் கொடுத்தும், அவ்வப்போது வயிற்றில் குழந்தையின் அசைவையும் பரிசோதித்துக் கொண்டிருந்தான். அப்பப்போ சிறிது நேரம் மிகவும் அசதியால் சில வினாடிகள் மயூரி தூங்கவும் செய்தாள். விடியற்காலையில் மயூரிக்கு பனிக்குடம் உடைந்து, உண்மையான வலி வந்தது. அதனால் மயூரியை இரகுவே லேபர் வார்டுக்குத் தூக்கிச் சென்றான். அன்று லேபர் வார்டில் வேறு யாருமே இல்லை. அங்கிருந்த டூட்டி நர்ஸிடம் மயூரி தன் மனைவி என்றும், அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது. நான் இப்போ டாக்டருக்குப் ஃபோன் போட்டுச் சொல்லுகிறேன். அதற்கு முன் நீங்கள் அவளைப் பிரிப்பேர் பண்ணுங்கள் எனவும் சொல்லிவிட்டு, டாக்டருக்குப் ஃபொனெ பண்ணினான். டாக்டர் வரும்வரையில் இரகுவே தங்கியிருந்து, மயூரியின் உடல் நிலையை பரிசோதித்தான். அவளின் இரத்த அழுத்தம், இருதய துடிப்பு நாடித்துடிப்ப்பு, உடலின் உஷ்ணநிலை என எல்லாவற்றையும் பார்த்துக் குறித்தும் வைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் டாக்டரும் வந்து இரகு செய்திருந்த முன்னேற்பாடுகளைப் பார்த்து, இப்போ மயூரிக்கு பிரசவம் பார்க்க நான் வேண்டாமென நினைக்கிறேன். நீயே பார்த்துக் கொள்வாய்போல் இருக்கிறதே எனவும் சிரித்துக் கொண்டே சொல்ல,அவனும் “அப்படியில்லை டாக்டர் நீங்கள் சொன்னதுபோல்தான் நான் செய்தேன், நானும் ஒரு உதவி டாக்டர்தானே. அதனால் நீங்கள் வருவதற்கு முன் செய்யவேண்டியவற்றைச் செய்தேன். ஆனால் என் குழந்தை உங்கள் கைகளில்தான் பிறக்க வேண்டும். அவனுக்கு உங்களின் ஸ்பரிசம்தான் முதலாக இருக்கவேண்டும்: எனவும் பணிவாகச் சொல்லிவிட்டு, மயூரியின் பிரசவ நேரம் வரும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான். லேபர் வார்டில் இருந்த மயூரி வலிதாளமலும், பயத்தாலும் மிகவும் வேதனைப் பட்டாள். அவளின் வேதனைப் பார்த்த இரகுவுக்கும் மனது கஷ்டப்பட்டது. மயூரியிடம் இதமாக :மயூம்மா, கொஞ்சம் அதிகமாகத்தான் வலிக்கும் பொறுத்துக் கொள். முதல்பிரசவமானதால், உனக்குப் பயமாக இருக்கும், ஆனால் நான் இங்கேயே வாசலில் இருப்பேன், உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். நீயும் அவர்கள் சொல்வது போல் ஒத்துழை. அப்போதுதான், உனக்குச் சீக்கிரம் குழந்தை பிறக்கும்: என சமாதானமாகவும், தைரியம் சொல்லிவிட்டு, அப்படியே வலியாலும்,பயத்தாலும் துடிக்கும் மெல்லிய உதடுகளில் ஒருமுறை அழுத்தமாக ஒரு முத்தமிட்டுவிட்டு, வயிற்றிலும் சின்னதாக ஒருமுத்தம் கொடுத்துவிட்டு வெளியில் சென்றான்.
அத்தனை வலியிலும், மயூரிக்கு இரகு முதல்முதலாக தன்னை அத்தனை டாக்டர்கள் எதிரிலும் முத்தமிட்டது கொஞ்சம் வெட்கமாக இருந்தபோதிலும், அவளின் மனதில் ஒரு சந்தோஷ ரேகையும் ஓடியது, அதனால் அந்த அன்புபரிசால்,அவளின் உடலுக்குள் ஒரு இன்ப உணர்ச்சியும் ஏற்பட்டது. அந்த உணர்ச்சியுடனேயே, அவளுக்கு வலியும் அதிகமாகி, துடிக்கலானாள். சுமார் இரண்டு மணினேர துடிப்பிற்குப் பிறகுதான், மயூரிக்கு சுகமான பிரசவம் முடிந்தது. வெளியில் வந்த குழந்தையை எடுத்துக் கொண்டு டாக்டர் :ஜூனியர் மயூரி வந்து விட்டாள்: எனவும் சந்தோஷமாகச் சொல்ல அதைக் கேட்ட இரகு வெளியில் இருந்து வேகமாக உள்ளே வந்து, மயூரியைப் பார்த்து :சந்தோஷத்துடன் அவளைக் கட்டிக் கொண்டான். டாக்டர் இரகு இது பிரசவ வார்டு, உன் படுக்கையறை யில்லை. முதலில் நீ வெளியேப் ;போ என செல்லமாகச் சொல்லி, தன்னுடைய ஆனந்தத்தையும் வெளிப்ப;டுத்திக் கொண்டார். மயூரியை விட்டு, குழந்தையைக் த ன் கையில் வாங்கிய இரகு மிகுந்த நன்றியுடன் பெரிய டாக்டரைப் பார்த்து :அம்மா நீங்கள்தான் எங்களின் தெய்வம்: எனச் சொல்லிக்கொண்டே, அவரின் கைகளை நன்றியுடன் பிடித்துக் கொண்டான். நல்ல காலம் அன்று அந்த நேரத்தில், மயூரியைத் தவிர வேறு யாருக்கும் வலிவந்து அங்கு சேரவில்லை. அதனால், டாக்டர் உள்ளே வந்த இரகுவிடம் சிறிது நேரம் கேலியாகப் பேசியபின், “இரகு, உனக்கு ஐந்து நிமிஷம் தருகிறேன். அதற்குள் நீ உன் மனைவியைக் கொஞ்சிவிட்டு, உன் குழந்தையையும் பார்த்து விட்டு போய்விடவேண்டும். இனிமேல் நீ உன் பணிக்குப் போ. மாலையில் மயூரியை தனிவார்டில் விடுகிறேன் நீ அங்கேயே இருந்து கவனித்துக் கொள்: உனக்கும், அவளுக்கும் நான் என் வீட்டிலிருந்து இரவு சாப்பாட்டை அனுப்பி வைக்கிறேன்” னச் சொல்லி, சிரித்தபடியே அந்த வார்டை விட்டு போனாள். டாக்டர் போனபின், இரகு மயூரியின் முகத்தை இதமாக வருடியபடியே, :மிகவும் வலித்ததாம்மா, கஷ்டப்பட்டாயே: எனவும் பரிவாகக் கேட்டான். அவனின் பரிவையும், அன்பையும் கண்ட மயூரிக்கு பதில் சொல்லத்தெரியாமல், “வலித்தாலும், உங்கள் அன்பு இருப்பதால், தாங்கிக் கொண்டேன். நீங்கள் கொடுத்த வாழ்வுதான் இது எனக்கும் இந்தக் குழந்தைக்கும் எனச் சொல்லி, தன்னையுமறியாமல் விம்மத்தொடங்கினாள். அதைப்பார்த்த இரகு ::மைய்யூ, என்னயிது அப்போ போய் அழுகிறாய், இனிமேல்தான் நீ மிகவும் கவனமாக உன் உடம்பையும், மனதையும் பார்த்திக் கொளள வேண்டும். அப்போ அழுதால், உனக்கு ஜுரம் வரும் வாய்ப்பு இருக்கும். அதனால் நீ அழக்கூடாது. நாந்தான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேனே. நீ எதற்கும் கவலைப்படாமல் நிம்மதியாக இரு. நானும் இங்கேயே இன்றைய டூட்டியைப் பார்த்துவிட்டு, மாலையில் உனக்குத் துனையாக இங்கேயே இருப்பேன். இங்கிருப்பவர்கள் எல்லாம் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் எனச் சொல்லி விட்டு, அறைக்குள் இருந்த ஒரு நர்ஸிடம், குழந்தையின் எடையைப் பார்த்து விட்டு, குழந்தையையும் ஒருமுறை நன்றாகத் தூக்கிக் கொண்டு, சின்னதாக முததம் கொடுத்துவிட்டு, அந்த நர்ஸிடம் :பார்த்துக் கொள்ளுங்கள் சிஸ்டர்” எனவும் பரிவாகச் கேட்டுக் கொண்டு அங்கிருந்து போனான். பணிக்குச் செல்லுமுன், அங்கிருந்த தன்னுடன் பணிபுரியும் சக டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு தன்னுடைய சந்தோஷத்தை இனிப்பு மிட்டாயுடன் தெரிவித்திக் கொண்டான். எல்லருடைய வாழ்த்துக்களும் அவனுக்குக் கிடைத்தன. அங்கிருந்த வைதேஹிக்குப் போன் செய்து குழந்தை பிறந்த செய்தியைச் சொல்லி, தன்னுடைய சந்தோஷத்தையும் காட்டிக் கொண்டு, பணியில் ஈடு பட்டான்.
மாலை நேரம் தன்னுடைய பணிக்காலம் முடிந்தவுடனே இரகுநந்தன் மயூரியையும், குழந்தையையும் பார்க்க மயூரிக்கு ஒதுக்கியிருந்த அறைக்குச் சென்றான். அங்கு மயூரி மருந்தின் மயக்கத்தால் தூக்கத்தில் இருக்க, குழந்தை தொட்டிலில் இருந்தது. மயூரியைப் பார்த்து விட்டு, குழந்தையைப் பார்க்கத் தொட்டில் பக்கம் சென்றதும், அவனின் அசைவைக் கேட்டதாலோ, வேறு எதனாலோ குழந்தை கண்களைத் திறந்தன. குழந்தையின் கண்கள் மயூரின் கண்களைப் போலவே பெரியதாக அழகாக இருந்தன. கண்களின் அழகைப் பார்த்த இரகு சின்னமயூரியின் கண்களும் அவன் அம்மாவைப்போல்தான் இருக்கு. அதனால் இவளை நான் “மான்விழி” எனவே கூப்பிடப்போகிறேன். என மனதில் தீர்மானித்து “சின்ன மான் குட்டி மான்விழியே என மெதுவாகக் கூப்பிட அவனின் மெல்லிய குரலைக் கேட்ட மயூரி கண் முழித்து, :எப்போ வந்தீர்கள்?எனவும் கேட்டாள். “இப்பத்தான் இரண்டு நிமிஷம் ஆச்சு, நீ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய் அதனால் உன்னை எழுப்பவில்லை. குழந்தையைப் பார்த்தேன், அவள் முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருந்தாள். மயூ, இவள் கண்களும் உன்னுடதைப் போலவே பெரியதாக, அழகாக இருக்கு. அதனால் நான் இவளை “மான்விழி”: எனப் பெயரால் கூப்பிட விரும்புகிறேன். நீ வேறு ஏதும் பெயர் தீர்மானித்து இருக்கிறாயா? எனவும் கேட்டான். அவனுக்கு நீங்கள் தான் பெயர் வைக்கனும். நீங்கள் விரும்பும் எந்தப் பெயரையும் வைத்து, அப்படியே நானும் கூப்பிடுவேன்: எனச் சிரித்தபடியே சொன்ன, மயூரியின் அருகில் போய் அமர்ந்தான். அவன் கைகள் மயூரியை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தன. மயூரியும் இரகுவின் கைகளை மெதுவாகத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு, இன்று நான் இருப்பது உங்களால் உங்களின் கருணைக் கண்கள் என்மீது பட்டிருக்காவிட்டால், நான் இத்தனை காலம் இருந்திருக்கவே மாட்டேன். என் குழந்தையையும் அழித்துக் கொண்டு, அந்தப் பாவத்தையும் சுமந்து கொண்டு எங்கே அலைந்துகொண்டிருப்பேனோ தெரியாது. எங்களை வாழ வைத்த தெய்வமே நீங்கள் தான் என தன் உணர்ச்சிகளை மறைக்க முடியாது சொல்லி, அவனின் கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இந்தக் குழந்தையை அழிக்க நினைத்த நான் எப்படி இதனிடம் இனிமேல் பிரியமாக பாசமாக இருக்க முடியும். இவளைப் பார்க்கும்போதெல்லாம் இவளை அழிக்க நினைத்த என்னனுடைய கொடுமையான நினைப்புத்தான் என் நினைவுக்கு வந்து, என்னைக் கொல்லும். என மிகவும் மன உறுத்தலோடு சொன்னவளை, “நீ அப்படி நினைத்ததிற்கு உன்னுடைய அந்தக் காலகட்டம்தான் காரணம். ஆனால் நான் உன்னிடம் எடுத்துச் சொன்ன பின் நீ அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டு, இவளை உன் வயிற்றில் கண்ணும், கருத்துமாகத்தானே வளர்த்தாய். அதனால், இதில் நீ ஒன்றும் தவறாக நினைத்து வருந்த ஒன்றுமில்லை. பழசையெல்லாம் அடியோடு மறந்து விட்டு, இன்று உன்னிடம் வந்திருக்கும் இந்தச் செல்வத்தைக் கொஞ்சுவதில்தால் உன் மனம் இருக்க வேண்டும்: எனச் சொல்லியபடியே, அவளின் முகத்தேயே பார்த்துக் கொண்டிருந்தான். அவனையுமறியாமல் தான் காலையில் அவளை முத்தமிட்டதை நினைத்து, ஒருவேளை அதுபற்றி மயூரி ஏதும் தவறாக நினைத்திருப்பாளோ எனவும் பயந்தான். அதனால் :மயூ, நான் காலையில் உன்னிடம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அதனால் நான் செய்ததை தவறாக நினைக்காதே. இந்தச் சின்ன வயதில் நீ ஒரு பிரசவத்தை எதிநோக்கிய நிலையாலும், உன்னால் வலிதாங்கமுடியாது உன் முகம் வாடியதையும், பயத்தால் உன் உடல் நடுங்கியதையும் பார்த்த என்னால் மனம் தாளாமல்தான், உன்னைத் தேற்றுவதற்காகவும், தைரியப் படுத்துவதற்காகவும் உன்னை முத்தமிட்டேன். அதைப் பற்றி பிறகுதான் யோசித்தேன். என்னுடைய தப்பை நான் புரிந்து கொண்டேன். அதனால் உனக்கு மனம் வருந்தியிருக்கும். என்னை மன்னித்து விடம்ம” என மிகவும் தன்னிரக்கத்தோடு சொன்ன இரகுவை பார்த்த மயூரி “நீங்கள் என்ன செய்தாலும் நான் தப்பாக நினைக்க மாட்டேன். உண்மையிலேயே காலையில் உங்களின் அன்பை என்னிடம் காட்டியபோது நானும் சந்தோஷப்பட்டேன். அந்த இன்பத்திலேயே என் வலியின் வேதனையைக் கூட நான் அவ்வளவாக உணரவில்லை. நீங்கள் வெளியேச் சென்ற சில நேரத்திலேயே என்னுடைய வலி அதிகமாகியது. மனதில் ஒரு பயம் இருந்தாலும், என்னையுமறியாமல் என் மனதில் ஒரு ஆனந்தம் உண்டானது. எனக்கும் நீங்கள் என்னிடம் உரிமையுடன் இருந்தது சந்தோஷமாக இருந்தது. அப்போ இங்கிருந்த பெரிய டாக்டர், மற்றும் மற்றவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா :இரகுவின் ஆசைக்கு இப்பமட்டும் இந்தப் பெண் பிரசவ வலியால் துடித்து நம்மிடையே இல்லாவிட்டால், அவன் இவளைவிட்டு ஒரு நிமிஷம்கூட பிரியமாட்டான். உன்னிடம் அத்தனை ஆசையா அவனுக்கு. இத்தனை அழகான சின்னப் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது” எனவும் சிரித்துக் கொண்டே என்னைக் கேலி செய்தார்கள். அவர்கள் செய்த கேலியையும் நான் அத்தனை வலியிலும் இரசித்தேன். எனக்கும் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதனால் நீங்கள் என்னிடம் தப்பாக எதும் செய்து விட்டோமோ எனத் தவிக்க வேண்டாம் எனவும் சொல்லிவிட்டு, வெட்கம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டாள். அவளின் சம்மதத்தை உணர்ந்த இரகுவும் “மயூரி நீ மனதில் சந்தோஷமாக இருப்பது எனக்கும் திருப்தியாக இருக்கிறது. டாக்டர்கள் சொன்னது உண்மைதான். உன்னைவிட்டு என்னால் ஒரு நிமிஷம்கூட இருக்க முடியவில்லை” இப்போ நீ உன் மனம் விட்டுச் சொல், எனக்கு உன் மனதில் இடம் இருக்கிறதா?” எனச் கேட்டுக்கொண்டே, மீண்டும் அவளைத் தூக்கி, தன் மார்புடன் அனைத்துக் கொண்டு, அவளின் கண்களிலும், மென்மையான உதடுகளிலும் தன் அன்பு முத்திரையை உரிமையுடன் பதித்தான்..
இரகுவின் அன்பாலும், அவனுடைய தாபத்தைப் புரிந்து கொண்ட மயூரி அவனிடம் “ “நான் உங்களுடன் வாழ ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே உங்களுடைய அன்பால் நானும் கட்டுண்டேன். ஆனால், என்னுடைய நிலையில், என்னால் உங்களிடம் என் மனதை திறந்து காட்டமுடியவில்லை. ஒருவேளை நான் இந்தப் பிரசவத்தில் இறந்துபோனால், என் மனதால் நான் உங்களுடன் வாழ்வதை அறிந்தால், பின்னால் என்னை இழந்த பிறகு நீங்கள் மிகவும் வேதனைப்படுவீர்கள். இப்போ என் மனதில் இருப்பதை நான் சொல்லாவிட்டால், ஏதோ ஒரு அபலைப் பெண், ஆதரவு கேட்டுவந்தாள். , போய் விட்டாள்: என ஒரு வருத்தம்தான் உங்களுக்கு இருக்கும். மன வருத்தமோ, ஏமாற்றமோ இருக்காது என நான் நினைத்ததால், என் மனதில் நீங்கள் கோவில் கொண்டதை நான் சொல்லாமல், என் மனதாலே உங்களுக்கு தினமும் ஆத்ம பூஜை செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் இன்று நீங்கள் முதல்முதலாக என்னிடம் உங்களின் அன்பைக் காட்டியதும், என்னையுமறியாமல் நான் சந்தோஷத்தில் ஆழ்ந்து விட்டேன். அந்த இன்பப் பூரிப்பால் என்னுள் ஒரு ஆனந்த அலையும் பாய்ந்து, என்னுடைய பிரசவ வலியின் வேதனையையும் மறக்கச் செய்து விட்டன. இனிமேல் உங்களின் சுமையும் அதிகமாகும்.: எனச் சொல்லிவிட்டு, அன்பு மிகுதியால், தன்னுடைய முகத்தை அவனுடைய மென்மையான, உறுதியான மார்பில் புதைத்துக் கொண்டாள்.. தாங்கள் இத்தனை நாட்கள் நடத்திய குடும்ப வாழ்க்கை, இனிமேல்தான் உண்மையான மனம் ஒத்த இருவருடைய இனிமையான இல்லறம் ஒரு குழந்தையின் மழலையுடனும் ஆரம்பிக்குமெனவும் இருவரும் உணர்ந்தார்கள். அதனால் இரகு மயூரியிடம் “இன்று நம் வாழ்வில் இன்னோரு முக்கியமானதினம். இன்றுதான் நம்முடைய சின்னப் பெண் மான்விழியும் பிறந்தாள் . நானும் என்னை உனக்குத் தந்து விட்டேன். இனிமேல் எனக்கு நீயும், மான்விழியும்தான் வாழ்வில் இரு கண்கள். நீங்கள் இருவரும் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதுதான் என் ஆசை. இனிமேல் நான் என் மயூரியிடம் எல்லாச் சுகத்தையும் அனுபவிப்பேன்.:எனச் சொல்லிக்கொண்டே, தன் அனைப்பில் இருந்த மயுரியை இன்னுமோரு முறை தன் அன்புப்பரிசால் மூழ்க வைத்தான். பிறகு அவளை படுக்க வைத்துவிட்டு, குழந்தையை எடுக்கச் சென்றான்.
அப்போ, ஒரு டூட்டி நர்ஸ் அங்கே வந்தாள். அவளைப் பார்த்த இரகு “வாம்மா நீ மயூரிக்கு டிரஸ் பண்ணு. நான் வெளியில் இருக்கிறேன்” எனச் சொல்ல, அவள் “இல்லை டாக்டர், நான் இப்போ வந்தது அதற்காக இல்லை. இப்போ அவங்க குழந்தைக்குப் பசி ஆற்றனும்., அதற்கு உதவியாக அவங்களை எழுப்பி உட்கார வைத்து, உதவி செய்யத்தான் வந்தேன். ஆனால் இப்போ நீங்களே இங்கிருப்பதால், நான் தேவையில்லை. நீங்களே அவங்களுக்கு உதவி செய்யுங்கள். அவங்களுக்கு குழந்தையின் வாயைச் சரியாக வைக்கத் தெரியவில்லை. அதற்குத்தான் நீங்கள் உதவ வேண்டும். அதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” எனச் சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றாள். நர்ஸ் சென்றவுடன் இரகு மயூரியை மெதுவாகத் தூக்கி, தலையனைகளை சரியாக வைத்துவிட்டு, அவள் மடியில் ஒரு தலையனையும் வைத்தபின், குழந்தையை தூக்கிக்கொண்டுவந்து, அவளின் கைகளில் கொடுத்தான். அதற்குள் மயூரியும் தன்னுடைய உடலை ஒரு துண்டால் மூடிக்கொண்டு, குழந்தைக்கு பசி ஆற்ற தன்னுடைய ன்னைட்டியின் பட்டங்களை அவிழ்த்தாள். ஆனால் அவளால் குழந்தையின் வாயைத் தன்னுடம்புடன் சரியாக வைக்க முடியவில்லை. அவளின் அவஸ்த்தையைப் பார்த்த இரகு அவளிடம் “மயூ, நான் உனக்கு உதவட்டுமா? எனவும் கேட்க அவளுக்கு ஒருபுறம் வெட்கமும், மறுபக்கம் தன்னுடைய இயலாமையால், குழந்தையின் பசியை ஆற்றமுடியாமல் இருப்பதையும் பார்த்து, மெதுவாகத் தன் தலையை சம்மததிற்கு அடையாளமாக ஆட்டிச், சின்னதாகச் சிரித்தாள். அதைப்புரிந்து கொண்ட இரகுவும், தாங்கள் இருந்த அறையின் கதவை மூடிவிட்டு, மயூரியின் அருகில் சென்றான். அவளின் மேல் துண்டை எடுத்துவிட்டு, அவளின் மார்புக்காம்பைத் தன் ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மற்றோரு மையால், குழந்தை மான்விழியின் தலையையும், சொப்பு வாயையும் அதனருகில் கொண்டுவந்து, இரண்டையும் சேர்த்து, பிடித்துக் கொள்ள, குழந்தையும் தன்னுடையச் சின்ன வாயினால் மயூரியின் மார்புக் காம்பை பற்றிக் கொண்டு, பால்குடிக்கலானாள். சின்ன வாயின் ஸ்பரிசமும், இரகுவின் கைகளின் ஸ்பரிசமும் சேர்ந்து மயூரியை சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்றன. மயூரியும் தன் தலையை இரகுவின் தோளில் சாய்த்துக் கொண்டு, அவனின் முகத்தைப் பார்த்து பரவசமாகச் சின்னதாக ஒருவெட்கப் புன்னகை புரிந்தாள். அவளின் முகத்திலிருந்தே அவளுடைய மனதைப் புரிந்த கொண்ட இரகுவும், அவளுக்கு இனையாகத் தன்னுடைய முகத்தையும் அவளுடன் சேர்த்துக் கொண்டு, அந்த மூன்றுபேரும் இன்பத்தில் எல்லைக்குச் சென்றார்கள் இனிமேல் மயூரியின் இன்ப வாழ்வுக்கு எந்தவிதமான தடையுமில்லை. அவள் இரகுவின் அன்பு நிழலில், தன் குழந்தையுடன் இருப்பாள்.
No comments:
Post a Comment